#அயலி என்ற ஒரு Seriesல் ஒட்டுமொத்த சாதி, சாதி சங்கம், ஆண்மை, கலாச்சாரம், பண்பாடு, பக்தி, குல தெய்வம், குல வழக்கம், ஊர் வழக்கம், தீட்டு, தாலி, திருமணம் னு அத்தனை ஆணிகளையும் பிடுங்கி எறிந்திருக்கிறார்கள்..1
'யார் என்ன சொன்னாலும் உன் அறிவுக்கு என்ன சரியென்று படுகிறதோ அதை செய்!' என பெரியாரின் கருத்தை இறுதியில் கூறி முடிந்திருக்கிறது அயலி.2
இங்கு நாம் கண்கட்டி நம்பிக்கொண்டு இருந்த, இருக்கின்ற பல கட்டுக்கதைகள் மக்களை(முக்கியமாக பெண்களை) அடக்கக் கொண்டு வந்தவை தான் என்பதை தோலுரித்துக் காட்டியிருக்கிறது அயலி.. 3
ஒரு பெண் குழந்தை வயதுக்கு வந்ததும் இந்த சமூகம் அவளை எவ்வளவு கொடுமைகளுக்கு உள்ளாக்குகிறது என்பதை பல கதாபாத்திரங்களின் மூலம் காட்டியிருக்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் வாழும் தமிழரசிகளை இந்த உலகம் பின்தொடர்ந்தே தீரவேண்டும்.. 4
மாற்றத்திற்கான காலம் எவ்வளவு எடுத்தாலும், எவ்வளவு எதிர்ப்புகள் வலுத்தாலும் தமிழரசிகள் துவண்டுப் போகமாட்டார்கள்-மாட்டோம்❤️
*இது நம்ம காலம்*..😊
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh