#மனைவியை_மீட்டுத்_தாங்க
2017 ல் அந்த செய்தி அதிகம் பிரபலமாகாத அந்த பத்திரிக்கையில் வந்த போது, வழக்கம் போல் டெல்லி மோடி மீடியா, கவைக்கு உதவாத விசயங்களை சர்ச்சை செய்து கொண்டிருந்தது.
மஃபட்லால் படேல் என்பவர் L.K. அத்வானிக்கு தன் மனைவியை மீட்டு தர கோரி 1995ல் எழுதிய கடிதம் பற்றியது
#ஆனந்திபென்,
நரேந்திர தாஸ் 2014 ல் பிரதமர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்த போது, வெடித்த பல சர்ச்சைகள், விலைக்கு வாங்கப் பட்ட ஊடகங்களால் மூடி மறைக்கப்பட்டன. அத்தனை சர்ச்சைகளிலும் பெண்கள் சம்பந்த பட்டிருந்தார்கள். முந்தைய கடிதம் எழுதிய மஃபட்லாலின் மனைவி தான் ஆனந்தி பென்
#பேரழிவின்_தொடக்கம்
ஆனந்தி பென், நரேந்திர தாஸ் படித்த அதே பள்ளியில் படித்தவர். கணவன் கல்லூரியிலும், மனைவி பள்ளியிலும் ஆசிரியராக பணியாற்றிய சமயம், 1987 ல் நர்மதா நதியில் தவறி விழுந்த சிறுவனை மீட்டதால் மீடியா வெளிச்சம் பட, கட்சியில் சேருகிறாயா எனக் கேட்டார் நரேந்திர தாஸ்
#அரசியலில்_ஏறுமுகம்
1992 ல் பாபர் மசூதி இடிப்பைக் கொண்டாட குஜராத் வந்த முரளி மனோகர் ஜோசியிடம், ஆனந்தியை அறிமுகம் செய்ய, அதற்கு பின் இருவர் வாழ்க்கையே மாறிற்று. தாஸ் குஜராத் பிஜேபி தலைவராக,. உடனே ஆனந்தியை மகளிர் அணி தலைவி ஆக்கினார். மஃபத்லால் தன் மனைவியை விட்டு பிரிந்தார்
#குலைந்த_குடும்பம்
1985 ல் இரு குழந்தைகளுடன் கணவனை விட்டு பிரிந்த ஆனந்தி பின் சேரவே இல்லை.
என் மனைவி என்னுடன் பேசுவது கூட இல்லை, தாசின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறாள். நீங்கள் மீட்டு தரவில்லை என்றால், சாவதை தவிர எனக்கு வேறு வழியில்லை என்று அத்வானியி் டம் மன்றாடினார் மஃபத்
#குஜராத்_இரும்புபெண்மணி
கடிதம் கண்டுக்கப் படாமல் போக, ஆனந்தி ராஜ்ய சபா MP ஆனார். தொடர்ந்து சட்டமன்றத்திற்கும் தேர்வாகி கல்வித்துறை மந்திரி ஆனார். குஜராத் வன்முறையை தொடர்ந்து நரேந்திர தாசை, வாஜ்பாயி கண்டிக்க, பிஜேபியில் நரேந்திர தாஸ் விலக்கி வைக்கப்பட்ட போது ஆனந்தி தான் ஒரே ஆதரவு
#யசோதாபென்_உடன்_மோதல்
போஸ் பாண்டி தயவில் அதிகாரத்தின் அனைத்து உச்சங்களையும் தொட்டுக் கொண்டிருந்த போது, 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு போஸ் பாண்டி வேறு வழியின்றி தனக்கு மனைவி இருப்பதை தெரிவிக்க. ஊடகங்களில் பற்றி எரிந்தது.யசோதா போஸ் பாண்டி மனைவியே இல்லை என மறுத்தார் ஆனந்தி
#யசோதாபென்_விடியோ
அது சிறுவயதில் நடந்த பொம்மை கல்யாணம். என்னை மறுமணம் செய்து கொள்ள போஸ் பாண்டி வலியுறுத்தினர். நான் தான் மறுத்து விட்டேன் என்றென்றும் அவர்தான் எனக்கு ராமர். 1987க்கு பிறகு அவரை நான் கண்ணால கூட காணவில்லை என யசோதா பேசியதா வீடியோ வெளியிட்டு சர்ச்சை மறக்கடிக்கப்பட்டது
#கண்ணிராசி_கறைபடாதகரம்
போஸ் பாண்டி வாழ்க்கையில் தாக்கம் செலுத்திய மேலும் சில அபலைகள் அடுத்தடுத்து வருவார்கள். இங்கு உள்ள தகவல்கள் சங்கிகளின் இணைய தளங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. போஸ் பாண்டி ஆனந்தி இடையே நீங்களாக ஏதாவது கற்பனை செய்து கொண்டால் சங்கம் பொறுப்பாகாது
திரு செந்தில் வேல் அவர்கள் வேண்டுகோளின் படி நரேந்திர தாஸ் அல்லது தாமோதர தாஸ்
சுருக்கமாக தாஸ் என்பதை பயன்படுத்தி உள்ளேன்..
