அமெரிக்கா மற்றும் இந்தியா நாடுகளில் "எந்த அடிப்படையில் அரசியல் அமைப்பு சட்ட முறை உருவானது" என அறிந்தவற்றை பதிவு செய்க!
விடை
அமெரிக்க அரசியல் அமைப்பு சட்டத்தின் கதை ⬇️
பிரிட்டன் ஆட்சியிலிருந்து விடுதலை பெற 13 காலனிய நாடுகள் ஒருங்கிணைந்து காங்கிரஸ் பேரவையை (Continental Congress) தொடங்கி மக்கள நலன் மற்றும் விடுதலை நலன் கருதி திட்டங்களை வகுத்து வந்தனர். 1776 இல் விடுதலை அடைந்தனர்.
பிறகு மக்கள் நலத்திட்டங்களை செயலாற்ற கூட்டமைப்பு உரை (Articles of Confederation) இயற்றப்பட்டது. காங்கிரஸ் பேரவையும் (Continental Congress) கூட்டமைப்பு காங்கிரஸ் (Congress of the Confederation) என்றானது. 13 காலனிய நாடுகளுக்கு மத்தியில் "வலுவான" மேற்பார்வையாளர் இல்லாமல் இருந்தது.
இதனால் 13 காலனிய நாடுகள் கூட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் சுணக்கம் காட்டினர். கூட்டமைப்புக்கும் பொருளாதார நிதிச்சுமை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு கூட்டமைப்பு உரையை கைவிட்டு 1787 இல் உலகின் முதல் நவீன அரசியலமைப்பு சட்டமான அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டது.
அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் (Constitution of the United States) வழியில் Legislative (Congress), Executive (President) மற்றும் Judicial (Supreme Court) என்ற கூட்டாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அதிபருக்கு உச்சபட்ச அதிகாரம் வழங்கப்பட்டது.
அதே சமயம் அதிபர் மாநில அரசு முடிவுகளில் தலையீடாமலும் மாநில அரசுகள் அதிபர் முடிவுகளில் தலையீடாமலும் இருக்கும் வகையில் "இயன்றவரை" மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கை கடைப்பிடிப்பது உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும் சில நேரங்களில் மாநிலங்களின் கோரிக்கையை மீறி அதிபர் சில காரியங்களை சாதித்துக் கொள்ள இயலும். எடுத்துக்காட்டாக Obama Healthcare. அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் பாணியை பின்பற்றி கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்கள் அரசியலமைப்பு சட்டங்களை இயற்றினர்.
மேலும் கூட்டமைப்பு காங்கிரஸ் (Congress of the Confederation) அமெரிக்க காங்கிரஸ் (United States Congress) என்றானது. அமெரிக்க காங்கிரஸில் மாநில பிரதிநிதிகள் (Lower House = House of Representatives & Upper House = Senate) தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைப்பர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கதை ⬇️
வரலாற்றில் இந்தியா என்றுமே ஒரே நாடாக இருந்ததில்லை ஆனால் 17 ஆம் நூற்றாண்டில் முகலாயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக இந்தியாவை ஒற்றை நிர்வாகத்தின் கீழ் (மத்திய அரசு) பல பகுதிகளை கொண்டு வந்தனர்.
மாகாணத்தில் (மாநிலங்கள்) சுபேதார் (கவர்னர்) முகலாயரின் ஏஜென்ட்டானார். முகலாயர்கள் ஆட்சிக்கு பிறகு வந்த பிரிட்டிஷ் அரசும் இதே பாணியை பின்பற்றியது. பொதுவாக பிரிட்டிஷ் அரசு தங்களது காலனிய ஆட்சியை வலுவாக்கி கொள்ள பிரித்தாளும் சூழ்ச்சியை (Divide & Rule Policy) கைக்கொள்வது வழக்கம்.
