இந்தியாவில் வேலைவாய்ப்பில் எங்கு எங்கெல்லாம் நேர்முகத்தேர்வு இருக்கிறதோ அங்கெல்லாம் ஒரே பிரிவினர் மட்டுமே ஆக்கிரமிப்பர். இந்தியாவின் மிகப்பெரிய ஊழலே அதுதான்.

முன்பெல்லாம் அனைத்து கல்லூரி படிப்பிற்கான அனுமதி, அரசு வேலைவாய்ப்பு என்று அனைத்திலும் நேர்முகத்தேர்வு இருந்தது.
நேர்காணல் என்றால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியும்.

அந்த அநீதியை சரி செய்ய கல்லூரி அனுமதியில் நேர்முகத்தேர்வை ஒழித்து வெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே என்று படிப்படியாக கலைஞர் மாற்றனார்.
இதனால் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தும் நேர்காணல் என்று நிராகரிக்கப்படும் அநீதி தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்தயாவிலேயே முதன் முதலாக மாநிலம் முழுவதும் மருத்துவ, பொறியியல் படிப்பிற்கு ஒற்றைச்சாளற அனுமதி முறையை கொண்டு வந்தார்.
உரிமையும் தகுதியும் உள்ள ஒரே ஒரு மாணவர் கூட வாய்ப்பை இழக்க கூடாது என்பதை அது உறுதி செய்தது.

என்ட்ரன்ஸ் எக்ஸாம்கள் கிராமப்புற மாணவர்களுக்கு சம வாய்ப்பை அளிக்கவில்லை என்று அந்த தேர்வு முறையையே நீக்கினார்.
கிராமப்புற மாணவர்களுக்கான 15% இட ஒதுக்கீட்டின் மூலம் ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் மருத்துவர்களானார்கள்.

ஆசிரியர் பணிக்கான வேலை வாய்ப்பில் இருந்த நேர்முகத்தேர்வை நீக்கி, வேலைவாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் பணி வழங்கினார்.
அரசு பணியில் ரொட்டேசன் ரோஸ்டர் முறையில் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டார்.

ஐந்து பல்கலைக்கழங்கள் இருந்தால் அதில் ஒன்றில் பட்டியலினதவர் துணைவேந்தராக இருப்பதை இது உறுதி செய்தது.

ஒருவேளை இரண்டு பணியிடங்களாக மட்டுமே இருந்தால் இரண்டில் ஒன்று பட்டியிலினத்திற்கு செல்லும்.
குறிப்பு
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு கிடையாது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Karthick Ramasamy

Karthick Ramasamy Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @karthickmr

16 Sep
Moral of the story - IFSC நம்பர் வேணுமா?
(இந்த வித்தியாசமான கதையில் moral of the story ஆரம்பத்திலேயே வந்துவிடும்)

முதலமைச்சர் எல்லாம் டம்மி போஸ்ட்டுங்க. அவங்களால ஒன்னும் பண்ண முடியாது.
அப்ப பிரதமர் நினைச்சா மாத்தலாமா?

பிரதமர் என்பவரே கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி. அவர் நினைச்சாலும் முடியாது.

அப்ப அந்த கார்ப்பரேட் முதலாளி நினைச்சா?

முதலாளிகள் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் அங்கம். அம்பானி இல்லனா அதானி. டாட்டா இல்லனா பிர்லா. அவங்க நினைச்சாலும் முடியாது.
அப்ப ஏகாதிபத்திய முதலாளித்துவம் நினைச்சா?

ஏகாதிபத்திய முதலாளித்துவங்கிறது தனி அமைப்பு அல்ல. நம்ம வாழ்க்கையோட ஊடுருவி இருக்க நுகர்வுக் கலாச்சாராம், பொருளியல் அடிமைத்தனம்.
Read 4 tweets
10 Sep
இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்பதுதான் சட்டம்.

ஆனால் அதன் அடிப்படையில்தான் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்பது சட்டம் கிடையாது.

இப்பொழுது தனியார் கல்லூரிகளில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் போதுமானது.
நீட் தேர்வில் டாப் ரேங்க் எடுத்தவர்களுக்குத்தான் சீட் என்று தனியார் கல்லூரிகளை அரசே நினைத்தாலும் சட்டப்படி நிர்பந்திக்க முடியாது.

நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் அவர்கள் மருத்துவம் படிக்க தகுதியானவர்கள் என்பது தான் சட்டம்.
இப்பொழுது கூட தமிழக அரசு நினைத்தால் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கவுன்சிலிங்க்கு விண்ணப்பிக்கலாம் ஆனால் ரேங்கிங் தமிழக அரசின் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் என்று இப்போழுது இருக்கும் சட்டப்படியே முடிவு செய்ய முடியும்.
Read 4 tweets
8 Sep
நான் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன், நன்றாக இருக்கிறேன். இதற்கும் திமுகவிற்கும் என்ன சம்மந்தம்? இதற்கும் கலைஞருக்கும் என்ன சம்மந்தம்?