சற்று குழப்பம் உண்டானாலும்
போகப் போக பழகிவிடும்
தாஸ் என்பது சாதிப்பெயர் இல்லையே..?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#குஜராத்தின்_அபலைகள்
குஜராத்தின் பாலைகளிலும், கட்ச் சதுப்பு நிலங்களிலும் காட்டன் டெக்ஸ்டைல்ஸ் சிட்டிகளிலும் வெகு காலமாக அந்தத் தகவல் மக்களிடையே பகிரப்பட்டு வந்தது. கிசுகிசுப்பாக அல்ல வெளிப்படையாகவே.
மன்னருக்கு மனைவி இருக்கிறார். மஹ்செனா மாவட்டத்தில் பள்ளி ஆசிரியராக
என்பதே அது
#தர்சன்_தேசாய்
1992 ம் ஆண்டு அபியான் என்ற பத்திரிக்கை அவரை பேட்டி எடுக்க சென்றது. மகுடம் சூட்டப்படாத ராணி மறுத்துவிட்டார்.
2002ல் தர்ஷன் தேசாய் என்ற அகமதாபாத் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் அவர் இருந்த கிராமத்தையும் பள்ளியையும் கண்டறிந்தே விட்டார். ராணியை தொடர்பு கொள்ள முயன்றார்
#மேலிட_உத்தரவு
தொடர்பு கொண்டு பேச முயன்ற போது உள்ளூர் குண்டர்கள் தொடங்கி வட்டம் மாவட்டம் என மிரட்டல்கள் நீண்டன.
இறுதியில் மேலிடத்தில் இருந்தே தொலைபேசி அழைப்பு வந்தது.
"உனக்கு என்னதான் பிரச்சனை தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதே". பிறகு ராணி எங்கே இருக்கிறார் என யாருக்கும் தெரியாது
ராகுல் பேட்டியின் உக்கிரம் தாங்காமல் பிஜேபி வழக்கமான பொய் பிரச்சாரத்தை முடுக்கி விடுகிறது.
ராகுல் குற்றம் சாட்டிய ஒரு மோடி ஜெயின், மற்றொருவர் மார்வாரி.
ஆனால் மோடி என்ற பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு எதிரா ராகுல் பேசிவிட்டார் என்று வட இந்தியாவில் ஜாதி பிரிவினையை தூண்டி விடுகிறது
போலி செய்திகளின் உற்பத்தி ஸ்தலமான பிஜேபி ஐடி விங்கின் தேசிய செயலாளர் கோயபள்ஸ் அமித் மால்வியா வழக்கம் போல் ராகுலின் பேட்டியை திரித்து obc எதிரா பேசி விட்டார் என வெளியிட பிஜேபி டூல் கிட்டுக்கள் அதனை காப்பி பேஸ்ட் செய்து பரப்பிக் கொண்டிருக்கின்றன
அகிலேஷ் யாதவ் போன்ற வட இந்திய ஓ பி சி தலைவர்கள் பிஜேபியின் இந்த சூழ்ச்சியை புரிந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். போலிக் பிரச்சாரம் அனைத்து விதமான எல்லையையும் தாண்டிக் கொண்டிருக்கிறது
#ஆடு_புலி_ஆட்டம்
ஜெயலலிதா செய்த அட்டூழியங்களை அயன் லேடித்தனம் என நம்ப 2k கிட்ஸ் வைக்கப்பட்டிருக்கின்றனர்
கேட்டா கலைஞரே கை வைக்க முடியாத சங்கராச்சாரிய உள்ள தூக்கி வச்சு சுளுக்கு எடுத்துவிட்டார் என ரைட் அப் எழுதுவார்கள். தன்மீது கூட நம்பிக்கை இல்லாத தற்குறிக்கு தைரிய லட்சுமி பட்டம்
சங்கராச்சாரிக்கு தண்ணி காட்டிய அயன் லேடி அந்த ஆளு சிஷ்யன் சுப்பிரமணியசாமி கிட்ட சரண்டர் ஆன கதை தான் இந்த ஆடு புலி ஆட்டம். நம்மாத்து பொண்ணு என மகிழ்ந்திருந்த ஜெ சசி கண்ட்ரோலில் சென்றுவிட, திகைத்துப் போன அவா ஜெயாவுக்கு கவுண்டர் கொடுக்க
90களில் சுப்பிரமணிய சாமியை ஊழல் எதிர்ப்பாளர்
என 3% மீடியா மூலம் ஆட்டுக்குட்டித்தனமாக பில்டப் கொடுத்து விட்டிருந்தது.
