Not Active Profile picture
Nov 6, 2022 103 tweets 40 min read Read on X
[Music Thread] #PSuseela
எல்லோருக்கும் வணக்கம். இனியொரு அருமையான இசை இழையில் உங்களை எல்லாம் சந்திப்பது ஒரு மகிழ்வான தருணம். இந்த இழை எதற்காக? 'இசையரசி' 'கான சரஸ்வதி' என்று எல்லோராலும் புகழப்படும் தென்னிந்திய திரையுலகின் ஈடில்லா பின்னணி பாடகி பி சுசீலா அம்மா அவர்களை பற்றி.
எதிர் வரும் அவரது 87வது பிறந்த நாளை கொண்டாடுவதிலும் மற்றும் 70 ஆண்டுகளாக அவற்றின் திரை இசை பயணத்தை போற்றும் விதமாக, இந்த இழையை சமர்பிப்பதில் பெருமை அடைகிறோம்.
எப்பொதுழுதும் போல் .@RagavanG மற்றும் .@veeba6 அவர்களின் வழிகாட்டுதலின் படி இன்று முதல் நவம்பர் 13 வரை ஏழு நாட்களுக்கு தினம் பத்து பாடல்கள்.
இந்த பாடல் வரிசைகளை, தனி பாடல்கள், தாலாட்டு பாடங்கள், சோக பாடல்கள் , ஜோடி பாடல்கள், இருவருக்கு மேற்பட்ட பாடகர்களுடன் பாடிய பாடல்கள், கேள்வி பதில் முறையில் அமைந்த பாடல்கள், சிறப்பு பாடல்கள், என்று தொகுத்துள்ளோம்.
70 பாடல்கள் என்பது ஒரு சிறிய அளவே, சுசீலாம்மா பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள், தமிழ் மட்டுமில்லாது, தெலுங்கு, கன்னடம் போன்றவற்றை கேட்க மற்றொரு பிறவி வேண்டும்.
கடந்த டி எம் எஸ் நூற்றாண்டு சிறப்புக்கு தாங்கள் தந்த ஆதரவை போலவே இந்த இழை இழைக்கும் தங்களின் பேராதரவை வேண்டி. 🙏 with .@RagavanG @veeba6
இவ்விழையின் முதல் தொகுப்பு இன்று மாலை தங்களின் பார்வைக்கு
Stay Tuned till then
முதல் தொகுப்பாக, சுசீலாம்மா பாடிய தனி பாடல்களை அளிக்க இருக்கிறோம். முதல் பாடலாக வருவது கண்ணதாசன், விச்சு ராமு பீம் சிங்க் கணேசன் கூட்டணியில் 'பாலும் பழமும்' படத்திலிருந்து
1/10 #Solos
இதே கூட்டணி இப்போது 'பாக பிரிவினை' படத்திற்காக.

2/10 #Solos

அந்த மாது மட்டுமா மயங்குகிறாள்

3/10 #Solos

நான்காம் பாடலாக வருவது பேரழகி ஈ வீ சரோஜாவின் நடனத்தில் 'மணப்பந்தல்' படத்திலிருந்து

4/10 #Solos

இந்த பாடல் ரகசிய போலீஸ் 115 படத்திலிருந்து. அழகான அம்மு, அற்புதமான ஆர்கெஸ்ட்ரா, அந்த ஹம்மிங், என்னவொரு துள்ளலான பாடல்

முதல் சரணத்திற்கு முன்பு அந்த வீணை, மன்னரின் அற்புதங்கள்

5/10 #Solos

அழகான விஜயா, அருமையான நடனம், கண்ணதாசன் விச்சு, மாருதி ராவ் அவர்களின் அருமையான ஒளிப்பதிவில், பாடல் முடிவில் அந்த பல்லவி புல்புல்தாராவில், மன்னர் ஒரு அற்புத இசை கலைஞன்
6/10 #Solos

அகிலன் அவர்களின் கதை, ஏ பி என் இயக்கத்தில், கே வி எம் அவர்களின் இசையில், சுசீலாம்மா-தேவிகா ஜோடி

7/10 #Solos

அடுத்து வரும் மூன்று பாடல்கள், சுசீலாம்மா மெலடி மட்டுமே பாடக்கூடியவர் என்ற ஒரு தவறான பார்வையை முறியடிக்கும் வகையில், ஒரு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் இந்த படத்தை மறுவெளியீட்டில் பார்த்த போது, அரங்கமே ஆர்ப்பரித்தது

8/10 #Solos

தொடக்கத்தில் வரும் அந்த ஹம்மிங் நம்மை எங்கெங்கோ கொண்டு போகுது. இந்த மயக்கம் இன்னும் தீரவில்லை. என்ன ஒரு அருமையான இசை கோர்வை.