ஆனால் பிற பிரிட்டிஷ் காலனிகளில் "மத்திய அரசு" என்ற ஒற்றை போக்கு கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே இந்தியாவில் முகலாயர்கள் வழியில் பிரிட்டிஷ் அரசு அதிகார குவியல் காரணமாக "மத்திய அரசு" அமைப்பை விரும்பி செயல்படுத்தியது.
காங்கிரஸ் அரசும் இதே பாணியை பின்பற்றியது. பா.ஜ.க அரசும் இதே பாணியை பின்பற்றுகிறது. அக்காலத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் யூனியன் என்ற சொல்லை நீக்கி விட்டு ஃபெடரல் என்ற சொல்லை பயன்படுத்த வேண்டுமென அன்றைய சுதந்திர போராட்ட தலைவர்களில் சிலர் கோரிக்கை வைத்தனர்.
1937 வரையில் இந்து - முஸ்லீம் மக்களின் தூதுவராக முஸ்லீம் லீக் சார்பில் ஜின்னா செயல்பட்டார். ஆரம்ப காலங்களில் ஜின்னா மாநில சுயாட்சி போன்ற கொள்கைகளை தான் பேசி வந்தார். ஆனால் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள இடங்களில் மாநில சுயாட்சி உரிமை தரக்கூடாது என்றனர் இந்துத்துவாதிகள்.
பின்னர் ஆங்கிலேயர்களின் துணைக் கொண்டு பார்ப்பன இந்துத்துவாதிகள் மேற்கொண்ட அரசியல் சூழ்ச்சியால் மனம் கொதித்து ஜின்னா பாகிஸ்தான் நாடு மற்றும் பெரியார் திராவிட நாடு கேட்டு கோரிக்கைகளை வைத்தனர். இது குறித்து ஜின்னாவும் பெரியாரும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சொல்லப்போனால் 24 மார்ச் 1946 இல் இந்திய ஒற்றுமையை பேணிக்காத்து சுதந்திரம் வழங்குவது குறித்தும் பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரங்களை இந்தியத் தலைமைக்கு மாற்றுவது குறித்தும் விவாதிக்கும் நோக்கில் பல பிரதிநிதிகளை கொண்டு அமைச்சரவை தூதுக்குழு (Cabinet Mission Plan) அமைக்கப்பட்டது.
அமைச்சரவை தூதுக்குழு முன்வைத்த திட்டங்களுக்கு ஜின்னாவின் முஸ்லீம் லீக் 6 ஜூன் 1946 இல் ஒப்புதல் அளித்தது. காங்கிரஸ் 25 ஜூன் 1946 இல் ஒப்புதல் அளித்தது. ஆனால் 10 ஜூலை 1946 இல் யாரும் எதிர்பாராதவிதமாக காங்கிரஸ் இத்திட்டத்திற்கு முழுமையாக கட்டுப்படாது என்றார் நேரு.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜின்னாவின் முஸ்லீம் லீக் தமது ஒப்புதலை 29 ஜூலை 1946 இல் வாபஸ் வாங்கியது. இதன் பிறகு "பாகிஸ்தான்" என்ற தனி நாடு கோரிக்கையே விடுதலைக்கான ஒரே வழி என்று எண்ணி அதற்கான ஆரம்பமாக 16 ஆகஸ்ட் 1946 இல் ஜின்னாவின் நேரடி நடவடிக்கை நாள் (Direct Action Day) அமைந்தது.
14 ஆகஸ்ட் 1947 இல் பாகிஸ்தான் தனி நாடாகியது. பிறகு நமது திராவிட நாடு கோரிக்கையும் அதனை தொடர்ந்து மாநில சுயாட்சி கோரிக்கையும் வலுவிழந்தது. ஒரு வேளை இன்று பாகிஸ்தான் நம்மோடு இருந்திருந்தால் இந்திய அரசியலமைப்பு சட்ட முகவரியே மாறியிருக்கும். இந்துத்துவாதிகளும் வலுவிழந்து இருப்பர்.
