அழியா வரம் வேண்டி அசுரர்களுடன் சேர்ந்து தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது ஆல கால விஷம் உருவானது அந்த விஷம் உலகை அழித்துவிடாதபடி அதை ஒன்றுதிரட்டி அருந்தி விட்டார் சிவபெருமான்.
அதைக்கண்டு பதறிய பார்வதி தேவி, விஷம் உள்ளே இறங்கி விடாமல் கழுத்தைப் பற்றி, விஷம் அவருடைய கண்டத்தில், அதாவது கழு த்திலேயே தங்கும் படி செய்தாள். இதையொட் டியே சிவனாருக்கு திருநீலகண்டன் என்றும் திருப்பெயர் உண்டு.
விஷம் அருந்திய சிவப்பரம்பொருளின் அரு ளாடல் தொடர்ந்தது.
அதீத களைப்பு மேலிட்டது போல் அப்படியே படுத்துவிட்டார் சிவனார். இதனால் ஆதிசக்தி முதலாக அண்டபகிரண் டமும் கலக்கம் அடைந்தது. விரைவிலேயே அவர்கள் கலக்கம் நீங்கும் வகையில் கண்வி ழித்த சிவனார் ஆனந்த தாண்டவம் புரிந்தார். அப்படி, அவர் ஆனந்தத்துடன் திருநடனம் புரிந்தது பிரதோஷ காலம்.
பரமேஸ்வரன் விஷம் உண்டது ஏகாதசி தினத் தில்; களைப்புற்றவராக பள்ளி கொண்டது துவாதசித் திருநாளில். உலக உயிர்கள் மேன்மையுறும்பொருட்டு அவர் சந்தியா தாண்டவம் ஆடியது. திரயோதசி புண்ணிய தினத்தில், பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா காலத்தில்!
புனிதமான இந்தக் காலத்தையே பிரதோஷ வேளையாகக் கருதி, சிவபூஜை செய்து வழிபடுகிறோம். தொடர்ந்து 14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் சிவாலய தரிசனத்தை முறைப்படி செய்பவர்கள், சாரூப பதவி பெற்று சிவ கணங்களாகத் திகழ்வர் என்கின்றன புராணங்கள்.
அதிலும் சனிக்கிழமையுடன் இணைந்து வரும் சனி மஹா பிரதோஷம் மிகச் சிறப்பானது. சிவபெருமான் விஷம் அருந்தி சயனித்து எழுந்து, ஒரு சனிக்கிழமை மாலையில் தான் முதன் முதலாக சந்தியா தாண்டவத்தை நிகழ்த்தினார் என்பதால் சனிக் கிழமை வரும் பிரதோஷம் மிகச்சிறப்பாக அனுஷ்டிக்கப் படுகிறது.
உஜ்ஜயினியில் நிகழ்ந்த ஒரு திருக்கதையை படித்தால், சனிப் பிரதோஷத்தின் மகத்துவம் இன்னும் தெளிவாக விளங்கும்.
சனிப் பிரதோஷத்தை
மெச்சிய ஆஞ்சநேயர்
உஜ்ஜயினி நாட்டின் அரசர் சந்திரசேனன்; உஜ்ஜயினி ஈஸ்வரனான வீரமாஹாளர் மீது அதீத பக்தி கொண்டவர்.
ஒருமுறை இவரது அரண்மனைக்கு வந்த மாணிபத்திரர் என்ற சிவகணநாதர், மன்னனுக்கு உயரிய சிந்தாமணி ரத்தினம் ஒன்றை பரிசளித்தார்.
அந்த ரத்தினம் மிகவும் மகத்துவமானது. அதன் உன்னதத்தை அறிந்த அண்டை நாட்டு வேந்தர்கள்,
ரத்தினத்தை தங்களிடம் ஒப்படைக்கும்படியும் இல்லையேல் போர் மூளும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அவர்களது இந்த அறைகூவலை சந்திரசேனன் கண்டுகொள்ளவே இல்லை.
அதனால் கோபம் கொண்ட அந்த மன்னர்கள் பெரும்படையுடன் வந்து உஜ்ஜயினியை முற்றுகையிட்டனர். எந்த நேரமும் போர் மூளும் அபாயம்.
உஜ்ஜயினி மன்னரான சந்திரசேனன் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. வீரமாகாளர் கோயிலுக்குச் சென்றார். முறைப்படி பூஜை செய்து, முப்புரம் எரித்தவனை முழு மனதோடு தியானம் செய்தார். அரசர் செய்த அத்தனை பூஜைகளையும் அங்கே இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான், யாதவ குலச் சிறுவன் ஒருவன்.
உடனே அவன் மனதில், ‘நாமும் இதே போல பூஜை செய்ய வேண்டும்!’ என்ற எண்ணம் உண்டானது. வீடு திரும்பினான்.
மறுநாள் பொழுது விடிந்தது. சிவபூஜையை ஆரம்பித்தான். கருங்கல் ஒன்றை எடுத்து, சிவலிங்கம் போல நட்டு வைத்தான். மணலையும் பச்சை இலைகளையும் பூஜைப் பொருட்களாக எடுத்து வைத்துக் கொண்டான்.
‘சந்தனம், மாலை, அபிஷேகத் தீர்த்தம், தூபம், தீபம், சாமிக்கு உண்டான ஆபரணம், ஆடை, நைவேத்திய சாதம்’ என்று சொல்லி மணலை யும் பச்சை இலைகளையும் தனித் தனியே பங்கீடு செய்து பிரித்து வைத்து கொண்டான். அவற்றால் அன்போடு அரனை பூஜை செய்தான். பூஜை முடிந்ததும் தியானத்திலும் ஆழ்ந்தான்.
நேரம் இரவு ஆனது. அவனின் தாயார் சாப்பிட அழைத்தாள். தியானத்தில் இருந்தவன், அவள் மீண்டும் மீண்டும் குரல்கொடுத்தும் பதிலே சொல்லவில்லை. ஆதலால், கோபத்துடன் வெளியே வந்தாள்.
அவனை நன்கு அடித்தது டன், சிவலிங்கமாக அவன் வைத்து பூஜித்த கருங்கல்லையும் பிடுங்கி எறிந்து, வீட்டுக்குள் சென்று படுத்துத் தூங்கி விட்டாள்.
அவள் மகனோ... ‘‘ஐயோ, என் ஸ்வாமியை எடுத்து எறிந்து விட்டாளே அம்மா!’’ என்று கதறித் துடித்து மயங்கி விழுந்தான்.
இரண்டு நாழிகை (48 நிமிடங்கள்) ஆயிற்று. அவனுக்கு மயக்கம் தெளிந்தது. மெள்ள நிதானித்து எழுந்தான். அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. வீடெங்கும் ரத்தினமும் தங்கமும் இறைந்து கிடந்தன. அவன் அம்மா வால் எடுத்து எறியப்பட்ட கல்லால் ஆன சிவலிங்கமும், ரத்தின மயமாக ஜொலித்துக் கொண்டிருந்தது
சிறுவன் ஆனந்தத்தில் மிதந்தான். சிறுவனின் தாயார் திடீரென்று விழித்தெழுந்தாள். வீடு முழுவதும் தங்கம் மற்றும் ரத்தின மயமாக இருந்ததைக் கண்டு வியந்தாள்.
தகவல் அரசருக்கும் எட்டியது. அரசர் உடனே ஆயர்சேரிக்குக் கிளம்பினார். அங்கே எழுந்தருளி இருந்த இறைவனை வலம் வந்து வணங்கினார்.
யாதவ சிறுவனை நெஞ்சோடு நெஞ்சாகத் தழுவிக் கொண்டார். ஊரார் எல்லாம் சிவ நாம கோஷம் செய்தார்கள்.
ஊருக்குள் கேட்ட மகிழ்ச்சி ஆரவாரத்தைக் கேட்டு பகை அரசர்கள் திகைப்பில் ஆழ்ந்தா ர்கள். ஒற்றர்களை அனுப்பி காரணத்தை தெரிந்து கொண்டவர்கள், சிவனருளை அறிந்து சிலிர்த்தார்கள்.
படைகளைத் திருப்பி அனுப்பி விட்டு, ஊருக்குள் வந்து சந்திரசேன னிடம் மன்னிப்பு வேண்டியதுடன், யாதவச் சிறுவனின் பக்திக்காகத் தோன்றி அருள் புரிந்த சிவலிங்கத் தையும் தரிசித்து மகிழ்ந் தார்கள். அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த அந்த நேரத்தில், ஆஞ்சநேயர் அங்கு வந்தார்.
அவருக்கு சகல மரியாதைகளும் செய்து வழிபட்டார் சந்திரசேனன்.
யாதவ சிறுவனை நெஞ்சோடு தழுவி அணை த்துக் கொண்டார் ஆஞ்சநேயர். ‘‘மன்னர்களே! அனைவரும் கேளுங்கள்! ஒன்றும் தெரியாத இந்தச் சிறுவனின் பூஜைக்கு மகிழ்ந்து, சிவ பெருமான் தரிசனம் தந்ததைப் பார்த்தீர்கள் அல்லவா?
இதற்குக் காரணம், சந்திரசேன மகாராஜா சனிப் பிரதோஷம் அன்று சிவபெ ருமானைப் பூஜை செய்ததைப் பார்த்து, இந்தச் சிறுவனும் சிவ பூஜை செய்ததுதான். சனிப் பிரதோஷ பூஜையை தரிசித்ததனால் அடையு ம் பலன், இந்த அளவோடு நின்றுவிடாது.
