#எரிந்தபேருந்து_கருகியமாணவிகள்_எரித்தவர்கள்விடுதலை
அதுவும் ஒரு பிப்ரவரி மாதம் தான்.
கல்வி சுற்றுலா சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தது கோவை வேளாண்மை கல்லூரியைச் சேர்ந்த பேருந்து. 47 மாணவிகள் சில ப்ரொபசர்கள் உள்ளே இருந்தனர். மாணவர்களுக்கான பேருந்து பின்னால் வந்து கொண்டிருந்தது
1991- 96 ல் ராஜீவ் படுகொலை அனுதாபத்தால் முதல்வரான ஜெயலலிதா கொடைக்கானலில் விதிகளை மீறி ஏழு மாடி கட்டிடம் கட்ட பிளஸெண்ட் ஸ்டே ஓட்டலுக்கு அனுமதி வழங்கி, ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ராதாகிருஷ்ணன் பிப்ரவரி2, 2000 அன்று ஜெயலலிதா குற்றவாளி என்பதால் சிறை செல்ல உத்தரவிட்டார்
தீர்ப்புக்கு துளியும் சம்பந்தமில்லாத, வேளாண் கல்லூரி மாணவர்கள் பையூரில் இருந்து கிளம்பி தர்மபுரி நால் ரோட்டில் இறங்கி உணவு உண்டனர். ஸ்மார்ட் போன் 1.5 ஜிபி டேட்டா இல்லாத காலம். மஃப்டியில் வந்த போலீஸ்காரர்:
ஜெயலலிதாவை அரஸ்ட் பண்ணிட்டாங்க. பார்த்து கவனமா போங்க’என்றார்
தகவல் புராபஷற்களுக்கு செல்கிறது. அவர்கள் பக்கத்துக் கடையில் இருந்து தொலைபேசி மூலம் கோவை கல்லூரியை தொடர்பு கொள்கிறார்கள்.
பாதுகாப்பா பஸ்ஸை ஒரு ஓரமா நிறுத்தும்படி காலேஜ் நிர்வாக உத்தரவு வருகிறது.
அந்த சமயத்தில் கடைகளை எல்லாம் கல்லால் அடிச்சுகிட்டே ஒரு கூட்டம் ஓடி வந்தது.
பேருந்து ஓட்டுநர் கந்தசாமியின் நேரடி வாக்குமூலம் :
பஸ் நின்னுக்கிட்டு இருந்த ஓட்டலுக்கு பக்கத்தில் இருந்த கடைக்காரர்கள் சீக்கிரம் வண்டியை எடுப்பா. உங்களால எங்களுக்கு ஆபத்து வரப்போவுது ன்னு அவசரப்படுத்தினாங்க. என்ன செய்வதுன்னு யோசித்துகிட்டு இருக்கும்போது ஒரு டிராபிக் கான்ஸ்டபிள்
வண்டியில பொட்டபுள்ளைங்களா இருக்கு. சீக்கிரம் எடுங்க” என்றார். பாதுகாப்பா எங்கே நிறுத்துறதுன்னு அவர்கிட்டேயே கேட்டேன். ’1 கிலோமீட்டர் போனா எஸ் பி ஆபீஸ் வரும், அதற்குப் பக்கத்திலே நிறுத்திக்க, பாதுகாப்பா இருக்கும்’னு சொன்னாரு.
நான் வண்டியை மெதுவா உருட்டிக்கிட்டே வந்தேன். அங்கங்கே
கல்வீசிகிட்டிருந்ததால் ரைட் சைடில் இருந்த ஜன்னல்களை எல்லாம் மூடச் சொல்லிட்டேன். எங்க பஸ்ஸுக்கு பின்னாலேயே 100 அடி இடைவெளியில பையனுங்க பஸ் வந்துகிட்டிருந்தது. பாரதிபுரம்கிற இடத்துகிட்டே போனபோது எங்க பஸ்ஸுக்கு முன்னாடி ஒரு அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது. காருக்குப் பின்னால்
பஸ்ஸை நிறுத்தினேன். அம்பாசிடர் காரில் குழந்தைகளுடன் ஒரு ஃபேமிலி இருந்தது. குழந்தைகளை பார்த்து பஸ்ஸிலிருந்த பிள்ளைகள் சந்தோஷமா கையை ஆட்டி டாட்டா சொல்லிக்கிட்டிருந்துச்சு. நான் பஸ்ஸிலேயே உட்கார்ந்திருந்தேன்.