"திராவிட நாடு" கோரிக்கை அதன் பின்னர் "மத்தியிலே கூட்டாட்சி! மாநிலத்திலே சுயாட்சி!" போன்ற முழக்கங்களை தி.மு.க 1970கள் வரை மிக தீவிரமாக பேசி வந்தது. அண்ணாயிசம் என்ற எம்.ஜி.ஆரின் அ.தி.மு.கவோ ஆட்சிக்கு வந்த பிறகு அம்முழக்கங்களை கைவிட்டது.
ஜெயலலிதாவோ ஒரு படி மேலே சென்று "நானே பிரதமர்! நானே முதல்வர்!" என்ற பாணியில் ஆட்சி செய்தார் பிறகு எடப்பாடியோ ஒரு படி மேலே "நானே அடிமை எனக்கேது உரிமை" என்ற பாணியில் ஆட்சி செய்தார். மொத்தத்தில் அ.தி.மு.க தி.மு.கவின் மாநில சுயாட்சி கொள்கைகளை குழிதோண்டி புதைத்து விட்டது.
தி.மு.க வென்ற பிறகு இம்முழக்கங்கள் மீண்டும் எழ வேண்டும் மீண்டும் பேச வேண்டும் இல்லாவிட்டால் 2026 இல் நிலைமை எவ்வாறு அமையும் என சொல்வதற்கில்லை.
வேண்டும்
"மத்தியிலே கூட்டாட்சி! மாநிலத்திலே சுயாட்சி!"
இல்லையேல்
"திராவிட நாடு"
கிடைக்காது என்பதால் கேட்காமல் இருக்க வேண்டுமா?
ரத்தின சுருக்கமாக
# அமெரிக்க மாநிலங்கள் இணைந்து மத்திய அரசை உருவாக்கி "இயன்றவரை" மாநில சுயாட்சியை உறுதி செய்தது = Federal = கூட்டாட்சி
# இந்திய மத்திய அரசு மாநிலங்களை உருவாக்கி "இயன்றவரை" மாநில சுயாட்சியை குறைத்தது = Unitary = ஒற்றையாட்சி
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
# மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (Representation of People Act, 1951) மூலம் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு குறிப்பிட்ட வைப்புத்தொகையை தேர்தல் ஆணையத்திடம் டெபாசிட் செய்வது கட்டாயமாகும்.
# விளையாட்டுத்தனம் இல்லாமல் சமூக அரசியல் எண்ணம் கொண்ட வேட்பாளர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட வைப்புத்தொகை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
# சுதந்திரமான நியாயமான தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுக்கிறது அவற்றில் வைப்புத்தொகை செலுத்துவது ஒன்றாகும்.
# நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 ரூபாயை வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும்.
# சட்டமன்றம் மற்றும் இதர தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10,000 ரூபாயை வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும்.
# பழங்குடியினர் / ஆதி திராவிடர்கள் வைப்புத்தொகையில் 50% சலுகை பெறலாம்.
சராசரியாக இல்லாமல் ஒன்றிய அரசையும் அதன் நிர்வாகத்தையும் எதிர்த்து சராமரியாக கேள்வி கேட்டால் "வரம்புக்கு உட்பட்டு தான் மாநில மக்களோ மாநில அரசோ பேச வேண்டும்" என்கிறார்கள்.
ஒன்றிய அரசும் அதன் நிர்வாக அமைப்புகளும் "ஜனநாயகம்" என்பதன் பொருளை ஆளுங்கட்சிக்கு உரியதாக கொண்டுள்ளது.
நாமெல்லாம் இப்படிப்பட்ட நிலைகளை எதிர்த்து ஒண்ணுமே பண்ண முடியாதுல்ல?
எப்படி முடியும்?
போலீஸ்காரர்கள் ஒரு பிரம்படி அடிச்சா கூட ஒரு வாரம் வலிக்குமல.
அதுனால நூல் பிடிச்ச மாதிரி பெற வேண்டிய நியாயத்தை விட்டு கொடுத்து வாழ்வது தான் ஒரே தீர்வு.
