1பழமொழியும் அதன் விளக்கமும்..

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.

இது பழமொழி என்று சொல்வதை விட ஒரு விடுகதை என்று சொல்லலாம். மழை பெய்து ஒரே நாள் இரவில், பல இடங்களில் காளான்கள் முளைத்திருக்கும். “நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்” என்ற
2.சொல்லாடலைக் கேட்டிருப்போம். ஒருநாள் மழையில் முளைத்த காளான், சீக்கிரம் அழிந்தும் போகும், அதனால்தான் அற்பன் என்ற சொல். கிராமத்துப்பக்கம் அதனை குடைக்காளான் என்று சொல்வார்கள். பார்ப்பதற்கு குடை போலவே இருக்கும். அந்தக் காளானுக்காக சொன்ன விடுகதைதான் இது.
3.“அர்ப்பணித்து வாழ்பவன் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்” என்பதுதான் உண்மையான பழமொழி என்று வாதிடுவோரும் உண்டு. இரண்டு விளக்கங்களுமே சரியென்றே தோன்றுகிறது. ஆகையால் நாம் விடுகதை, பழமொழி இரண்டையும் ஏற்றுக்கொள்வோம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with malathy j

malathy j Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @malathyj1508

13 Jun
1.விஷ்ணு அவதாரம் ஒவ்வொன்றிலும் சொல்லப்பட்ட கருத்துகள் எவை?

பொதுவாக பகவான் விஷ்ணு மூன்று காரணங்களுக்காக அவதரிக்கிறார். இவை மூன்று தனிப்பட்ட காரணங்கள் அல்ல - ஒன்றோடொன்று தொடர்புடையவையே. அவையாவன:

நல்லோரை காத்தல்
(அவர்களுக்கு இன்னல் விளைவிக்கும்) தீயோரை தண்டித்தல்
2.(இவ்விரண்டின் மூலம்) அறத்தை நிலைநாட்டுதல்
அனைத்து அவதாரங்களிலும் இம்மூன்றை காணலாம். ஒவ்வொரு அவதாரத்தின் நோக்கமும், அதிலிருந்து நாம் பெறக்கூடிய படிப்பினைகளும்.

மீன்: வேதங்களை மீட்டல்.ஒவ்வொரு பிரளயத்தின் பொழுதும் பகவானே நமக்கு தேவையான அறிவை அளிக்கிறார்.
3.ஆமை: துர்வாசரின் சாபத்தால் துன்புற்ற தேவர்களை காத்த அவதாரம். தேவர்களே ஆயினும், பெரியோரை (துர்வாசரை) அவமதித்தால் துன்புற நேரிடும். வாழ்க்கையில் அமிர்தமும் நஞ்சும் ஒன்றாகவே இருக்கின்றன. நாம்தான் தெய்வத்தின் துணையோடு அவற்றை பிரித்துணர வேண்டும்
Read 12 tweets
12 Jun
1.ஒரு சமயம் குந்தி தேவி ஸ்ரீகிருஷ்ணனை காண சென்றார்கள். அப்போது ஸ்ரீகிருஷ்ணன் பூஜை அறையில் பூஜை செய்துவிட்டு தியானத்தில் இருப்பதாக ஸ்ரீருக்மிணி கூறினார்கள். சிலநேரம் கழித்து ஸ்ரீகிருஷ்ணர் வெளியே வந்தார். அவரிடம் குந்திதேவி அண்டசராசரமும் உன்னை பூஜிக்கையில் நீ யாரை
2.பூஜிக்கிறாய் தியானிக்கிறாய் என்று கேட்டார்கள். அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறியது.

ஸ்ரீகிருஷ்ணர் வணங்கும் ஆறு பேர்..

நித்யான்ன தாதா தருணாக்னிஹோத்ரி
வேதாந்தவித் சந்திர சஹஸ்ர தர்சீ
மாஸோபாவாசீச பதிவ்ரதா ச
ஷட் வந்தனீயா மம ஜீவ லோகே.:

பொருள்:

இந்த மனிதர்கள் வாழும் பூமியில்
3.நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்: அவர்கள்

தினமும் அன்னதானம் செய்வோர்,

தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர்,

வேதம் அறிந்தவர்கள்,

சஹஸ்ர சந்திர தரிசனம் செய்து

சதாபிஷேகம் செய்துகொண்டோர்,
Read 4 tweets
11 Jun
1.பெருமாள் கோயில்களில் உள்ள துவார பாலகர்கள் யார்?

