சராசரியாக இல்லாமல் ஒன்றிய அரசையும் அதன் நிர்வாகத்தையும் எதிர்த்து சராமரியாக கேள்வி கேட்டால் "வரம்புக்கு உட்பட்டு தான் மாநில மக்களோ மாநில அரசோ பேச வேண்டும்" என்கிறார்கள்.

ஒன்றிய அரசும் அதன் நிர்வாக அமைப்புகளும் "ஜனநாயகம்" என்பதன் பொருளை ஆளுங்கட்சிக்கு உரியதாக கொண்டுள்ளது.
நாமெல்லாம் இப்படிப்பட்ட நிலைகளை எதிர்த்து ஒண்ணுமே பண்ண முடியாதுல்ல?

எப்படி முடியும்?

போலீஸ்காரர்கள் ஒரு பிரம்படி அடிச்சா கூட ஒரு வாரம் வலிக்குமல.

அதுனால நூல் பிடிச்ச மாதிரி பெற வேண்டிய நியாயத்தை விட்டு கொடுத்து வாழ்வது தான் ஒரே தீர்வு.
மாநில சுயாட்சி குறித்து படிக்கும் போதும்

பிற நாடுகளின் அரசியலமைப்பை அறியும் போதும்

இந்திய நாட்டின் அரசியலமைப்பை நோக்கும் போதும்

கவலைகள் மனதை கசக்கி பிழிகிறது

நாம இருக்கோமோ இல்லையோ ஆனா ஒரு நாள் இல்லை ஒரு நாள் பூனைக்கு யாராவது மணி கட்டுவார்கள்.
மார்க்ஸ் உட்பட பல்வேறு அறிஞர்கள் சொன்னது போல உலக சமுதாயம் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ விடுதலையை நோக்கி பயணப்பட்டு கொண்டே தான் இருக்கும். ஏனெனில் மாற்றம் ஒன்றே மாறாதது.

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவோர் ஆடிக் கொள்ளட்டும் பின்னொரு நாள் மடியட்டும் அத்தோடு முடியட்டும் பிறகு விடியட்டும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Chocks

Chocks Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @chockshandle

8 Apr
ஆரம்பிக்கலாமா?

தேர்தல் வைப்புத்தொகை (Election Deposit)

# மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (Representation of People Act, 1951) மூலம் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு குறிப்பிட்ட வைப்புத்தொகையை தேர்தல் ஆணையத்திடம் டெபாசிட் செய்வது கட்டாயமாகும்.
# விளையாட்டுத்தனம் இல்லாமல் சமூக அரசியல் எண்ணம் கொண்ட வேட்பாளர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட வைப்புத்தொகை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

# சுதந்திரமான நியாயமான தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுக்கிறது அவற்றில் வைப்புத்தொகை செலுத்துவது ஒன்றாகும்.
# நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 ரூபாயை வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும்.

# சட்டமன்றம் மற்றும் இதர தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10,000 ரூபாயை வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும்.

# பழங்குடியினர் / ஆதி திராவிடர்கள் வைப்புத்தொகையில் 50% சலுகை பெறலாம்.
Read 8 tweets
7 Apr
இன்றைய வரலாற்று கேள்வி

அமெரிக்கா மற்றும் இந்தியா நாடுகளில் "எந்த அடிப்படையில் அரசியல் அமைப்பு சட்ட முறை உருவானது" என அறிந்தவற்றை பதிவு செய்க!
விடை

அமெரிக்க அரசியல் அமைப்பு சட்டத்தின் கதை ⬇️

பிரிட்டன் ஆட்சியிலிருந்து விடுதலை பெற 13 காலனிய நாடுகள் ஒருங்கிணைந்து காங்கிரஸ் பேரவையை (Continental Congress) தொடங்கி மக்கள நலன் மற்றும் விடுதலை நலன் கருதி திட்டங்களை வகுத்து வந்தனர். 1776 இல் விடுதலை அடைந்தனர்.
பிறகு மக்கள் நலத்திட்டங்களை செயலாற்ற கூட்டமைப்பு உரை (Articles of Confederation) இயற்றப்பட்டது. காங்கிரஸ் பேரவையும் (Continental Congress) கூட்டமைப்பு காங்கிரஸ் (Congress of the Confederation) என்றானது. 13 காலனிய நாடுகளுக்கு மத்தியில் "வலுவான" மேற்பார்வையாளர் இல்லாமல் இருந்தது.
Read 22 tweets
5 Apr
சற்று முன்

கொளத்தூர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, திருச்சி மேற்கு, காட்பாடி, திருவண்ணாமலை உட்பட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய கோரி தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க மனு.

