#எரிந்தபேருந்து_கருகியமாணவிகள்_எரித்தவர்கள்விடுதலை
அதுவும் ஒரு பிப்ரவரி மாதம் தான்.
கல்வி சுற்றுலா சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தது கோவை வேளாண்மை கல்லூரியைச் சேர்ந்த பேருந்து. 47 மாணவிகள் சில ப்ரொபசர்கள் உள்ளே இருந்தனர். மாணவர்களுக்கான பேருந்து பின்னால் வந்து கொண்டிருந்தது
1991- 96 ல் ராஜீவ் படுகொலை அனுதாபத்தால் முதல்வரான ஜெயலலிதா கொடைக்கானலில் விதிகளை மீறி ஏழு மாடி கட்டிடம் கட்ட பிளஸெண்ட் ஸ்டே ஓட்டலுக்கு அனுமதி வழங்கி, ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ராதாகிருஷ்ணன் பிப்ரவரி2, 2000 அன்று ஜெயலலிதா குற்றவாளி என்பதால் சிறை செல்ல உத்தரவிட்டார்
தீர்ப்புக்கு துளியும் சம்பந்தமில்லாத, வேளாண் கல்லூரி மாணவர்கள் பையூரில் இருந்து கிளம்பி தர்மபுரி நால் ரோட்டில் இறங்கி உணவு உண்டனர். ஸ்மார்ட் போன் 1.5 ஜிபி டேட்டா இல்லாத காலம். மஃப்டியில் வந்த போலீஸ்காரர்:
ஜெயலலிதாவை அரஸ்ட் பண்ணிட்டாங்க. பார்த்து கவனமா போங்க’என்றார்
தகவல் புராபஷற்களுக்கு செல்கிறது. அவர்கள் பக்கத்துக் கடையில் இருந்து தொலைபேசி மூலம் கோவை கல்லூரியை தொடர்பு கொள்கிறார்கள்.
பாதுகாப்பா பஸ்ஸை ஒரு ஓரமா நிறுத்தும்படி காலேஜ் நிர்வாக உத்தரவு வருகிறது.
அந்த சமயத்தில் கடைகளை எல்லாம் கல்லால் அடிச்சுகிட்டே ஒரு கூட்டம் ஓடி வந்தது.
பேருந்து ஓட்டுநர் கந்தசாமியின் நேரடி வாக்குமூலம் :
பஸ் நின்னுக்கிட்டு இருந்த ஓட்டலுக்கு பக்கத்தில் இருந்த கடைக்காரர்கள் சீக்கிரம் வண்டியை எடுப்பா. உங்களால எங்களுக்கு ஆபத்து வரப்போவுது ன்னு அவசரப்படுத்தினாங்க. என்ன செய்வதுன்னு யோசித்துகிட்டு இருக்கும்போது ஒரு டிராபிக் கான்ஸ்டபிள்
வண்டியில பொட்டபுள்ளைங்களா இருக்கு. சீக்கிரம் எடுங்க” என்றார். பாதுகாப்பா எங்கே நிறுத்துறதுன்னு அவர்கிட்டேயே கேட்டேன். ’1 கிலோமீட்டர் போனா எஸ் பி ஆபீஸ் வரும், அதற்குப் பக்கத்திலே நிறுத்திக்க, பாதுகாப்பா இருக்கும்’னு சொன்னாரு.
நான் வண்டியை மெதுவா உருட்டிக்கிட்டே வந்தேன். அங்கங்கே
கல்வீசிகிட்டிருந்ததால் ரைட் சைடில் இருந்த ஜன்னல்களை எல்லாம் மூடச் சொல்லிட்டேன். எங்க பஸ்ஸுக்கு பின்னாலேயே 100 அடி இடைவெளியில பையனுங்க பஸ் வந்துகிட்டிருந்தது. பாரதிபுரம்கிற இடத்துகிட்டே போனபோது எங்க பஸ்ஸுக்கு முன்னாடி ஒரு அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது. காருக்குப் பின்னால்
பஸ்ஸை நிறுத்தினேன். அம்பாசிடர் காரில் குழந்தைகளுடன் ஒரு ஃபேமிலி இருந்தது. குழந்தைகளை பார்த்து பஸ்ஸிலிருந்த பிள்ளைகள் சந்தோஷமா கையை ஆட்டி டாட்டா சொல்லிக்கிட்டிருந்துச்சு. நான் பஸ்ஸிலேயே உட்கார்ந்திருந்தேன்.
திடீர்னு எங்கிருந்துதான் அந்த ஆளுங்க வந்தாங்கன்னு தெரியலை. பஸ்ஸின் லெஃப்ட்
சைடில் ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. ஸ்கூட்டரில் ஒருத்தன் உட்கார்ந்திருந்தான். அவனை பார்த்துக்கிட்டே இருக்கும்போது திடீர்னு பஸ்ஸில் பெட்ரோல் வாசனை அடிக்க ஆரம்பித்தது. நான் பயந்துபோய் உடனே இறங்கி பார்த்தபோது ஒருவன் ஸ்கூட்டரிலும் அவன் பக்கத்தில் இரண்டு பேரும் நின்னுகிட்டிருந்தாங்க.
