பங்குச்சந்தை இப்பொழுது இறக்கத்தில் இருக்கிறது. நீண்ட கால முதலீட்டுக்கு பங்குகள் வாங்க சரியான நேரம். Large cap ,IT துறை பங்குகள் விலை குறைவாக இருக்கிறது. மாதம் 10,15,20 ஆயிரம் வரை என்னால் சேமிக்க முடியும் ஆனால் எப்படி எங்கே முதலீடு பண்ணுவதுன்னு குழப்பமாக இருக்கிறதா?
பெருகி வரும் பண வீக்க விகிதம் குறைந்து வரும் வங்கி வட்டி விகிதம் இதெல்லாம் சமாளிக்க பங்குச்சந்தை தவிர வேறு எங்கும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. ஈமு கோழி மாதிரி யாராச்சும் மாதம் இவ்வளவு பணம் தருகிறோம் எங்களிடம் உங்கள் பணத்தை லட்சக்கணக்கில் முதலீடு பண்ணுங்கன்னு சொல்வாங்க.
இன்னும் நாலு பேரை சேர்த்து விடுங்க உங்களுக்கு போனஸ் தரோம்னு சொல்வாங்க. இந்த மாதிரி வசீகர விளம்பரத்தில் மாட்டி மொத்தமும் இழந்தவங்க ஊருக்குள் நிறைய பேர் இருக்காங்க. உங்க பணத்தை நீங்க மட்டுமே முதலீடு பண்ணுங்க. உங்க அக்கவுண்டில் பணம் இருக்கும்வரை மட்டுமே அதற்கு பாதுகாப்பு.
சமீபத்தில் யூ ட்யூப் சேனல் மூலம் மட்டுமே ஒருத்தர் 300 கோடி அளவில் பணம் திரட்டி ஏமாத்தினான். சினிமாத்துறையும் தப்பிக்கவில்லை. சில வாரங்களுக்கு முன்பு கோடிகளை இழந்தேன்னு நடிகர் விக்னேஷ் செய்தி. சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஸ்னேகா செய்தின்னு இணையம் முழுக்க பணத்தை
இழந்தவர்களின் செய்திகள் நிறைந்து கிடக்கிறது. SIP முறையில் மாதா மாதம் நீங்களே நேரிடையாக பங்குகள் வாங்குவதன் மூலம் நீண்ட கால முதலீட்டை செய்ய முடியும். பங்குச்சந்தையில் பணம் சம்பாதித்த நிறைய பேர் நீண்ட கால முதலீட்டாளர்களே.
உங்களுக்கு தேவை ஒரு Demat account மட்டுமே. எந்த மாதிரியான பங்குகள் வாங்கலாம் ? இன்னும் 10 வருடங்களுக்கு அசைக்க முடியாத மற்றும் வளர்ச்சிப்பாதையில் போகும் 10-15 துறைகள் எடுத்துக்கொண்டு sector க்கு 2 கம்பனிகள் வீதம் 15-20 கம்பனிகள் கொண்ட லிஸ்ட் எடுத்துக்கணும்.
Fundamentally strong கம்பனிகளாக இருக்கணும். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் உங்களால் முடிந்த 5,10,20 பங்குகள் வீதம் 2,3 கம்பனிகளிகளில் வாங்கணும். இந்த மாதம் அதிக விலையில் இருந்த பங்கொன்று அடுத்த மாதமே விலை குறைவாக இருக்கும்.
எந்த பங்குகள் கடந்த மாதத்தை விட இந்த மாதம் குறைவாக கிடைக்குதோ அதை மட்டும் உங்கள் முதலீட்டு தொகைக்கு ஏற்ப பிரித்து வாங்குங்க.
3 வருடங்களில் நல்ல வளர்ச்சி தெரிய ஆரம்பிக்கும். 5,10 வருடங்களில் லட்சாதிபதி நிட்சயம்.
உங்கள் பணம் உங்கள் முதலீடு. யாரை நம்பியும் பணத்தை இழக்காதீங்க. இன்றைக்கு பங்கு வாங்குவது சின்ப்பிள்ளைகள் கூட பண்ணலாம். மொபைல் ஆப் மூலமாக எங்கிருந்தாலும் வாங்க முடியும் #longterminvesting#sharemarkettamil
முதலீடு ,பங்குகள் தொடர்பாக மேலதிக சந்தேகங்கள் இருப்பின் என்னோட டெலிக்ராம் t.me/MalarMathar தொடர்பு கொள்ளுங்க.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
குடும்பத் தலைவிகளுக்கு ப்ரிட்ஜில் இட்லி மாவு இல்லேன்னா தலைவலி வந்திடும். எனக்கு 2 குழந்தைகள் வீட்டில் வச்சுக்கிட்டு மாவு எப்பவும் இருந்தே ஆகணும்.ஆனா 2 நாள் தான் மாவு நல்லா இருக்கும். அப்புறமா அதிகமா புளிச்சி தண்ணி சேர்த்துன்னு நிறைய சோதிச்சது.இன்வெஸ்ட்மெண்ட் கு ஒரு ஸ்டாக் வாங்க
எவ்வளவு ஆராய்வேனோ அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் சில பல ஆராய்ச்சிகள் மூலம் ஒரு வாரமானாலும் புளிக்காத இட்லி மாவு சூட்சுமம் கொண்டு வந்துட்டேன்.மாவு தீர்ந்து போகும் கடைசி நாளில் கூட மிருதுவான புளிக்காத இட்லி வர வைக்கும் இட்லி மாவு அரைப்பது எப்படி?
உதயம் உளுந்து,AST ரக குண்டு இட்லி அரிசி . அரிசியும் உளுந்தும் 4:1 அளவில் எடுத்துக்கணும். 1 ஸ்பூன் வெந்தயம்.வெந்தயத்தை அரிசியில் சேர்த்து ஊற வைக்கணும். 4-5 மணி நேரங்களாச்சும் அரிசியும் உளுந்தும் ஊறணும்.மாவு அரைக்கும் நேரத்தையும் எப்படி மிச்சப்படுத்தலாம்னு சொல்றேன்.