"இந்தியாவை வழிநடத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டம்தானே தவிர, சனாதன தர்மம் அல்ல என்பதை ஆளுநர் அவர்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்;
மனுதர்மத்தின் ஆட்சி நடக்கவில்லை, மக்களாட்சியே நடக்கிறது!
1/5
சனாதன தர்மம் என்பது சாதிக்கொரு நீதி சொல்வது ஆகும்;
ஆனால் இப்போது நடப்பது சட்டத்தின் ஆட்சி. சட்டத்தின் முன் அனைவரும் சமம்;
மனிதனை நான்கு வர்ணமாகப் பிரித்து, அதில் உயர்வு தாழ்வு கற்பித்து - சலுகையிலும் தண்டனையிலும் கூட சாதி வேற்றுமையை நிலை நிறுத்தியது சனாதனம்;
2/5
அமெரிக்க வெடிகுண்டுகளைப் பற்றி படித்திருக்கும் அவர், இந்தியாவில் உருவாக்கப்பட்ட சட்டங்களின் வரலாற்றை அறியாமல் இன்னமும் சனாதனம் பற்றிப் பேசிக் கொண்டு இருப்பது அவரது காலாவதியாகிப் போன சிந்தனையையே காட்டுகிறது;
3/5
யாருக்கு சார்பாக தன்னை காட்டிக் கொள்ள நினைக்கிறாரோ,அவர்களாலேயே கடைப்பிடிக்க முடியாதவை சனாதன கொள்கைகள் என்பதை ஆளுநர் மறந்துவிட வேண்டாம்;
90% மக்களுக்கு எதிரானது சனாதனம்;
பெண் இனத்துக்கு எதிரானது சனாதனம்;
அதனை நியாயப்படுத்துவது இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கே எதி
ரானது;
4/5
- கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான
திரு. டி.ஆர்.பாலு MP அவர்களின் கண்டன அறிக்கை.