"ரிப்போர்ட்டை வீசி எறிந்த பழனிசாமி... விக்கித்துப் போன அதிமுக அமைச்சர்கள்".!

தேர்தல் நாளான நேற்று சேலத்தில் இருந்த முதல்வர் பழனிசாமிக்கு மணிக்கு ஒரு தரம் தேர்தல் அப்டேட் செய்திகளை, அதிமுகவுக்கு தேர்தல் பணியாற்றிய தனியார் நிறுவனம் அனுப்பிக் கொண்டே இருந்ததாம்...
காலை வரை உற்சாகத்தில் இருந்த முதல்வர் பழனிசாமியின் முகம், நண்பகல் 12 மணி அளவிலேயே இருண்டு போய் விட்டதாக அருகில் இருந்தவர்கள் சொல்கிறார்கள்.

ஒரு கட்டத்தில், தேர்தல் அப்டேட் செய்திகளை ஒரே அடியாக மொத்தமாக மாலை அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டு, தன் அறைக்கு சென்றுவிட்டாராம்
முதல்வர் பழனிசாமி.

மாலை தனது தனியார் நிறுவனம் அனுப்பிய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு ரிப்போர்ட்டை பார்த்துக் கொண்டு இருந்த போதே.. உளவுத்துறையும் தாங்கள் தனியாக எடுத்த ஒரு ரிப்போர்ட்டை முதல்வரிடம் வழங்கியதாம்.
இரண்டு ரிப்போர்ட்டை யும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டு இருந்த முதல்வர் பழனிசாமி.. கடும் கோபத்தில் ரிப்போர்ட்களை டேபிள் மீது வீசி எறிந்தாராம். கோபத்திற்கு காரணம் ரிப்போர்ட்டில் வந்த செய்தியின் தன்மை அப்படியாம்.

தேர்தலுக்கு முன்பு வரை 70 முதல் 80 தொகுதிகள் வரை கிடைக்கும்
என்று சொன்ன தனது தனியார் தேர்தல் ஆலோசனை நிறுவனம்., தற்போது 20 முதல் 30 தொகுதிகள் வரை தான் அதிமுகவுக்கு கிடைக்கும் என்று அறிக்கை தந்துள்ளதாம். அதையே உறுதி செய்துள்ள உளவுத்துறை அறிக்கை.. ஒருபடி மேலே சென்று பெரும்பாலான அமைச்சர்கள் தோல்வி அடைவார்கள் என்று சொல்லி இருந்ததாம்.
முதல்வர் ரிப்போர்ட்டை வீசி எறிந்ததையும், அதிலிருந்து செய்தியையும் அதிகாரிகள் மூலம் அறிந்த அதிமுக அமைச்சர்கள் விக்கித்துப் போய் உள்ளார்களாம்.!

#shared

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ⚔️வெற்றிகொண்டான்⚔️ 🖤❤️

⚔️வெற்றிகொண்டான்⚔️ 🖤❤️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @myheartDMK1949

25 Mar
ஒரு பெண் ஆசிரியரின் பதிவு.

பள்ளிக்கு செல்லும்போது எப்போதுமே என் கைப்பையில் 2 அல்லது 3 நாப்கின்கள் இருக்கும்.

வாரத்தின் இறுதியில் அந்த நாப்கின்கள் தீர்ந்துபோய் அடுத்தவாரம் மீண்டும் கைப்பையில் எடுத்துச்செல்வேன். சில நேரங்களில் ஒரே நாளில் 3ம் தீர்ந்துபோய் வேறொரு (1/N)
ஆசிரியரிடம் கையேந்தி நிற்கும் நிலையும், அவர்களிடத்தில் இல்லாமல் போனபோது, வீடு பள்ளியின் அருகிலேயே இருந்ததால், வீட்டிற்கே சென்று எடுத்து வந்ததும் உண்டு.

ஒருத்தி சுவற்றின் மறைவில் நின்றிருக்க, இன்னொருத்தி தயங்கியபடியே தலையை சொறிந்து கொண்டு மேசையின் அருகே வந்து "மிஸ் அவளுக்கு
பீரியட்ஸ்... உங்க கிட்ட நாப்கின் இருக்கா?!" என்று கேட்பாள்.! ஒவ்வொரு முறை இப்படி யாரேனும் ஒருத்தி வந்து கேட்பாள்.

ஒவ்வொரு முறையும் சுவற்றின் மறைவில் நின்றிருக்கும் அந்த இன்னொருத்திக்காகவே கைப்பையில் எப்போதும் நாப்கின்கள் இருக்கும்.!

//நாப்கின் இலவசமா கொடுப்பதாக தேர்தல்
Read 9 tweets
25 Mar
பொய்கள் உலா வருகின்றன..
மக்களின் தன்னெழுச்சி கண்டு இந்த முறை எழவே முடியாதென உணர்ந்து பொய்களை அவிழ்த்துவிட தொடங்கியிருக்கிறார்கள்.. தென் தமிழகத்தில் வன்னியர் உள்ஒதுக்கீட்டிற்கு பெருத்த எதிர்ப்பு வரவும் இது தற்காலிக ஏற்பாடென அமைச்சர் சொல்கிறார்.. தினம் தினம் அறிக்கைகளில் பொய்(1/n)
சொன்னவர்கள் அதையே மக்கள் முன் அவிழ்த்துவிட மக்கள் எதிர்கேள்வி கேட்கிறார்கள் .. கேனசிரிப்போடு சமாளிக்கிற நிலை எடப்பாடிக்கு ஏற்பட்டிருக்கிறது.. பன்னீரை வைத்து காய்நகர்த்தி பாஜக தமிழகத்தில் ஊன்ற காரணமானது இன்று எதிர்வினையாற்றுகிறது.. "பட்டைசோத்துக்கே செஞ்சுருவோம் " என்ற
இனப்பெருமையை பேசி தனக்கு முதல்வர் பதவிவரை தந்தவருக்கு துரோகமிழைத்ததை "சமூகபார்வை" கேள்வி எழுப்புகிறது.. பாவம் தொகுதிக்குள் நடமாட முடியாத நிலை வருமோ என அச்சம் கொள்கிறார்..
..
வரும் செய்திகள் அதிமுகவின் அந்திமத்தை எழுதுவதாக அறிந்து "கொடுக்கவேண்டியதை"அமுக்கநினைக்கிறார்களென
Read 11 tweets
23 Mar
முதலமைச்சருக்கு உளவுத்துறை அனுப்பியுள்ள முக்கியத் தகவல்