திடீர்னு எங்கிருந்துதான் அந்த ஆளுங்க வந்தாங்கன்னு தெரியலை. பஸ்ஸின் லெஃப்ட்
சைடில் ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. ஸ்கூட்டரில் ஒருத்தன் உட்கார்ந்திருந்தான். அவனை பார்த்துக்கிட்டே இருக்கும்போது திடீர்னு பஸ்ஸில் பெட்ரோல் வாசனை அடிக்க ஆரம்பித்தது. நான் பயந்துபோய் உடனே இறங்கி பார்த்தபோது ஒருவன் ஸ்கூட்டரிலும் அவன் பக்கத்தில் இரண்டு பேரும் நின்னுகிட்டிருந்தாங்க.
ஒருத்தன் சட்டையின் பின் பக்கத்திலிருந்து ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலை எடுத்தான். அதில் பெட்ரோல் இருந்தது.
பஸ்ஸின் லெஃப்ட் சைடு ஜன்னல்கள் மூடாமல் இருந்ததால் அதன் வழியாக பெட்ரோலை ஊற்றத் தொடங்கினான். புரபஸர்கள் அவனிடம் ”பொம்பளப் புள்ளைகளா இருக்கு... எதுவும் பண்ணிடாதீங்க. நாங்க
புள்ளைங்களெல்லாம் சூட்கேஸை பரபரப்போடு எடுக்க ஆரம்பிச்சுடுச்சு. (விபத்து நடந்தாலும் பொருட்களை காப்பாற்றிக்கொண்டு உயிர் பிழைக்க நினைப்பது தானே மனித இயல்பு) நானும் புரபஸர்களும் புள்ளைகளை இழுத்து இழுத்து வெளியே போட்டோம். பின்னால் வந்த பஸ்ஸிலிருந்து பையனுங்க பதட்டத்தோடு ஓடி வந்தாங்க.
அதற்குள்ளே எங்க பஸ் முழுக்க புகையாயிடுச்சு... ஒன்னும் தெரியலை. பையனுங்களும் முடிந்த அளவு காப்பாற்றினாங்க. பஸ்ஸின் பின்பக்க கண்ணாடியை உடைச்சு, பிள்ளைகளை இறக்கிவிட்டாங்க.
ஒரு பையன் எங்கிருந்தோ ஒரு கடப்பாரையை கொண்டு வந்து கொடுத்தான். பின்பக்க கதவை இடித்துத் திறந்தோம். அதற்குள் பஸ்
முழுக்க தீ பரவிடுச்சு. நெருங்க முடியாமல் விலகி வந்துட்டோம்.
பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்டவர்களை எண்ணிப் பார்த்தபோது 42 பேர் தான் இருந்தாங்க. ’மொத்தம் 47 பேராச்சே. மீதி 5 பேர் எங்கே?’ன்னு பதறினோம். இரண்டு பிள்ளைங்க ஓரமா நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. மீதி 3 பேரை காணலை.
மக்கள் தீயை அணைக்க தண்ணீரை கொண்டு வந்து போராடுகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் அனைவரின் கண் முன்பும் சென்னையை சேர்ந்த ஹேமலதா, விருத்தாசலத்தை சேர்ந்த காயத்ரி,
நாமக்கல் கோகிலவாணி
பேருந்து தீயில் இரையாகினர்.
இந்த சம்பவத்தில் அதிமுக.வினர் 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்து வந்த அந்த வழக்கில், ‘சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள்.
வேறு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்ற வேண்டும்'
என இறந்துபோன கோகிலவாணியின்
அப்பா வீராசாமி
உயர் நீதிமன்றத்தில்
மனு
செய்தார். 2003- ம் ஆண்டு
வழக்கு சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில்
அதிமுகவைச் சேர்ந்த
முனியப்பன்,
நெடுஞ்செழியன்,
ரவீந்திரன்
ஆகிய
3 பேருக்கு மரண தண்டனை
விதித்து கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பரில் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.
இது தவிர சம்பவத்தில் தொடர்புடைய
மேலும் 25 பேருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இந்த வழக்கின் மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு
வந்தபோது தண்டனைகள் உறுதி செய்யப்பட்டன.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள், ஜிஎஸ் சிங்வி, பி.எஸ். சௌகான் ஆகியோர் விசாரித்தனர்.
சமூகத்துக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான,
ஏற்றுக்கொள்ள முடியாத
செயல் எனக் கூறிய நீதிபதிகள், கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை,
கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி உறுதி செய்தனர். இதையடுத்து,
குற்றவாளிகள் மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர்.
இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு
செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மூவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மறு ஆய்வு மனு கடந்த 2011- ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது,
இந்த மனுவை விசாரித்த
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சுதர்ஷன் ரெட்டி மற்றும் எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் கொண்ட அமர்வு,
மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை 2016 ஆம் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குற்றவாளிகள்
நெடுஞ்செழியன், முனியப்பன், ரவீந்திரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை
ஆயுள் தண்டனையை குறைத்ததோடு, உணர்ச்சிவசப்பட்டு
செய்யப்பட்ட தவறு
என்பதால் தண்டனை குறைக்கப்பட்டதாகவும்,
கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பேருந்து எரிக்கப்படவில்லை என்றனர்.
