1.நல்ல கதை..

○உங்களுக்கு துன்பம் கொடுத்தோரை
பழி வாங்க போறீங்களா?

இந்த கதைய அவசியம் படிங்க அன்பர்களே...

நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்திருக்கிறார்கள்? எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள்?... எத்தனை பேர் என்
2.முதுகில் குத்தியிருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழி
வாங்காமல் ஓயமாட்டேன், என்று
அந்த சாமியார் முன் வந்து பொருமினான் ஒரு சீடன்.

ஏதாவது மந்திரம், கிந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி என்றான்.

சாமியார் யோசித்தார்.

சரி… ஒன்று செய்யலாம் என்று கோணிப்பையை
3.சீடன் கையில் கொடுத்தார் சாமி.

நீ யாரையெல்லாம் பழி வாங்கவேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு உருளைக்கிழங்கில் செதுக்கி இந்த கோணிப்பையில் போட்டுக்கொண்டே வா என்றார்.

ஆனால் இரண்டு நிபந்தனைகள் என்று தொடர்ந்தார்…. ஒரு உருளைக்கிழங்கில் இரண்டு மூன்று பெயர்களை செதுக்கக்கூடாது.
4.ஒவ்வொரு பெயரையும் தனித்தனியாய் செதுக்க வேண்டும்.

சரி… அப்புறம்?...

நீ எங்கெல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போகவேண்டும்....

ப்பூ, இவ்வளவுதானா? நான் என்னமோ பெரிசா ஏதோ சொல்லப்போறீங்கன்னு நினைச்சேன்.... என்று சீடன் எழுந்து போனான்.
5.அன்றிலிருந்து யார் மீதெல்லாம் ஆத்திரமோ யார் யாரை பழிவாங்க வேண்டும் என்று நினைப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து பெயரை செதுக்கி கோணிப்பையில் போட்டுக்கொண்டே வந்தான்.
ஆரம்பத்தில் கோணியை தூக்கி கொண்டு திரிவது ஒன்று பெரிய சிரமமாய் தெரியவில்லை.
ஆனால் நாளாக .....
6.நாளாக, அது சுமையாக தோன்றியது. இன்னும் கொஞ்சநாள் போனதும் தூக்குவதே சிரமமாகிவிட்டது.

இதனிடையே சில நாட்களுக்கு பின் அந்த உரித்த உருளைக்கிழங்குகளிலிருந்து வாசனை வர ஆரம்பித்தது. நாள் போக போக அது சகிக்க முடியாத அழுகிய நாற்றமாக வீச ஆரம்பித்தது. அவன் மூட்டையை தூக்கி கொண்டு வந்தாலே,
7.எல்லோரும் நெருங்கிய நண்பர்கள், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் என எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள்.

அவனிடம் பேசவோ, அவன் சொல்வதை யாரும் காதுகொடுத்து கேட்கவோ கூட தயாராக இல்லை.

சீடன் மறுபடியும் சாமியிடம் வந்தான்.

என்ன சாமி இப்படிப் பண்ணிட்டீங்களே.. என்றான்.
8.என்ன புரிந்தது? என்றார் சாமி.

பழி வாங்கும் குரோத உணர்வை சேகரித்துக்கொண்டே வந்தால் அது சுமையாகிவிடும். துர்நாற்றம் வீசும். யாரும் பக்கத்தில் வரமாட்டார்கள். அதை எனக்கு விளக்கத்தானே இப்படி செய்தீர்கள்? என்றான் சீடன்.
9.ம்… சரி. ஆனால் நீ இன்னும் முழுக்கிணற்றை தாண்டவில்லை என்றார் சாமி.

புரியலையே…?

உன் பிரச்னை சுமை கூடி போச்சே என்பதும் நாற்றமடிக்கிறதே என்பதும் தான் என நீ நினைக்கிறாய், இல்லையா?....

ஆமாம்.....

சரி… அந்த உருளைக்கிழங்குகளை அவ்வப்போது கொட்டி அந்த கோணியை காலி செய்து
10.கொண்டே வந்தால் இந்த சுமைப்பிரச்னை, நாற்றப்பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறாய் இல்லையா?...

ஆமாம்......

மகனே, பிரச்சனை உருளைக்கிழங்கில் இல்லை. கோணிப்பை.....
கோணி இருப்பதால் தானே அதில்
உருளைகிழங்கை சேர்க்க ஆரம்பித்தாய்?... எனவே,
உனக்கு சுமையில்லாமல் இருக்க வேண்டுமானால்,
11.அந்த சுமை நாற்றமெடுக்காமல் இருக்க
வேண்டுமானால் கோணியை முதலில் தூக்கி எறி.

உனக்கு துன்பம் இழைத்தவர்கள் தண்டனை பெற்றே தீருவார்கள்.. நீ உன் வேலையில் கவனம் செலுத்தி உன் கடமையை சரியாக செய்து வா..என்றார்..

ஆம்,அன்பர்களே..

○கைவிடவேண்டியது பழி வாங்கும் நினைப்பை மட்டுமல்ல,
12.பழி வாங்கும் எண்ணத்தையும்,உணர்வையும் கூடத்தான்...

○மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்........

○மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான். இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு எல்லாம் காரணம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with malathy j

malathy j Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @malathyj1508

8 Jun
1.நண்பர் : எங்கள் முப்பாட்டன்மார் கட்டிய கோவில்களில் இந்த பிராமணர்களுக்கு என்ன வேலை?

நான் : உங்கள் முப்பாட்டன் கட்டிய கோவிலை பராமரித்து பூஜை செய்வதுதான் அவர்களின் வேலை.

நண்பர் : பிராமணர்களுக்கு கோவிலில் பூஜை செய்யும் உரிமையை கொடுத்தது யார்???
2.நான் : உரிமையை கொடுத்தது யார்னு எனக்கு தெரியாது. ஆனால் வேதியர்கள் தான் பூஜை செய்ய வேண்டும் என்றவர் சேக்கிழார் பெருமான்.

நண்பர் : ஆதாரம்???

நான் : முதலில் சேக்கிழார் பெருமான் பிராமணர்களை கோவிலில் பூஜை செய்ய அனுமதித்திருந்தால் அதை ஏற்பதாக உத்தரவாதம் தந்தால் ஆதாரம் பதிகிறேன்.
3.நண்பர் : சேக்கிழார் பெருமான் ஒன்று கூறிவிட்டால் அது எங்களுக்கு தெய்வ வாக்கு. ஆகையால் அவர் எங்கே அப்படி சொன்னார்னு சொல்லுங்க.

நான் : (முப்போதும்திருமேனி தீண்டுவார் புராணம்)

"தெரிந்துணரின் முப்போதும்
செல்காலம் நிகழ்காலம்
வருங்கால மானவற்றின்
வழிவழியே திருத்தொண்டின்
Read 6 tweets
7 Jun
1.நாம_ரஸம்

கலியுக தர்மமான பகவான் நாமத்தை எப்போதெல்லாம் சொல்லலாம்?

நியமங்களே இல்லையாம். எப்போது வேண்டுமானாலும் சொல்லலாமாம்.
நாமம் சொல்வதற்காகத் தனியாக ஒரு நேரம் ஒதுக்க வேண்டியதில்லையாம்.
நேரமில்லை என்று சாக்கு போக்கு சொல்லவே முடியாதாம்.
அதெப்படி?

புரந்தரதாஸர்_சொல்கிறார்.
2.நரஜன்ம பந்தாக நாலிகேயிருவாக
கிருஷ்ணா என பாரதே

பாரதே! என்று பாரத தேசத்தில் பிறந்த நம்மைத் தான் விளிக்கிறார். அதற்காக மீதி தேசத்திலுள்ளவர்களுக்கெல்லாம் நாமம் கிடையாதா? அவர்களுக்கும் உண்டு. கண்ணெதிரே இருப்பவரைத்தானே அழைத்துச் சொல்லமுடியும்? அதனால் நம்மைக் கூப்பிடுகிறார்.
3.அரிதிலும் அரிதான மனிதப் பிறவி எடுத்துவிட்டாயல்லவா? அதிலும் பேசும் சக்தி கொண்ட நாக்கு இடுக்கிறதல்லவா? ஒரு முறை க்ருஷ்ணா என்று சொல்லலாமே என்று கெஞ்சுகிறார்.

எதற்காகச்_சொல்லவேண்டும்?

கிருஷ்ணா எந்தரே ஸகல கஷ்டவு பரிஹார
கிருஷ்ணா என பாரதே

உனக்குத்தான் நிறைய கஷ்டங்கள் வரிசையாக
Read 13 tweets
7 Jun
1.*செய்த செயல் திரும்பி வந்துதான் தீரும்; தசரதன் கூறும் எளிய கதை*

மகரிஷி வசிட்டர் கைகேயியிடம் நீதிகள், நியதிகள், மரபுகள், வரம்புகள், அறிவுரைகள் ஆயிரம் எடுத்துச் சொல்லியும் அவை செவிடன் காதில் ஊதிய சங்கு ஒலியாகியது.

அவள் நெஞ்சு உறுதியை அசைக்க வில்லை.
2.தசரதன் விழித்துப் பார்த்தான்; வேர்த்தான்; தன் உள்ளத்துக் குமுறல்களைக் கொட்டி ஆர்த்தான்.

அவன் செயற்கையாய்ச் செவிடன் ஆகிவிட்டான்; எதிரொலிகள் எதுவும் எடுபடவில்லை.

அழுது அயர்ந்த அரசி கோசலைக்கு அவன் தன் நிலையை விரித்து உரைத்தான்.
3.“தரையில் கொட்டிய பால், அதை மீட்டு எடுக்க முடியாது; தயிர் புளித்துவிட்டது; மீண்டும் அதைப் பால் ஆக்க முடியாது;

தந்த வரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியாது.” “அது மட்டும் அன்று; விதியின் செயல் இது, சாபத்தின் விளைவு இது;
Read 11 tweets
7 Jun
1.எப்போதும் மந்திரத்தையோ நாமத்தையோ உச்சரித்துக்கொண்டிருப்பது அஜபா எனப்படும். எந்நேரமும் விழித்திருக்கும்போதும் தூங்கும்போதும் எந்நேரமும் எப்போதும் உச்சரித்துக் கொண்டிருப்பது.

இருதயத்தில் இறைவனை உணரும்வரை உச்சரித்துக் கொண்டிருப்பது. இந்த அஜபா ஜபம் உடல் மனம் ஆத்மா உங்கள்
2.உடல் செல்கள் அனைத்திலும் ஊடுருவி பாயும். இறைவனுக்கும நமக்கும் இடைவிடாத தொடர்பு கிடைக்கும்.

இதற்கு உதாரணமாக ராம் அனுமனை சொல்லலாம். சீதாதேவிக்கு எப்போதும் அனுமன் மீது சிறிது பொறாமை ஏனெனில் ராமனும் சீதாவும் ஒன்றாக இருக்கும் போது அனுமன் வந்துவிட்டால் கூட
3.ராமன் அனுமனையே கண்களால் பார்த்துக் கொண்டிருப்பார்.
இதை ஒருநாள் ராமன் கண்டுபிடித்து விட்டார்.

அனுமனின் உடலிலிருந்து ரோமத்தை பிய்த்து சீதாவின் காதருகில் கொண்டு சென்றார். அந்த ரோமத்திலிருந்து ராம்ராம் என்ற ஓசை கேட்டுக் கொண்டேயிருந்தது. ராமர் சொன்னார் இப்போது புரிகிறதா
Read 4 tweets
6 Jun
1.*அபரா ஏகாதசி - 6.6.2021*

இந்த அபரா ஏகாதசி ஏகாதசியை . அசலா ஏகாதசி என்றும் அழைப்பர்..

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

இந்த ஏகாதசி விரதத்தினால் ஒருவர் மக்கள் மத்தியில் பெரும் பேரும், புகழும் அடைவதோடு, அளவில்லா செல்வத்தையும் பெறுவர் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
2.எவரொருவர் இந்த நன்னாளில் இவ்விரத மஹாத்மியத்தை சொல்கிறாரோ / கேட்கிறாரோ /படிக்கிறாரோ அவர் அவருடைய அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு புதுவாழ்வு பெறுவர் என்று பிரம்மாண்ட புராணம் குறிப்பிடுகிறது.

இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு
3.அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார்.

ஒ யுதிஷ்டிரா !! அபரா ஏகாதசி விரதம் மக்கள் அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விரதம் ஆகும். இது மற்ற அனைத்து விரதங்களை விட ஸ்ரேஷ்டமானதும், உத்தமமானதும் ஆகும். இந்நாளில் அனைவரும் பக்தியுடன் பகவான் மகாவிஷ்ணுவை
Read 16 tweets
5 Jun
1.திருமாலின் 24 அவதாரங்கள்

மகாவிஷ்ணு என்று அழைக்கப்படும் திருமாலின் 10 அவதாரங்கள் முக்கியமானதாக சொல்லப்படுகிறது. இந்த 10 அவதாரங்களை தவிர்த்து, மேலும் 14 அவதாரங்களை திருமால் எடுத்திருக்கிறார். அந்த 14 அவதாரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்..

மகாவிஷ்ணு என்று அழைக்கப்படும்
2.திருமாலின் 10 அவதாரங்கள் முக்கியமானதாக சொல்லப்படுகிறது. மச்சம்,
கூர்மம்,
வராகம்,
நரசிம்மர்,
வாமனன்,
பரசுராமர்,
ராமர்,
பலராமன்,
கிருஷ்ணன் ஆகிய 9 அவதாரங்களை எடுத்திருப்பதாகவும்,
பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தை, கலியுகத்தில் முடிவில் எடுப்பார் என்றும்
3.புராணங்கள் சொல்கின்றன. இந்த 10 அவதாரங்களை தவிர்த்து, மேலும் 14 அவதாரங்களை திருமால் எடுத்திருக்கிறார். அந்த 14 அவதாரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்..

1.ஹயக்ரீவர்,
2.இருதுமன்னன்,
3.நவநாராயணன்,
4.மோகினி,
5.தத்தாத்ரேயர்,
6.தன்வந்திரி,
7.ஜனகர்,
8.நாரதர்,
9.குப்தர்,
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(