டீ Profile picture
8 Apr, 5 tweets, 1 min read
இலங்கைத் தமிழர்களை ஆதரித்ததால் திமுகவினருக்கு ஏற்பட்ட சோதனைகளை ஊடகங்களும், திமுகவினரும் தொடர்ந்து பேசுவதில்லை. 1989ல் 147 எம் எல் ஏக்களைப் பெற்று நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருந்த சூழலில் (பெண்களுக்கு சொத்துரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் சத்துணவு முட்டை, திருமண உதவி, நலத்
திட்டங்கள் என..) விடுதலைப்புலிகள் ஊடுருவலை காரணம் காட்டி 91ல் ஆட்சி கலைக்கப்பட்டது. பின் வந்த பொதுத்தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த ராஜீவ் காந்தி விடுதலைப்புலிகளால் கொல்லப்பட அந்தப் பழி ஊடகங்களால் திமுகவின் மேல் போடப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இருந்த திமுக கட்சிக் கொடி கம்பங்கள்
வெட்டி எறியப்பட்டன. திமுகவினரின் சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டன. நிறைய பேரின் கடைகள் சூறையாடப்பட்டன.அந்த தேர்தலில் கருணாநிதி மட்டும் 600+ ஓட்டுக்களில் வெற்றி பெற்றார். (எழும்பூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டு பின்னர் நடந்தது. அப்போது தெளிந்த மக்கள் பரிதி இளம் வழுதியை
ஜெயிக்க வைத்தார்கள்). கலைஞர் தன் எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்தார். உண்மையில் ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டி காங்கிரஸும், அதிமுகவினரும் சூறையாடிய திமுகவினரின் சொத்துக்கள் எக்கச்சக்கம். இது குறித்து விசாரணை எல்லாம் நடந்தது. நஷ்ட ஈடாக கொஞ்சம் கிடைத்தது. ஆனால் பலர்
நொடித்துப் போனார்கள். (மளிகை கடை போன்ற ரொட்டேசன் கடைகள் வைத்திருந்தொர்).