2018 நவம்பர் 19அன்று தமிழக ஆளுநரின் பரிந்துரைப்படி அந்த மூவரும் எடப்பாடி அரசால் எம் ஜிஆர் நூற்றாண்டு ஒட்டி நன்னடத்தை விதிப்படி விடுதலை செய்யப்பட்டனர்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஆசிட்வீச்சு_அறிமுகம்
19 மே 1992, சூரியன் தரையில் இறங்கி நடப்பதைப் போன்றதொரு நாள். சென்னை எக்மோர் சிக்னலில் காரின் பின்சீட்டில் அமர்ந்திருந்தார், அந்த அரசு அதிகாரி. முதல்வரால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட அவர் பதவியேற்கச் செல்கிறார். அவருக்கும் முதல்வருக்கும் ஏற்பட்ட தகராறில்,
இந்தப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என கிசுகிசுக்கப்பட்டது. காற்றோட்டத்திற்காகத் திறந்திருந்த காரின் சன்னல் கண்ணாடி வழியே விளம்பர நோட்டீஸ் கொடுத்து கொண்டு இருந்தான் ஒரு இளைஞன்
திடீரென அதிகாரி அருகில் வந்த அந்த இளைஞன் எதையோ எடுத்து அதிகாரியின் முகத்தில் எறிந்தான்.
அவர் தனக்கு என்ன நேர்கிறது என உணர்வதற்குள் அது நடந்தேறிவிட்டது. அந்த உயிர் அடைந்த வேதனையை வெறும் எழுத்துகளால் சொல்ல முடியாது. கார் டிரைவர் அந்த இளைஞனை விரட்டி ஓட, தானே ஆட்டோ பிடித்து மருத்துவமனையில் சேர்ந்தார் அந்த அரசு அதிகாரி ‘சந்திரலேகா’. தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்
#ஆனந்த்குமார்சித்தன் பதிவு
எளியதாய் சில விஷயங்கள் கிடைக்கப்பெறும் பொழுது
அரியதாய் அவை கிடைத்துக்கொண்டிருந்த எட்ட முடியாத நிலையில் இருந்த காலத்தை மக்கள் மறந்து விடுகிறார்கள்
அல்லது உண்மைத்தன்மையை தீவிரத்தன்மையை நீர்த்துப் போகச் செய்ய சில முடவாதிகள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்
சிறுவனாய் இருந்த காலத்தில் டிவி என்பது அரியதாய் வீதியில் ஒரே ஒருவர் வீட்டில் இருந்து அதை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டு எப்போதாவது உள்ளே விடுவார்களா என்று பார்த்துக்கொண்டு ஏங்கி இருந்த காலங்களை கடந்து வந்திருக்கிறேன் என்னைப்போல இங்கே பலர் 35 கடந்தவர்கள் உணர்ந்து இருப்பார்கள்..
பல நேரங்களில் எங்களை போன்ற பொடியர்கள் கூட்டம் சேர்ந்து விட்டால் டிவியை ஆப் செய்து விடுவார்கள்
ஆண்டனா மூலம் வரும் தூர்தர்சன் சானல் அதில் முதலில் தமிழ் கிடையாது..இந்தி மட்டுமே..
அதையும் அர்த்தம் புரியாமல் பார்ப்போம்..
சித்தரஹார், சித்ரமாலாவில் தமிழ் வருமா என்று எட்டிப்பார்ப்போம்
#சின்னங்களின்_வரலாறு #உதயசூரியன்
தந்தை பெரியாருடன் ஏற்பட்ட கருத்துமோதல்களைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா தலைமையில் 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. திமுக தொடங்கி 4 ஆண்டுகளுக்குப் பிறகு 1953ஆம் ஆண்டு கலைஞரால் திமுகவில் இணைக்கப்பட்டவர்
எம்ஜிஆர். கலை, இலக்கியம் வழியாக இயக்கம் தமிழகம் முழுவதும் இளைஞர்களிடம் வேகமாக செல்வாக்குப் பெற்றது. 1951 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வளரும் நிலையில் இருந்த திமுக அந்தத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்தது.
