அரக்கோணம் சோகனூர் கிராமத்தில் நடந்த இரட்டைக்கொலை :-

சமீபத்திய தேர்தல் பிரசாரத்தின்போது,

அதிமுக-பாமக ஆதரவாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று,

சில தலீத் இளைஞர்கள் "பானை" சின்னத்துக்கு ஓட்டு கேட்டுள்ளனர்.

இந்த சம்பத்தை மனதில் வைத்துக்கொண்ட அதிமுக-பாமக(வன்னியர்)
நபர்கள்
நேற்று தெருவில் அமைதியாக சென்றுகொண்டிருந்த ஒரு தலீத் இளைஞரை அழைத்து(பானைக்கு ஓட்டு கேட்ட கூட்டத்தில் இருந்தவர்),

தரையில் முட்டிபோட வைத்து அவமானப்படுத்தியுள்ளனர்..!

இதை அறிந்த தலீத் இளைஞர்கள் நியாயம் கேட்க சென்றபோது,

இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் இரு தலீத் இளைஞர்கள் கொடூரமாக குத்தப்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் இரு தலீத் இளைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது..!

கவனிக்க :-
பானை சின்னத்துக்கு ஓட்டு கேட்ட தலீத் இளைஞர்கள் எந்த தலீத் கட்சியையும் சாராதவர்கள்..!
சம்பவம் அறிந்த விசிக வேட்பாளர் கௌதம சன்னா சோகனூர் சென்று தலீத் இளைஞர்களுக்கு ஆறுதல் கூறி,

விசிக தலைவர் திருமாவளவனுக்கு போனில் லைன் போட்டு கொடுத்து,

தலீத் இளைஞர்களை பேச வைக்க முயல,

அவர்கள் அதை தவிர்த்துவிட்டு,

"உடனடியாக வெளியேறிவிடுங்கள்..எங்களை வைத்து
அரசியல் செய்யாதீர்கள்"
என கூறியதால்,

விசிக வேட்பாளர் சோகனூரில் இருந்து வெளியேறினார்.

பதிலடியாக
வன்னியர்களின் JCP வண்டிவாகனங்கள் உள்ளிட்டவை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

சோகனூரில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

கொலைசெய்யப்பட்ட இளைஞர்களுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்து கைகுழந்தைகள் உள்ளனர்.
இதுவே சோகனூரின் களநிலவரம்!

அம்பேத்கர் சமத்துவ இயக்கத்துக்கு சோகனூரில் வலுவான கட்டமைப்பு உள்ளது.

ஆனால் இந்த பதற்ற சூழலில் நிலைமையை மேலும் தீவிரமாக்க வேண்டாம் என்ற காரணத்தால்,

தலீத் இளைஞர்களை அமைதிபடுத்தும் முயற்சியில் உள்ளோம்.

இதை அரசியலாக்கி மைலேஜ் தேத்த யாரும் முயலவேண்டாம்!
1.தலீத் இளைஞர்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பை உறுதி செய்யவும்,

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் செய்யவுமே அக்கறை கொள்ள வேண்டும்.

2.தவறான தகவல்களை சமூகவலைதளங்களில் பதிந்து
நிலைமையை மேலும் பதற்றமாக்க வேண்டாம்.

(புகைப்படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அம்பேத்கர் சமத்துவ இயக்கம்

அம்பேத்கர் சமத்துவ இயக்கம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Ambedkar_iyakam

5 Sep 20
"அறிவுத்திருடன்"
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்!

(திரெட்)

"செப்.5 = ஆசிரியர்தினம்"

இந்தியாவின் முதல் துணை குடியரசுதலைவரும்,

இரண்டாம் குடியரசுத்தலைவருமான,

Dr.சர்வபள்ளி ராதகிருஷ்ணனின் பிறந்தநாளே ஆசிரியர் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

இந்த பெருமைக்கு அவர் தகுதியுடையவர்தானா?
கல்கத்தா பல்கலைகழகத்தில்,

"ஜெதுநாத் சின்கா" என்ற திறமைமிகுந்த மாணவர்,

1915ல் BA தத்துவயியல் பட்டமும்,

1917ல் MA தத்துவயியல் பட்டம் பெறுகிறார்!