இந்தச் சிறுவனின் பரம்பரையில் எட்டாவது தலைமுறையில் மஹாவிஷ்ணு, ‘கிருஷ்ணன்’ என்ற திருநாமத்துடன் அவதாரம் செய்வார். அவரை வளர்க்க இருக்கும் நந்தன் என்னும் ஆயர்கோன் ஒருவன், இந்தக் குலம் பெருமை அடையுமாறு தோன்றுவான்.
இன்று முதல் இந்தச் சிறுவனை ‘ஸ்ரீதரன்’ என்று அழையுங்க ள்!’’ என்ற ஆஞ்சநேயர், ஸ்ரீதரனுக்குச் சிவ பூஜை செய்ய வேண்டிய வழிமுறைகளை உபதேசித்துச் சென்றார்.
சனிப் பிரதோஷ பூஜையை தரிசித்ததற்கே இவ்வளவு பலன் என்றால், விரதம் இருந்து பூஜிப்ப வர்கள் அடையும் பலனை அளவிட முடியுமா?
சனிப் பிரதோஷத்தின் சிறப்பை அறிந்தோம். இனி பிரதோஷ தினத்தில் நந்தியெம் பெருமானை வழிபடுவது பற்றி அறிவோம்.
நந்தி தரிசனம்
*****
பிரதோஷ வேளையில் நந்திக்குத் தனி சிறப்பு உண்டு. இந்த வேளையில் மூலவரை நந்தியம் பெருமானின் கொம்புகளுக்கு இடையேயுள்ள இடைவெளியின் வழியே தரிசித்து வணங்க வேண்டும்
சிவபெருமான் விஷம் உண்டு சயனித்துத் திரு விளையாடல் புரிந்த பிறகு எழுந்து, அம்பிகை தரிசிக்கும்படி சந்தியா நிருத்தம் ஆட, அதைக் கண்ட நந்திதேவர், ஆனந்த நிலையால் உடல் பருத்தார். அதனால், கயிலாயமே மறைக்கப் பெற்றது. நந்தியின் கொம்புகளுக்கு இடையே இருந்த இடைவெளி யில்
ஈசனின் நடனத்தை தேவர்கள் கண்டு களித்தார்களாம் இதையொ ட்டியே பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையே சிவ பெரு மானை தரிசிக்கிறோம்
இந்த வேளையில் அறுகம்புல்லை மாலையாக கட்டி நந்திக்குச் சாற்றவேண்டும் வில்வம் மருக்கொழுந்து மல்லிகை ஆகிய மலர்களாலும் அலங்காரம் செய்வார்கள்
சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால் சகல பாவங்களும் விலகி புண்ணியம் சேரும், சகல சௌபாக்கியங்களு ம் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும், செல்வாக்கும் கிடைக்கும். மேலும், பிரதோஷத் தன்று செய்யப்படும் தானம் அளவற்ற பலன் கொடுக்கும்.
பிறப்பே இல்லாத முக்தியைக் கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கி ன்றன.
ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென் றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சனி பிர தோஷம், சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக் கூடியது ஆகும்.
சனி பிரதோஷத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை அளித்து அபிஷேகம் செய்து நந்தி பெருமானை வழிபட சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும்
அன்றைய தினம் நந்திக்கும், சிவபெருமானுக் கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவி ப்பது நற்பலன்களை தரும்.
இந்த குறிப்புகளை நெஞ்சில் நிறுத்தி பக்தி சிரத்தையுடன், நேர்மையாகவும் உள்ளப்பூர்வ மாக சிவபெருமானை வணங்கி வாழ்வில் அனைத்து வளங்களும் பெறுங்கள். உங்கள் வீட்டில் இறை அருள் நிலைக்கட்டும்.
🌹🌹சிவ லோக நாதனே இனிய ஈசனே உன் ஆழ்ந்த கருணையுடன் இந்தியாவின் மிகபெரிய கோயில் எது தெரியுமா
🌹🌹_தெரிந்து கொள்வோம்‼️_
🌹🌹33 ஏக்கர் (14 லட்சம் சதுரடி) நிலப்பரப்பில்
திருவாரூரில் அமைந்துள்ள,
தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின்
மிகப் பெரிய கோயிலாகும்!
🌹🏵️ 9 ராஜ கோபுரங்கள்,
🏵️ 80 விமானங்கள்,
🏵️ 12 பெரிய மதில்கள்,
🏵 13 மிகப்பெரிய மண்டபங்கள்,
🏵️ 15 தீர்த்தக்கிணறுகள்,
🌹🏵️ 3 நந்தவனங்கள்,
🏵️3 பெரிய பிரகாரங்கள்,
🏵️ 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்),
🏵️ 100க்கும் மேற்பட்ட சன்னதிகள்,
🏵️ 86 விநாயகர் சிலைகள்,
🏵️ 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சோழர்கள் கட்டிய கோவில் இது.
ஜென்மம் ஜென்மாய் செய்த பாவங்கள் அனைத்தையும் தீர்க்கும் ஒரே தலம் கோடீஸ்வரர் திருக்கோயில்...
1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம். சனி பகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர். அதே போல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ளனர்.
இங்குள்ள சனிபகவான் “பாலசனி’ என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது.
மங்கு, பொங்கு, ஸ்மரணச் சனி மூன்றிற்கும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர். இவ்வூரை ஒட்டி காவேரி நதி, “உத்திரவாஹினி’ யாக அதாவது தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது
இங்குள்ள உத்திரவாஹினியில் கார்த்திகை ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும் என்பது பூர்வ நம்பிக்கை. இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது.
இத்தலத்தில் நவக்கிரகம் கிடையாது. விதியின் பயனை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் மதியால் குறைக்க முடியும்.
ஆயிரமாண்டு அதிசயம் ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருக்கும் ஏழு சிவன் கோவில்கள்
இன்று புகழ்மிகு சிவாலயங்களாக இருக்கும் அனைத்தும் பிரமாண்ட கோவில்களும் ஆயிரமாண்டுக்கு முன்பே கட்டப்பட்டது குறிப்பாக இந்த கோவில் சாட்டிலைட் மற்றும் தொழில்நுட்பம் போன்றவை கண்டறியப்படாத காலத்தில் கட்டப்பட்டவை.
அளவீடுகளை அளவிடும் கருவி கூட இல்லாத காலத்தில் குறிப்பிட்ட ஏழு கோவில்கள் ஒரே தீர்க்க ரேகையில் அமைந்திருப்பது இன்றளவும் அமைந்திருக்கும் அதிசயம்.
வடக்கே அமைந்திருக்கும் கேதர்நாத் துவங்கி தெற்கே அமைந்திருக்கும் ராமேஸ்வரம் இடையில் இருக்கும் மற்ற ஐந்து கோவில்களும்
ஒரே தீர்க்க ரேகையில் அமைந்திருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.
வடக்கே அமைந்திருக்கும் கேதார்நாத் கோவிலின் காலேஸ்வரம் ஆலயம் இங்கே சிவபெருமானும் இருக்கிறார், யம தர்மராஜவும் இருக்கிறார்.
இந்த கோவிலுக்கும் தெற்கே இறுதியில் அமைந்திருக்கும்
தல விருட்சம் : மகிழம்
தீர்த்தம் : பொன்முகலியாற்று தீர்த்தம், ஸ்வர்ணமுகி ஆறு
பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : சீகாளத்தி, திருக்காளத்தி
ஊர் : காளஹஸ்தி
கோயில் திறக்கும் நேரம்:
காலை 5 முதல் 12 மணி, மாலை 5 முதல் 9 வரை,
செவ்வாய், புதன் மற்றும் வியாழன் நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
தலபெருமை:-
கண்ணப்பர் வாய்கலசமாக முகலிநீர் கொண்டுவந்து காளத்தியப்பருக்கு அபிஷேகம் செய்ததால் இங்கு பக்தர்களுக்கு திருநீறு(விபூதி) வழங்கும் வழக்கம் இல்லை.
ஒரு பெண் தனது ஒரே ஒரு மகனுடன்
வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண்
இல்லை. அவள் கணவன் திடிரென ஒரு நாள் இறந்து விட்டார். கணவரின் இறப்பிற்குப் பின்பு அவளது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் தன் மகனின் எதிர்கால வாழ்வைக் குறித்தச் சிந்தனையாகவே இருந்தது.
தன்னிடம் இருந்தச் சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்தாள்.
மீதி சொத்தை தனது மகனின் கல்வித் தொடர்பான செலவுகளுக்கு தயார் செய்திருந்தாள்.
நல்ல ஒழுக்கமிக்க மகன் இரக்கமானவன்
புத்திசாலி ஊரில் எல்லோரும் புகழும்
வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன
பரிட்சையில் முதல் தரத்தில் தேறினான்
இந்தச் செய்தியை அறிந்த உடனேயே அந்த
தாய் ஆவலுடன் பாடசாலை நோக்கி ஓடினாள் மகனின் வகுப்பறை எது என அறிந்து அங்குச் சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள்
இறைவனைப் புகழ்ந்தாள் சந்தோஷத்துடன் வீடு வந்து அவனுக்கு பிடித்தமான உணவைத் தயாரிக்க ஆரம்பித்தாள்.
நட்ச்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது
சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.
இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.
எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.
உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்
சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..?முடியாது !