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with டீ

டீ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @teakkadai1

3 Jan
பஞ்சாப் விவசாயிகள் எப்படி இவ்வளவு வசதியாய் என பொதுவாய் சிலர் கேட்கிறார்கள். முன்னர் இருந்தே மாநில தனிநபர் வருமானத்தில் முண்ணனியில் இருந்தது பஞ்சாப். வெளிநாடுககுக்கு சென்றவர் ஏராளம். இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் ஆட்டோமொபைல் ஸ்பேர் போன்ற தொழில்களில் கொடிகட்டிப் பறந்தவர்கள்.
நோய்டாவில் நிறைய மெக்கானிக்கல் கம்பெனிகளில் அவர்கள் ஆதிக்கம் தான். நம்மூரைப்போல் அங்கே கோவண அளவு நிலம் அதற்கு வரப்பு என்றெல்லாம் இருக்காது. நவீன இயந்திரங்கள் பயன்படுத்தி எபெக்டிவ்வாக விவசாயம் செய்யுமாறு வரப்பெல்லாம் இருக்காது. மேலும் அங்கே விவசாயக் குடும்பங்களில் இருந்து
மிலிடெரிக்குப் போவார்கள். 40+ வயதில் ஓய்வு பெற்று வலுவான பெனிபிட்ஸ்& நல்ல பென்சன் உடன் திரும்பி விவசாயத்தில் ஈடுபடுவார்கள். அப்போது அவரின் மகன் மிலிடெரிக்குப் போவார். தொடர்ச்சியாக மத்திய அரசின் சம்பளமும், பென்சனும் உள்ளே வந்து கொண்டிருக்கும். நவீன இயந்திரங்களுடன்
Read 4 tweets
31 Dec 20
எழுபதுகள் இப்போது போல் போக்குவரத்து வசதிகளோ, பொழுது போக்கு வசதிகளோ இல்லாத காலம். பெருவாரியான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ். எம்ஜியார் பிரச்சாரத்துக்கு சரியான நேரத்துக்கு வரமாட்டார். மாலை 6 மணி என நோட்டீஸில் போட்டிருந்தால் இரவு 2 மணிக்கு வருவார். சில நாட்கள் இந்தியன் ரயில்வே போல
அடுத்த நாள் அதே நேரத்திற்கு வருவார். போன் எல்லாம் எக்சேஞ்சிலும், போலிஸ் ஸ்டேசனிலும் போஸ்ட் ஆபிசிலும் மட்டுமே இருக்கும். அவர் எங்கிருக்கிறார், எப்போது வருவார் எனத் தெரியாமல், கூட்டம் தேவுடு காத்துக் கொண்டிருக்கும். இலவச அரிசி எல்லாம் இல்லாத காலம். எம்ஜியார் ஒரு வழியாக வந்து
மீட்டிங் முடிந்து புறப்படும் போது ஒரு கூட்டம் ஊருக்குத் திரும்ப வழியில்லாமல் இரவில் படுத்துக் கிடக்கும். ஒரு 50 பேர் இருந்தால் அந்தப் பகுதிப் பொறுப்பாளரைக் கூப்பிட்டு ₹100 கொடுப்பார். காலை அவர்களுக்கு சிற்றுண்டி கொடுத்து அனுப்பு என. அவர்களும் ஒரு பொங்கல், சாம்பார் வைத்து
Read 4 tweets
21 Dec 20
பத்திருபது ஆண்டுகளுக்கு முன்னர் வரை மாப்பிள்ளை வீட்டார் செய்த டிமாண்ட்களுக்கெல்லாம் இப்போது பதிலடி கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. தெரிந்த பையன் ஒருவன். வழக்கறிஞர். தந்தை இல்லை. தாய் மட்டும். இவன் ஒரே பிள்ளை. திருமணம் நிச்சயமாகிவிட்டது. அவர்கள் ஊர் வழக்கம், குலதெய்வ கோவிலில்
திருமணம் முடித்து ஊரில் உள்ள சமுதாயக்கூடத்தில் பிற நிகழ்ச்சிகள் மற்றும் சாப்பாடு. பெண், மாப்பிள்ளைக்கு போன் செய்து, ஏன் நல்ல பெரிய மண்டபத்தில் வைக்கக் கூடாதா எனக் கேட்க, ஊரில் வேறு மண்டபம் இல்லை. அருகிலிருக்கும் பெரிய ஊரில் தான் வைக்க வேண்டும். ஆனால் அங்கு ஊர்க்காரர்கள்
எடுத்தேறி வரமாட்டார்கள் என பதிலளிக்க.. பெண், அங்க வச்சா நல்லாவா இருக்கும் எனக் கேட்க, பையனோ எங்க சீனியர்கள் எல்லாம் அங்க தான் வச்சாங்க. ஹைகோர்ட் ஜட்ஜெல்லாம் வந்து சாப்பிட்டுப் போனாங்க எனச் சொல்ல.. கடைசியில் தான் அந்தப் பெண் விசயத்திற்கு வந்தார். என் பிரண்ட்ஸ்லாம் வருவாங்க.
Read 6 tweets
20 Dec 20
முதல்ல ஒரு விசயத்தை இங்கே தெளிவு படுத்திக்கிறேன். மக்கள் நீதி மய்யம் 2021ல் ஜெயிச்சு கமல் முதல்வர் ஆவார் என்று எனக்கு கொடுங்கனவு கூட வந்தது இல்லை. அதிகபட்சம் இந்த தேர்தலில் கடுமையாக உழைத்தால் 6% வாக்குகள் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வேண்டுமானால் மாறும். ஆனால்
மக்கள் நீதி மய்யம் போன்ற ஒரு அமைப்பு தமிழகத்திற்கு நீண்ட கால நோக்கில் தேவை. இரண்டு திராவிடக் கட்சிகள் மட்டும் போதும் என்றால் (இரண்டும் ஒன்றல்ல. இப்போதைய அதிமுக சுயநலத்திற்காக தமிழக நலன்களை அடகு வைக்கிறது. ஆனால் எண்ணிக்கை அளவில் தமிழகத்தில் அதிமுகவினர் அதிகமாக உள்ளனர். உடனடியாக
அது நீர்த்துப் போகவெல்லாம் வாய்ப்பே இல்லை.அவர்கள் எல்லாம் பலனடைந்தவர்கள். அதில் மிகக் குறைந்த சதவிகிதமே தங்கள் பிள்ளைகளை நீட்டுக்கு அனுப்பப்போகிறார்கள். அரசு வேலைக்கு அனுப்புவதற்குப் பதில் அரசாங்க காண்டிராக்டுகளை எடுத்துக் கொள்ளலாம் என நினைப்பவர்கள். திமுக தமிழக நலன்
Read 6 tweets
6 Dec 20
கலாநிதி மாறன் சாட்டிலைட் டிவி தொழிலை விட்டு விலகும் எண்ணத்தில் இருப்பதாக ஒரு தகவல். முக்கிய காரணம் OTT யின் வளர்ச்சி மிகப் பெரியதாக இருக்கும் என அவர் அவதானிக்கிறார். தற்போதைய கேபிள் கட்டணம் மாதத்திற்கு சராசரியாக ₹200. ஆனால் இரண்டு OTT தளங்களை subscribe செய்தால் வருடத்திற்கு
அதற்கு குறைவாகத்தான் வரும். ஸ்மார்ட் டிவிக்களும் ₹12,000க்கு கிடைக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் சராசரியாக இரண்டு மொபைல் போன்கள் சேர்த்து 3-4 ஜிபி தினமும் இருக்கிறது. எனவே ஒரு குடும்பம் தாராளமாக தினம் ஒரு படம் பார்க்கலாம். தாங்கள் விரும்பிய நேரத்தில். இனி சீரியல்களும் கூட
ஓடிடி பிளாட்பாரத்தில் வரும் வாய்ப்பு உண்டு. டிவி ப்ரைம் ஸ்லாட்டுக்கு காத்திராமல் பார்வையாளர்களுக்கு ஏற்ப காசு கொடுக்கும் ஓடிடி பிளாட்பார்ம்க்கு சீரியல் கொடுக்க வாய்ப்பதிகம். படங்களும் ஓடிடியில் ரிலீஸ் ஆவதால் டிவிக்கு மக்கள் செல்வதற்கான வாய்ப்பும் குறைகிறது. எனவே டிவி இனி
Read 6 tweets
6 Nov 20
ஒரு அரசு ஆராயாமல் எடுக்கும் முடிவுகளால் என்னென்ன நடைமுறைப் பிரச்சினைகள் வரும் என்பதை கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்களின் அரியர் எல்லாம் பாஸ் என ஒரு அறிவிப்பை வெளியிட்டது அதிமுக அரசு. இதனை எதிர்த்து பாலகுருசாமி அவர்களால் வழக்கு தொடரப்பட்டது
அந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 20 ஆம் தேதி வருகிறது. எனவே இன்னும் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு இன்னும் எந்த முடிவும் சொல்லப்படவில்லை. இதன் மூலம் பாதிக்கப்படுபவை.

1. பி.ஈ படிக்க விண்ணப்பித்திருக்கும் பாலிடெக்னிக் மாணவர்கள். அவர்களுக்கு ஒன்றோ இரண்டோ அரியர் இருக்கும்
இப்போது Directorate of Technical Education நடத்திய lateral entry B.E கவுன்சிலிங்கில் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

2. B.Eல் அரியர் வைத்து M.E, MBA முதலான உயர்கல்விக்கு விண்ணப்பித்திருப்பவர்கள். இவர்களுக்கும் இப்போது அட்மிசன் மறுக்கப்பட்டு வருகிறது.

இது தவிர இப்போது படித்துக்
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!