9/10 #Solos

இத்தொகுப்பின் கடைசி பாடலாக இடம் பெரும் இப்பாடல் 'அவள்' படத்திலிருந்து ஷங்கர் கணேஷ் இசையில், வாலியின் வரிகளில்.

10/10 #Solos

அடுத்த தொகுப்பிற்கான பாடல்களை நாளை மறு நாள், 8ஆம் தேதி அன்று காண்போம்
இன்று காணப்போகும் இரண்டாவது தொகுப்பு சுசீலாம்மா அவர்களின் சோக பாடல்கள்.
அதில் முதலாவதாக வருவது ஆர் சுதர்சனம் அவர்களின் இசையில்

1/10 #Pathos

தேவிகா, சுசீலாம்மா, காதல் பிரிவு, கண்ணதாசன், பிரிக்க முடியாத ஒன்று.

2/10 #Pathos

மூன்றாம் பாடலாக வருவது
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

3/10 #Pathos

இசை மேதை ராமநாத ஐயர் அவர்கள் இசை அமைத்த கடைசி படம் என்ற நினைவு.

இன்று நாளை, என்று நாளை எண்ணுகின்றேனே - கவிஞரே ஏன் சீக்கிரம் விண்ணுலகம் ஏவினீர்

4/10 #Pathos

அபிநய சரஸ்வதி, கண்ணதாசன், கே வி எம் கூட்டணியில் இந்த பாடல்

மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே

5/10 #Pathos

கணையாழி இங்கே, மணவாளன் எங்கே
காணாமல் நானும் உயிர்வாழ்வது எங்கே

ராமாயண நாயகியின் நிலையை ஓட்டி இவ்வளவு எளிதாக கவிஞரால் மட்டுமே

6/10 #Pathos

இத்தனை
காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா 🥰

7/10 #Pathos

இந்த பாடலில் நடிகையர் திலகத்துக்காக, பாத காணிக்கை

தேரோடும் வாழ்வில்
என்று ஓடோடி வந்த என்னை
போராட வைத்தானடி கண்ணில்
நீரோட விட்டானடி

8/10 #Pathos

வாலிப கவிஞரின் வைர வரிகளில், கற்பகம் படத்திலிருந்து, கே ஆர் விஜயா

கண்ணை விட்டு
போனாலும் கருத்தை
விட்டு போகவில்லை
மண்ணை விட்டு
போனாலும் உன்னை
விட்டு போகவில்லை
9/10 #Pathos
இத்தொகுப்பில் கடைசியா வரும் பாடல்

பஞ்சு அருணாச்சலம் அவர்களின் வரிகளில் இந்த மெல்லிய சோகம்

10/10 #Pathos

அடுத்த தொகுப்பிற்கான பாடல்களை நாளை காண்போம் 🙏
மாலை வணக்கம். இன்றைய தொகுப்பு சுசீலாம்மாவின் 'தாலாட்டு' பாடல்கள்.
முதலில் வரும் பாடல்

கண் வளராய் என் ராஜா

1/10 #Lullaby

இந்த அத்தையின் தாலாட்டுக்கு இணை ஏது

மூன்றாம் பிறையில்
தொட்டில் கட்டி முல்லை
மல்லிகை மெத்தையிட்டு
தேன் குயில் கூட்டம் பண்
பாடும் இந்த மான் குட்டி
கேட்டு கண் மூடும்
2/10 #Lullaby
பட்டுக்கோட்டையாரின் வரிகளில், 'பதி பக்தி' படத்திலிருந்து