அதே மாணவர் 1922ல்,

கல்கத்தா பல்கலைகழகத்தின்
"Premchand Roychand Studentship(PRS) விருதுக்காக",

தன் ஆய்வுகட்டுரைகளை சமர்பிக்கிறார்.
"Indian Psychology of Perception"என்ற தன் ஆய்வுக்கட்டுரையின்,

"Volume-I"ஐ 1922-லும்,
"Volume-II"வை 1923-லும்,

கல்கத்தா பல்கலைகழகத்தில் சமர்பிக்கிறார்!

பல்கலைகழகமும் 2000 பக்க ஆய்வு கட்டுரையை சரிபார்க்க,

1.Sir Brajendranath Seal
2.Dr. S.Radhakrishnan
எனும் இருவரை நியமிக்கிறது!
Read 15 tweets
26 Mar 20
"கோயம்பேடு பேரூந்து நிலையம் - கலைஞரின் கனவு திட்டம்"- திரெட்

"பிராட்வே முனையம்"

1.5 ஏக்கரில் அமைந்துள்ள இந்த பேரூந்து நிலையம்தான்,

சென்னையின் புறநகர் பேரூந்து நிலையமாக ஒருகாலத்தில் இருந்தது!

வளர்ந்து வந்த போக்குவரத்து
தேவைகளை இந்த பேரூந்துநிலையம் சந்திக்க இயலாமல் திணறியது!
1996ல் பதவியேற்ற கலைஞர் இப்பிரச்சனையை தீர்க்க உறுதிகொண்டார்.

இதற்காக கோயம்பேட்டில் 36.5 ஏக்கர் நிலத்தை தேர்ந்தெடுத்தார்.

(வெறும் 1.5 ஏக்கர்தான் பிராட்வே)

அவ்விடத்தில்
ஆசியாவிலேயே மிகப்பெரிய பேரூந்து நிலையமாக கோயம்பேடு பேரூந்து நிலையத்தை வார்த்தெடுக்க விரும்பினார் கலைஞர்!
கோயம்பேடு பேரூந்து நிலையத்தை கட்டும் பொறுப்பை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் ஒப்படைத்தார் கலைஞர்.

(இந்த சிஎம்டிஏ-வை 1972ல் உருவாக்கியவரும் கலைஞர்தான்)

அனைத்து வசதிகளுடன் கூடிய பேரூந்து நிலையமாக அமைய
வரைபடங்களும்,
திட்ட அறிக்கையும் தயாரிக்க உத்தரவிட்டார் கலைஞர்!
Read 9 tweets
18 Dec 19
மிக மிக முக்கியமான பதிவு..!

"குடியுரிமை திருத்த சட்டம் 2019" பற்றிய வீடியோ திரெட்..!

5 வீடியோக்கள்..

தயவு செய்து,
தயவு செய்து 5 வீடியோக்களையும் பாருங்கள்..

பகிருங்கள்..!

அரசியலமைப்பின் அடித்தளத்தையே அசைக்கும் "காவி குரங்கு"களின் கொட்டத்தை அடக்க உறுதியேற்போம்!

1/5
"குடியுரிமை திருத்த சட்டம் 2019" பற்றிய வீடியோ திரெட்..!

5 வீடியோக்கள்..

பாருங்கள்..பகிருங்கள்!

"யாருக்கெல்லாம் குடியுரிமை?"

2/5
"குடியுரிமை திருத்த சட்டம் 2019" பற்றிய வீடியோ திரெட்..!

5 வீடியோக்கள்..

பாருங்கள்..பகிருங்கள்!

"குடியுரிமை சட்டத்தை எங்கெங்கு அமல்படுத்தலாம்?
எங்கு அமல்படுத்த முடியாது?"

3/5
Read 5 tweets
10 Dec 19
சந்திரன் ஏன் வளர்ந்து (வளர்பிறை தேய்பிறை) தேய்கிறான்?

நவகிரகங்களில் ஒன்றான "புதன்" எப்படி பிறந்தான்?

