அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உயிர் காக்கும் முதலுதவி (Basic Life Support) 🧵👇
1/19
ஒருவர் தீடீரென மயங்கி விழுகையில் அருகில் இருப்பவர் செய்ய வேண்டிய முதல் செயல், அவரை தட்டி எழுப்ப முயற்சிப்பது.
ஒருவர் மட்டும் இருக்கையில் வேறு நபர்களை உதவிக்கு அழைக்க வேண்டும், பிறகு ambulance (108) ஐ அழைக்க வேண்டும்.
2/19
பல நேரங்களில் சாதாரண மயக்கமாக (vasovagal syncope) இருக்கக் கூடும். படுக்க வைத்தால் சரியாகிவிடும்.
சர்க்கரை அளவு குறைவதினால் (hypoglycemia) மயக்கம் வரலாம். சிறிதளவு இனிப்பு கொடுத்தால் சரியாகிவிடும்.
மிகவும் ஆபத்தாக கருதப்படுகின்ற cardiac arrest க்கிற்கு என்ன செய்வது?
3/19
5 இல் இருந்து 10 நொடிகள். எழுந்திருக்கவில்லை என்றால், நாடித்துடிப்பு(pulse) பார்க்கவும். தாடைக்கு கீழே கழுத்தின் மேல் பகுதியிலுள்ள carotid pulse பார்ப்பது நல்லது.
அதுவும் 5-10 நொடிகள். Pulse இல்லையென்றால் cardiac arrest என்று அர்த்தம், அதாவது இருதயத்துடிப்பு நின்றுவிட்டது.
4/19
Cardiac arrestக்கிற்கு பல காரணங்கள் உண்டு. மாரடைப்பில் இருந்து,நீரில் மூழ்குவது(drowning) வரை. அனைத்திற்கும் முதலுதவி ஒன்று தான்.
மூச்சு எடுக்கிறார், ஆனாலும் pulse இல்லை என்றால்,cardiac arrest என்றே பொருள்.
இப்பொழுது CPR எனப்படும் உயிர் காக்கும் செய்முறையை செய்ய வேண்டும்.
5/19
இரண்டு நபர்கள் இருந்தால் மிக வசதியாக இருக்கும். இல்லையென்றாலும் பரவாயில்லை.
CPR இல் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன.
இரத்த ஓட்டம் (Circulation) - மூச்சுப்பாதை (Airway) - சுவாசிப்பது (Breathing).
இந்த வரிசை முக்கியமானது.
6/19
முதலில் செய்ய வேண்டியது, இரத்த ஓட்டத்தை நிலை நாட்டுவது.
மார்பு அழுத்தங்கள்(chest compressions) மூலம் இருதயம் வழியாக, இரத்த ஓட்டத்தை நிலை நாட்டுகிறோம்.
நெஞ்சின் நடுவில்(sternum) ஒரு கை மேல் இன்னொரு கை வைத்து, விரல்கள் பின்னிக் கொண்டு, கை குதியின் மூலம் அழுத்த வேண்டும்.
7/19
30 அழுத்தங்கள் வேகமாகவும் (நிமிடத்திற்கு 100), ஆழமாகவும் (5 cm) அழுத்த வேண்டும். 1, 2, 3 என்று வாய் விட்டு எண்ணிக் கொண்டே முழங்கை மடங்காமல், இடுப்பிலிருந்து அழுத்த வேண்டும்.
8/19
30 முடிந்தவுடன் மூசுப்பாதைக்கும் (airway), சுவாசத்திற்கும் (breathing) வழி செய்ய வேண்டும்.
9/19
தலையை பின் மடக்கி (head tilt), தாடையை உயர்த்தி (chin lift), மூக்கை 👃 இரு விரல்களால் மூடி, உங்கள் வாய் மூலம் மயங்கியவரின் வாய்க்குள்ளே காற்றைச் செலுத்தவும் (mouth to mouth breathing).
10/19
2 சுவாங்கள் இம்மாதிரி செலுத்த வேண்டும். நெஞ்சுப்பகுதி மேல் ஏறுவது தெரிந்தால் காற்று நுரையீரலுக்குள் சென்றுள்ளது என்று அர்த்தம்.
பின், மறுபடி மார்பு அழுத்தங்களை ஆரம்பிக்க வேண்டும்.
30 அழுத்துங்கள், 2 மூச்சுகள். இந்த சுழற்சி தொடர்ந்து நடக்க வேண்டும்.
11/19
30:2
30:2
30:2
30:2
30:2
2 நிமிடங்களில் 5-6 சுழற்சி போகும். இது நடந்தபின் மறுபடியும் நாடித்துடிப்பு (carotid pulse) பார்க்க வேண்டும்.
பின், இன்னொருவரை கொண்டு அழுத்தம், சுவாசம் என அவரவர் பங்குகளை மாற்றிக் கொள்ள வேண்டும். Pulse வரும்வரை தொடர்ந்து செய்ய வேண்டும்.
12/19
இது நடக்கும் சமயத்தில் AED எனப்படும் defibrillator இருந்தால் அதன் இரண்டு துண்டுகளை படத்தில் காட்டியுள்ளது போல் பொருத்தி, machine ஐ on செய்தால், shock கொடுக்க முடியும் rhythm என்றால் அதுவே shock கொடுக்கும்.
மேலே துணி இருக்கக் கூடாது. யாரும் அப்பொழுது அந்நபரை தொடக்கூடாது.
13/19
Shock கொடுத்த பின் 2 நிமிடங்கள் CPR cycle செய்ய வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து மறுபடியும் pulse பார்க்க வேண்டும்.
இந்த சுழற்சியை தொடர்ந்து செய்தால் பல சமயங்களில் cardiac arrest வந்தவரை காப்பாற்ற நேரிடும். அல்லது ambulance வரும் வரை blood circulation இல் இருக்க நேரிடும்.
14/19
High quality cpr எனப்படும் இந்த ஆறு விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால் நல்லது.
அதில் முக்கியமானது, அழுத்தும் மார்பு, மேலே வந்த பிறகு தான் (chest recoil) அடுத்த அழுத்தத்தை கொடுக்க வேண்டும். இல்லையெனில் இரத்த ஓட்டம் நடைபெறாது.
15/19
அனைத்து செய்முறைகளையும் விளக்கும் படம்
16/19
குழந்தைகளுக்கு அதே செயல்முறை. ஒரு வயதிற்கு உட்பட்டவர்களுக்கு, அழுத்தம் சற்று குறைவாக இருக்க வேண்டும்.
17/19
Cardiac arrest வந்து உயிர்ப்பித்தவர்கள் பல பேர் உள்ளனர்.
இது உயிர் காக்கும் முறை. இது மருத்துவர்களோ செவிலியர்களோ மட்டுமானதல்ல.
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. பள்ளிக்கூடங்களில் கற்றுத் தர வேண்டிய ஒன்று.
18/19
இதை ஒரு சமயம் கூட பயன்படுத்தும் சூழ்நிலை வராமல் இருக்கலாம்.
ஆனால் தேவைப்படும் நிலையில் தெரிந்திருந்தால் மிக நல்லது. தெரியாமல் இருந்தால், பார்த்தாவது செய்யலாம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
கற்றுக் கொண்டு பகிருங்கள் 🙏🏾😊
19/19
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh