வாக்களிக்க அஜித்தண்ணன் கருப்பு உடையில் வந்தார், ஜோசப்பு விஜயண்ணா சைக்கிளில் வந்தார், விக்ரம் எனும் கென்னடியார் நடந்து வந்தார் என ஏக அவதானிப்புகள்

இதை கிளப்பிவிடுபவன் யாரென்றால் முழுக்க உபிஸ், இவர்களாக அப்படி ஒரு அரசுக்கு எதிரான கருத்தை கிளப்பிவிடுகின்றார்கள்
சரி, ஒருவேளை நடிகர் கூட்டத்துக்கு பழனிச்சாமி மேல் கோபம் இருக்குமா? நிச்சயம் இருக்கும்

காமராஜருக்கு பின் திரைதுறை அல்லாமல் 5 வருடம் ஆண்ட முதல் முதல்வர் பழனிச்சாமி, அதற்கு முன் பன்னீர் செல்வம் எனும் நடிகர் அல்லாத அரசியல்வாதி இருந்தார்

பழனிச்சாமி ஆட்சியில் முதல்வர்கள்
சினிமா மேடைகளில் அமரும் அவமானமில்லை, "பாச தலைவனுக்கு பாராட்டு விழா" எனும் இம்சை இல்லை

முதல்வர் ஏதோ சோழ மன்னன் போல் அமர்ந்திருக்க , பாணர்கள் போல் திரை கவிஞர்கள் கவிதை வாசித்து கணிகையர் போல் நடிகையர் ஆடும் அந்த கலாச்சாரம் பழனிச்சாமி ஆட்சியில் இல்லை
எந்த நடிகனையும் அவர் வலிய சந்திக்கவில்லை, திரை துறை பக்கமே அவர் திரும்பவில்லை

சினிமாவுக்கு வரிவிலக்கு, சினிமா வளர உதவி என்றெல்லாம் அவர் திரும்பவே இல்லை

சுருக்கமாக சொன்னால் காமராஜர் கூட சில சினிமா விழாக்களில் பங்குபெற்றிருந்தார், ஆனால் ராஜாஜிதான் இதிலெல்லாம் சிக்கவில்லை
ஆக ராஜாஜிக்கு பின் ஒரு முதல்வர் அதாவது கிட்டதட்ட 70 ஆண்டுகளுக்கு பின் சினிமா வாசனையே இல்லாத முதல்வர் பழனிச்சாமியார்தான்

அவர் முன் தங்கள் வித்தை, வீண் வெட்டி விளம்பரம், மாய காட்சிகள் எடுபடாத சினிமாதுறையினர் அவர் மேல் கோபத்தில் வந்திருக்கலாம், வாய்ப்பு இருக்கின்றது
சரி, உபிக்கள்தான் அரசுக்கு எதிராக "குறியீடு" காட்டி நடிகர்கள் வந்ததாக அள்ளிவிடுகின்றார்கள் என்றால் நடிகர்கள் ஏன் அதை மறுக்கவுமில்லை, ஒப்புகொள்ளவுமில்லை

அதுதான் நடிகர்கள்

ஆம் அவர்கள் நாங்கள் அரசை எதிர்த்தோம் என்றாலும் ஆபத்து, எதிர்க்கவில்லை என்றாலும் ஆபத்து

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அரிதாரி

அரிதாரி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kirukkalgall

6 Apr
சீனா ஏன் லடாக் எல்லையில் அடக்கி வாசிக்கின்றது என்பதற்கான பல விடைகள் இப்பொழுது கசிகின்றன‌

சீனாவுக்கு கட்டம் கட்ட கிளம்பிவிட்ட மேற்குலகம் எதெல்லாம் சீனாவில் மெல்லிய சிக்கலோ அதை எல்லாம் கூர்மையாக்கி சீன ட்ராகன் தன் நகத்தாலே தன்னையே கிழித்து கொள்ள வழி செய்கின்றன,சீனாவின் 4 பக்கமும்
பெரும் சிக்கல் ஏற்படும் அளவு ஒரு ராஜதந்திரமான சிக்கலுக்குள் சீனாவினை சிக்க வைக்கின்றன‌

ஒரு பக்கம் ஹாங்காங், தைவான் சிக்கல் என நெருப்பினை பற்றவைக்கும் நாடுகள் அடுத்து மாபெரும் ஆயுதத்தை கையில் எடுக்கின்றன அதன் பெயர் உய்க்குர் இஸ்லாமிய சிக்கல்

உய்க்குர் இன இஸ்லாமியரை
சீனா மிக கடுமையாக நடத்துவதையும் அதை இந்தியாவின் கம்யூனிஸ்டுகள், இந்திய காங்கிரஸ் மற்றும் திமுக தவிர உலகின் எல்லா நாடுகளும் தீவிரமாக கண்டிப்பதும் அன்றாட நிகழ்வுகள்

இதில் துருக்கி ஈரான் உள்ளிட்ட நாடுகளின் உறவு மூலம் எப்படியோ அங்கும் இங்கும் சமாளித்து சீனா நகர்ந்தாலும்
Read 21 tweets
5 Apr
1980கள் அமெரிக்காவுக்கு அரேபியாவில் அடிவாங்கிய காலங்கள்

ஈரானின் கோமேனி ஆட்சியினை பிடித்து அமெரிக்க தூதரகத்தை சிறைபிடித்து அலறவைத்தது, லெபனானில் ஒரே நாளில் 200 அமெரிக்க வீரர்கள் கொல்லபட்டு அமெரிக்காவினை விட்டு ஓடியது, சி.ஐ.ஏ அதிகாரிகளெல்லாம் மர்மமாக கொல்லபட்டு அந்த அமைப்பே
லெபனானை காலி செய்தது என அமெரிக்கா பட்ட அவமானம் ஏராளம்

அதைவிட அவமானம் அமெரிக்க விமானம் கடத்தபட்டு அமெரிக்க அதிபர் ரீகன் காசு கொடுத்து மீட்டு வந்த சம்பவம்

ஆம் 1980ல் அவர்கள் பட்ட அடியினைத்தான் பின்பு ஜார்ஜ் புஷ் சதாமினை ஒழித்து கட்டி தாங்கள் யாரென காட்டினார்
இப்பொழுது அமெரிக்கா அடிவாங்க வேண்டிய காலம் என்பதை சொல்கின்றார் பிடன்

ஆம் ஈரானில் சொத்தபல், சிரியாவில் சிக்கல் , சவுதியுடன் முறுகல், ஏமனில் குழப்பம் என ஒருமாதிரி சிக்கும் அமெரிக்க அதிபர் இப்பொழுது ஜோர்டானிலும் எதையோ செய்து வசமாக மாட்டியிருக்கின்றார்
Read 6 tweets
5 Apr
தமிழக தேர்தலில் சில ஈழ இம்சைகளும் புகுந்து பரப்புரை என காணொளி வெளியிட்டு கொண்டிருப்பதுதான் உச்சகட்ட காமெடி

முதலாவது அவர்களுக்கு இங்கு வாக்குரிமையே கிடையாது, முன்பு போல கள்ளதோணியிலும் வரமுடியாது பின் ஏன் அவர்களும் குதிக்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை
கருணாநிதி மேல் திமுக மேல் ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் அது எம் உள்நாட்டு பிரச்சினை அதை நாம் கவனித்து கொள்கின்றோம், இது எம் நாட்டு அரசியல் இதில் அவர்கள் ஏன் தலையிடுகின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை

நிச்சயம் கருணாநிதி ஈழ விவகாரங்களில் சந்தர்ப்ப அரசியல் செய்தார் சந்தேகமில்லை,
ஆனால் அவரை விட ஆயிரம் மடங்கு சந்தர்ப்பவாதம் , எதிர்பாரா கொலை என செய்தவன் பிரபாகரன்

சிங்களனை எதிர்த்து இந்தியா, பின் இந்தியாவினை எதிர்த்து சிங்களனுடன் கைகோர்ப்பு கடைசியில் கருணாநிதியுடன் கைகோர்த்து பத்மநாபா கொலை என அவன் மிக கடுமையான சந்தர்ப்ப அரசியலை செய்தான்
Read 10 tweets
5 Apr
மே.வங்கத்தை கைப்பற்ற முயற்சிக்கும் குஜராத்தியர்கள்: மம்தா குற்றச்சாட்டு

பதற்றம் மற்றும் விரக்தியின் உச்சத்தில் இருக்கின்றார் மம்தா என்பதற்கு இந்த வாக்குமூலம் பெரும் உதாரணம்