ஒருத்தன் சட்டையின் பின் பக்கத்திலிருந்து ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலை எடுத்தான். அதில் பெட்ரோல் இருந்தது.
பஸ்ஸின் லெஃப்ட் சைடு ஜன்னல்கள் மூடாமல் இருந்ததால் அதன் வழியாக பெட்ரோலை ஊற்றத் தொடங்கினான். புரபஸர்கள் அவனிடம் ”பொம்பளப் புள்ளைகளா இருக்கு... எதுவும் பண்ணிடாதீங்க. நாங்க
புள்ளைங்களெல்லாம் சூட்கேஸை பரபரப்போடு எடுக்க ஆரம்பிச்சுடுச்சு. (விபத்து நடந்தாலும் பொருட்களை காப்பாற்றிக்கொண்டு உயிர் பிழைக்க நினைப்பது தானே மனித இயல்பு) நானும் புரபஸர்களும் புள்ளைகளை இழுத்து இழுத்து வெளியே போட்டோம். பின்னால் வந்த பஸ்ஸிலிருந்து பையனுங்க பதட்டத்தோடு ஓடி வந்தாங்க.
அதற்குள்ளே எங்க பஸ் முழுக்க புகையாயிடுச்சு... ஒன்னும் தெரியலை. பையனுங்களும் முடிந்த அளவு காப்பாற்றினாங்க. பஸ்ஸின் பின்பக்க கண்ணாடியை உடைச்சு, பிள்ளைகளை இறக்கிவிட்டாங்க.
ஒரு பையன் எங்கிருந்தோ ஒரு கடப்பாரையை கொண்டு வந்து கொடுத்தான். பின்பக்க கதவை இடித்துத் திறந்தோம். அதற்குள் பஸ்
முழுக்க தீ பரவிடுச்சு. நெருங்க முடியாமல் விலகி வந்துட்டோம்.
பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்டவர்களை எண்ணிப் பார்த்தபோது 42 பேர் தான் இருந்தாங்க. ’மொத்தம் 47 பேராச்சே. மீதி 5 பேர் எங்கே?’ன்னு பதறினோம். இரண்டு பிள்ளைங்க ஓரமா நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. மீதி 3 பேரை காணலை.
மக்கள் தீயை அணைக்க தண்ணீரை கொண்டு வந்து போராடுகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் அனைவரின் கண் முன்பும் சென்னையை சேர்ந்த ஹேமலதா, விருத்தாசலத்தை சேர்ந்த காயத்ரி,
நாமக்கல் கோகிலவாணி
பேருந்து தீயில் இரையாகினர்.
இந்த சம்பவத்தில் அதிமுக.வினர் 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்து வந்த அந்த வழக்கில், ‘சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள்.
வேறு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்ற வேண்டும்'
என இறந்துபோன கோகிலவாணியின்
அப்பா வீராசாமி
உயர் நீதிமன்றத்தில்
மனு
செய்தார். 2003- ம் ஆண்டு
வழக்கு சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில்
அதிமுகவைச் சேர்ந்த
முனியப்பன்,
நெடுஞ்செழியன்,
ரவீந்திரன்
ஆகிய
3 பேருக்கு மரண தண்டனை
விதித்து கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பரில் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.
இது தவிர சம்பவத்தில் தொடர்புடைய
மேலும் 25 பேருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இந்த வழக்கின் மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு
வந்தபோது தண்டனைகள் உறுதி செய்யப்பட்டன.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள், ஜிஎஸ் சிங்வி, பி.எஸ். சௌகான் ஆகியோர் விசாரித்தனர்.
சமூகத்துக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான,
ஏற்றுக்கொள்ள முடியாத
செயல் எனக் கூறிய நீதிபதிகள், கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை,
கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி உறுதி செய்தனர். இதையடுத்து,
குற்றவாளிகள் மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர்.
இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு
செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மூவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மறு ஆய்வு மனு கடந்த 2011- ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது,
இந்த மனுவை விசாரித்த
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சுதர்ஷன் ரெட்டி மற்றும் எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் கொண்ட அமர்வு,
மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை 2016 ஆம் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குற்றவாளிகள்
நெடுஞ்செழியன், முனியப்பன், ரவீந்திரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை
ஆயுள் தண்டனையை குறைத்ததோடு, உணர்ச்சிவசப்பட்டு
செய்யப்பட்ட தவறு
என்பதால் தண்டனை குறைக்கப்பட்டதாகவும்,
கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பேருந்து எரிக்கப்படவில்லை என்றனர்.
