திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்திற்கு 2வது முறையாக வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்து கொண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அந்த திட்டம் ஒரு அலசல்...
* மதுரை-தேனி 75 கிலோ மீட்டர் அகல ரயில்பாதை ரூபாய் ₹500 கோடி மதிப்பு.
* தாம்பரம்-செங்கல்பட்டு சென்னை புறநகர் ரயில் மூன்றாவது பாதை ரூபாய் ₹590 கோடி மதிப்பு.
* ₹850 கோடி ரூபாய் மதிப்புள்ள 115 கிலோ மீட்டர் எண்ணூர்-செங்கல்பட்டு, மற்றும் 271 கிலோமீட்டர் திருவள்ளூர்-
* பெங்களூரு குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டம் ₹850 கோடி ரூபாய் மதிப்பு.
* பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தில், சென்னை கலங்கரை விளக்கம் அருகில் கட்டப்பட்டுள்ள ₹116 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1152 வீடுகளை அர்பணிக்கிறார்.
* சென்னை - பெங்களூரு 262 கிலோ மீட்டர்
அதிவிரைவு சாலை ரூபாய் ₹14,870 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதன் மூலம் சென்னை பெங்களூரு பயண நேரம் 2-3 மணி நேரம் குறையும்.
சென்னை துறைமுகம் - மதுரவாயல் நான்கு வழி பறக்கும் சாலை திட்டம் ரூபாய் ₹5,850 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது.
21 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த 4வழி சாலை
நேரடியாக சென்னையின் எல்லையை துறைமுகத்தோடு இணைப்பதோடு, இரண்டு மணி நேர பயணத்தை 15 நிமிடங்களாக குறைக்கும்.
* தர்மபுரி-நெரலூரு தேசிய நெடுஞ்சாலையில் ₹3,870 கோடி ரூபாய் செல்வதில் 94 கிலோமீட்டர் நான்கு வழிப்பாதை மற்றும் மீன்சுருட்டி -
* சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 31 கிலோமீட்டர்
₹720 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.
இந்த திட்டம் அருகாமை கிராமங்களை தேசிய நெடுஞ்சாலைகளோடு இணைக்கும்.
* சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களை ₹1,800 கோடி மதிப்பில் நவீனமயமாக்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
* பிரதமர் நரேந்திர மோடி. பிரதமரின் 'விரைவு சக்தி' (GATI Sakthi) தேசிய பெருந்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் 159ஏக்கர் நிலத்தில் அமையவிருக்கும் பன்முனை சரக்கு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின்
சரக்கு போக்குவரத்து கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு உயர்ந்துள்ளது. வரும் 10 ஆண்டுகளில் இது மேலும் இரு மடங்காக உயரக்கூடிய நிலையில் நம் போக்குவரத்து கட்டமைப்புகளை சீரமைப்பது அவசியமானது மட்டுமல்ல, அவசரமும் கூட.
இந்தியாவில் சரக்கு போக்குவரத்து செலவு உள்நாட்டு மொத்த உற்பத்தியில்
13 சதவீதமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. மற்ற முக்கிய நாடுகளில் இது 8 சதவீதமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஏற்றுமதியாளர்கள் கோடிக்கணக்கான பணத்தை சரக்கு போக்குவரத்திற்காக செலவழிக்கின்றனர். இதன் காரணமாக நம் நாட்டின் தயாரிப்புகள் மற்ற நாடுகளின் தயாரிப்புகளை விட விலை அதிகமாக,
உள்ளதால், இந்திய ஏற்றுமதியின் போட்டித்தன்மை வெகுவாக பாதிக்கப்படுவதோடு, வேளாண் துறையிலும் ஏற்றுமதி பண்ணும் போது நமது விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
ரயில் மூலம் சரக்குகளை கொண்டு சென்றால், செலவும் குறைவதோடு, நேரமும் சேமிக்கப்படும் என்ற போதிலும் உரிய கட்டமைப்புகள் இல்லாததால்,
60 சதவீத பொருட்கள் சாலை மார்க்கமாகவே நமது நாட்டில் கொண்டு செல்லப்படுகின்றன.
பொருட்களை கொண்டு செல்ல தேவைப்படும் அளவிற்கு சாலைகளுக்கேற்ற வாகனங்களும், வாகனங்களுக்கேற்ற சாலைகளும் முறையாக இல்லை என்பதால் தாமதம் ஏற்படுத்துவதோடு பல சிக்கல்களை உருவாக்குகிறது.
மேலும், இந்த பொருட்களை பாதுகாக்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் ஆகிய கட்டமைப்புகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை சமாளிக்கவே, 'அதி விரைவு சக்தி' (GATI Sakthi) தேசிய பெருந்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
அதில் ஒரு பகுதியாகவே, 35 பன்முனை சரக்கு பூங்காக்களை நாடு முழுக்க அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம். இதன் மூலம் சென்னையில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையம் ஆகியவற்றை ரயில் மற்றும் சாலை போக்குவரத்தோடு இணைக்கும்,
முனையமாக மெப்பேடு பூங்கா செயல்படும்.
இதன் மூலம் தமிழகத்தில் சரக்கு போக்குவரத்து தொய்வின்றி, விரைவாக, குறித்த நேரத்தில் சென்றடைவதோடு , எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவை குறைக்கும். சென்னையில், வாகனங்களால் ஏற்படும் மாசு குறையும்.சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான 158 ஏக்கர்
பரப்பளவில் 1200 கோடி ரூபாய் மதிப்பில் அமைகின்ற இந்த பூங்காவானது பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும்.
