இந்து முஸ்லீம் பிரச்சனை இது காலத்துக்கும் அழியாத ஒன்றாக இன்றைக்கும் இருக்கு. இது பற்றி நிறைய படங்கள் வந்திருக்கின்றன அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு படமாக எப்பொழுதும் #ஹேராம் இருக்கும். காரணம் என்னவென்றால் எல்லோருக்கும் ஒரு எமோசனல் இன்டெலிஜென்ட் இருக்கும் அந்த எமோசனல்
இன்டெலிஜென்ட் தகர்க்கப்படும் பொழுது நாம் என்ன செய்வோம் என்பது நமக்கு தெரியாது. இதில் தான் இந்த உணர்வு என்ற விஷயத்தை தூண்டிவிட்டு மதக்கலவரம் ஜாதிக்கலவரம் ஏற்படுத்துகின்றனர். படத்தில் கமல்ஹாசன் மனைவி இறக்கும் பொழுது அந்த உணர்வை கமல் இழக்கிறார் கோபத்தின் உச்சிக்கு செல்கிறார்
அந்த நேரத்தில் மத உணர்வைத் தூண்டக் கூடிய நண்பர்களுடன் இணைவதுடன் மூளை சலவை செய்யப்பட்டு முழு மத வெறியராக கமல் மாறுகிறார். வேறு மதத்தினர் எதிரியாக கமலஹாசன் அவர்களுக்கு தெரிகின்றனர் . ஒரு கட்டத்தில் நண்பன் சாருக்கான் கண்முன்னே இறக்கும் பொழுது உயிர் மற்றும் இழப்பு எல்லோருக்கும்
ஒன்றுதான் என்ற உணர்வு மீண்டும் கமலுக்கு ஏற்படுகிறது. அதிலுள்ள சந்தேகத்திற்கு பதில் மகாத்மா காந்தி அவர்களிடம் கமலஹாசனுக்கு கிடைக்கிறது. இதில் கமலஹாசனாக எல்லோரும் இருந்து இருப்பார்கள் ஒரு கட்டத்தில் நாமும் நமது மதத்திற்கு சார்பாக பேசியிருப்போம் பிறகு அது தவறு என்று உணர்ந்திருப்போம்
கமல்ஹாசன் அவர்கள் அதை சினிமா பாணியில் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார். இன்றைய காலகட்ட இளைஞர்கள் குறிப்பாக பார்க்கவேண்டிய படங்களில் #ஹேராம் முக்கியமான ஒன்று முடிந்தால் பார்க்கவும் அமேசன் பிரைமில் உள்ளது..