#Thread on #Fastag_scam

எல்லாரும் போன வாரம் எலக்சன்ல பிசியா இருந்தோம் அப்ப தமிழ்நாட்ல 30 டோல்பிளாசால கட்டணம் உயர்த்துனாங்க. துளிகூட எதிர்ப்போ சலனமோ இல்ல அதுக்கு காரணம் இந்த fastag முறை. கிட்டதட்ட 90 சதவீத வாகனங்கள் இதை உபயோகிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
கைல இருந்து 5 ரூ எக்ஸ்ட்ரா கொடுக்குறப்ப சளிச்சுகிட்ட மக்கள் அவங்க வேலட்ல இருந்து 10 ரூ எடுக்குறப்ப அவங்களுக்கு அது பெருசா தெர்ல. டோல்ல வேகமா கடக்குற நன்மை இருந்தாலும் நமக்கே தெரியாம நம்ம காசு போக ஆரம்பிசுடுச்சு..கிட்டதட்ட கேஸ் சிலிண்டர் மானியம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்ச மாதிரிதான்
இந்த வேலட்ல இருந்து காசு போகுறதும்.திருச்சிலயிருந்து சென்னை போகவர 520 ரூ ஆச்சு இப்ப 580..இன்னும் 800, 1000 கூட ஆகலாம்.. மக்கள் வருத்தபடமாட்டாங்க. ஏனா இதுதான் டிஜிட்டல் திருட்டு..

Airtel, Paytm wallets

நீங்க உபயோக படுத்துறீங்களோ இல்லையோ பயத்தினாலாவது உங்க வேலட்ல 200, 300,500 னு
மிச்சம் மெயிண்டைன் பன்னிகிட்டு இருப்பீங்க.. வங்கி கணக்கா இருந்தா அதுக்கு வட்டி கிடைக்கும். இந்த வேலட்ல இருக்க காசுக்கு வட்டி? கோடிகணக்கான வேலட்ல எத்தனை கோடி பணம் இருக்கும் அப்ப அதுக்கான வட்டி?ஏர்டெல் காரணும், பே டி எம் காரனும் அனுபவிப்பான்..இந்த வேலட் சிஸ்டத்துக்கு
ஆர் பி ஐ ஒரு வழிமுறை வகுக்கணும்.. டோல் கட்டணம் உயர்ந்தா மக்கள் எதிர்த்து கேள்வி கேட்கணும்.. ஆனா அது இரண்டுமே நடக்காதுங்குறதுதான் நிதர்சனம்..

🙏🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with TRICHY SAMAR CAR SPA.🚐🔧

TRICHY SAMAR CAR SPA.🚐🔧 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vinothpaper

3 Dec 20
Fog on car wind sheild

இந்த மழை காலத்துலயும் வர போற பனி காலத்துலயும் வாகன ஓட்டிகள் பெரும்பாலும் சந்திக்கிற பிரச்சனை தான் இந்த #Fog கண்ணாடி உள்ள பனிமூட்டமாகுறது. ஒவ்வொரு முறையும் கையால துடைச்சிக்கிட்டே இருக்க முடியாது அதுக்கான எனக்கு தெரிஞ்ச தீர்வுதான்.
மழையோ பனியோ, காருக்குள்ளயும் வெளியவும் இருக்குற temperature difference னாலதான் கார் விண்ட் ஷீல்டுல மூட்டம் வருது.. அந்த temperature difference கம்மி பண்ணும்போது இந்த Fog ஆட்டோமெடிக்கா நிண்ணுடும்.

1. Switch ON AC

பனி நேரம் ரொம்ப குளிருதுனு AC ய OFF பண்ணுணீங்கனா வாகனத்துக்குள்ள
இருக்கவங்க மூச்சு காத்து காரணமா காருக்குள்ள temperature அதிகமாகும் அதனால கண்ணாடி FOG ஆகும். சோ கண்டிப்பா ஏசி ஆன் பண்ணி காற்றை பயணிகள் மேல படாம முன் கண்ணாடிய பார்த்தோ இல்ல ஜன்னல் கண்ணாடி பக்கமோ திருப்பிக்கோங்க.
Read 8 tweets
16 Nov 20
#Thread

விளம்பரமும் சாரதாஸும்(விற்பனையும்).

