2013 ஆண்டு விஸ்வரூபம் திரைப்படம் வெளியாகும் பொழுது வந்த சிக்கலை மீண்டும் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கமலஹாசன் பேசியிருக்கிறார். அதனால் நாமும் இந்நேரத்தில் அப்பொழுது நடந்தவைகளை மக்களுக்கு நியாபகப்படுத்த வேண்டியிருக்கிறது.
இஸ்லாமியர்களுக்கு எதிராக படமிருக்கிறது என்கிற ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை ஏற்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அப்படம் வெளியிடுவதற்கு 15 நாள் தடை அறிவித்தபொழுது அதை வீரமணி, கருணாநிதி, ராமதாஸ், திருமா, அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ், மார்கிஸ்ட், பாஜக தலைவர்கள் எதிர்த்தனர்.
இப்பொழுது நாங்களே சிறுபான்மை காவலர்கள் என்பவர்கள் அம்மக்களின் கோரிக்கைக்கு அன்று எதிராக தான் இருந்தனர். அண்ணன் சீமான் மட்டுமே இஸ்லாமியர்களோடு கமல் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி எம்மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய பின்தான் படத்தை வெளியிடவேண்டும் என கூறி கடைசிவரை துணைநின்றார்.
அப்பொழுது வந்த ஒரு தொலைக்காட்சி பேட்டியில் “இதுபோன்று படம் எடுப்பவர்கள் உள் நோக்கத்தோடுதான் படம் எடுக்கின்றனர், திரைப்படங்களில் தீவிரவாதிகள் முழுவதும் முஸ்லிம்களாக இருப்பார்கள். காபரே டான்ஸ் ஆடுபவர்களெல்லாம் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள்.
இவ்வாறு தொடர்ச்சியாகப் படங்களில் காட்டுவதன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட செயல் உள்ளதோ என்று சந்தேகப்படத்தான் வேண்டியுள்ளது. விஸ்வரூபத்தின் மீதான தடை நிச்சயம் சரியானதே!” என அண்ணன் சீமான் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று சத்தியத்தை பேசினார்.
விஸ்வரூபம் பட பிரச்சனையில் இஸ்லாமியர்களின் மனதை காயப்படுத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு எதிராக நின்றவர்கள் இன்று மீண்டும் ஒன்று கூடியிருக்கிறார்கள். அண்ணன் சீமான் அன்றும் தனித்து நின்று இஸ்லாமியர்கள் பக்கம் நின்றார் இன்றளவும் அனைத்து பிரச்சனைகளிலும் நிற்கிறார்.
ஈரோடு வாழ் இஸ்லாமிய சொந்தங்கள் இவைகளை சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நேரமிது.
உங்கள் வாக்கு...
கமலோடு நின்று உங்களை எதிர்த்தவர்களுக்கா? உங்களோடு நின்ற சீமானுக்கா?