காடு அழிப்புக்கு எதிராக
கருத்து சொல்ல
எனகென்ன கற்பு இருக்கிறது ?
நான் அருந்தும் ஒவ்வொரு கோப்பை தேநீருக்கு பின் வனம் அழித்திட்ட வரலாறு உள்ளது.
தாமிரபரணி குருதி நிறைத்த
குளிர்பானம் குடிக்கும் எனக்கு...
என்ன தகுதி இருக்கிறது
தண்ணீர் கோரிய போராட்டத்தில்
தலைமை ஏற்க ?
குவியல் குவியலாக
என் வீட்டு கழிவறை குழாய்கள்
ஆற்றுக்குள் மலம் கக்குகிறபோது....
நாசமாய் போகும் நதிகளை
தடுக்க சொல்ல எனகென்ன தரம் இருக்கிறது?
நான் உட்கொள்ளும் அத்தனை
ஆங்கில மருந்துக்கு பின்னும்
குரங்கு, எலி, நாய் போன்ற
பல்லுயிரிய சிதைவு இருக்கிறது
குருவி இனம்
அழிகிறதாம்...
குரல் கொடுக்க சொல்லுகிறீர்கள்
அலைபேசியில் குலாவும் என்னை ?
சுற்றுலாவில் நான் உடைத்து வீசிய மது குப்பி சில்
காட்டுயிர் கால் கிழிக்கிறபோது
"காட்டுக்குள் ஆயுதங்களை
தடை செய்யயுங்கள்" என்று வலியுறுத்த எனக்கென்ன அறம் இருக்கிறது ?
சாதி,மத மறுப்பு காதல் திருமணங்களில் பெரும்பாலும் அடிபடும் மேட்டருன்னா அது பெண்ணின் வயது தான்.பெண் இன்னும் சின்னப் பெண் தான். மேஜராகல.இன்னும் 18 வயது பூர்த்தியாகலைன்னு சொல்லி சட்டப்படி பிரிப்பது சரளமாக நடக்கும்.
அது பலிக்காத போது தான் குடிப் பெருமை கொலையோ அல்லது குடிப் பெருமையைக்
கொன்றவர்களைக் கொலையோ பண்ணுவது நடக்கும்.இப்ப பெண்ணுக்கான திருமண வயது 21 ன்னு சட்டம் கொண்டு வருகிற முகரைகளைப் பாருங்க..இவனுகளப் பார்த்தால் அவ்வளவு நல்லவனுகளாவா தெரியுது?
சங்கிகளை விட்டுத் தள்ளுங்க..அவனுக ஆர்.எஸ்.எஸ். அறிவு ஜீவிக எதை கொண்டு வந்தாலும்,அதை அப்படியே ஆதரிக்கும் ஆடு,
மாடுக...இந்த இடதுசாரி முற்போக்கு வாதிக,இந்த பெண்ணின் திருமண வயது பின்னணியை சமூக ரீதியாகவும்,உளவியல் ரீதியாகவும் ஆராய்ந்து விவாதிப்பாங்கன்னு பார்த்தால்,எகிறிக் குதித்து வந்து வரவேற்று இருக்காங்க...
அதிகாரத்தின் எந்த ஒரு அறிவிப்பையும், தனது நடுங்கும் கையில் பூதக் கண்ணாடியை
எளிதாக உணர்ந்து கடினமானதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்
பரிணாம வளர்ச்சி தியரியை கண்டுபிடித்தார் டார்வின். ஆனால் அந்த தியரியை வைத்து ஆதிமனிதனின் பழைய எலும்புகூடுகளை தேடியவர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. 40, 50 ஆயிரம் ஆண்டு பழைய எலும்புகூடுகளே இருந்தன. எதுவும் குரங்கு போல்
இல்லை.
ஆனால் அவர்கள் செய்த தவறு ஐரோப்பாவில் தேடியதுதான். காரணம் ஐரோப்பாவில் தான் முதல் மனிதன் தோன்றி இருக்கமுடியும் என நம்பினார்கள். அதிலும் ஆப்பிரிக்காவில் முதல் மனிதன் தோன்றி இருக்கமுடியும் என்பதை அன்றைய இனவாத சூழலில் யாராலும் சிந்தித்து பார்க்க முடியவில்லை.
ஆனால் டார்வின்
சரியாக சொன்னார் "ஆப்பிரிக்காவில் தேடுங்கள். கிடைக்கும்" என
ஏன் ஆப்பிரிக்கா? டார்வின் ஏதும் அகழ்வாராய்ச்சி செய்தாரா?
இல்லை ஆனால் அங்கேதான் சிம்பன்ஸி, உராங் உடான், கொரில்லா மாதிரியான ஏப் வகை குரங்குகள் அதிகம் இருந்தன மனிதனும் அப்போது அங்கேதானே தோன்றி இருக்கமுடியும்?