ரொம்ப நல்லாருக்கு... நிச்சயம் பாக்க வேண்டிய தொடர். முற்போக்கு சிந்தனை/சமூக நீதி/பெரியார் இதெல்லாம் ஓரமா ஒதுக்கி வச்சா கூட சாமானியனோட சுலபமா கனேக்ட் ஆகுற தொடர்.. பிரச்சார நெடி இல்லாம உலக நிஜ வாழ்க்கையா காட்ட முயற்சி பண்ணி ஜெயிச்சும் இருக்காங்க /1
நிறைய கதாபாத்திரங்கள். இயக்குனர் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்காப்ல. அதுலயும் கதாநாயகியான அந்த சின்ன பொண்ணு.. சில இடங்களில ரொம்ப முதிர்ச்சியா பேசுறது/யோசிக்கிறது மட்டும் லைட்டா ஒட்டல ஆனா அது குறையா தெரியல.. அச்சு அசல் கொங்கு முக (கிராம) சாயல்...
அடுத்து அம்மாவா வர்ற அனுமோல்.. பின்னிட்டாப்ல.. அம்மாவா கண்டிப்ப காட்ட நினைக்கிற ஆனா பொண்ணுட்ட வாதத்துல ஜெயிக்க முடியாம தவிக்குற, முன்னாடியும் போக முடியாம குழம்புற, தவிக்குற ஆனாலும் வெளி வர தவிக்குற அம்மாவா.... 👌👌
நடுநடுல வர்ற அந்த திருடன் சாரோட காமடி, அயலி தோழிகள், Assistant HM, அக்கறையான HM, அப்படின்னு தொடர் பூரா எல்லாரும் முத்திரை பதிக்குறாங்க... நிச்சயம் ஏமாத்தாது... 🙌
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
என்ன காரணம்னு தெரியல. சந்துல பாராட்டப்பட்டாலுமே மலையாள படங்களோட எனக்கு ஒரு ஒவ்வாமை இருந்துகிட்டே இருக்கு. பார்க்க ஆர்வம் வரதே இல்ல. இருந்தாலும் பார்த்து தொலைவோம்னு நேத்து முகுந்தன் உன்னி படம் பார்த்தேன்
நம்ம ஸ்ரீகாந்த் கிரிக்கெட் கமெண்ட்டரிய ஒரு மணி நேரம் கேட்டா கூட இவ்ளோ காண்டாகாது... இந்த ஹீரோ படம் பூரா சீனுக்கு சீன், வசனத்துக்கு வசனம் மைண்ட் வாய்ஸ்ல கமெண்ட்டரி அடிச்சுகிட்டே இருக்குறது சூர காண்டாகுது.... சுடுதண்ணி வைக்குறத விட வேகமா சுலபமா ஆளுங்கள போட்டு தள்றாப்ல
படம் வேகமா போகுது தான்... ஆனா நல்லா வந்திருக்க வேண்டிய படத்த படம் பூரா வர்ற இந்த ஹீரோ மைண்ட் வாய்ஸ் கெடுத்திடுது.. நம்ம ஹெட்செட்ல ஒரு பக்கம் அழகான ரஹ்மான் பாட்டும் இன்னொரு பக்கம் கர்கர்னு ரிப்பேரான சத்தமும் ஒரே நேரத்துல கேட்டுகிட்டே வந்தா எவ்ளோ கடுப்பாகுமோ அவ்ளோ...