எங்கள் ஊர் தம்பிகள் சிலரின் கேள்வி இது.
அது என்னவோ தெரியல எனக்கு தெரிந்த நாம் தமிழர் தம்பிகள் பலரும் டிப்ளமோ படித்தவர்களாகவே இருக்கிறார்கள்.

அவர்களுக்கான பதில்.

உங்கள் வீட்டில், சித்தப்பா, பெரியப்பா வீடுகளில் 1967களுக்கு முன்பு எத்தனை பேர் எட்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று விசாரித்துப்பார்,
அப்படி தேர்ச்சியடைந்திருந்தால், எத்தனை பேர் பதினோறாம் வகுப்பு(அன்றைய SSLC) தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்க்கவும். அதையும் மீறி எத்தனை பேர் PUC தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று தேடிப்பார்க்கவும்.

எனது அப்பா SSLCயில் மூன்றாவது முறைதான் தேர்ச்சியடைய முடிந்தது
Read 11 tweets
28 Aug
கீழடி அகழ்வாராய்ச்சிகளில் இத்தாலியில் கிடைப்பது போல எகிப்தில் கிடைப்பது போல, ஏன் கீழடியில் பல ஆடம்பரமான பிரணமாண்டமான பொருட்கள் கிடைக்கவில்லை, கிடைக்கும் இதற்கெல்லாம் பெருமைப்படலாமா என்று நினைக்கிறார்கள்.
நமது பெருமை ஆடம்பரத்தில் இல்லை. அதற்கு மாறாக நம்மிடம் அடிமைத்தனமும் சு்ரண்டலும் இருந்தற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் பெரும்பான்மையான மக்களை ஏமாற்றிப் பிழைத்ததற்கான ஆதாரங்கள் இல்லை.

தமிழர்களின் அறம் சார்ந்த இந்த தனித்த வாழ்வியல் பல பெரும் நாகரிகங்களை விட முற்போக்கானதாக சமுத்தும் கொண்டதாக இருந்ததற்கான பெருமை தான் இந்த அகழ்வாராய்ச்சிகள் மூலம் நமக்கு தெரியவருவது.
Read 4 tweets
16 Aug
தமிழ்நாடு அரசின் IT துறை அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள்.

ஒரு மொபைல் app, payment வசதிகளுடன் செய்வது ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல.

ஓலா, உபர் போன்ற கால் டாக்ஸி நிறுவனங்களுக்கு மாற்றாக லாப நோக்கில்லாத இணைப்பு மென்பொருளை அரசு நிறுவனத்தின் சார்பில் வெளியிட வேண்டுகிறேன்.
உடனே இல்லாவிட்டாலும் அடுத்த சில வருடங்களுக்குள்ளாகவாவது.

இதன் மூலம் வாடகைக் கார் இயக்கும் நபர்கள் சுரண்டப்படுவது, வாடிக்கையாளர் சுரண்டப்படுவது இரண்டுமே தவிர்க்கப்படும். இதை ஆட்டோக்களுக்கும் விரிவு படுத்தலாம்.
தனியார் நிறுவனங்கள் ஆரம்பத்தில் இரண்டு பக்கமும் incentive கொடுத்தாலும் பிறகு வாடிக்கையாளர், வாடகைகார் ஓட்டுநர் இருவரிடமுமே சுரண்டுகிறார்கள்.

லாப நோக்கில்லாமல் அரசு நடத்தும்போது யாரிடமும் சுரண்டி யாருக்கும் incentive தரத்தேவையில்லை, பிறகு அநியாயமாக சுரண்டவும் தேவையில்லை.
Read 6 tweets
16 Aug
உலகம் முழுவதுமுள்ள விவசாயிகள் மது உற்பத்திக்கான மூல பொருட்களை உற்பத்தி செய்வதின் மூலமாக வருமானத்தைப் பெருகிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பு நம் விவசாயிகளுக்கு இல்லை.

மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. அப்படியே அமல்படுத்தினாலும் அதற்கான சந்தை உலகம் முழுவதும் இருக்கிறது.
ஜப்பானில் அரிசியில் இருந்து உற்பத்தியாகும் மதுவகை பிரபலம், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அதை தயாரிக்கிறார்கள்.

உலகம் முழுவதும் தி்ராட்சை விவசாயிகள் ஒயின் உற்பத்தியின் மூலம் பலனடைகிறார்கள்.
பனங்கள்ளை மேம்படுத்தி தரக்கட்டுப்பாடுகளுடன் புதிய மதுவகையை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியை நமது பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும்.

விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள பனைமரத்தை வெட்டக் கட்டுப்பாடு விதிப்பதை விட அதற்கான வியாபார வாய்பபை உருவாக்கினால் தானாக வளர்க்கப்போகிறார்கள்.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(