🤔
தேர்தலுக்கு முதல் நாள் பரபரப்பையும் குழப்பத்தையும் ஒரு சேர ஏற்படுத்த அ.தி.மு.கவினர் எதாவது தீடீரென செய்வார்கள் என்று நேற்று தான் @Surya_BornToWin சொல்லிக் கொண்டு இருந்தார். இன்று அவர்கள் செய்துவிட்டார்கள். 😔
ஸ்டாலின், உதயநிதி தொகுதியை குறிவைத்து புகார் சொல்லி இருப்பதிலே தெரிகிறது அ.தி.மு.கவின் விஷமத்தனமான அரசியல் போக்கு.
Read 4 tweets
4 Apr
பா.ஜ.கவின் கோரமுக வரலாறு (மிக சுருக்கமாக)

# மதன் மோகன் மாளவியா தலைமையில் 1915 இல் இந்து மகாசபை அமைப்பும் அதிலிருந்து பிரிந்து கே.பி.ஹெட்கேவர் தலைமையில் 25 செப்டம்பர் 1925 இல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தொடங்கப்பட்டது.
# 29 ஆகஸ்ட் 1964 அன்று எம்.எஸ்.கோல்வல்கர் மற்றும் எஸ்.எஸ்.ஆப்தே ஆகியோர் சுவாமி சின்மயானந்தா ஆலோசனையுடன் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பை தொடங்கினர்.

# 1920 களில் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமாக இருக்குமென மக்களின் கவனத்தை பெற்ற போது ஆரியர்கள் வலதுசாரி இயக்கங்களை தொடங்கினர்.
# ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான நாதுராம் கோட்சே 30 ஜனவரி 1948 அன்று இந்தியாவின் தேசத் தந்தை என போற்றப்படும் காந்தியை சுட்டு கொன்றார். காந்தி படுகொலைக்கு பிறகு நாதுராம் கோட்சே தூக்கில் இடப்பட்டார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சில காலம் தடை செய்யப்பட்டது.
Read 25 tweets
4 Apr
மாபா, ஜக்கி, ஹெச். ராஜா, கஸ்தூரி, சுமந்த் ராமன், சூர்யா, சேகர், நாராயணன் உட்பட பலதரப்பட்ட எலைட் வலதுசாரிகள் மனம் போன போக்கில் திராவிட எதிர்ப்பை உமிழும் போது சில சமயங்களில் நமக்கு நாமே "பொறுமையே உன் விலை என்ன?" என்று கேட்கும் வகையில் பேசுகிறார்கள்.
ஜக்கியின் விஷம பிரச்சாரத்திற்கு தமிழக அறநிலையத் துறை சரியில்லை என்று பலர் ஒத்து ஊதுகிறார்கள்.

ஏன்டா! முதலில் வட இந்திய கோவில்கள் அவ்வளவு தூரம் ஏன் பிற தென்னிந்திய கோவில்களை பார்த்து விட்டு பேசினால் தமிழக அரசிடம் தான் அறநிலையத் துறை இருக்க வேண்டும் என்பதை பலரும் ஏற்பார்கள்.
கோவில்கள் சரியில்லை ஆனால் சர்ச், மசூதி எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சங்கிஸ் சொல்கிறார்கள்.

ஏம்பா! சர்ச், மசூதி சென்று வழிபட சாதி தடையில்லை ஆனால் இந்து ஆலயங்களில் கருவறையில் வழிபட இன்னும் சாதி தடையாக உள்ளதே? ஏன்?
Read 4 tweets
3 Apr
யாருக்கான தேர்தல் இது?

ஏன் தி.மு.கவிற்கு வாக்களிக்க வேண்டும்?

10,000 ஆண்டுகள் ஆகிவிட்டன வேளாண்மை பிறந்து.

5,000 ஆண்டுகள் ஆகிவிட்டன எழுத்து வடிவங்கள் பிறந்து.

3,500 ஆண்டுகள் ஆகிவிட்டன சுமேரிய நாகரிகம் பிறந்து.
2000 ஆண்டுகள் ஆகிவிட்டன ஆரியம் உட்பட நிறுவனமான மதங்கள் பிறந்து.

1500 ஆண்டுகள் ஆகிவிட்டன மதங்களும் பேரரசுகளும் இணைந்து.

500 ஆண்டுகள் ஆகிவிட்டன புதுயுகம் (Modern Era) பிறந்து.

200 ஆண்டுகள் ஆகிவிட்டன விஞ்ஞான வளர்ச்சி வேகமெடுத்து.

100 ஆண்டுகள் ஆகிவிட்டன திராவிட இயக்கம் பிறந்து.
2000 ஆண்டு ஆதிக்க சக்தியான ஆரியத்தின் வீழ்ச்சியை உறுதி செய்ய 1900 களில் இறுதியில் வீறு கொண்டு எழுந்தது திராவிட இயக்கம்.

திராவிட இயக்கத்தின் முன்னோடி வடிவமாக பெரியாரின் நீதிக் கட்சி உருவெடுத்தது.

அதன் அரசியல் வடிவமாக தி.மு.க பிறந்தது.
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!