>> கோயில்கள் அமைக்கப்பட்ட வேண்டிய வழிமுறைகளை ஆகம நூல்கள் விரிவாகக் கூறுகின்றன.

>> திருக்கோயிலின் அமைப்பு லட்சணங்களாக கர்ப்ப கிரஹம், துவஜஸ்தம்பம், பலிபீடம், ராஜகோபுரம் முதலியவற்றைக் குறிப்பிட்டுவிட்டு, மூலஸ்தானத்தின் வாயில்
2.காப்பவர்களாக துவார பாலகர்களையும் நிர்மாணிக்க வேண்டும் என்று ஆகம விதி வலியுறுத்துகிறது.

>> சில்ப சங்கிரஹம் என்னும் நூல் துவாரபாலகர்களின் தோற்றத்தையும் அங்க லட்சணங்களையும் அழகாக எடுத்துச் சொல்கிறது. நீண்ட பெரிய கைகளும், குறுகிய இடையும், கோரைப் பற்களும் கொண்ட பூத கணங்கள் இவை
3.என்று அந்த நூலில் வர்ணிக்கப்பட்டபோதிலும், சாந்த சொரூபம் கொண்ட துவாரபாலகர்களையும் நாம் அநேக ஆலயங்களில் காணத்தான் செய்கிறோம். ஆகம சாஸ்திரத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் இந்த மாறுதலுக்குக் காரணம் விளங்கும்.

>> பெருமாள் கோயில் துவார பாலகர்கள்: விஷ்ணு ஆலயங்களில் உள்ள துவாரபாலகர்கள்
Read 5 tweets
10 Jun
1.மதத்தை பரப்புவதற்காக கிரிஸ்துவர் மிஷனரியால் அசாமுக்கு ஒருவர் அனுப்பப்பட்டார். அவரது பெயர் க்ரூஸ்.

அஸ்ஸாமில் ஒரு செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வந்துள்ளார்.

போதகர், மெதுவாக வீட்டை ஆராயத் தொடங்கினார். அந்த
2.பையனின் பாட்டி தான் டீ அவ்வீட்டில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர் என்று தெரிந்து கொண்டார்...

'பாட்டியின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டால் குடும்பத்தையே கிறிஸ்தவர்களாக்கலாம்' என்று அவர் நினைத்தார்.
பாதிரியார் பாட்டியிடம் சொல்ல ஆரம்பித்தார்.
3.-- இயேசு எப்படி குஷ்டரோகிகளின் குஷ்ட நோயை குணப்படுத்தினார்,
-- எப்படி குருடர்களுக்கு பார்வை கொடுத்தார்...

என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போனார்.

ஆனால் ஹிந்து சனாதனத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை உள்ள பாட்டி சொன்னார்...
Read 9 tweets
10 Jun
1.கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை..

ஒரு நாள் நான் முடிவு செய்தேன்
இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…

ஆம்,
எனது வேலை,
எனது உறவுகள்,
என் இறையாண்மை

அனைத்தையும் விட்டுவிடுவது
என்று.துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன்.

அப்போது…
2.கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.

“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?”

கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…

“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள
3.மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?”

“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.

“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன்.

அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர்,
Read 13 tweets
10 Jun
1.*பீஷ்ம உவாச - பரான்னம் வேண்டாமே!*

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே, அவர் மரணமடைவதற்கு முன்பு , அவரிடமிருந்து நீதி , நேர்மை , அரசியல் தர்மம் முதலியவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள தர்மர் விரும்பினார் .

தனது சகோதரர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு
2.பாஞ்சாலியுடன் பிதாமகரிடம் சென்றார் .

பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி "தாங்கள் எங்களுக்கு நீதி , நேர்மை ,

அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும்" என்று கேட்க , பாஞ்சாலி மட்டும் பலமாகச் சிரித்தாள் . அதில் கேலி கலந்திருப்பதை உணர்ந்த தர்மர் ,
3."நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் ? என்று கடுமையாகக் கேட்டார்.

துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது , கண்ணன் மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும்? தர்மம் தெரிந்த பீஷ்மர் ,
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(