அந்த பகுதியே இனி சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய நிலையில், பல்வேறு சிறு குறு வர்த்தகம் வளரும். தமிழக தொழில்துறை மற்றும் தமிழக வர்த்தகம் மேம்படுவதோடு,
தமிழக உற்பத்தியாளர்கள் மற்றும் தமிழக விவசாயிகள் இந்த 'அதிவிரைவு சக்தி' தேசிய பெருந்திட்டத்தின் மூலம் அதிக பயனடைவது உறுதி செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு 72 மணி நேரத்துக்குள் குறைக்க வேண்டும். அப்படி இல்லையெனில் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.அதன்படி அண்ணாமலை விதித்த 72 மணி நேர கெடு இன்றுடன் முடிவடைகிறது.
இதற்கு மத்தியில் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நேற்று (மே 24) போராட்டம் குறித்த ஆலோசனையும் நடைபெற்றுள்ளது.இது தொடர்பாக பாஜக மூத்ததலைவர் ஒருவர் அளித்த பேட்டியில்,திமுக ஆட்சிக்கு வந்ததும்,பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தனர்.
தைரியம் இருந்தால் அடியாட்களை, ரவுடிகளை வைத்து கரூரில் தடுக்கட்டும்: அமைச்சருக்கு சவால் விடுத்த அண்ணாமலை அண்ணா! @annamalai_k 🔥
பெட்ரோல், டீசல் விலையை 72மணி நேரத்தில் குறைக்காவிட்டால் திமுக அரசுக்கு எதிராக கோட்டை முற்றுகையிடப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.இந்நிலையில்,மத்தியஅரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை குறைத்து உத்தரவிட்டது.இதனால் நாடுமுழுவதும் பாஜக அரசுக்கு ஆதரவு பெருகி
வருகிறது.இதற்கிடையில் தமிழகத்திலும் மாநில அரசு தேர்தல் அறிக்கையில் கூறியதை போன்று பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அப்படி குறைக்காத பட்சத்தில் 72 மணி நேரத்திற்கு பின்னர்,
அண்ணாமலை அண்ணா தொட்டது துலங்குகிறது
அவரே முதல்வர் ஆனால் மகிழ்ச்சி தான்! 😍🔥 @annamalai_k
இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஜீயரிடம் முதல்வரை புகழ்ந்து பேசுங்கள் என்று கெஞ்சுகிறார் , இதுக்கு அமைச்சர் கோவில் வாசலில் பிச்சை எடுக்கலாம் என்கிறார் அண்ணாமலை,
திருமாவளவனின் கண் ஆபரேசனுக்கு நாங்கள் பணம் தருகிறோம் முதலில் கண் ஆபரேசன் செய்துவிட்டு வரட்டும் என்கிறார் அண்ணாமலை,
திருவாரூர் கலெக்டர் இந்த ரதவீதியின் பெயரை கலைஞர் வீதி என்று பெயர் மாற்றினால் கலெக்டர் அலுவலகத்தையே
நடத்தவிட மாட்டோம் என்கிறார் அண்ணாமலை.
'இனி தமிழ்நாட்டில் பா.ஜ.க தான், தி.மு.க'வின் அரசியல் அஸ்தமனம் தொடங்கிவிட்டது' - சூர்யா உறுதி! @annamalai_k@BJP4TamilNadu
தி,மு.க'வில் இருந்து பா.ஜ.க'வில் இணைபவர்கள் எண்ணிக்கை இனி அதிகரிக்கும் என சமீபத்தில் பா.ஜ.க'வில் இணைந்த தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா கூறியுள்ளார். தி.மு.க'வில் இருந்து சமீபத்தில் எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா பா.ஜ.க'வில் இணைந்தது,
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காலம்காலமாக தி.மு.க'வில் உழைத்த ஒரு மூத்த தலைவரின் மகனே தி.மு.க கட்சியின் செயல்பாடுகள் பிடிக்காமல் அங்கிருந்து விலகி தேசிய கட்சியான பா.ஜ.கவின் இணைந்தது இதர பல கட்சிகளாலும் இன்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்திய உணர்வு துளி கூட இல்லையா? ISIS பயங்கரவாத அமைப்புக்கு இளைஞர்களை சப்பளை செய்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் மருமகள்..!
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் கர்நாடக முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ, மறைந்த பிஎம் இடினப்பாவின் உறவினர்கள் மற்றும் 7 பேர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தீப்தி மார்லா, அம்மார் அப்துல் ரஹிமான் உள்ளிட்ட 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீப்தி மார்லாவின் கணவர் அனஸ் அப்துல் ரஹிமான், பி.எம்.பாஷாவின் மகன் ஆவார். இவரது தந்தை இடினாப்பா முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆவார்.
"மதம் மாறினால்தான் குழந்தையை பார்க்க அனுமதிப்பேன்" இந்து மருமகனை மிரட்டிய கிறிஸ்தவ மாமனார்! பாய்ந்தது மதமாற்ற தடைச் சட்டம்!
கர்நாடகா: "இந்து மதத்தை மறந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறு, அப்பொழுதுதான் உன் குழந்தையை நீ பார்க்க, நான் அனுமதிப்பேன்" என்று கிறிஸ்தவ மாமனார் ஒருவர், இந்து மதத்தில் இருக்கும் மருமகனிடம் கூறிய மிரட்டல் விடுக்கும் வார்த்தைகள் இவை.
சமீபகாலமாக தென்னிந்தியாவில் கட்டாய மதமாற்றம் முழுவீச்சில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் இந்து மத அடையாளங்களை அழிக்கும் நோக்கில் இந்துக்கோயில்கள் தாக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.