3/10 #Lullaby
கவிஞர் மருதகாசியின் அற்புத வரிகள்

மண்ணில் உலவும் நிலவே என் வயிற்றில் உதித்த கனியே

4/10 #Lullaby
அந்த 'ஆராரிராரோ' அதிலேயே உறங்கி விட்டேன் நான்

வை மு கோ அவர்களின் கதைக்காக இந்த தாலாட்டு
தாலாட்டுபவர்கள், கவியரசர், மன்னர் மற்றும் பப்பிம்மா

5/10 #Lullaby

தொடக்கத்தில் வரும் மவுத் ஆர்கனும் தொடரும் வயலின்களுமே தாலாட்டுகிறதே

பட்டு வண்ணச்
சிட்டு வந்து மலர் கொடுக்க 1.39 - 1.42
விஜயாவின் முகபாவம். சுசீலாம்மாவின் குரலுக்கேற்ப 🥰
6/10 #Suseela
இது ஒரு குழந்தை பாடும் தாலாட்டு

7/10 #Lullaby

மஹாதேவ மாமாவின் இந்த தாலாட்டு
மருதகாசி அவர்களின் வரிகளில்

8/10 #Lullaby

தேவிகாவிற்கு பாட்டு எழுதுவதென்றால் கவியரசருக்கு ஒரு தனி உற்சாகம் தான். தேவிகா சுசீலா கண்ணதாசன் கூட்டணி பாடல்களை கேட்டால் தெரியும். பாடல் முழுக்க அந்த பொம்மை ஆட்டத்தின் மணி ஓசைகள், மன்னர்களின் அற்புதங்களில் ஒன்று
9/10 #Lullaby
வாலியின் வரிகளின் மஹாதேவ மாமாவின் இசையில்
பாடல் தொடக்கத்திலும் பின்னர் தொடர்ந்து வரும் அந்த ஹம்மிங் 🥰

10/10 #Lullaby

அடுத்த, மூன்றாம் தொகுப்பிற்கான பாடல்களை நாளை காண்போம் 🙏
எல்லோருக்கும் மாலை வணக்கம். இன்றைய மூன்றாம் தொகுப்பிற்கான பாடல்களை காண்போம். திரைப்படங்களில் பாடல்களின் பங்கு மிகவும் முக்கியமானது. கதையின் மிக முக்கியமான கட்டங்களை பாடல் வழியாக சொல்லிய படங்கள் / பாடல்கள் நிறைய.
பாடல் காட்சிகள் பொழுது போக்கு மட்டுமில்லாது, நீண்ட வசனங்களை, சில நெடிய காட்சிகளை, பல அற்புத பாடல்களின் மூலம் நகர்த்திய திறமையான இயக்குனர்கள்,பாடலாசிரியர்கள், இசை அமைப்பாளர்களை நான் கண்டுள்ளோம்.
அவ்வரிசையில், இந்த தொகுப்பானது நாயகன் நாயகி இருவரும் பாடல் வரிகள் மூலம் தங்களின் கேள்வி பதிகளை, விடுகதையாகவும், காட்சிப்படுத்தப்பட்ட பாடல்களை இன்று காண்போம்.
முதலாவதாக வரும் பாடல் 'இருவர் உள்ளம்' திரைப்படத்திலிருந்து, கண்ணதாசன் வரிகளுக்கு, கே வி மஹாதேவன் இசையில், கணேசனுக்கு கேள்வி கணை தொடுப்பவர் அபிநய சரஸ்வதி

1/10 #QA

குட்டி ஸ்ரீதேவியுடன் விடுகதை தொடுப்பவர் அபிநய சரஸ்வதி 'குல விளக்கு' படத்திற்காக

2/10 #QA
அபிநய சரஸ்வதி இன்னும் தன் கேள்வி கணைகளை தொடர்கிறார் 'பார்த்தால் பசி தீரும்' படத்திற்காக

3/10 #QA

சாவித்ரி, ஜெமினி, மன்னர்கள், சுசீலா, பிபிஎஸ்
பாட்டிலே கதை சொன்ன எம் கவியரசர் 🙏

4/10 #QA

கவிஞர் சுரதாவின் புதிர் 'நாணல்' மெல்லிசை மாமணி வி குமார் அவர்களை இசையில்

5/10 #QA

இம்முறை வாலியின் வார்த்தை விளையாட்டு 'காக்கும் கரங்கள்'

என்ன சொல்ல இந்த பாடலை பற்றி

6/10 #QA

மீண்டும் வாலி, இம்முறை அவருடைய நாயகன், பொன்மனச்செம்மல் கேள்விகளுக்கு பதிலளிப்பவர் அபிநய சரஸ்வதி

7/10 #QA
மீண்டுமொரு கே வி எம் சிறப்பு. எஸ் எஸ் ஆர் விஜயகுமாரி

இதை போன்ற இனி ஒரு பாடலை கேட்க முடியுமா ?

8/10 #QA

அந்த பியானோவின் முகப்பு இசை பல்லவி அனு பல்லவியில் மற்றும் முதல் சரணத்தில் தபாலாவுடன் இணையும் இடம்.....என்ன அருமையான இசை கோர்வை

9/10 #QA

இந்த தொகுப்பின் கடைசி பாடலாக வருவது 'இசை இல்லாத முத்தமிழா '
குறிப்பாக முதல் சரணத்தின் முடிவில் சுசீலாம்மா பல்லவியை 'பனி இல்லாத மார்கழியா' பாடும் விதம் 🥰

10/10 #QA

இந்த இசை இழையின் ஐந்தாம் தொகுப்பை நாளை காண்போம்
எல்லோருக்கும் மாலை வணக்கம். இன்றைய ஐந்தாம் தொகுப்பில் நாம் காணவிருக்கும் பாடல்கள், சுசீலாம்மா இரண்டு, மற்றும் இரண்டுக்கு மேற்பட்ட பாடக பாடகியருடன் பாடிய பாடல்களை.
முதலில் வரும் பாடல் 'குலமா குணமா' படத்திலிருந்து
கண்ணதாசன் வரிகளில்

1/10 #Trios #Ensemble

ஆரம்ப ஹம்மிங் மற்றும் இசை கோர்வையும் அட்டகாசம். 'உத்தரவின்றி உள்ளே வா' வுக்காக, பாலு, ஈஸம்மா, சதனும் கலக்கும் இந்த பாடல் இந்த வெள்ளி மாலையை மேலும் இனிமையாக்க

2/10 #Trios #Ensemble

பாடல் வரிகள், பாடக பாடகியர்களை விட, கணேசனை தான் இப்பாடல் முழுவதும் என் கண் பார்க்கின்றது 😅
'என்னுயிரும் நீயல்லவோ '

3/10 #Trios #Ensemble

இசையரசி, ஈஸம்மா ஹம்மிங் அதகளங்கள், பல்லவிக்குப் பிறகு வரும் அந்த கிளாரென், பாடல் முழுக்க வரும் அந்த விசில், குறிப்பாக, இரண்டாவது சரணத்தில் விசிலுடன் போட்டி போடும் ஈஸம்மாவின் ஹம்மிங்

'என்னவென்று சொல்வதம்மா எங்கள் மன்னர்களின் இசையை'

4/10 #Trios #Ensemble

ஆட வைப்பவர்கள், மன்னர்கள், கண்ணதாசன், இசையரசி, பாடங்கள் திலகம், ஈஸம்மா

'சதிராடு தமிழே நீ ஆடு"

5/10 #Trios #Ensemble

மூன்று அழகான நடிகையர்கள் திரையில். இரண்டாவது சரணத்துக்கு முன் மூவரின் ஹம்மிங், அட்டகாசம்
பாடல் ஒரு மெல்லிய ஹம்மிங்குடன் எந்த வித தாளக்கட்டுடன் இல்லாமல் முடியும் தருணம்..என்னமோ சொல்வாங்களே ஆங்கிலத்தில்..gooseumps
6/10 #Trios #Ensemble
இசை மேதை டி ஆர் பாப்பா அவர்களின் துள்ளலான இசையில், உடுமலை அவர்களின் வரிகளில், அழகான ஜமுனா

7/10 #Trios #Ensemble

மீண்டும் சுசீலா, ஈஸம்மா , சூலமங்கலம் ராஜலக்ஷ்மி. இம்முறை அழகான அம்மு, சச்சு மற்றும் சைலஸ்ரீ அவர்களின் துள்ளலான நடனத்திற்காக
இவர்களுடன் பாடல் முழுக்க வரும் அந்த ஷெனாய்
8/10 #Trio #Ensemble

இந்த கோபாலனுக்காக கொண்டாடுபவர்கள், சுசீலா, பாடகர் திலகம், இசை மணி, ஈஸம்மா மற்றும் தாராபுரம் சுந்தரராஜன்

9/10 #Trios #Ensemble
இத்தொகுப்பின் இறுதி பாடல், சரவணா பிலிம்ஸ், ஜி என் வேலுமணி அவர்களின் தயாரிப்பில் வெளியான 'பாத காணிக்கை' படத்திலிருந்து,

10/10 #Trios #Ensemble

நாளை ஆறாம் தொகுப்பிற்கான பாடல்களை காணும் வரை, இரவு வணக்கம்
எல்லோருக்கும் இனிய மாலை வணக்கம். இன்று நாம் காணவிருக்கும் ஆறாம் தொகுப்பிற்கான பாடல் வரிசை 'ஜோடி பாடல்கள்'. ஜோடி பாடல்கள் என்றவுடன் சௌந்தர்ராராஜன் அவர்களுடனே எத்தனை எத்தனை பாடல்கள் நம் நினைவுக்கு ஓடோடி வருகிறது. ஒரு பத்து பாடல்களை தற்போது காண்போம்
இந்த பாடல் உடனே நான் வளர்ந்தேன் என்றும் சொல்லலாம். என் தாயார் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் சிலாகிப்பார். வெங்கி இந்த பாடலை ரேடியோவில் கேட்டால் எங்கிருந்தாலும் வந்து விடுவான் என்று.
ஆரம்பத்தில் வரும் அந்த கிளாரினெட், சரணத்தை ஹம்மிங்குடன் துவங்கும், தொடரும் அந்த நாதஸ்வரம்
ஆர் கோவர்தன் அவர்களின் மாஸ்டர் பீஸ்
ஏ வி எம் ராஜன், பாரதி
நாதஸ்வர ஓசையிலே

1/10 #Duets
பல்லவிக்கு பிறகு வரும் அந்த இசை கோர்வை, 1.10 ஆர்ப்பரிக்கும் கிளாரென், முதல் இடை இசையில் குழையும் ஷெனாய், இரண்டாவது இடை இசை, என்ன ஒரு அழகான அம்மு, வாத்தியார்,
வாலி 'தாமரை என்றால் சூரியனோடு"😀
சுசீலாவின் குரல் அம்மு பாடுவதை போலவே

2/10 #Duets



இன்னொரு ஆர் கோவர்தன் மாஸ்டர் பீஸ்

வீணையும், குழலும் கட்டியம் கூற, அந்த ரம்மியமான ஹம்மிங்குடன் தொடங்கும் அற்புத இசை கோர்வை.

மலையின் சந்தனம், மார்பினில் சொந்தம், மங்கையின் இதயமோ, காளையின் சொந்தம்

3/10 #Duets
என்னவொரு அதகளம் இந்த பாடல். இருவரின் ஹம்மிங்கை தொடர்ந்து, சுசீலா அவர்களின் ஹம்மிங் 'ரா ரா ரா' என்று போதையேற்ற அழகு பதுமை மஞ்சுளாவுடன் வாத்தியார். வாலிக்கு இந்த மாதிரி சிச்சுவேஷனுக்கு பாடல் எழுதுவது என்றால் குதூகலம்

4/10 #Duets

ராஜஸ்ரீ 😍
முதல் சரணத்தில் வரும் ஹம்மிங், மன்னர்களின் அற்புதங்களில் மற்றொன்று

5/10 #Duets
சச்சு 😍
குழலின் ஆரம்பம், ஹம்மிங், பல்லவி முடிந்ததும் வரும் அந்த கோரஸ்
இன்னொரு பி பி எஸ் சுசீலா அற்புதங்கள்
6/10 #Duets

இந்த பாடலை பற்றி என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.

