PALRAJ T Profile picture
20 Jul, 16 tweets, 3 min read
#படிங்க_ரொம்ப_பிடிக்கும்

ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான்.

அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே,
வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான். நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள்.
சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.

இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்? எவ்வளவு இழிசொல்?
போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்துகொண்டான். மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல
'அப்பனே ஆண்டவா...என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான். குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தான்.
ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார். "என்னப்பா...சாப்பிட்டாயா?" என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார்.
கேட்பது ராஜா என்று தெரியாமல் "ஊரே சாப்பிட்டது..என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா" என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்துநீரை பார்த்தபடியே பதில் சொன்னான் அந்த ஏழை.

அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது.
என் பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்? ஒரு அப்பாவி ஏழை இப்படி விடுபட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து 'மன்னித்துவிடப்பா...ரொம்ப பசிக்கிறதா உனக்கு?" என்று கேட்க.
குளத்து நீரில் தலையில் கிரீடம், காதல் குண்டலம், நெற்றியில் திருநீர், முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான். 'ராஜா...நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்..மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதறினான். இவனின் பணப்பை பார்த்த ராஜா சத்தமாக சிரித்தார்
'வா...இன்று நீ என்னோடும் ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்' என்று அவனை பேசவிடாமல் எழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார். 'போய் குளித்துவிட்டு வா' என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார்.
குளித்து, புத்தாடை அணிந்தது வந்தான். அறுசுவை விருந்து கொடுத்தார். சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்த்தார் 'இன்றிலிருந்து நீ ஏழை இல்லை...இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்" என்று வாழ்த்தினார்.
அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. 'ஏனப்பா அழுகிறாய்?' என்று ராஜா கேட்க. "நான் இதுநாள் வரை பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா...இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்" என்று சொன்னான்.
ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க "வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்...கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டான்...
கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவான் என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன்" என்று சொல்லி அழுதான்.

நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும்.
சும்மாவா சொன்னார்கள் ::

கோபுர தரிசனம் கோடி புண்னியம் என்று.!!!

சிவ சிவ 🙏🙏🙏🙏

திருச்சிற்றம்பலம்🙏
நன்றி @nethaji321 ji🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with PALRAJ T

PALRAJ T Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @stpalraj

19 Jul
#பொன்னான_வாழ்வு_தரும்
#புன்னை_நல்லூர்_மாரியம்மன்

சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சாவூரை, சரபோஜி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த வெங்கோஜி ஆண்டு வந்தார். அவர் அவ்வப்போது தீர்த்த யாத்திரை செல்வது வழக்கம்.
அந்த வகையில் கண்ணபுரம் என வழங்கும் சமயபுரத்தில் அருளும் மாரியம்மனை தரிசிக்கச் சென்றார். அன்னையை வணங்கி வழிபட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் வெங்கோஜி. அப்போது அவர் கனவினில் தோன்றிய மாரியம்மன் தஞ்சை நகருக்குக் கிழக்கே புன்னை வனக்காட்டில் புற்றுருவாய் தான் குடி கொண்டிருப்பதாகவும்,
அங்கேயே தன்னை தரிசிக்கலாம் எனவும் திருவாய் மலர்ந்தருளினாள்.திடுக்கிட்டு விழித்த மன்னர் புன்னைக்காட்டினை அடைந்தார். அங்கே திறந்த வெளியில் புற்றுருவாய் அமர்ந்திருந்த அம்பிகையைக் கண்டார். உலகையே ரட்சிக்கும் அன்னை இப்படி வெட்ட வெளியில் இருப்பது கண்டு மனம் நொந்தார்.
Read 16 tweets
18 Jul
#அட்டவீரட்டானக்_கோயில்கள்

அட்டவீரட்டானம் என்பது இறைவனின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிப்பிடப் பயன்படும் சொல்லாடலாகும். சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர்.
பகைவர்களின் வீரத்தை அட்டு ஆன இடம் என்ற வகையிலும், தன் வீரத்தால் அட்டு ஆன இடம் என்ற வகையிலும் வீரட்டானம் என்னும் சொல் அமைந்தது. இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.

