#எம்ஜிஆர்_ரகசியங்கள் #பகுதி6_அடியாள்படை
அந்தக் காலத்தில் ஒரு படத்துக்கு 7 லட்சத்தில் இருந்து 20 லட்சம் வரை செலவாகும். அவ்வளவு பெரும் பணம் யாரிடமும் இருந்ததில்லை.
கடன் பட்டு கஷ்டப்பட்டாவது படத்தை முடித்து ஒன்றிரண்டாவது மிஞ்சதா என்று எதிர்பார்க்கும் பாவப்பட்ட ஜென்மங்கள்தான்
பட தயாரிப்பாளர்கள்.
அவர்கள் எம்ஜியாரை வைத்து படம் எடுக்க தொடங்கினால் வந்தது ஆபத்து.
அவர்களுக்குள் எதாவது இலாபம் வருவது போல் தோன்றினால் அவர்களின்
கழுத்தை அறுத்து இரத்தம் குடிக்க எம்ஜியார் தயங்க மாட்டார்.
சாண்டோ சின்னப்பா தேவருக்கு மட்டும்தான் அவர் பயப்படுவார். தாய்க்குப் பின்
தாரம் பட மோதலால் எம்ஜியார் எதாவது இடக்கு செய்தால் அவர் தூக்கி எறிந்து விடுவார். அவரை தவிர வேறு எவரையும் பேய் பிடித்து ஆட்டுவது போல் ஆட்டுவார்.
பர்மா இந்தோ சீனா போன்ற நாடுகளில் தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லை என்று தெரிந்த சிலர் தங்கள் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு,
15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்தார்கள்.
அவர்களில் ஒருவர் கோல்டன் நாயுடு.
சைகோனில் இருந்த தனது பிரமாண்டமான மரம் அறுக்கும் தொழிற்சாலை விற்றுவிட்டு சென்னைக்கு வந்தார் அவர்.
கோடம்பாக்கத்தில் கோல்டன் ஸ்டுடியோ என்ற பெயரில் ஒரு ஸ்டுடியோ கட்டினார்.
அவர் சில படங்களுக்கு பண உதவியும்
செய்து கொண்டிருந்தார்
அதில் ஒன்று பாக்தாத் திருடன் படம்.
எம்ஜியார் படங்கள் 10 ரூபாயில் விலை போனால் செலவு 20 ரூபாயாக இருக்கும்.
அந்தநிலைக்கு பாக்தத் திருடனையும் கொண்டுவந்து விட்டார் எம்ஜியார். 30ஆயிரம் ரூபாய்க்கு செட் போட்டிருப்பார்கள் மறுநாளே அதை மாற்றி புது செட் போடச்சொல்வார்
ஏற்கனவே எடுத்ததை தூக்கி போட்டுவிட்டு புதிதாக எடுக்க சொல்வார்.
மானம் மரியாதையோடு வாழ்ந்த கோல்டன் நாயுடு துடித்து போனார்.
படம் முடியவேண்டிய நேரத்தில் 5 லட்சம் நஷ்டம் என்று கணக்கிடப்பட்டது.
மேலும் 2 இலட்சம் ரூபாய் இருந்தால்தானே படத்தை முடிக்கலாம் என்று
எம்ஜியார் கூறிவிட்டார்.
அழுதே அறியாத நாயுடு வாய் விட்டு அழுது விட்டார்.
ஒரு நாள் காலையில் எம்ஜியாரை பார்த்து கெஞ்சினார். எம்ஜியார் படத்தை முடிக்க மறுத்து விட்டார்.
அடப்பாவி நான் பாபர் ஆகிவிடுவேன் போலிருக்கிறதே என்று புலம்பி கொண்டே வீட்டிற்கு வந்தார்.
ரத்த கொதிப்பு அதிகமாகி விட்டது.
பாத்ரூமுக்கு போனார்.
ஒரு மணி நேரமாகியும் அவர் வரைவில்லை.
வீட்டில் உள்ளவர்கள் பயந்து கொண்டே பாத்ரூம் கதவை திறந்தார்கள்.
உள்ளே மாரடைப்பால்இறந்து கிடந்தார் நாயுடு.
அவரது குடும்பம் கதறி அழுத கோரக்காட்சி இருதயம் உள்ள எவராலும் மறக்க முடியாது.
சினிமா உலகமே அவரது வீட்டில் கூடிவிட்டது.
ஒருவர் பாக்கி இல்லாமல்
எல்லோரும் எம்ஜியாரை சபித்து கொண்டிருந்தார்கள். அப்போது எம்ஜியார் ஒரு ஆள் உயர மாலையை தூக்கி கொண்டு வந்தார்
அலட்சியமாக அந்த மாலையை நாயுடுவின் பிணத்தின் மீது போட்டார்.
ஆளை கொன்றுவிட்டு மாலையை கொண்டு அடியாட்களோடு வந்திருக்கிறான் என்று ஆள் மாத்தி ஆள் மாத்தி ஒவ்வொருவரும் சத்தம்
போட்டு சொன்னார்கள்.
எம்ஜியாரும் அடியாட்களும்
உடனே நாயுடுவின் ஆட்களுக்கு கோபம் வந்தது.
எல்லோரோடும் சண்டை போட்டார்கள்.
அடியாட்களும் எம்ஜியாரும் ஒரே காரில் ஏறி புறப்பட்டு ஓடிப் போனார்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#எம்ஜிஆர்_ரகசியங்கள் #பகுதி7_திமுகநடிகர்கள்பட்டபாடு
கழகத்துக்கு யாராவது புதிய நடிகன் வருகிறான் என்றால் எம்ஜியார்
அந்த நடிகன் முன்னுக்குக் வந்துவிடாதபடி எல்லா வேலையும் செய்வார். பணம் செலவழிப்பார்.
அந்த படக் கம்பனிக்கு போன் செய்து குறைந்த சம்பளத்தில் நடித்து தருகிறேன் என்பார்.
#கண்ணதாசன்பட்டபாடு
எம்ஜிஆர் பேச்சை நம்பி ஊமையன் கோட்டை படத்தை ஆரம்பித்தார். அற்புதமான கதை. அந்த படம் வெளிவந்திருந்தால் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கும். அதற்காக 21 ஆயிரம் ரூபாய் எம்ஜியார் பெற்றிருக்கிறார். அது ரொக்கமாக கொடுத்த பணம். ஆகவே எழுத்து பூர்வமான ஆதாரம் இல்லை.
பணம் வாங்கி கொண்டாரே தவிர ஒரு நாள் கூட படத்தில் நடிக்கவில்லை.
62 ஆயிரத்தி 500 ருபாயோடு அந்த படம் நிறுத்தப்பட்டது.
இனி பெரிய நடிகன் வேண்டாம் என்று முடிவு கட்டி.
பொருளாதாரத்தில் மிகவும் சிரமத்தில் இருந்த டி ஆர் மகாலிங்கத்தை வைத்து
போட்டு படம் எடுக்க முடிவு கட்டினார்
#எம்ஜிஆர்_ரகசியங்கள் #பகுதி5_சாடிஸ்ட்MGR
25 ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி.ஆர். மிகுந்த கஷ்ட திசையில் இருந்தார்.
அக்காலத்தில் அவருக்கு உதவியவர் ஜூபிடர் பிக்சர்சில் மேனேஜராக இருந்த டி.எஸ். வெங்கடசாமி .
யு. ஆர். ஜீவரத்தினத்தின் கணவர்.
கண்ணதாசன் முதல் பாட்டெழுத சந்தர்ப்பம் கொடுத்தவர்
பாகவதர் நடித்த ‘அசோக் குமாரில்" ஓரு சிறு வேஷத்தில் நடித்திருந்த எம். ஜி. ஆரை ஜூபிடர் பிக்சர்சார் தங்கள் 'ராஜ குமாரி' படத்தில் கதாநாயகனாகப் போட்டார்கள்.
அந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர் கலைஞர் கருணநிதி அவர்கள்தான்.
அவரது வசனம் படத்தில் ஒரு சிறப்பான அம்சம்,
ஜூபிடர் பிக்சர்சில்
மேனேஜர் அறைக்கு நேராக இருந்த நாற்காலிகளில் தோழர்கள் எம்.ஜி.ஆரும், சக்கரபாணியும் உட்கார்ந்திருப்பார்கள்.
எம்.ஜி.ஆரை வெகு நேரம் காக்க வைக்காமல் சீக்கிரம் கூப்பிட்டு பணம் கொடுத்து அனுப்புவார் வெங்கடசாமி. அவர் மற்றவர்களை மதிக்கத் தெரிந்தவர்.
துணை நடிகனைக்கூட அவமானப்படுத்த
மாட்டார்.
#எம்ஜிஆர்_ரகசியங்கள் #பகுதி4_அடிமைகள்
அந்த காலத்தில் எம்.ஜி.ஆர். கட்சியில் சேர்ந்தால் அன்று உங்களைக் கட்டித் தழுவி வரவேற்பார். செயற்கை சிரிப்புச் சிரிப்பார்.
பிறகு தெருத்திண்ணையில் உட்காரவைத்துவிடுவார்.
உங்கள் கடந்தகால சேவை, பெருமை, சுயமரி யாதை எதையும் கணக்கில் எடுக்கமாட்டார்
காமராஜரைப் போல கலைஞரை போல அரசியல் பாரம்பரியத்தில் வளர்ந்தவர் அல்ல. அந்தப் பாரம்பரியம் உள்ளவர்களிடம்தான் பெருந்தன்மை இருக்கும்.
இவர் மேக்-அப் ரூமிலிருந்து மேடைக்கு ஓடிவந்தவர்.
ஸ்டுடியோவிலோ, ஆபீசிலோ பார்க்கப் போகிறவர்கள் வாயும் வயிறும் காய வெளித் திண்ணையிலேயே காத்துக் கிடந்தார்கள்
பி.டி.சரஸ்வதி ஒருவர்தான் நினைத்த நேரமெல்லாம் அவரைப் பார்க்க முடிந்தது
யாராவது புடவையை கட்டிக் கொண்டு போனால் உடனே பார்க்கலாம்
சரியான நேரத்தில் அவருக்குக் கைகொடுத்த மதியழகனையே தெருவில் விட்டார்.
டிரைவரை அனுப்பி,
'என் எதிரில் மதியழகன் சிகரெட் பிடிக்கக்கூடாது என சொல்லு' என்றவர்
#எம்ஜிஆர்_ரகசியங்கள் #பகுதி3
சுபாவத்திலேயே எம். ஜி. ஆருக்கு ஆணவம் உண்டு. அவரது ஒரு படம் வெற்றிகரமாக ஓடிவிட்டால் மற்ற தயாரிப்பாளர்களைச் சித்ரவதை செய்துவிடுவார்.
யாரையும் அலட்சியமாகவே பார்ப்பார்.
அதே நேரத்தில்
தான் ஒரு திறமையான நடிகன் அல்ல என்பதை அவரே உணர்ந்திருக்கிறார்.
மற்ற நடிகர்களின் படங்கள் வெளிவரும்போது கொட்டகைக்கு ஆள் ஆனுப்பி கேலி செய்வது,போஸ்டர்கள் மீது சாணி வீசச்செய்வது
தன் படங்களுக்கு டிக்கெட் வாங்கித் தந்து ரசிகர்களைக் கை தட்டச் செய்வார். உருக்கமான 'சீன்' எழுதினால் தன்னால் நடிக்க முடியாது என்று கதாசிரியர்களைக் கேளாமலேயே மாற்றிவிடுவார்.