அதே சமயம் தனது தேர்தல் நிலைப்பாடை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதுவே திமுகவின் முதல் தேர்தல் அறிக்கை என கருதப்படுகிறது. இந்தியாவிலேயே அதுதான் முதல் தேர்தல் அறிக்கை என்று கூறப்படுகிறது. அந்த அறிக்கையில், “திராவிடர்களின் கருத்தை அறியாமலும்,
கம்யூனிஸ்ட் தோழர் பி. ராமமூர்த்தி "அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறிவிட்டது" என்றார் பாராளுமன்றத்தில்
அப்போதைய நிதியமைச்சர் :
"விலை ஏறிய பொருட்களை உங்களை யாரு வாங்க சொன்னது" என்றார்
நிம்மி மாமி பதில் போல தோணுதா?
அவர் மாமி இல்ல மாமா R.வெங்கட்ராமன்
டெல்லியிலும் தமிழ்நாட்டிலும் ராசகோபாலு செல்வாக்கை ஒடுக்கி அவரை செல்லாக்காசு ஆக்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தார் காமராஜர்.
ராஜகோபாலின் இடத்தை நிரப்பு பார்ப்பன லாபி அனுப்பி வைத்த மற்றொரு ஜாதி வெறியன் தான் #ராமசாமி_வெங்கட்ராமன் என்ற
சென்னை மாகாணத்தின் கடைசி பார்ப்பன அமைச்சர்
சென்னை மாகாணத்தை பெயர் மாற்ற அண்ணா தீர்மானம் கொண்டு வந்த போதெல்லாம் கடுமையாக எதிர்த்த தமிழின துரோகி. தமிழ்நாடு என்ற பெயர் வட இந்தியாவில் யாருக்கும் வாயில் வராது சென்னை என்ற பெயர் உலகம் முழுவதும் அறிந்ததே என இன்றைய ஆட்டுத்தாடி குரலாக ஒலித்து. தமிழ்நாடு தீர்மானத்தை தோற்கடித்தவர்
#தமிழ்நாட்டு_நூலிபான்கள் 3
மதுரை வந்த காந்திஜியால கவரப்பட்டு காங்கிரஸ் கட்சியில் சேர இரண்டு ஆண்டுகளாக முயற்சித்த காமாட்சி என்ற இளைஞன்
1922 ல் சாத்தூர் தாலுகாவில் பெரியார் தலைமையில் மெட்ராஸ் பிரசிடென்சி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டதில் ஒரு வழியாக சேர்த்துக் கொள்ளப்பட்டார்
பிற்காலத்தில் காமராஜ் என மரியாதையாக இந்தியா முழுவதும் அந்த இளைஞன் அறியப்பட போகிறான் என்பதை பெரியாரே அப்போது அறிந்திருக்கவில்லை. பிராமணர்கள் கோலோச்சி கொண்டிருந்த காங்கிரசில் நம்ம பையன் ஒருவன் இருக்கட்டும் என்று உறுப்பினர் படிவத்தில் கையெழுத்து போட்டு கொடுத்திருந்தார்
சேரன்மாதேவியில் வா.வே.சு ஐயர் நடத்திய குரு குலத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டதால் பெரியார் காங்கிரஸ் காசை செலவுக்கு தர முடியாது என்றார். ராஜகோபாலு கட்டப் பஞ்சாயத்து செய்ததால் ஒரு கட்டத்தில் பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறினார்.
காமராஜி, சத்தியமூர்த்தி குரூப்பில் இணைந்தார்
#தமிழ்நாட்டு_நூலிபான்கள் 2
காந்தியடிகள் உயிரைக் குடித்த இந்துத்துவ வெறிக்கும்பல்தான் காமராஜரையும் டெல்லியில் உயிரோடு தீ வைத்து எரித்து படுகொலை செய்ய முயன்றது .
தமிழ்நாட்டு நூலிபான்கள் உண்டு வரலாற்றை மறைத்து விட்டது கூட பரவாயில்லை நாடார் சமூகம் மறந்தது எப்படி?
1966-ம் ஆண்டு... இந்தியாவில் பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சாமியார்கள் கோஷ்டி தீவிரமாக வலியுறுத்திய தருணம்.இதற்காக டெல்லியில் பல்லாயிரக்கணக்கான சாமியார்கள் ஆதரவுடன் பூரி சங்கராச்சாரியார் உண்ணாவிரதம் என அறிவிக்கப்பட்டது.
நாடு கொந்தளித்துக் கொண்டிருந்தது..
அப்போது, பசுவதை தடை சட்டத்தை முன்வைத்து ஜனசங்கம்/ ஆர்.எஸ்.எஸ். இயக்கங்கள் மத அரசியல் செய்வதை வன்மையாக கண்டித்து பேசிக் கொண்டிருந்தார் காமராஜர். அதில் உச்சமாக " நம்மை காட்டுமிராண்டி காலத்துக்கு இழுத்துட்டுப் போறாங்க என காங்கிரஸ் காரியக் கமிட்டியில் பகிரங்கமாகவே பேசினார் காமராஜர்.