தேர்தல் முடிவுகள் பற்றிய விரிவான உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்று முதல்வர் பழனிச்சாமி மூன்று மூத்த அமைச்சர்கள் கொண்ட உயர்மட்டக் குழுவிடம் தரப்பட்டுள்ளதாம கடந்த 4ஆண்டுகளில், உளவுத்துறை தந்த மிக விரிவான ரிப்போர்ட் இதுதானாம்(1/n)
அதைப் பார்த்து அதிர்ந்த அந்த நால்வர் ‌குழு அதை எந்தக் காரணம் கொண்டும் மற்ற அமைச்சர்களுக்கும், கட்சிப் பொறுப்பாளர்களுக்கும்கூட தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

அந்த ரிப்போர்ட்டில் உள்ளதைப் பார்த்துவிட்டால் இப்போது தேர்தல் பணி செய்யும்
நிர்வாகிகள் அனைவரும் அதையெல்லாம் நிறுத்திவிட்டு, செலவுக்கு கொடுக்கப்படும் பணத்தை பதுக்குவதில் கவனம் செலுத்தத் தொடங்கிவிடுவார்கள் என்பதுதான் இந்த முடிவிற்கு காரணமாம்.

எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் தேர்தல் களப்பணியில்(?!) அமைப்பு ரீதியாகக் கை தேர்ந்தவர்கள்
Read 14 tweets
1 Mar
என் திராவிட சொந்தங்களே
இந்த படம் நினைவிருக்கிறதா?
பேரறிஞர் அண்ணா மற்றும் காமராஜர் பெயரை அகற்றி முதல் அடியை தமிழகத்தில் வைத்துள்ள அயோக்கிய ஆர்எஸ்எஸ் கும்பல்
அடிமை பீஜக கூட்டணி வெற்றி பெற்றால் யார் மீது கை வைப்பார்கள் என்று உங்களுக்கு தெரியும் நன்கு தெரியும்...(1/2)
இடுப்பில் இருந்த துண்டை தோளில் போட வைத்து
கையில் தூக்கிய செருப்பை கால்களில் போட வைத்து
கோவிலை வெளியே இருந்து பார்த்த நம்மை உள்ளே கூட்டி போய் சரிசமமாக்கிய
ஆரம்ப பள்ளி முடிக்க கூட முடியாமல் இருந்த நம்மளை
இளங்கலை முதுகளை முனைவர்களாக பொறியியல் வல்லுநர்களாக மருத்துவராக
ஆக்கிய...
எங்கோ ஒரு குக்கிராமத்தில் சுற்றி திரிந்த நம்மை உலகம் சுற்றும் அறிவாளிகளாக மாற்றி
கூரை வீட்டில் இருந்த நம்மை
காங்ரீட் விடுகளுக்கு மாற்றி
நடந்து போன நம்மை கார்ளில், விமானங்களில் போக வைத்த
நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் திராவிட பெருஞ்சுவருக்கு பேராபத்து சூழ்ந்துள்ளது
Read 6 tweets
1 Mar
என் பேரன்பிற்குரிய தலைவரே
ஒரு சிறிய திமுக தொண்டனாக
கடந்த 2-3 வருடங்களாக நீங்கள் முதல்வராக வர வேண்டும் என்ற நோக்கில் நான் செய்த சிறிய பணிகளை உங்களுக்கு இந்த பிறந்த நாளில் பரிசாக கொடுக்கிறேன்..
உங்களை சந்தித்து பேசுவது போல் எழுதுகிறேன் தலைவா(1/n)
@mkstalin
#HBDதலைவரே
#HBDMKStalin
தலைவரே இந்த பள்ளி தலைவர் கலைஞர் அவர்கள் இரண்டாவது முறையாக முதல்வர் ஆன போது
அய்யா அறந்தாங்கி ராஜனார் மூலமாக என் தந்தையின் வேண்டுகோள் ஏற்று தலைவர் கொடுத்தது அது பழைய கட்டிடம்
இப்போது இது புதியது இந்த பள்ளி கசா புயலால் பாதிக்கப்பட்ட
போது...(2/N)
@mkstalin
#HBDதலைவரே
#HBDMKStalin
ஐம்பதிற்கும் மேற்பட்ட ஓடுகள் உடைந்து சேதமாகின
ஸ்கூல் திறந்து பிள்ளைகள் பள்ளியில் இருக்கயில் தண்ணீர் ஒழுகுவதாக டீச்சர் சொன்னாங்க
பிள்ளைகள் என்றவுடன் மனசு கேட்கள உடனடியாக என் உயிர் நண்பர் வீடு ஓட்டு வீடு அங்கு கழட்டி இங்கே மாட்டிட்டோம் தலைவா
@mkstalin
#HBDதலைவரே
#HBDMKStalin
Read 24 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!