கார்கோவடோ மலையில் நின்றுகொண்டு, தன் இரண்டு கைகளையும் விரித்து அருள் புரிந்துகொண்டிருக்கும் அந்த ஏசுவின் சிலைக்கு (Christ the redeemer) கர்வம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. பிரேசில் எனும் தேசத்துக்கு தான்தான் அடையாளம் என்று தற்பெருமை கொண்டிருந்தது.
நிறுவப்பட்ட 1931-ல் இருந்து, கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலம் அதுதான் அந்த சாம்பா தேசத்தின் அடையாளமாக விளங்கியது. ஆனால் ஒரு சிறுவனிடம் தன் அடையாளத்தை இழந்தது அந்தச் சிலை - #Pele
பள்ளிக்குப் போய்வந்தாலும், ஏழ்மையைப் போக்க ஷூ பாலீஷ் போட்டுக்கொண்டு, பணக்காரர்கள் வீட்டுத் தரையைத் துடைத்துக்கொண்டு, டீக்கடையில் வேலை செய்துகொண்டிருந்த சிறுவனை ஒருநாளும் தன் போட்டியாளனாய் நினைத்திருக்கமாட்டார் ஏசு
1958 உலகக் கோப்பை: ஒரு ஹாட்ரிக், பைனலில் 2 கோல்கள் என Best Young Player விருது வென்று பிரேசில் WC வெல்லம் காரணமாகிறார் 17 வயது பெலே! உலகின் மிகப்பெரிய கிளப்கள் அவர் கையெழுத்துக்காக காத்திருக்கத் தொடங்கின! ஆனால் அவர் பிரேசிலைத் தாண்ட தயாராக இல்லை!
1961ல் “பெலே பிரேசிலின் அதிகாரபூர்வ சொத்து” என்று அறிவிக்கிறார் அன்றைய அதிபர் ஜேனியோ குவாட்ரோஸ். அன்று முதல் அது பெலேவின் தேசமாக மாறுகிறது! 30 ஆண்டுகள் பிரேசிலின் அடையாளமாக இருந்த சிலை, தன் பெருமையை ஒரு 21 வயது இளைஞனிடம் இழக்கிறது.
உண்மையில் அந்த அடையாளத்தைப் பெலே பறித்ததில் ஆச்சரியமில்லை. காரணம், பெலே என்ற வார்த்தை பைபிளிலேயே இருக்கிறது. ஹீப்ரு மொழியில் அதற்கு அர்த்தம் - மிராக்கிள்! அதிக மிராக்கிள்களை உலகுக்குக் காட்டியவர் இவர்தானே!
பிரேசில் கவிஞர் கார்லோஸ் ட்ரம்மோண்ட் ஒருமுறை கூறினார், "பெலேவைப் போல் 1000 கோல்கள் அடிப்பது அற்புதம் அல்ல. அவரைப் போலவே ஒரேயொரு கோல் அடித்தாலும் அதுவே அற்புதம். அது அசாத்தியம்" என்று பெலேவின் திறமையைப் புகழ்ந்தார்.
1970-ம் ஆண்டு மெக்சிகோவில் உலகக்கோப்பை நடந்துகொண்டிருந்தபோது, வர்ணனையாளர்கள் மால்கம் ஆலிசன், பேட் க்ரெராண்ட் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பிரசித்தி பெற்ற உரையாடல் இது,
மால்கம் ஆலிசன் : “How do you spell Pele?”
பேட் க்ரெராண்ட் : “Easy: G-O-D.”
இன்று மட்டுமல்ல எப்போதுமே பிரேசிலின் அடையாளம் பெலே தான். ஏனெனில் அவர்தான் அவர்களின் முதன்மையான கடவுள்!
சென்னை அணியைப் பொறுத்தவரை டெத் ஓவர்களில் தோனி என்றால் மிடில் ஓவர்களில் இவர்தான். சிறந்த கீப்பர் தோனி என்றால் மிகச் சிறந்த ஃபீல்டர் இவர்தான். தோனி ‘தல’ என்றால் இவர்தான் ‘சின்ன தல’.
சென்னை அணிக்காக அதிக ரன்கள், அதிக கேட்ச்கள் என பல்வேறு சாதனைகளைத் தன் வசம் வைத்துள்ளவர் சுரேஷ் ரெய்னா. IPL ஆரம்பித்த 2008-ம் ஆண்டே சென்னை அணியில் இணைந்தவர்.
5 கோடி ரூபாய்க்கு அன்று சென்னை அணிக்கு ரெய்னா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஹைடன், ஹசி, ஃபிளெமிங், ஓரம் என எத்தனையோ சர்வதேச வீரர்கள் இருந்தாலும் தமிழக மக்களை பெரிதும் கவர்ந்தது ரெய்னாதான்.
2009ம் ஆண்டு தேர்தல் காரணமாக IPL போட்டிகள் தென் ஆப்ரிக்க நாட்டு மைதானங்களில் நடந்தது. எல்லா அணிகளும் தென் ஆப்ரிக்க மைதானங்கள் தன்மைக்கு ஏற்ப அணிகளைத் தயார் செய்து கொண்டிருந்தனர்.
'தெரிஞ்ச எதிரியை விட தெரியாத எதிரிக்குத்தான் அல்லு அதிகமா இருக்கும்' என்ற விஜய் பட வசனத்துக்கு ஏற்ப ராஜஸ்தான் அணி கேப்டன் வார்னே ஒரு தெரியாத எதிரியைக் களமிறக்கத் திட்டமிட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் Mau என்றொரு மாவட்டம் உள்ளது. பட்டுத் தொழிலுக்கு பேர் போன மாவட்டத்தில், 1991ம் ஆண்டு ஒரு ஃபாஸ்ட் பௌலர் உதயமானார். கம்ரான் கான் எனும் பேர் கொண்ட அந்த வீரரின் வாழ்க்கையை ஒரு கட்டத்தில் வறுமை எனும் புயல் வாட்டி வதைத்தது.