நான் தான் மணி கூண்டு பேசுகிறேன்.. #கடலூர் ல, OT , திருப்பாதிரிபுலியூர் பான்பரி மார்க்கெட், கடலூர் பஸ் ஸ்டாண்டு,போஸ்ட் ஆபிஸ் சுப்ரயாலு பூங்கா,மஞ்சக்குப்பம் னு,
ஒரு காலத்துல கெத்தா கம்பீரமா
எல்லாரும் தலை நிமிந்து எங்கள பாத்துட்டுதான் "நேரம்" தெரிஞ்சிட்டு போற அளவுக்கு உயர்ந்து
நின்னோம்..
ஆனா, இன்னைக்கு நிறைய பேர தலை நிமிந்து கூட பாக்க விடாம ,
இந்த ஸ்மார்ட் போனுங்க கட்டிப்போட்டு வச்சி இருக்கு..கிட்ட தட்ட கைக்கடிகாரத்துக்கும் எங்களோட நிலைமை தான்.. சும்மா ஸ்டைலுக்கு கட்டிக்கிட்டு இருக்காங்க அதுல நேரம் யாரும் பாக்குறது இல்ல..
எல்லாத்தையும் ஸ்மார்ட் போன் கெடுத்து வச்சி இருக்கு..உண்மைய சொல்ல போனா , நாங்கலாம் சென்னைலையோ மற்ற வளர்ந்த ஊர்கள்ல இருந்தா எங்க மதிப்பே வேற..இங்க
எங்களை சரியா கண்டுக்கறது இல்ல , சீர்மைக்கரது இல்ல , ஒரு பேட்டரி கூட போட்டு எங்கள ஓட விடாம , ஓட்ட ஒடைச்சலோட அனாதையா விட்டு இருக்காங்க..
இதுல இந்த ஊருக்கு புது போஸ்டிங்
"மாநகராட்சி" னு,இந்த மணிகூண்டுகளை கூட பராமரிக்க தெரியாத ஊருக்கு "கடலூர் மாநகராட்சினு" ஒரு பேரு தான் குறைச்சல்..இதெல்லாம் அரசோட வேலை தான,
அதிகாரிகள் மக்களுக்காக எவ்ளோ வேலை செஞ்சாலும் , வெளியூர் ல இருந்து வர்றவன் மெயின் ரோடுகள் ல இருக்க எங்கள பாத்தா
என்னடா ஒரு மணி கூண்டு கூட சரியா ஓடல" என்னதான் பண்ணிக்கிட்டு இருக்காங்கனு கேவலமா தான பேசிட்டு போவாங்க..மணி கூண்டுகள் என்பது ஒரு ஊரின் நிலையையே நிர்ணயிக்கும் மதிக்கத்தக்கஅடையாளங்கள்..உண்மைக்கும் சொல்ல போனா நாங்க எல்லாம் வெறும் கட்டிடமா ,கடிகாரம் ஓடாம பல வருஷங்களா வெட்டியா "
நின்னுகிட்டு தான் இருக்கோம்..
ஆனா ஒரு விஷயம்,நெறய பஸ் ஸ்டாப் லாம் எங்களுக்கு பக்கத்துல இருக்கும் அப்பப்போ கண்டக்டர் மணிகூண்டு வந்துடுச்சுனு சொல்லலும்போதெல்லாம் "குளு குளு" னு இருக்கும்.. இந்த ஆட்சியாளர்கள் மீட்பாங்க , இவங்க மீட்பாங்க னு நெனச்சு நெனச்சு பான்பரி மார்க்கெட் ல
இருக்க மணி கூண்டு வீணாவே போச்சு
இது சம்பந்தமா எந்த அதிகாரிகளா இருந்தாலும் சீக்கிரம் எங்களை பழையபடி சரியான நேரம் காட்டுறப்படி ஓட வைங்க
இதுதான் எங்கள் கடைசி மூச்சு.
இப்படிக்கு,
கடலூர் OT,
பான்பரி மார்க்கெட்,
பஸ் ஸ்டாண்டு,
போஸ்ட் ஆபிஸ்,
மஞ்சக்குப்பம் பகுதிகளை சேர்ந்த
மணி கூண்டுகள்
கடலூர்.
உடனடியாக சரி செய்து நம் ஊரின் அடையாளங்களை சிறப்பாக மீட்டெடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்..