டி எம் எஸ் சுசீலா ஜோடி பாடல்களின் உச்சம் இதெல்லாம்

அனுபவிப்போம் இவ்வுலகில் இருக்கும் வரை

7/10 #Duets

அற்புதமான மெலடி மன்னரிடமிருந்து. வாத்தியார் அம்மு கூட்டணியில். சரவணா பிலிம்ஸ் அவர்களின் மற்றொரு வெற்றி படம். ஹமீர் கல்யாணியில் ஆரம்பிக்கும் அந்த பல்லவி, ஆஹா

8/10 #Duets

இம்முறை மஞ்சுளாவுடன் கணேசன், இசைக்கு கே வி எம். துள்ளலான அந்த ஆரம்ப இசை, இரண்டாவது சரணத்தின் இடை இசை

கவிஞர் சொன்னது கொஞ்சம்

9/10 #Duets

சுசீலா, டி எம் எஸுடன் போட்டியிடும் அந்த ஷெனாய். முதலில் தொகையறா முடிந்து வரும் அந்த ஷெனாய், என்ன ஒரு அற்புதம்

10/10 #Duets

நாளை ஏழாம் தொகுப்பிற்கான பாடல்களை காண்போம், இரவு வணக்கம்
எல்லோருக்கும் மாலை வணக்கம். இன்று சுசீலா அம்மாவின் அவர்களின் பிறந்த நாள். இந்த பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. 7 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 10 பாடல்கள் விதமாக 70 பாடல்கள், அம்மாவின் 70 ஆண்டு இசை அர்ப்பணிப்பை போற்றுவதற்காக, நண்பர்கள் . @RagavanG @veeba6 அவர்கள் வழிகாட்டுதலின்படி
இன்று கடைசி, ஏழாம் தொகுப்பிற்கான தலைப்பு, சுசீலா அம்மாவின் தனித்துவ பாடல்கள். அவருடைய எந்த பாடலை விடுவது என்பது என்று தெரியாமல், 10 என்ற எண்ணிக்கைக்கு அடங்கும் வரையில்,வரும் பத்து பாடல்களை வழங்குகிறோம்.
இந்த தெய்வீக குரலுக்கு ஈடு இணை எது.

1/10 #Specialsongs

கண்ணதாசன் பாட்டிலே கதை சொல்ல, பிச்சு மணி அவர்களின் வீணையும், சுசீலா அவர்களின் குரலில் 60வது ஆடுகளுக்கு பிறகும் மயக்குகின்றன

2/10 #Specialsongs

நாயகி கிராமத்துக்கு படிப்பை முடித்து வருகிறாள். அந்த பசுமையான காட்சிகளை கண்டு அவள் கண்கள் பெரும் உற்சாகத்தை காட்டுகின்றன. அதை சுசீலா அம்மா தன்னுடைய ஹம்மிங்குகளுடன் தொடங்கும் இடம்....
இந்த விருதுகள் எல்லாம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் குறிப்பிற்காக, இந்த பாடல் அம்மாவிற்கு இரண்டாவது தேசிய விருதை தந்தது

3/10 #Specialsongs

மன்னரின் ஒரு அற்புதமான ஆபேரி. அம்மா பாடிய அத்தனை முருகன் பாடல்களும் என் அப்பனை போலவே கொள்ளை அழகு. இங்கு வாலியும் மேலும் மெருகூட்ட, 'தோழி' என்ற சங்கதி வரும் ஒவ்வொரு இடமும் சிலிர்க்கிறது

4/10 #Specialsongs

இந்த பாடல் கேட்டு கண்ணில் அனந்த கண்ணீர் பெருகாமல் இருந்தால் ஆச்சர்யம் தான். கவிஞரின் சொந்த தயாரிப்பு. நெறய இடத்தில சொன்னபடி, கவியரசர், தேவிகா, சுசீலா கூட்டணி பாடல்கள் சாகா வரம் பெற்றவை.
இந்த பாடல்களெல்லாம் தான் என்னை போன்ற இசை ஆர்வலர்களை இன்னும் இந்த உலகத்தில் வாழ வைக்கிறது
கே வி மஹாதேவன், கவியரசர், ஜி ஆர் நாதன் என்னும் கூட்டணியில் உருவான இந்த பாடல். யுகங்கள் கடந்தும் நிற்கும்.

