நீட் வரலாறும் நீங்காத வடுக்களும்

நீட் யார் கொண்டு வந்தது? யார் அதை விடாப்பிடியாக அமல்படுத்தியது? யார் ஆதரவு தந்து? யார் எதிர்த்தது? நீட் தேர்வு விலக்கு சாத்தியமா? போன்ற கேள்விகளுக்கான பதில்தேட நாம் 2010 ஆம் ஆண்டுக்கு பயணிக்க வேண்டும். ஆம் நீட்டுக்கான விதை 2010ல் தான் போடப்பட்டது
2010 டிசம்பர் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் இந்திய மருத்துவ கவுன்சில் இந்திய கெசட்டில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி மருத்துவக் கல்விக்கான நெறிமுறை மற்றும் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. அதன்படி எம்பிபிஎஸ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு
நுழைவு தேர்வு மற்றும் தகுதி தேர்வு நடத்தப்படும் என நெறிமுறை மாற்றம் செய்யப்பட்டது. இது பட்டதாரி கல்விக்கான விதிமுறை 2010 என அழைக்கப்பட்டது. அதன்படி எம்சிஐ 2012 ஆம் ஆண்டு நீட் தேர்வு நடத்த திட்டமிட்டிருந்தது (இந்த சமயத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது)
உடனே அன்றைய திமுக தலைமையிலான அரசும் கேரளா போன்ற காங்கிரஸ் ஆட்சி செய்யாத மாநில அரசுகளும் இணைந்து எம்சிஐ அறிவித்துள்ள பாடத்திட்டத்திற்கும் மாநில பாடத்திட்டத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன என கூறி நிராகரித்தனர். உடனே சமரச நடவடிக்கையாக மத்திய காங்கிரஸ் அரசு ஓராண்டு மட்டும் தள்ளி வைத்தது
பின் மே 5 2013 ல் சில தனியார் கல்லூரிகள் 2013 ஆண்டு நடக்க இருந்த நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதற்கு இடையில் ஜீலை 8 2010ல் கெசட் வெளியான போதே போடப்பட்ட வழக்கில் நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன் ஏ.கே.பட்நாயிக் ஆகியோர்
நீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி இருந்தனர். அதைத்தான் தனியார் கல்லூரிகள் மேல்முறையீடு செய்திருந்தனர் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், விக்ரம்ஜித் சென், ஏ.ஆர்.தவே அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வில் நீதிபதிகள் கபீர் (ம) சென் நீட்டுக்கு எதிராக தீர்ப்பும்
நீதிபதி தவே நீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பும் வழங்கினர். ஆனாலும் பெரும்பான்மை அடிப்படையில் நீட்டுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. பின் 2014 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோல்வியுற்று மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்தபின் 2016 ஏப்ரல் 11- ல்
நீதிபதிகள் கபீர் (ம) சென் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நீட் கொண்டுவர தீவிரமாக முயற்சி எடுக்கப்பட்டது. 2016 சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நீட் விலக்கு கோரி அன்றைய முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
அத்துடன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அதனால் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளித்தது மத்திய அரசு. 2016 நவம்பர் 23 நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கும் பொருந்தும் என மத்திய அரசு அறிவித்தது.
( அந்த சமயத்தில் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது). பின் டிசம்பர் 5 2016 ஜெயலலிதா மறைவிற்குப் பின் முதல்வரான பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்காததால் 2017-ல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.
எதிர்கட்சிகளின் அழுத்தத்தால் அன்றைய முதல்வர் பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாட்டிற்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி அதை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பக்கோறி பிரதமர் மோடியை சந்தித்து கொடுத்துவிட்டு வந்தார்.
ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மேலும் முதல்வர் பழனிச்சாமி அழுத்தம் தராததால் நீட் கட்டாயமாக்கப்பட்டது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில் 85% இட ஒதுக்கீடு மசோதா முதல்வர் பழனிச்சாமியால் கொண்டுவரப்பட்டது
அதையும் உச்சநீதிமன்றமும் மத்திய அரசும் ரத்துசெய்து விட்டன. பின் மே 7 2017-ல் நடத்தப்பட்ட தேர்வில் மாணவர்கள் அதிகமாக பரிசோதிக்கப்பட்டனர் என்கிற விவாதம் எழுந்தது. அந்தாண்டு நீட் தேர்வு வினாத்தாளில் ஆங்கில மொழியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் மாநில மொழிகளில் கேட்கப்பட்தற்கும்
வேறுபாடுகள் இருந்ததால் தேர்வு முடிவுகள் வெளியிட தடை கோரி ஜீன் 12 2017-ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.அதை தொடர்ந்து ஜீலை 25 2017-ல் முதல்வர் பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் ஆனாலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
அதைத்தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மாநில மருத்துவ கல்லூரிகளில் மாநில அரசுக்கான இடங்களுக்கு நீட் தேர்வு விலக்கு கோரி சட்டம் நிறைவேற்றப்பட்டால் மாநில அரசு ஆதரிக்கும் என அறிக்கை விட்டார். ஆனால் அதுவும் காற்றில் வரைந்த ஓவியமாகவே போனது.
பின் அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 14 2017 அன்று மீண்டும் நீட் எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. அதையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்து அறிவித்தது. ஆகஸ்ட் 23 2017 அன்று அந்த ஆண்டு நீட் தேர்வு மிதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 1 2017-ல் நீட்டுக்கு எதிராக
சட்டப்போராட்டம் நடத்திய மாணவி தோழர் அனித்தா
தன் இன்னுயிரை இழந்தார்.இதுவே மோடி அரசால் நீட் எனும் பெயரால் செய்யப்பட்ட முதல் கொலை. அதன்பின் முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு பெரிய அளவிலான எந்த முயற்ச்சியையும் எடுக்காததால் அடுத்த அடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து மாணவர்கள்
தற்கொலை செய்து கொள்வது கடந்த 3 ஆண்டுகளாக வழக்கமாய் போனது. 2018 -ல் பிரதிபா, சுபஸ்ரீ, ஏஞ்சலின் ஆகியோரும் 2019 ஆம் ஆண்டு மோனிகா, ரிதுஸ்ரீ, வைஷ்யா ஆகியோரும் 2020 ஆம் ஆண்டு சுபஸ்ரீ, விக்னேஷ், ஜோதிஸ்ரீ ஆகியோர் என ஆண்டுக்கு ஆண்டு இந்த மக்களை காப்பாற்ற வேண்டிய மருத்துவர்கள்
மொட்டாக இருக்கும் போதே கருகி போகின. இந்தாண்டு சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக இன்று சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளது ஆனால் அதற்க்கும் குறைந்தபட்ச ஆதரவு கூட தெரிவிக்காமல் வெளிநடப்பு செய்துள்ளது அதிமுக பாஜக பாமக கூட்டணி
இதற்கிடையில் நேற்று 12 செப்டம்பர் 2021 அன்று மூன்றாவது முறையாக நீட் எழுத போகும் தனுஷ் என்ற மாணவர் தோழ்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்டார் இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த மோடி அரசு இவ்வாறு தமிழநாட்டு மாணவர்கள் இரத்தத்தை குடிக்குமோ தெரியவில்லை.
2018 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பு தொடர்பாக சட்டத்திருத்தம் செய்யப்பட்டதால் நீட் ஒழிய சட்ட மீண்டும் திருத்தம் அல்லது 2018ல் செய்யப்பட்ட சட்டதிருத்தத்தை ரத்து செய்வதே வழி அதற்கு இன்னும் 3 ஆண்டுகள் கட்டாயம் ஆகும் அதன் பின்பு வரக்கூடிய அரசு மனது வைத்தால் 3 ஆண்டுகளுக்கு பின்பு
நீட் ஒழியலாம். அதுவரை இங்கு அரசியல் கட்சிகள் செய்வது எல்லாம் வெளிப்படையான அரசியலே.....

