1.நண்பர் : எங்கள் முப்பாட்டன்மார் கட்டிய கோவில்களில் இந்த பிராமணர்களுக்கு என்ன வேலை?

நான் : உங்கள் முப்பாட்டன் கட்டிய கோவிலை பராமரித்து பூஜை செய்வதுதான் அவர்களின் வேலை.

நண்பர் : பிராமணர்களுக்கு கோவிலில் பூஜை செய்யும் உரிமையை கொடுத்தது யார்???
2.நான் : உரிமையை கொடுத்தது யார்னு எனக்கு தெரியாது. ஆனால் வேதியர்கள் தான் பூஜை செய்ய வேண்டும் என்றவர் சேக்கிழார் பெருமான்.

நண்பர் : ஆதாரம்???

நான் : முதலில் சேக்கிழார் பெருமான் பிராமணர்களை கோவிலில் பூஜை செய்ய அனுமதித்திருந்தால் அதை ஏற்பதாக உத்தரவாதம் தந்தால் ஆதாரம் பதிகிறேன்.
3.நண்பர் : சேக்கிழார் பெருமான் ஒன்று கூறிவிட்டால் அது எங்களுக்கு தெய்வ வாக்கு. ஆகையால் அவர் எங்கே அப்படி சொன்னார்னு சொல்லுங்க.

நான் : (முப்போதும்திருமேனி தீண்டுவார் புராணம்)

"தெரிந்துணரின் முப்போதும்
செல்காலம் நிகழ்காலம்
வருங்கால மானவற்றின்
வழிவழியே திருத்தொண்டின்
4.விரும்பிஅர்ச் சனைகள்சிவ
வேதியர்க்கே யுரியனஅப்
பெருந்தகையார் குலப்பெருமை
யாம்புகழும் பெற்றியதோ"

- சேக்கிழார்.

பொருள் : ஆராய்ந்து உணர்ந்தால் முன்கூறிய மூன்று காலங்களிலும் அதாவது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரிக்கப்படும் எக்காலத்திலும் வழிவழியாகச் சிவனது அகம்படித்
5.திருத்தொண்டில் விரும்பிய வழிபாட்டர்ச்சனைகள் சிவமறையோர்களுக்கே உரியனவாம். அந்தப் பெருந்தகையாளர்களின் குலத்தின் பெருமை எம்மாற் புகழப்படும் தன்மையுள் அடங்குமோ.!
நண்பர் : சேக்கிழார் பாடியதா இது?
நான் : ஆம்.
நண்பர் : நான் வீட்டுக்கு போய் படிச்சிட்டு வரேன் .🚶🏃🏃🏃.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with malathy j

malathy j Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @malathyj1508

10 Jun
1.கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை..

ஒரு நாள் நான் முடிவு செய்தேன்
இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…

ஆம்,
எனது வேலை,
எனது உறவுகள்,
என் இறையாண்மை

அனைத்தையும் விட்டுவிடுவது
என்று.துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன்.

அப்போது…
2.கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.

“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?”

கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…

“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள
3.மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?”

“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.

“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன்.

அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர்,
Read 13 tweets
10 Jun
1.*பீஷ்ம உவாச - பரான்னம் வேண்டாமே!*

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே, அவர் மரணமடைவதற்கு முன்பு , அவரிடமிருந்து நீதி , நேர்மை , அரசியல் தர்மம் முதலியவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள தர்மர் விரும்பினார் .

தனது சகோதரர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு
2.பாஞ்சாலியுடன் பிதாமகரிடம் சென்றார் .

பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி "தாங்கள் எங்களுக்கு நீதி , நேர்மை ,

அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும்" என்று கேட்க , பாஞ்சாலி மட்டும் பலமாகச் சிரித்தாள் . அதில் கேலி கலந்திருப்பதை உணர்ந்த தர்மர் ,
3."நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் ? என்று கடுமையாகக் கேட்டார்.

துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது , கண்ணன் மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும்? தர்மம் தெரிந்த பீஷ்மர் ,
Read 10 tweets
9 Jun
1.வீண் பழி..!

ஒரு ஊரில் வெட்டுபுலி என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு முறை தேவையில்லாமல் ஒரு கிராமவாசி மீது பழி சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டினான்.

பஞ்சாயத்திலும் கிராமவாசிக்குத் தண்டனை கிடைத்தது. பின், வீட்டிற்கு வந்த வெட்டுபுலியின்யின் மனசாட்சி அவனை உறுத்தியது.
2.கிராமவாசி மீது தான் பழி சொன்னதை எண்ணி வருந்தினான். எனவே, தன் பாவத்திற்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா என்று தேடினான்.

என்ன பிராயச்சித்தம் செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. எனவே, அந்த ஊரிலிருந்த ஒரு துறவியிடம் சென்றான். “துறவியாரே! நான் இந்தக் கிராமத்தில் வசிக்கும்
3.ஒருவர் மீது வீண் பழி சொல்லிவிட்டேன். அது என் மனத்தை உறுத்துகிறது. அந்தப் பழி சொன்ன பாவத்தில் இருந்து தப்பிக்க எனக்கு வழி கூறுங்கள்!” என்று கேட்டான்.

துறவி சிறிது யோசித்துவிட்டு, “இன்று இரவு மூன்று கிலோ இலவம் பஞ்சை எடுத்துப் போய் அந்த கிராமவாசியின்
Read 9 tweets
8 Jun
1.நல்ல கதை..

○உங்களுக்கு துன்பம் கொடுத்தோரை
பழி வாங்க போறீங்களா?

இந்த கதைய அவசியம் படிங்க அன்பர்களே...

நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்திருக்கிறார்கள்? எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள்?... எத்தனை பேர் என்
2.முதுகில் குத்தியிருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழி
வாங்காமல் ஓயமாட்டேன், என்று
அந்த சாமியார் முன் வந்து பொருமினான் ஒரு சீடன்.

ஏதாவது மந்திரம், கிந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி என்றான்.

சாமியார் யோசித்தார்.

சரி… ஒன்று செய்யலாம் என்று கோணிப்பையை
3.சீடன் கையில் கொடுத்தார் சாமி.

நீ யாரையெல்லாம் பழி வாங்கவேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு உருளைக்கிழங்கில் செதுக்கி இந்த கோணிப்பையில் போட்டுக்கொண்டே வா என்றார்.

ஆனால் இரண்டு நிபந்தனைகள் என்று தொடர்ந்தார்…. ஒரு உருளைக்கிழங்கில் இரண்டு மூன்று பெயர்களை செதுக்கக்கூடாது.
Read 12 tweets
7 Jun
1.நாம_ரஸம்

கலியுக தர்மமான பகவான் நாமத்தை எப்போதெல்லாம் சொல்லலாம்?

நியமங்களே இல்லையாம். எப்போது வேண்டுமானாலும் சொல்லலாமாம்.
நாமம் சொல்வதற்காகத் தனியாக ஒரு நேரம் ஒதுக்க வேண்டியதில்லையாம்.
நேரமில்லை என்று சாக்கு போக்கு சொல்லவே முடியாதாம்.
அதெப்படி?

புரந்தரதாஸர்_சொல்கிறார்.
2.நரஜன்ம பந்தாக நாலிகேயிருவாக
கிருஷ்ணா என பாரதே

பாரதே! என்று பாரத தேசத்தில் பிறந்த நம்மைத் தான் விளிக்கிறார். அதற்காக மீதி தேசத்திலுள்ளவர்களுக்கெல்லாம் நாமம் கிடையாதா? அவர்களுக்கும் உண்டு. கண்ணெதிரே இருப்பவரைத்தானே அழைத்துச் சொல்லமுடியும்? அதனால் நம்மைக் கூப்பிடுகிறார்.
3.அரிதிலும் அரிதான மனிதப் பிறவி எடுத்துவிட்டாயல்லவா? அதிலும் பேசும் சக்தி கொண்ட நாக்கு இடுக்கிறதல்லவா? ஒரு முறை க்ருஷ்ணா என்று சொல்லலாமே என்று கெஞ்சுகிறார்.

எதற்காகச்_சொல்லவேண்டும்?

கிருஷ்ணா எந்தரே ஸகல கஷ்டவு பரிஹார
கிருஷ்ணா என பாரதே

உனக்குத்தான் நிறைய கஷ்டங்கள் வரிசையாக
Read 13 tweets
7 Jun
1.*செய்த செயல் திரும்பி வந்துதான் தீரும்; தசரதன் கூறும் எளிய கதை*

மகரிஷி வசிட்டர் கைகேயியிடம் நீதிகள், நியதிகள், மரபுகள், வரம்புகள், அறிவுரைகள் ஆயிரம் எடுத்துச் சொல்லியும் அவை செவிடன் காதில் ஊதிய சங்கு ஒலியாகியது.

அவள் நெஞ்சு உறுதியை அசைக்க வில்லை.
2.தசரதன் விழித்துப் பார்த்தான்; வேர்த்தான்; தன் உள்ளத்துக் குமுறல்களைக் கொட்டி ஆர்த்தான்.

அவன் செயற்கையாய்ச் செவிடன் ஆகிவிட்டான்; எதிரொலிகள் எதுவும் எடுபடவில்லை.

அழுது அயர்ந்த அரசி கோசலைக்கு அவன் தன் நிலையை விரித்து உரைத்தான்.
3.“தரையில் கொட்டிய பால், அதை மீட்டு எடுக்க முடியாது; தயிர் புளித்துவிட்டது; மீண்டும் அதைப் பால் ஆக்க முடியாது;

தந்த வரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியாது.” “அது மட்டும் அன்று; விதியின் செயல் இது, சாபத்தின் விளைவு இது;
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(