நம்மூர்லயே பெரியகடை இதுதான் ஆனா ஏன் சன்டிவிலயோ விஜய் டிவிலயோ விளம்பரம் பண்ண மாட்டேங்குறாங்கனு சின்ன வயசுல யோசிச்ச பல லட்சம் திருச்சிகாரங்கள்ள நானும் ஒருத்தன். ஆனா ஒரு வியாபாரியா அதோட சூட்சுமத்த இப்ப தெரிஞ்சுகிட்டு இந்த பதிவிடுறேன்.
ஒரு கடையவோ ஒரு வியாபாரத்தையோ பொறுத்த வரை யாரு உங்களுக்கான கஸ்டமர்னு நீங்க முதல்ல தெளிவா புரிஞ்சுக்கணும். பஸ்க்கு நிக்கிறவண்ட போய் நீங்க ரோலக்ஸ் வாட்ச் விக்க முடியாது. அது மாதிரிதான் விளம்பரமும் யார் உங்களோட கஸ்டமர் ஆவாங்களோ அவங்ககிட்டதான் விளம்பரம் பண்ணணும்.
ஏரியா, சிட்டி, மாவட்டம், மண்டலம், மாநிலம், ஜோனல், கன்ட்ரி, வேர்ல்ட் எனக்கு தெரிஞ்சு வியாபார எல்லைய இப்படி பிரிச்சுக்கலாம். உங்களோட பிசினஸும் அப்படிதான். நீங்க ஒரு மளிகை கடை வச்சுருக்கீங்கனா அந்த ஏரியால மட்டும் உன்னிப்பா விளம்பரம் பண்ணுங்க. (எ.க)நீயூஸ் பேப்பர் பிட் நோட்டீஸ்,
Read 10 tweets
9 Nov 20
#Digi_wallet

#thread

டிமானிசேஷன் அறிவிச்சு நாலு வருஷம் ஆச்சு. செம்ம பிளாப். அந்த டைம்ல என்ன பண்றதுன்னு தெரியாம தான் மோடி இந்தியா மூவஸ் டு கேஸ்லஸ் எக்கானமினு சொன்னாரு. அதுக்கப்புறம்தான் கீழ நாலு போட்டோ ல இருக்க அந்த கியூ ஆர் கோட நிறைய இடத்துல பார்க்க ஆரம்பிச்சு இருப்போம்.
பெட்ரோல் பங்க் ல ஆரம்பிச்சு துணிக்கடை, ஹோட்டல், பூக்கடை பானிபூரி கடை வரைக்கும் வந்துருச்சு. பேடிஎம் கூகுள் பே போன்பே அப்படின்னு எல்லாருமே அவனோட வேலட்ட ஃப்ரீயா எல்லா கடைகளுக்கும் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அதுக்குன்னு தனியா பிராசஸிங் ஃபீஸ் கிடையாது. போன் நம்பர் யூஸ் பண்ணி
ஈஸியா பணம் அனுப்பலாம். கிட்டத்தட்ட இப்ப எல்லா ஏடிஎம் வாசலையும் க்யூல நிற்கிறது குறைஞ்சிடுச்சு. மணி பர்ஸ் யாருமே யூஸ் பண்றதில்ல. கிட்டத்தட்ட எல்லா பில் கவுண்டரில் இந்த கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் தான் இருக்கு. இது யூஸருக்கு வேணா ஈசியா இருக்கலாம்.
Read 9 tweets
5 Oct 20
#who_is_ELITE

#Thread

எனக்கு தெரிஞ்சததான் சொல்றேன்.

Middle class family, upper middle class, high class ஆனா எல்லாத்துக்கும் மேல எலைட்னு ஒரு கிளாஸ் இருக்கு. அது யாருனு சொல்றேன். முதல்ல இந்த ட்விட் படிக்கிற யாருமே எலைட் கிடையாது. அவங்கலாம் பீட்டர் சந்துலதான் இருப்பாங்க
இத க்கூட த்ரெட் போடணுமானு கேட்கலாம் பட் சும்மா தெரிஞ்சு வச்சுக்கலாமே.