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தோழர்.......

தோழர்....... Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @prabagaran_p

12 Sep
தமிழ்நாடு - காமராசர் - பக்தவச்சலம் - அண்ணா.

இந்த வரலாற்றை முழுவதுமாக அறிந்துகொள்ள முதல் இந்திய பிரதமர் நேரு ஆட்சி செய்த 1963 - ம் ஆண்டிற்கு செல்லவேண்டும் அங்குதான் அரசியல் ரீதியான முன்னெடுப்புகள் துவங்கின...

1963-ம் ஆண்டு அப்போதைய `மதராஸ் ஸ்டேட்' மாநிலத்தை
தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்திட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து, மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் அன்றைய பிரதமர் நேரு "தமிழ்நாடு என்று பெயரை மாற்றுவதால் என்ன லாபத்தை அடையப்போகிறீர்கள்?'' என கேட்க அங்கு தொடங்கியது பிரட்சனை
அதற்கு கோபமாக பேரறிஞர் அண்ணா "`பார்லிமென்ட்டை 'லோக்சபா' என்றும்... கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸை `ராஜ்யசபா' என்றும் மாற்றியதால்... நீங்கள் என்ன லாபம் அடைந்துவிட்டீர்கள்!'' என பதில் கொடுத்தார் (ராஜ்யசபா லோக்சபா பெயர்மாற்றம் அப்பொழுதுதான் நடந்திருந்தது குறிப்பிட தக்கது).
Read 24 tweets
12 Sep
நாகலாந்தும் ஆர்.என்.ரவியும்

நாகலாந்தின் வரலாற்றை அறிந்து கொள்ள நாம் பிரித்தானிய இந்தியாவில் இருந்து பயணப்பட வேண்டும் காரணம் நாகலாந்து பூர்வக்குடி மக்களின் போராட்ட வரலாறு பிரித்தானியர்களுக்கு எதிராக துவங்குகிறது

