தமிழக அரசு மருத்துவ குழுக்களின் இரு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின் படி, கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு காரணம் பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என உறுதியாவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. #Kallakurichischool
கணியாமூர் மாணவி மரணம் வழக்கு
நீதிபதி இளந்திரையன் உத்தரவில் மேலும் சில தகவல்
மாணவி எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதத்தின்படி, மனுதாரர்கள் யாரும் தற்கொலைக்கு தூண்டியதாக கூறவில்லை என குறிப்பிட்டுள்ள நீதிபதி,
நீதிபதி இளந்திரையன்
இரண்டு முறை செய்யப்பட்ட பிரேத பரிசோதனையில் தமிழக மருத்துவ குழு எடுத்த முடிவுகளை நீதிமன்றம் நியமித்த ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் குழு ஏற்றுக்கொள்வதாக அதன் அறிக்கையிலிருந்து தெரியவருவதாக குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி இளந்திரையன்
எனவே மாணவி மரணத்திற்கு காரணம் பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என உறுதியாவதாகவும், அவ்வாறு பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
.
நீதிபதி இளந்திரையன்
பிரேத பரிசோதனை அறிக்கைக்கு மாறாக மாணவியின் பெற்றோர் கூறும் குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை எனவும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி இளந்திரையன்
மாணவி மாடியிலிருந்து விழும்போது மரத்தில் அடிபட்டதாலேயே உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டு உள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட ரத்தக்கசிவுதான் உடலில் இருந்ததாக அறிக்ககளில் இருந்து தெரியவருவதாகவும், குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி இளந்திரையன்
பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்தது மாணவி ரத்தத்தின் கறை அல்ல என்றும், வண்ணப்பூச்சு என என நிபுணர்களின் அறிக்கை கூறுவதாகவும் நீதிபதி தன் உத்ததவில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி இளந்திரையன்
மாணவியின் தற்கொலை கடிதம், சக மாணவிகளின் சாட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில், வேதியியல் பாடம் படிப்பதில் உயிரிழந்த மாணவி சிரநப்பட்டு இருந்தது உறுதியாகி உள்ளதாகவும்,
நீதிபதி இளந்திரையன்
அதே சமயம் இரு ஆசிரியைகள் அறிவுரை கூறிய நிலையில், தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே தற்கொலைக்கு தூண்டி பிரிவில் வழக்குப் பதிவு செய்ததும் தவறு என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் விசாரணை நல்ல முறையில் நடைபெற்று வருவதாக விசாரணை அமைப்புகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம்
விரைவாக இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி சதிஷ்குமார்
இந்த விவகாரம் தொடர்பாக ஊடக விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட பிறகும் சில மின்னனு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் குறித்து நிபுணத்துவம் இல்லாத நபர்களிடம் நேர்காணல் எடுத்து ஒளிபரப்பப்படுவதாக கூறியுள்ளார்.
நீதிபதி சத்திஷ்குமார்
ஜிப்மர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்த பிறகும் இந்த விவகாரத்தில் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் சிலர் இரண்டு பிரத பரிசோதனை அறிக்கைகளையும் ஒப்பிட்டு மாறுபட்ட கருத்துகளை ஊடகங்களில் தெரிவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இரு தரப்புக்கு இடையேயான ஆகம்பாவம் மற்றும் மோதலை குறைக்கும் இடமாக இருக்க வேண்டிய கோவில்களில், அவை மேலோங்குவதால் கடவுள் பின்னுக்கு தள்ளப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
அரசு தரப்பில், ஒவ்வொரு முறை விழா நடத்த் ஏற்பாடுகள் செய்யப்படும்போது இருதரப்பிற்கு தகராறு ஏற்படுபதாக தெரிவிக்கப்பட்டது. ஈரோடு வட்டாட்சியர் மற்றும் தாலுகா காவல் நிலை ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் #கோவில்_மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி :
கடவுள் நம்பிக்கையாளர்களால் அமைதியைத் தேடி வரும் இடமாக உள்ள கோவில்கள், வழிபாடு, தியாகம் மற்றும் பக்தி மூலம் மனிதர்களையும் கடவுள்களையும் இணைக்கும் ஒரு இடமாக வடிவமைக்கப்படுவதாக அமைப்பாக நம்பப்படுகிறது என தெரிவித்துள்ளார்.