மாநில சுயாட்சி குறித்து படிக்கும் போதும்
பிற நாடுகளின் அரசியலமைப்பை அறியும் போதும்
இந்திய நாட்டின் அரசியலமைப்பை நோக்கும் போதும்
கவலைகள் மனதை கசக்கி பிழிகிறது
நாம இருக்கோமோ இல்லையோ ஆனா ஒரு நாள் இல்லை ஒரு நாள் பூனைக்கு யாராவது மணி கட்டுவார்கள்.
கொளத்தூர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, திருச்சி மேற்கு, காட்பாடி, திருவண்ணாமலை உட்பட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய கோரி தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க மனு.
🤔
தேர்தலுக்கு முதல் நாள் பரபரப்பையும் குழப்பத்தையும் ஒரு சேர ஏற்படுத்த அ.தி.மு.கவினர் எதாவது தீடீரென செய்வார்கள் என்று நேற்று தான் @Surya_BornToWin சொல்லிக் கொண்டு இருந்தார். இன்று அவர்கள் செய்துவிட்டார்கள். 😔
ஸ்டாலின், உதயநிதி தொகுதியை குறிவைத்து புகார் சொல்லி இருப்பதிலே தெரிகிறது அ.தி.மு.கவின் விஷமத்தனமான அரசியல் போக்கு.
# மதன் மோகன் மாளவியா தலைமையில் 1915 இல் இந்து மகாசபை அமைப்பும் அதிலிருந்து பிரிந்து கே.பி.ஹெட்கேவர் தலைமையில் 25 செப்டம்பர் 1925 இல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தொடங்கப்பட்டது.
# 29 ஆகஸ்ட் 1964 அன்று எம்.எஸ்.கோல்வல்கர் மற்றும் எஸ்.எஸ்.ஆப்தே ஆகியோர் சுவாமி சின்மயானந்தா ஆலோசனையுடன் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பை தொடங்கினர்.
# 1920 களில் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமாக இருக்குமென மக்களின் கவனத்தை பெற்ற போது ஆரியர்கள் வலதுசாரி இயக்கங்களை தொடங்கினர்.
# ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான நாதுராம் கோட்சே 30 ஜனவரி 1948 அன்று இந்தியாவின் தேசத் தந்தை என போற்றப்படும் காந்தியை சுட்டு கொன்றார். காந்தி படுகொலைக்கு பிறகு நாதுராம் கோட்சே தூக்கில் இடப்பட்டார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சில காலம் தடை செய்யப்பட்டது.
மாபா, ஜக்கி, ஹெச். ராஜா, கஸ்தூரி, சுமந்த் ராமன், சூர்யா, சேகர், நாராயணன் உட்பட பலதரப்பட்ட எலைட் வலதுசாரிகள் மனம் போன போக்கில் திராவிட எதிர்ப்பை உமிழும் போது சில சமயங்களில் நமக்கு நாமே "பொறுமையே உன் விலை என்ன?" என்று கேட்கும் வகையில் பேசுகிறார்கள்.
ஜக்கியின் விஷம பிரச்சாரத்திற்கு தமிழக அறநிலையத் துறை சரியில்லை என்று பலர் ஒத்து ஊதுகிறார்கள்.
ஏன்டா! முதலில் வட இந்திய கோவில்கள் அவ்வளவு தூரம் ஏன் பிற தென்னிந்திய கோவில்களை பார்த்து விட்டு பேசினால் தமிழக அரசிடம் தான் அறநிலையத் துறை இருக்க வேண்டும் என்பதை பலரும் ஏற்பார்கள்.
கோவில்கள் சரியில்லை ஆனால் சர்ச், மசூதி எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சங்கிஸ் சொல்கிறார்கள்.
ஏம்பா! சர்ச், மசூதி சென்று வழிபட சாதி தடையில்லை ஆனால் இந்து ஆலயங்களில் கருவறையில் வழிபட இன்னும் சாதி தடையாக உள்ளதே? ஏன்?