2018 நவம்பர் 19அன்று தமிழக ஆளுநரின் பரிந்துரைப்படி அந்த மூவரும் எடப்பாடி அரசால் எம் ஜிஆர் நூற்றாண்டு ஒட்டி நன்னடத்தை விதிப்படி விடுதலை செய்யப்பட்டனர்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
2014 ஆம் ஆண்டு என நினைவு. ஜெயலலிதா டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில்
நிருபர்களிடத்தில் பேசினார். பேசிக் கொண்டேயிருந்தார்.
பத்திரிகையாளர்கள் கேட்ட
கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னவர் கடைசியாக "ஒரு
கேள்வியை நீங்க கேட்பீங்கன்னு நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.
ஆனால் நீங்கள் கேட்கவேயில்லையே?"என்றார்
நிருபர்கள் திகைத்துப் போய் நிற்க, ஜெயா அவராகவே
கேள்வியையும் கேட்டு அதற்கான பதிலையும் சொன்னார்.
"அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் அண்டோனியா அல்பினா மைனோ
இந்தியாவின் பிரதமராக முடியுமா.? அது நியாயமா..?" என்றார்
நிருபர்கள் முழித்தனர்.
"புரியலையா..
அண்டோனியா அல்பினா மைனோ என்பதுதானே #சோனியாகாந்தியின் இயற்பெயர்.
அவர் இத்தாலிக்காரர்.
இத்தாலி நாட்டில் பிறந்தவர். இன்னொரு நாட்டில் பிறந்தவர் எப்படி இந்தியாவிற்கு பிரதமராக முடியும். இதை நாம் அனுமதிக்கக் கூடாது. அ.தி.மு.க. இதனை ஆதரிக்காது..
"Beef சாப்பிடுற அவா என் பிளேட்டை தொட்டுவிட்டால், என் ஆச்சாரம் கெட்டு போகாதோ? அதான் என்னுடைய சமையல் பாத்திரங்களை இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்கிறேன்"
இந்த அரிய கண்டுபிடிப்பை வெளியிட்ட இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மாமியார் சுதா மூர்த்தி தான் இந்தியாவின் தேசிய பாடத்திட்டத்தை
வடிவமைக்கப் போகும் குழுவின் உறுப்பினர்.
இன்னொருவர் கொல்கத்தாவை சேர்ந்த சஞ்சீவ் சன்யால்.
ஒம்போது வருஷமா கேடி ஜி 50 வருஷம் முன்னாடி செத்துப் போன நேருவை திட்டி தீர்ப்பதற்கு பாயிண்ட் எடுத்துக் கொடுக்கும் பிரதமரின் part time பொருளாதார ஆலோசகர்
இவரது முழு வேலை மகாபாரத ஆராய்ச்சி
இது ரெண்டும் சொல்லிக் கொள்வது என்னமோ கல்வியாளர்கள் தான்.
ஆனால் யாருக்கான கல்வி என்பது தான் பிரச்சினையே
மூன்றாவதாக சங்கர் மகாதேவனும் ஒரு உறுப்பினர்.
பாட்டு பாடறவனுக்கும் பாடத்திட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?
சிபிஎஸ்சி கர்நாடக மியூசிக் கற்றுக் கொடுக்கப் போகுதா?
விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த 22 பேரில் செங்கல்பட்டில் மட்டும் 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் நடந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கள நிலவரங்களை ஆய்வு செய்து நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
தும்மினாலே துள்ளிக்குதிக்கும் பாஜக இந்த விஷயத்தில் அடக்கியே வாசித்தது. அதற்குக் காரணம் இப்போதுதான் புரிகிறது.
செங்கல்பட்டில் 8 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்தது பாஜகவைச் சேர்ந்த விஜயகுமார் என்பதும், அவர் அண்ணாமலைக்கு நெருக்கமான நண்பர் என்பதும் இப்போது தெரியவந்துள்ளது.
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணியின் செயலாளர் விஜயகுமார்.
எங்கடா மகா கேவலமாகப் போய் விட்டதே என்று சுதாரித்த பாஜக மாவட்டத் தலைவர் மோகன்ராஜா, அவசர அவசரமாக விஜயகுமாரை கட்சியை விட்டு நீக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையின் தேதியை மட்டும் கையில் எழுதி
இவ்வளவு நாள் பழகிய காங்கிரசாரே என்னை சங்கி என்றனர்.
காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்ய, தமிழ்நாட்டிலேயே உதாரணம்
சின்னப் பண்ணை கார்த்தி
இந்தியாவிலேயே காங்கிரஸ் வெற்றியை பார்த்து காண்டான ஒரு காங்கிரஸ்காரன் இருக்கான்னா அது இவன் தான்.
"இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த அகில இந்திய தலைமையும் குறிப்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும்
மூத்த தலைவர்கள் அனைவருக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அத்தனை காங்கிரஸ் கட்சியினுடைய ஊழியர்கள், தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்."
ராகுல் பெயரை எப்படி சூசகமா avoid பண்ணான் பாருங்க. இவனை தூக்காம தமிழ்நாடு காங்கிரஸ் உருப்படாது..