#தென்காசி_திருக்கோயில்

வடக்கே காசிக்கு போனால் திரும்புவது சாத்தியமில்லை என எண்ணியே வயதான காலத்தில் காசிக்கு சென்று மரணித்தால் சொர்க்கம் என்ற மனநிலை இருந்த காலம் அது.
வடக்கே காசிக்கு சென்று அடையும் புண்ணியத்தை தெற்கேயே பெறலாம் என்ற வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டதுதான் தெற்கிலும் காசி வேண்டும் என்ற இந்த விஸ்வநாதர் கோயில்.. தென்காசியாக நம்மை மகிழ்விக்கிறது
வெள்ளைகாரன் அதை கட்டினான் இதை கட்டினான் என அதிசயப்படும் நம்மாலே கோபுரவாசலில் வீசும் அந்த காற்றுடன் கூடிய அதிசயம் எந்த நாட்டுக்காரனாக இருந்தாலும் அமைத்திட முடியாது.
ஒவ்வொரு திருக்கோயிலும் ஒரு தனி சிறப்பு கொண்டிருப்பதைப்போல, இந்த தென்காசி கோயில் கோபுரவாசல் காற்று ஓர் அதிசயம்.
மன்னன் பராக்கிரம பாண்டியனால் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமானதுதான் இந்த இராஜ கோபுரம்.

பொதிகை மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று, கோபுர வாசலுக்குள் நுழையும் பக்தர்களுக்கு எதிராக மேற்கிலிருந்து கிழக்காக வீசி வரவேற்கிறது. கோபுர வாசலை கடந்து உள்ளே போகும் போது,
கோபுர வாசலில் இருந்து இறங்கும் இடத்தில், காற்று சுழன்று சுற்றி வீசுவது போல ஒரு அனுபவம் ஏற்படும். தொடர்ந்து உள்ளே செல்லும் போது, காற்று உங்கள் பின் புறமாக கோவிலுக்குள் உங்களை உள்ளே தள்ளுவது போல, கிழக்கில் இருந்து மேற்காக காற்று வீசும் அதிசயத்தையும் உணரலாம்.
மேலும் எந்த தடுப்பும் இல்லாத ஒரே நேர்கோட்டில் காற்று இரண்டு எதிர் திசைகளில் வீசுவதை பக்தர்கள் அனுபவித்தும் மகிழலாம்.
வேறு ஏதேனும் சிறப்பு இருப்பின் கமன்டில் தெரிவிக்கலாம்
நன்றி @nethaji321 ji🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with PALRAJ T

PALRAJ T Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @stpalraj

21 Jul
#ஆயிரம்_கலம்_நைவேத்யம்.

குருவாயூரில் உள்ள பெரும்பலச்சேரி எனும் இடத்தில் நடைபெறும் விழாவிற்கு, சமையல் வேலை செய்வதற்காக நான்கு முதியவர்கள் சென்றிருந்தார்கள். அவர்களை பார்த்ததும், ஏளனமாக சிரித்த நிகழ்ச்சி பொறுப்பாளர், 'வயதான நீங்கள் தான் சமையல்காரர்களா...
நாளை, ஆயிரம் கலம் சாதம், குழம்பு, கூட்டு, பொறியல் என எல்லாம் செய்யணுமே... வயதான உங்களால் முடியுமா... இத்தனை வயதாகியும் பணத்தின் மேல் உள்ள ஆசையால், வேலை செய்ய வந்திருக்கீங்களே...' என்றார், ஆணவத்தோடு!

கிருஷ்ண பக்தர்களான அம்முதியவர்களோ, பள்ளிவேட்டை உற்சவத்தின் போது,
குருவாயூரப்பன் சன்னிதியில் நின்று, 'குருவாயூரப்பா... உன் அருளை அடைய முடியாத எங்களை, இக்கர்வம் பிடித்தவர் முன், காப்பாற்று...' என்று பிரார்த்தனை செய்து, தங்கள் இருப்பிடத்தை அடைந்தனர்.