5/10 #Specialsongs

இந்த திரைப்படம் எல்லாம் வாழ்க்கையின் ஒரு முறையே ஏற்படும் அற்புதங்களில் ஒன்று. கதைக்கு ஏற்ப நடிக்க நாயக நாயகியர்களும்,கதை களத்திற்கேற்ப பாடல் எழுத கவியரசர்களும், அவற்றை அருமையான பாடங்களை உருவகிப்பது என்பதை கலையாக கொண்ட பாடாக பாடகியார், இசை அமைப்பாளர்களுக்கு வாழ்ந்த காலங்கள்
வெகு ஜனங்கள் மிகவும் வரவேற்ற ஒரு புதினத்தை திரைப்படம் எடுக்கும் போது இருக்கும் சவால்கள் நிறைய. கத்தி மேல் நடப்பதை போன்று. இந்த திரைப்படம் ஒரு மிக பெரிய சான்று.
இந்த பாடலை பற்றி எழுத ஆரம்பித்தால் இன்னும் எழுதி கொண்டே போகலாம்.

நிற்க.

இந்த ஷண்முகப்ரியாவை அனுபவிப்போம்

6/10 #Specialsongs

இந்த பாடலை பற்றி என்ன எழுதுவதென்றே தெரியவில்லை

மன்னர், கிருஷ்ணன் பஞ்சு, பி என் சுந்தரம், வாலி போன்றவர்கள் சேர்ந்தால், நமக்கு கிடைப்பது இத்தகைய பொக்கிஷங்கள் தான்

7/10 #Specialsongs

இந்த தர்பாரி கானடா எப்படி மறப்பேன் நான். இது போன்று எழுத யார் வருவார் இனிமே. அந்த நாதஸ்வர ஓசை, ஒவ்வொரு முறை 'தேவி' என்ற சங்கதியை சுசீலா பாடும் லாவகம்...அப்ப்பப்பா, என்னவொரு கற்பனை திறன் இக்கூட்டணிக்கு

8/10 #Specialsongs

மற்றொரு தேவிகா,கவியரசர் கூட்டணி. இந்த படத்தின் பாடல்கள் அத்தனையுமே அருமையானவை. இந்த பாடலை எல்லாம் அனுபவிப்பதற்கு எத்தனை கொடுத்து வைத்து இருக்கிறோம்.
சுசீலா பாடிய பல ஒப்பற்ற பாடல்களில் மணி மகுடம் இவை. 1.07 தொடங்கும் அந்த பல்லவி கோரஸ் பின்னர் வரும் வீணை தந்திகளும், ஷெனாய் தொடரும் கோரஸ்.நம்மை வேறு ஒரு உலகிற்கு இழுத்து செல்கின்றன
அற்புதமாக படமாக்கம். தேவிகாவின் முகபாவம் ஒவ்வொரு சங்கதிக்கும் எவ்வளவு கொள்ளை அழகு.

இன்னொரு ஜென்மம் கொடுங்கள் அம்மா, மறுமுறை இம்மாதிரியான பாடல்களை ரசிக்கப்பதற்கு
9/10 #Specialsongs

தமிழ் திரையுல பின்னணி பாடகர்களில் இருவருக்கு மட்டுமே ஒரு ஐகானிக் பாடல் அமைந்துள்ளது. எப்படி டி எம் எஸ் அவர்களுக்கு 'பாட்டும் நானே' அமைந்ததோ, அதை போல சுசீலா அவர்களுக்கு இந்த பாடல். இந்த இரு பாடல்களையும் வேறு யார் குரலிலாவது நினைத்து கூட பார்க்க முடியாது.
ஏ பி என் கே வி எம் கண்ணதாசன் போன்ற தலை சிறந்த கூட்டணியில் இவ்விரு பாடல்கள் கிடைக்க பெற்றன. கணேசன் இவ்விரு பாடல்களில் பங்கு பெற்று பெருமை சேர்த்துள்ளார். இவ்விரு பாடல்களை படமாக்கிய விதமும் 60 ஆண்டுகளாகியும் நம் எண்ணத்தை விட்டு அகலவில்லை
இறுதி பாடலாக வரும் இப்பாடலை பற்றி நெறய முறை இங்கேயே சிலாகித்தாயிற்று ஆனால் இன்னும் சலிக்கவில்லை. பத்மினியின் நடனம் இப்பாடலை மென்மேலும் மெருகூற்றுகின்றது.
இரண்டாவது சரணத்தில் 'மன்னவன் வந்தானடி' என்ற சங்கதியை தனித்துவமான பாடும் லகுவும், 5.35இல் தத்தி தாவும் பாவை முன் என்ன மன்னவன் என்ற சங்கதியும் அதற்கு பப்பிம்மாவின் முகபாவமும்....
இதோ உங்கள் முன்னால் இவ்விழையின் கடைசி பாடல் உங்கள் பார்வைக்கு