வங்காளி வங்க மொழியில் எழுதிய கவிதை தேசியகீதமாகலாம், வங்கத்து நேதாஜி தேசத்தின் தலைவனாகலாம்.,
இன்னும் வந்தே மாதரம் போன்ற வங்கமொழி கோஷமெல்லாம் தேசிய அடையாளமாகலாம்

வங்காளி விவேகானந்தரை ஆன்மீக அடையாளமாக்கி தமிழக கடற்கரையில் மண்டபம் கட்டி வணங்கலாம்

ஆனால் அரசியலில் மட்டும் குஜராத்திகள் இங்கு வரகூடாது என்பதெல்லாம் என்ன வகை?
இதே வங்கம் பிரிவினையில் எரிந்தபொழுது குஜராத்தி காந்தி வந்தார், நவகாளியில் வந்து உண்ணாவிரதம் இருந்தார்

ஆர்.எஸ்.எஸ் வங்கபோரில் இதே வங்கத்தில் இந்திய படைகளுக்கு உதவிற்று

இங்கு எல்லோரும் இந்தியர்களே, அப்படித்தான் ஒவ்வொரு இந்தியனும் கருதிகொண்டிருக்கின்றான்
Read 4 tweets
4 Apr
தினமலர் போன்ற ஏடுகள் உண்மையல்லா செய்தியினை வெளியிட முடியாது, அவர்கள் திமுக மேல் பதியபட்ட சட்டரீதியான வழக்குகளைத்தான் அதாவது நீதிமன்ற காவல் நிலைய ஆதார அடிப்படையில்தான் எழுதினார்கள்

இது பத்திரிகா தர்மம்

முன்பு ஜெயா பற்றி சன்டிவியும் முரசொலியும் பக்கம் பக்கமாக எழுதி
வாசிக்கலாம் எனும் நிலையினை எண்ணி பார்க்க வேண்டும், இவ்வளவுக்கும் ஜெயா சொன்ன ஒரு வரி யார் காதிலும் விழாமல் மறைக்கபட்டது

ஆம் "காவேரி தந்த கலைசெல்வி" எனும் நாடக குழுவினை ஜெயா முன்பு நடத்தினார், பின்பு அவர் அரசியலுக்கு வந்தாலும் அந்த நாடக ஆடைகள் போலி ஆபரணங்களையெல்லாம் நினைவாக
வீட்டில் வைத்திருந்தார்

1996ல் ஜெயா வீட்டில் ரெய்டு என்றபொழுது அந்த நாடக பொருட்களும் அவர் குவித்த ஆடை அணிகலன்களாக போலியாக கணக்கில் பரப்பபட்டது

இதை திமுக ஆதரவு ஊடகங்கள் செய்தன‌

ஆக அவர்கள் எதை செய்தாலும் சரி, ஆனால் நீதிமன்ற தரவுகளின் அடிப்படையில் தினமலர் போன்ற ஏடுகள் செய்தி
Read 6 tweets
18 Mar
தமிழகத்தில் ஒரு நல்ல விஷயம் நடந்து கொண்டிருக்கின்றது அது இஸ்லாமிய பெருமக்களின் பாஜக பற்றிய பார்வை மாறியிருப்பது

இந்த தேர்தலில் அதை கணிக்க முடிகின்றது, அவர்கள் மிக நன்றாக சிந்திக்கின்றார்கள். 7 ஆண்டு கால மோடி ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் ஏதும் நடக்கவில்லை
என்பதையும் இஸ்லாமிய வழிபாட்டுக்கோ உரிமைக்கோ எள்முனை ஆபத்தும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்துவிட்டார்கள்

மோடி அரசு இந்திய அரசு , இந்தியருக்கு எது தேவையோ அதை செய்யும் அரசு, நாட்டுக்கு எது தேவையோ அதை சரியாக அரசு என்பதை உணர்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்
இங்கு பெரும்பான்மை இந்துக்களுக்கு அநீதி நடந்திருப்பது என்பதையும், சிறுபான்மையான தங்களுக்கு எவ்வளவோ சலுகைகள் கிடைத்திருக்கின்றது என்பதையும் அனுபவபூர்வமாக அறிந்து கொண்டார்கள்

இந்திய யதார்த்ததுக்கு ஏற்ற நியாய தர்மங்களை அவர்கள் புரிந்து கொண்டு இப்பொழுது பாஜக பக்கம் திரள்வது
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!