பாய்ஸ் படத்துல வர ஜெனிலியாவோட அம்மாதான் எலைட் கிளாஸ்க்கு எக்ஸாம்பிள். சம்திங் சம்திங்ல வர ஜெயம் ரவி அம்மாதான் பண்க்காரவங்களுக்கு எக்ஸாம்பிள். பர்ஸ்ட் ஜெனரேஷன்ல பணக்காரவங்க கண்டிப்பா எலைட் ஆக முடியாது
அது ஒரு சிந்தனை. பிறப்பில இருந்து நாம பணக்காரவங்கங்குற நினைப்புதான் உங்கள எலைட்டா உணரவைக்கும் (born with silver spoon). நீங்க கோடி கோடியா சொத்து சேக்கலாம் ஆனா உங்க பையனுங்களும் பேரனுங்களும்தான் எலைட். நீங்க வெறும் பணக்கார அப்பாதான். உங்கள ஒரு ஹோட்டல்ல சாப்ட விட்டா மட்டும்
Read 10 tweets
23 Sep 20
Part #2

#thread_vehicle_loan
இந்த தொகுப்புல எவ்வளவு லோன் வாங்கலாம் எவ்வளவு நாளுல ரீ பேமெண்ட் பண்ணலாமுனு சொல்றேன். அதுக்கு முன்னாடி வாகனத்தோட டிப்ரிசியேசன் வேல்யூ பத்தி கொஞ்சம் சொல்லிடுறேன். அதாவது வருசா வருசம் காரோட மதிப்பு குறையுறதுதான்
உதாரணத்துக்கு 7.2 லட்சம் காரோட ex show room price 10% ரோடு டேக்ஸ்+ இன்ஸ்யூரன்ஸ் 30000 அது இதுனு ஒரு 8.15 லட்சம் காரோட on road price வரும். நீங்க கார வாங்கி ஷோரூம விட்டு வெளிய கொண்டு வந்துட்டீங்கணா அன்னைக்கி அதோட மதிப்பு குறைஞ்சது 10% ( சில கார் தவிர்த்து) அதாவது நீங்க ஒரு 80000
முதல் ஒரு லட்சம் வர இழந்துட்டீங்க.
6 மாசம் - 15%
1 வருசம் - 20%
2 வருசம் - 25%
3 வருசம் - 30%
4 வருசம் - 35%
5 வருசம் - 40%
அதாவது 5 வருசம் கழிச்சு அந்த கார வித்தீங்கனா 4.5 டு 5 லட்சம் வரதான் விலை போகும். ரொம்ப கம்மியா ஓட்டிருந்தா 50000 க்கூட கிடைக்கும். ரொம்ப
Read 18 tweets
16 Sep 20
#Thread

Car loan and bike loan

Plz RT

2020 மார்ச் 25 மாலை 6 மணிக்கு நம்ம நாட்டோட பிரதமர் அறிவிக்கிறார் அன்னைக்கி நைட்லயிருந்து 21 நாளைக்கி லாக்டவுண். 90 சதவீத இந்திய மிடில்கிளாஸ்களுக்கு கொரானாவைவிட மிக பெரிய கவலை அவங்களோட EMI தான். அதுல 10 சதவீதம் பேர் மட்டும்தான்
ஹோம் லோன் EMI கட்ட முடியாதேனு வருத்த பட்டாங்க. மித்த 80% பேருக்கும் வாகன EMI எப்படி கட்ட போறோமுனு கவலை. அந்தளவுக்கு எல்லா சம்பள வாசியும் வாகன கடன் வாங்கி வச்சுருக்கோம். அத பத்திதான் இந்த thread. யார், எதுக்கு, எப்படி, எவ்வளவு, எங்கே கடன் வாங்கலாம் அததான் சொல்லப்போறேன்.
1. கவர்மெண்ட் பேங்
2. பிரைவேட் பேங்
3. கார்பரேட் பைனான்ஸ்
4. பிரைவேட் பைனான்ஸ்

இந்த 4 சோர்ஸ் இருக்கு லோன் வாங்க.

டாடா, ஹீரோ, டிவி எஸ், பஜாஜ், மஹிந்த்ரா மாதிரி பிராண்டுங்க அவங்க ஓன் பைனான்ஸ் (கார்பரேட்) பண்ணுவாங்க.

உங்க சிபில் ஸ்கோர்தான் மேல சொன்ன நாளு சோர்ஸ்ல ஏதாவது ஒரு
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!