10/10 #Specialsongs

70 பாடல்கள் என்பது ஒரு சிறிய பாடல் கோர்வை மட்டுமே. இன்னமும் நிறைய தேடி தேடி கேட்க இருக்கின்றன சுசீலா அவரால் பாடிய பாடல்கள். இந்த ஒரு மகிழ்வான தருணத்தில் அவரின் இத்தகைய பாடல்களை நினைவு கூர்ந்து கடந்த ஒரு வாரம் ரசித்தது உங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியை தந்திருக்கும் என நம்புகிறோம்
இந்த இசை இழை அச்சிட்டு, செயலாக்க உறுதுணை புரிந்த அன்பு நண்பர்கள் .@RagavanG @veeba6 எத்தனை னை நன்றி கூறினாலும் மிகை ஆகாது.

.@balaji326 .@Tenthaara போன்ற இன்னும் பல இசை ஆர்வலர்களின் ஆதரவையும் நினைவு கூறுகிறோம் இங்கே.

வணக்கத்துடன்🙏
[End of Thread]

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Not Active

Not Active Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Oho_Production

Apr 12, 2023
[Thread] #TFM #music
As we are heading to another Tamil Festival in few days, thought of looking back what Kollywood has offered this time those days. Probably 50s to 80s what albums we have experienced, in this thread.
While Deepavali is premier race in films release, Pongal had its share, which we have seen earlier, Tamil New Year's day also had its own releases. Though this festival release culture has come down drastically post 80s.
Slowly people started to release films one or two days prior to the festival date and it got diluted further as we see no releases happens except Deepavali. Even Deepavali gets one or two movies these days
Read 71 tweets
Mar 16, 2023
#TFM #60sMusic
Last couple of days we saw some great music of 40s to 70s from two Legendary MDs of Cine Music. This day 16th March is another eventful day with respect to music. Let us see in this short thread what is it
This day 60 + years back, two movies released. Two Master Classes from Legendary Directors of Tamil Cinema. What a culmination of legendary technicians worked in those two films.
KSG's SSR, Vijayakumari starrer 'Saradha' released on this day in 1962 for ALS. This is KSG's directorial debut what a way to get into it.
Read 17 tweets
Mar 15, 2023
What a pristine Kalyani. TMS and PS making it more finer with their brilliant singing.

The veena interlude is amazing. Vaali penning it.

Today is birth anniversary of another Legendary MD TFM has given in 40s to 70s.

#SMSubbiahNaidu

SMS one of the finest MDs has given many memorable albums. His association with Pakshiraja and Jupiter Studios for most of his time. He has scored for MGR and surprisingly Jaishankar has got couple of good albums like the above from SMS
He also co-worked with other MDs of that times like CRS, TGL and other legendary singers who have sung for him like MLV, Radha Jayalakshmi, P A Periyanayaki, TMS, SC Krishnan and many.
Read 21 tweets
Mar 14, 2023
'Thaikkupin Tharam' was the first movie Chinnappa Thevar has produced under 'Thevar Films', with MGR, went on to produce around 16 ventures with him in the lead. KVM has scored music for all, what splendid albums we got, be it philosophical, romance, solos, pathos
#KVMahadevan
The way PB starting the pallavi...what a breezy one
This whole album is amazing one with all legendary singers

'Thai Sollai Thaatahe' all out PS and TMS album. 'Paatu oru Paatu, the lullaby, Pattu Selai Kaathaada, Poyum Poyum manidhanukku...but this one is finest number

Read 23 tweets
Jan 10, 2023
மலரே குறிஞ்சி மலரே ❤️
Rebel Star
Mallige Hoove
#HBDKJYesudas
#kannadasongs
Read 18 tweets
Jan 7, 2023
[Music Thread] #SarojaDevi Birthday Musical thread
#TFM
Birthday wishes to 'Abhinaya Saraswathi' B Saroja Devi Image
With 'Gaana Saraswathi', the pair has given how many memorable songs

How beautiful this is 😍

Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(