குருபகவான் ஏன் "பொண்டாட்டிய பறிகொடுத்துட்டு தனியா குந்தினு இருக்காரு?"

இந்துமத புராணங்கள் கூறுவது என்ன?

தெரிந்துகொள்ள வேண்டுமா?

(திரெட்)
தேவர்களின் குரு(ஆசிரியர்) பிரகஸ்பதி..!

இவருக்கு "குருபகவான்"
(வியாழன் கிரகம்)என்ற வேறு பெயரும் உண்டு!

இந்த பிரகஸ்பதியின் மனைவி பெயர் "தாரை.."
அதாவது குருபத்தினி!

குரு பிரகஸ்பதியிடம் கல்வி கற்க "சந்திரன்"மாணவனாக வருகிறான்!

சந்திரன் அழகானவன்!தட்சனின் அழகான மகள்களையும் மணந்தவன்!
"குருபத்தினி தாரை"யை சந்திரனின் அழகு ஈர்க்க,

சந்திரனை விரும்ப ஆரம்பிக்கிறாள்!

'தன் கணவன் குரு' இல்லாத நேரத்தில் தன் அழகை காட்டி,

மாணவனாக உள்ள சந்திரனை வசீகரித்து,

தன் கைக்குள் போட்டுக்கொள்கிறாள்..!

இருவரும் சரச சல்லாபத்தில் மூழ்கித்திளைக்கிறார்கள்!
Read 13 tweets
8 Dec 19
"வெங்கயம் வெள்ளப்பூண்டு" உருவான கதையாக இந்து மத புராணங்கள் கூறுவது என்ன?

பாப்பான் ஏன் வெங்காயம் பூண்டை உண்பதில்லை?

(திரெட்)
தேவர்களும் அசுரர்களும் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும்,

மந்தார மலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தபோது,

"அமுதம் தாங்கிய கலசத்துடன் தன்வந்திரி" என்பவன் வெளிப்பட்டானாம்..!

அந்த அமுதத்தை மொத்தமாக அடைய நினைத்த அசுரர்கள்,

தன்வந்திரி கையிலிருந்த அமுதத்தை பறித்துக்கொண்டு ஓடினர்!
அசுரர்கள் பறித்துக்கொண்டு ஓடிய அமுதத்தை மீட்க விஷ்ணு "மோகினி எனும் பேரழகி"யாக மாறி,

அசுரர்கள் முன் தோன்ற,

மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்கள் மெய்மறந்து நிற்க,

"அமுதத்தை நானே உங்கள் அனைவருக்கும் சமமாக பகிர்ந்து தருகிறேன்"என மோகினி கூற,

அசுரர்களும் சம்மதிக்கின்றனர்!
Read 7 tweets
23 Nov 19
ஐ.சி.எஸ்.தேர்வில் வெற்றி பெற்று 1895ல் அரசுப்பணிக்காக இந்தியா வந்தார்!

முதல் பணியிடம் :ஒரிசா மாநிலம்

பின் சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு,

வட ஆற்காட்டில் துணை ஆட்சியராக பணியாற்றினார்!

பின் கடைசியாக 1910ல் திருநெல்வேலியின் பொறுப்பு ஆட்சியராக பொறுப்பேற்றார் ஆஷ்!
ஆஷ்துரை ஆட்சியாளரான நாள் முதல்,

"அனைத்து சாதியினரையும் சமமாக நடத்தவேண்டும்" என்று வலியுறுத்தினார்!

அவரது அலுவலகத்தின் ஊழியர்கள் அனைவரும்,

"சாதிபாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும்" என்றும்,

"ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும்" என்றும் உத்தரவிட்டார்!
குற்றால அருவியில்,

"பிராமணர்கள் மட்டுமே குளிக்க முடியும்..ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது!"என்ற மரபை உடைத்து,

"அனைவரும் குற்றாலத்தில் குளிக்கலாம்"என்று உத்தரவிட்டார் ஆஷ்!

(குற்றால அருவியில் குளித்து குடித்து கும்மாளமிடும் பார்பண அடிமைகளுக்கு இதெல்லாம் தெரியாது!)
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!