திருக்கண்டியூர் : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்
திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்

திருவதிகை : திரிபுரத்தை எரித்த இடம்

திருப்பறியலூர் : தக்கன் தலையைத் தடிந்த தலம்

திருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம்

திருவழுவூர் : கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம்

திருக்குறுக்கை : மன்மதனை எரித்த தலம்
Read 23 tweets
17 Jul
#திருவேற்காடு
#கருமாரி_அம்மன்_கோயில்

கருமாரியம்மன் என்ற சொல்லுக்கு கருமையான மழை மேகத்தை போன்று அருளை வாரி வழங்கும் அம்மன் என்று பொருள். ‘மாரி’ என்றால் மழை என்று அர்த்தமாகும். ‘ கருமாரி என்ற பெயரில் இருக்கும் க – கலைமகள்;ரு – ருத்ரி; மா – திருமகள்; ரி – ரீங்காரி (நாத வடிவானவள்)
என ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் சொல்வர். இந்த நான்கு தெய்வங்களின் அம்சமானவள் என்றும் சொல்லலாம்.

தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில்.
திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் மற்றும் வேர்கள் நிறைந்த வனப்பகுதி என்பது பொருளாகும். இத்தலத்திற்கு வேலங்காடு என்ற வேறு புராண பெயரும் உண்டு. இக்கோவில் 500 - 1000 வருடங்கள் பழமையான கோவிலாகும்.
Read 36 tweets
16 Jul
#தமிழ்நாடு_தான்_உலகத்திலேயே
#மிகவும்_பணக்கார_நாடு.

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.
அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.

தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது.
இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது.
Read 24 tweets
15 Jul
நமது நாடு கண்ட அரிதிலும் அரிதான பெருந்தலைவர் காமராஜர் . எளிமையான வாழ்க்கையை நடத்திச்சென்றாலும் , உயர்ந்த பண்பு மற்றும் சிந்தனைகளை தன்னகத்தே கொண்டிருந்தனர் . தனிப்பட்ட மற்றும் பொதுவாழ்க்கையில் தூய்மையான, நேர்மையான மற்றும் கள்ளம்கபடமில்லாத கொள்கைகளை பின்பற்றியவர்.

#கர்மவீரர்
சாதாரண மக்களையும் மதிக்கும் பண்பில் சிறந்தவர்.

லஞ்சம் , ஊழல் மலிவாக காணப்படும் இன்றைய அரசியல்வாதிகளை காணும்போது, பொதுவாழ்வில் தூய்மையை கடைபிடித்த காமராஜர் வாழ்ந்த கதையே பலருக்கு ஆச்சரியத்தை மூட்டும். பரவலாக இன்றைய அரசியல்வாதிகளுக்கு காமராஜரின் வாழ்க்கை மிகச்சிறந்த பாடம்.
தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், தமிழகத்திற்கு 9 ஆண்டுகாலம் பொற்கால ஆட்சி தந்தார்

#HBDKamarajar
#HBDFatherofModernTamilnadu
Read 4 tweets
15 Jul
🌷 மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது .. சற்று தூரத்தில் ஒரு துறவி கிணற்றில் தண்ணீர் எடுத்து கொண்டிருந்தார் .. காளிதாசர் அவரைப் பார்த்து ..

🌷 " ஐயனே .. தாகமாக இருக்கிறது .. தயை கூர்ந்து .. அருந்துவதற்கு கொஞ்சம் தண்ணீர் தர இயலுமா ..??.."
🌷 என்று கேட்டார் .. அதற்கு அந்த துறவி ..

🌷 " அதனாலென்ன .. தருகிறேன் .. அதற்கு முன் .. தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்களேன் ..!!.."

🌷 என்றார் .. உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு .. இந்த துறவிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து ..
🌷 " ஐயனே .. நான் ஒரு பயணி ..!!.."

🌷 உடனே .. அந்த துறவி ..

🌷 " உலகில் இரண்டு பயணிகள் தான் ..!!

🌷 ஒருவர் சந்திரன் ..!!
🌷 ஒருவர் சூரியன் ..!!

🌷 இவர்கள் தான் .. இரவு || பகலென .. பயணிப்பவர்கள் ..!!.. தாங்கள் யார் ..??.."
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(