எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், பெரும்பாலான வருடங்கள், போகி முடிந்து அன்று இரவு என்பது ஒரு தூங்கா நெடும் இரவு எங்கள் குரும்பத்திற்கு. கடினமான பொருளாதார சூழல் காரணமாக அப்பா அவருடைய ஆசிரியர் பணியின் மூலம் வரும் வருவாய் குடும்ப தேவைக்கு போதாமல், மீத நேரத்தில் வருமானம் (1/n)
ஈட்ட தேர்ந்தெடுத்த தொழில், குழத்தொழிலான என சொல்லப்படுகிற நெசவு, அதிலும் கைத்தறி, அதிலும் அதிகம் மக்கள் முயற்சிக்காத Sample நெசவு. எங்கள் சுற்றுவட்டார பகுதிகளில் போகியன்று தான் முதலாளிகள் நெசவு கூலி கொடுப்பார்கள். அன்று இரவு தறியை நிறுத்தினால் மீண்டும் தொழிலில் இறங்க (2/n)
குறைந்த பட்சம் 15 நாட்கள் கூட ஆகும். ஆகவே இருக்கும் ஆர்டரை முடித்து ஒப்படைக்க வேண்டும் போகியன்று. எங்களுடையது sample என்பதால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு 6 sample வரும். போகியன்று எப்படியும் ஒரு 20 இருக்கும். வீட்டில் அனைவருக்கும் வேலை அதிகமாக இருக்கும். அப்பா தொழிலில் (3/n)
ரொம்ப வல்லவர், நேர்மையானவர். ஆர்டர்கள் வீட்டுக்கே தேடி வரும். போகியன்று இருக்கும் sample எல்லாம் நெய்து முடிக்க எப்படியும் இரவு 1 அல்லது 2 மணியாகிவிடும். விடிந்தால் பொங்கல். தறி நிறுத்தியவுடன் அம்மாவுக்கு வீட்டுவேலை ஆரம்பிக்கும். வீடு பெருக்கி மொழுகுதல், பூஜையறையை சுத்தம் (4/n)
செய்தல், சமையலுக்கு அடுப்பறையை தயார் செய்தல் இப்படி. அப்பா வேலையை பிரித்துக் கொள்வார். வீடு பெருக்கிவிட்டு சமையலறையை பார்த்துக்கொள்வவார். எனக்கு பூஜையறை விளக்கு மற்றும் இதர உருப்படிகளை சுத்தப்படுத்தி மங்கள் குங்குமம் வைக்க வேண்டும். அம்மா கோலம் போட ஆரம்பித்திருப்பார் (5/n)
நானும் அப்பாவும் எங்களுக்கான வேலையை முடுத்துவிட்டு குளித்து புதுத்துணி உடுத்தி கிளம்பி இருப்போம். அம்மா வந்து தம்பியை எழுப்பி அவனை கிளப்பி தானும் தயாராவதற்குள் அப்பா சர்க்கரைப் பொங்கல் செய்து முடித்திருப்பார். இதெல்லாம் 3 மணிக்குள் முடிந்திருக்கும். அம்மா விளக்கு ஏற்றி (6/n)
படைத்து எல்லாரும் சாமி கும்பிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு கிளம்புவோம். இதெல்லாம் என்னுடைய 6 வது வயது முதல் 13 வயது வரை நடந்தவை. அப்போது அப்பாவிடம் ஒரு TVS Champ மொபெட் மட்டுமே. அதிலேயே நால்வரும் அமர்ந்து கோவிலுக்கு செல்வோம். ஊரிலிருந்து திருத்தணி சுமார் 12 கிமீ. (7/n)
அடிவாரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு முதல் பிடியிலிருந்து கடைசி படி வரை கற்பூரம் ஏற்றுவோம். நானும் தம்பியும் கற்பூரம் வைத்து முன் செல்ல அம்மாவும் அப்பாவும் பற்ற வைத்துக்கொண்டே வருவார்கள். பெரும்பாலும் 4 மணிக்குள் மேலே சென்று விடுவோம். அப்போது தான் கோயில்நடை திறந்திருக்கும் (8/n)
பெரும்பாலும் கூட்டம் இருக்காது. சாமி பார்த்துவிட்டு வீட்டில் செய்து கொண்டு வந்த சர்க்கரை பொங்கலை நால்வரும் சாப்பிட்டு மலைமேலேயே ஒரு 6 மணி வரை இருப்போம். ஊர்க்காரர்கள் எல்லாம் வர ஆரம்பிப்பார்கள். கீழே இறங்கி கரும்பு மற்றும் மாட்டுப்பொங்கல் பிரியானிக்கு தேவையான (9/n)
பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு செல்ல ஒரு 9 மணி ஆகி விடும். வீட்டிற்கு வந்தவுடன் மீண்டும் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து சூடான வெண்பொங்கல், சாம்பார், மெது வடை செய்து முடித்திருப்பார்கள். சாப்பிட்டு தாத்தா வீடு மற்றும் மற்ற சொந்தக்காரர்கள் வீட்டிற்கு சென்று கொடுத்துவிட்டு (10/n)
வருவேன். இறுதியாக ஒரு special packing என்னுடைய பால்ய சிநேகிதி வீட்டிற்கு அம்மாவுடன் சென்று கொடுத்துவிட்டு வருவேன். ஊரிலிருந்து மனைவியின் ஊருக்கு குடிபெயர்ந்தவுடன் இந்த பழக்கவழக்கம் ஒரே வருடத்தில் நின்று போனது. இன்றும் ஏக்கத்தை தருகிறது நினைவுகள். (11/n)
#Pongal_Diaries

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும்

ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @rawdyiyer

14 Jan
மாட்டுப்பொங்கல்:
பொங்கல் தினத்தன்று மீதம் இருக்கும் நேரம் பெரும்பாலும் வீட்டிலேயே கழிந்துவிடும். எங்கள் வீடு அனைத்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு பொதுவான சந்திப்பிடம். அப்பாவோ அம்மாவோ யாரிடமும் சிறிதும் கடிந்து பேச மாட்டார்கள். அதிலும் அப்பா தன் வாழ்க்கையில் காணும் (1/n)
அனைவரிடமும் நல்லவன் என்ற பெயர் எடுத்திருந்தார். அது ஒரு வகை போதை, கிட்டத்தட்ட நானும் அதற்கு அடிமையாக இருந்தேன், இந்த கோவிட் முதல் லாக்டவுன் வரும் வரை. சரி ஆகட்டும்.
மாட்டுப்பொங்கல் எங்களுக்கு ஒரு சிறப்பு வாய்ந்த விடுமுறை தினம். எங்கள் குடும்பம் நான் பிறப்பதற்கு ஒரு முப்பது (2/n)
வருடங்கள் முன்பே விவசாயத்திலுருந்து வெளியே வந்துவிட்ட குடும்பம். ஆகையால் எங்களுக்கு மாட்டுப்பொங்கல் என்பது வெறும் சீகடை (அதிரசம் போல் ஒரு இனிப்பு பலகாரம், உடைத்து மெல்ல கொஞ்சம் கடினமாக இருக்கும்) செய்து திண்ணும் ஒரு நாள். ஆனால் அப்பா இதையும் ஒரு இனிமையான நாளாக மாற்றினார். (3/n)
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(