மறுநாள் அதிகாலை, 3:00 மணிக்கு, நால்வரும், குளத்திற்கு நீராட சென்றனர். அப்போது,
Read 11 tweets
20 Jul
#படிங்க_ரொம்ப_பிடிக்கும்

ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான்.

அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே,
வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான். நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள்.
சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.

இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்? எவ்வளவு இழிசொல்?
Read 16 tweets
19 Jul
#பொன்னான_வாழ்வு_தரும்
#புன்னை_நல்லூர்_மாரியம்மன்

சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சாவூரை, சரபோஜி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த வெங்கோஜி ஆண்டு வந்தார். அவர் அவ்வப்போது தீர்த்த யாத்திரை செல்வது வழக்கம்.
அந்த வகையில் கண்ணபுரம் என வழங்கும் சமயபுரத்தில் அருளும் மாரியம்மனை தரிசிக்கச் சென்றார். அன்னையை வணங்கி வழிபட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் வெங்கோஜி. அப்போது அவர் கனவினில் தோன்றிய மாரியம்மன் தஞ்சை நகருக்குக் கிழக்கே புன்னை வனக்காட்டில் புற்றுருவாய் தான் குடி கொண்டிருப்பதாகவும்,
அங்கேயே தன்னை தரிசிக்கலாம் எனவும் திருவாய் மலர்ந்தருளினாள்.திடுக்கிட்டு விழித்த மன்னர் புன்னைக்காட்டினை அடைந்தார். அங்கே திறந்த வெளியில் புற்றுருவாய் அமர்ந்திருந்த அம்பிகையைக் கண்டார். உலகையே ரட்சிக்கும் அன்னை இப்படி வெட்ட வெளியில் இருப்பது கண்டு மனம் நொந்தார்.
Read 16 tweets
18 Jul
#அட்டவீரட்டானக்_கோயில்கள்

அட்டவீரட்டானம் என்பது இறைவனின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிப்பிடப் பயன்படும் சொல்லாடலாகும். சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர்.
பகைவர்களின் வீரத்தை அட்டு ஆன இடம் என்ற வகையிலும், தன் வீரத்தால் அட்டு ஆன இடம் என்ற வகையிலும் வீரட்டானம் என்னும் சொல் அமைந்தது. இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.

திருக்கண்டியூர் : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்
திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்

திருவதிகை : திரிபுரத்தை எரித்த இடம்

திருப்பறியலூர் : தக்கன் தலையைத் தடிந்த தலம்

திருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம்

திருவழுவூர் : கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம்

திருக்குறுக்கை : மன்மதனை எரித்த தலம்
Read 23 tweets
17 Jul
#திருவேற்காடு
#கருமாரி_அம்மன்_கோயில்

கருமாரியம்மன் என்ற சொல்லுக்கு கருமையான மழை மேகத்தை போன்று அருளை வாரி வழங்கும் அம்மன் என்று பொருள். ‘மாரி’ என்றால் மழை என்று அர்த்தமாகும். ‘ கருமாரி என்ற பெயரில் இருக்கும் க – கலைமகள்;ரு – ருத்ரி; மா – திருமகள்; ரி – ரீங்காரி (நாத வடிவானவள்)
என ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் சொல்வர். இந்த நான்கு தெய்வங்களின் அம்சமானவள் என்றும் சொல்லலாம்.

தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில்.
திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் மற்றும் வேர்கள் நிறைந்த வனப்பகுதி என்பது பொருளாகும். இத்தலத்திற்கு வேலங்காடு என்ற வேறு புராண பெயரும் உண்டு. இக்கோவில் 500 - 1000 வருடங்கள் பழமையான கோவிலாகும்.
Read 36 tweets
16 Jul
#தமிழ்நாடு_தான்_உலகத்திலேயே
#மிகவும்_பணக்கார_நாடு.

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.
அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.

தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது.
இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது.
Read 24 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(