நீங்கள் எழுதியிருப்பதை ஜனங்கள் விரும்பமாட்டார்கள்” என்பார். படத்தில் தன்னைப் புகழ்ந்து பாடல்கள் எழுத வேண்டும் என்பார்
அத்தகைய பாடல்களுக்குத் தான் முதலிடம் தருவார்.
ஜனங்களை எதிலே மயங்க வைப்பது, எப்படி நீண்டநாள் வசூல் சக்ரவர்த்தியாக இருப்பது என்பதெல்லாம் அவருக்குத் தெரியும்.
#எம்ஜிஆர்_ரகசியங்கள்
பகுதி 2
இரண்டொரு வெற்றிகளை குரூட்டுத்தனமாகப் பெற்றதிலிருந்து எம். ஜி. ஆரின் ஆணவம் அளவு மீறிப் போய் விட்டது.
தமிழ்ப் பெண்கள் கேலி செய்தார்.
கலைஞர் காலம் முடிந்துவிட்டது என்றார்.
பிற மொழிகளில் இவரை ஒரு துணை நடிகராகக்கூட ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
இந்த நாட்டில் தமிழர்கள் மட்டுமே அப்பாவிகளாக இருப்பதால் எம். ஜி ஆரின் ஆணவம் எல்லை மீறிப்போய் விட்டது.
மாபெரும் தலைவர்களின் அந்தரங்க சுத்தியைக்கூட அறியாதவர்கள், அவர்களை ஒதுக்கிவிட்டு எம். ஜி. ஆரை ஆதரிப்பதால் வந்த வினை, பெரும் தமிழ்த் தலைவர்களுக்கு அவமானகரமாக முடிந்திருக்கிறது.
எம்ஜிஆர். கணக்கில் வாங்குவதுபோல் ஆறு மடங்கு பணம் கறுப்பில் வாங்கினார்.
கறுப்புப் பணங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவரே மேடையில் பேசினார்.
'மாமன்களும் 'மாப்பிள்ளை' களும் கேரளாவில் இருந்து வந்த 'ஆயுதமும்'தங்களது கறுப்புப் பணங்களை அவரிடம் கொடுத்து, விளையாடச் சொல்லியிருக்கின்றனர்
#எம்ஜிஆர்_ரகசியங்கள்
ஒரு நடிகருக்கு வேண்டிய திறமையோ, ஒரு தலைவனுக்கு
வேண்டிய பொறுமையோ, நிதானமோ இல்லாதவர்.
அவரை பகுத்தறிவில்லாத ஏழை மக்களும், படித்தவர்களில் முட்டாள்கள் மட்டுமே நம்புகிறார்கள்.
தமிழ்நாட்டின் ஒரு கல்லூரியில்கூட MGRரை ஆதரிக்கும் மாணவர்கள் இல்லை
படித்தவர்கள் ஓட்டும். சிந்திக்கும் திறன் உடையவர்களது ஓட்டும் அவர் கட்சிக்கு விழவில்லை. கருத்துப் பிரச்சாரம் தீவிரமாக இல்லாத இடங்களில் அவர் கால் ஊன்றியிருக்கின்றார்.
படங்சளில் நடிப்பதுபோல நிஜவாழ்க்கையிலும் அவர் யோக்கியார் என்பதை படிக்காத பாமர மக்களுக்கும், சொல்வது நமது கடமையாகிறது
அவர் நன்கொடை கொடுத்த விவரங்கள்,பலரிடம் வாங்கிய கறுப்புப் பண விவரங்கள்.
சந்திரபாபுவைப் படுத்தியபாடு,
அவருடைய ஆணவத்தால் பாதியிலே நின்றுபோன படங்கள், அந்தப் படங்களால் தங்களது வாழ்வையே சீரழித்துக் கொண்ட தயாரிப்பாளர்கள்,
அவரது வருமான வரி லீலைகள்,
முழுவதையும் நான் சொல்கிறேன்.