இந்தியா அரசர்களால் ஆளப்பட்டுக்கொண்டு இருந்த காலம் தொட்டு
நாகா மக்கள் எந்த முடியாட்சியின் கீழும் இல்லாமல் இறையான்மை கொண்ட பல பழங்குடியின மக்கள் கூட்டாக வாழ்ந்தனர். பிரித்தானியர்கள் 1832-ல் அசாமிற்க்கும் மணிப்பூருக்கும் இடையே தங்கள் வியாபார போக்குவரத்திற்க்கு நேர்வழியை கண்டுபிடிக்கும் நோக்கில் நாகலாந்திற்க்குள் நுழைந்தனர்.
அங்கு தொடங்கியது போராட்டம் அவ்வளவு எளிதில் பிரித்தானியர்களால் நாகா மக்களை வெற்றிகொள்ள முடியவில்லை என்றாலும் 1879-ல் இன்றைய நாகா தலைநகரான கோகிமாவிற்க்கு பக்கத்தில் நடந்த போரில் பிரித்தானிய படை வென்றது. பின் 1880-ல் நடந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு பிறகு நாகலாந்து பிரித்தானியர்
Read 18 tweets
11 Sep
சாதி ஒழிப்பு பெரியார் மட்டுமே செய்தாறா?

முதலில் அய்யா பெரியார் என்ன செய்து கிழித்தார் என்றார்கள்.

இப்போது அவர் மட்டும் செய்யவில்லை என்கிறார்கள்.

இன்னும் சிறிது நாளில் அவர் தான் செய்தார் என்பார்கள் ஆனால் எப்ப அப்ப அந்த கட்சியே இல்லாமல் போயிருக்கும்...
நாங்கள் யாரும் பெரியார் மட்டுமே செய்தார் என்று ஒரு போதும் கூறியதே இல்லை.

ஏன் முதலில் புத்தர் போராடினார் பின் பூலே போராடினார் பின் வள்ளலார், ராமானுஜர் பின் அம்பேத்கர், அயோத்திதாசர், இரட்டைமலையார், கம்யூனிச தோழர்கள் காங்கிரஸ்காரர்கள் என அனைவரும் போராடினர்.

ஆனால்
புத்தருக்கு பின் வலுவான இயக்கத்தை கட்டி எழுப்பியவர் பெரியார். முன்பு போராடிய பலரும் செய்ய நினைத்ததை செய்ய துடித்ததை செய்து முடித்தது செய்து காட்டியது பெரியாரும் அவர் கண்ட பேரியக்கமும். அதன் வழி வந்த ஆட்சியாளர்கள் தான் இன்றும் அதை நடைமுறை படுத்திக்கொண்டு உள்ளனர்
Read 5 tweets
10 Sep
விநாயகர் புராணத்தில் எழும் சில சந்தேகங்கள்....

விநாயகர் எப்படியோ உருவாகிட்டார் அவர் பார்வதியின் அழுக்கில் இருந்து வந்தாரோ வேறு எதிலும் இருந்து வந்தாரோ வந்துட்டார். அவர் தலை துண்டிக்கப்படுகிறது
1. ஏன் யானை தலையை மனித தலைக்கு பதிலாக வைக்கனும்.
அவ்வளவு பெரிய (மனித உடலோடு ஒப்பிடுகையில் பெரும் எடை கொண்ட) யானையின் தலையை மனித உடல் எவ்வாறு தாங்கும்
2. எங்கோ இருந்து யானையின் தலையை வெட்டி இந்த மனித உடலில் இனைத்ததற்க்கு பதிலாக பக்கத்தில் அந்த உடம்பில் இருந்து வெட்டப்பட்டு கிடந்த மனித தலையை இனைத்திருக்கலாமே...
Read 4 tweets
10 Sep
கோவை 10-09-2021

பயணத்தின் போது தோழர் ஒருவருடன் நடந்த உரையாடல்

விநாயகர் சதூர்த்தி பற்றி பேசிக்கொண்டு சென்றோம் விநாயகர் என்றால் இந்துத்துவா இல்லாமலா இவர்கள் தான் நாட்டை கெடுக்கிறார்கள் என்றேன் நான்
அவர் : இவர்கள் இல்லை என்றால் முஸ்லீம் கோவையை ஆட்டி படைத்து விடுவார்கள்
நான் : இவனுங்க தாங்க எல்லாரையும் ஆட்டி படைக்கிறானுவ
அவர் : நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதிங்க இவனுங்க வருவதற்கு முன் (அதாவது கோவை குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன்) முஸ்லீம்கள் தான் எல்லாமே. இவுங்க வந்துதான் அவர்களை அடக்கினார்கள்
நான் : தமிழ்நாட்டில் இசுலாமியர்கள் அதிகம் வாழும் மற்ற மாநிலங்களில் அப்படி ஏதும் இல்லையே. இங்கு இந்துத்துவா வந்துதான் இந்த வெறுப்பை விதைத்து விட்டது
அவர் : நான் திமுககாரன் தான் ஆனா கோவையை பொருத்தவரை இந்துத்துவா வந்து தான் முஸ்லீம்களை அடக்கி இந்துக்களுக்கு மறுவாழ்வு தந்தது
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(