சுனா சாமி - மன்னார்குடி - ஜெயா கூட்டணி 1990 இல் திமுக ஆட்சியை கலைத்திருந்தது.
சிஎம் ஆனவுடன் ஜெயா, சசி கும்பலுடன் ஐக்கியமாக, ஜெயாவ மீண்டும் கண்ட்ரோலில் கொண்டுவர சூனா சாமி டான்சி வழக்கில் மூக்கை நுழைத்தார்.
27 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது:
சர்க்காரியா கமிஷனிடம் இப்படி சொன்னாரா கலைஞர்?
2016, ஏப்ரல் 6, Mohan Raj என்பவர் முகநூலில் வெளியிட்டார். இதனை ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்து இருந்தனர், பின்னர் ட்விட்டரில் @ArasiAkila
2022 ல் பகிர்ந்தார்
கலைஞர் பற்றி விசாரணை செய்து, வெளியிட்ட அறிக்கையில் எந்த இடத்திலுமே விஞ்ஞான ஊழல் என்ற வார்த்தையை குறிப்பிடவே இல்லை. தப்பு நடந்திருக்கிறது, ஆனால், அதற்குரிய ஆதாரங்கள் எதுவும் நம்பகமான வகையில் இல்லை என்றுதான், கூறியுள்ளது.
இதுதவிர, சர்க்காரியா கமிஷன் முதலில், இந்திய அரசுக்கும்,
மாநில அரசுகளுக்கும் இடையே உள்ள உறவை மேம்படுத்தும் வகையில், பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஏற்படுத்தப்பட்டதாகும். எமர்ஜென்சி காலத்தில், வேறு வழியின்றி ,அரசியல் ஆதாயங்களுக்காக, எம்ஜிஆர் அளித்த புகாரின்பேரில், இந்திரா காந்தி, கலைஞர் அரசின் ஊழல் பற்றி விசாரணை நடத்தும்படி சர்க்காரியா
#எரிந்தபேருந்து_கருகியமாணவிகள்_எரித்தவர்கள்விடுதலை
அதுவும் ஒரு பிப்ரவரி மாதம் தான்.
கல்வி சுற்றுலா சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தது கோவை வேளாண்மை கல்லூரியைச் சேர்ந்த பேருந்து. 47 மாணவிகள் சில ப்ரொபசர்கள் உள்ளே இருந்தனர். மாணவர்களுக்கான பேருந்து பின்னால் வந்து கொண்டிருந்தது
1991- 96 ல் ராஜீவ் படுகொலை அனுதாபத்தால் முதல்வரான ஜெயலலிதா கொடைக்கானலில் விதிகளை மீறி ஏழு மாடி கட்டிடம் கட்ட பிளஸெண்ட் ஸ்டே ஓட்டலுக்கு அனுமதி வழங்கி, ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ராதாகிருஷ்ணன் பிப்ரவரி2, 2000 அன்று ஜெயலலிதா குற்றவாளி என்பதால் சிறை செல்ல உத்தரவிட்டார்
தீர்ப்புக்கு துளியும் சம்பந்தமில்லாத, வேளாண் கல்லூரி மாணவர்கள் பையூரில் இருந்து கிளம்பி தர்மபுரி நால் ரோட்டில் இறங்கி உணவு உண்டனர். ஸ்மார்ட் போன் 1.5 ஜிபி டேட்டா இல்லாத காலம். மஃப்டியில் வந்த போலீஸ்காரர்:
ஜெயலலிதாவை அரஸ்ட் பண்ணிட்டாங்க. பார்த்து கவனமா போங்க’என்றார்
#ஆசிட்வீச்சு_அறிமுகம்
19 மே 1992, சூரியன் தரையில் இறங்கி நடப்பதைப் போன்றதொரு நாள். சென்னை எக்மோர் சிக்னலில் காரின் பின்சீட்டில் அமர்ந்திருந்தார், அந்த அரசு அதிகாரி. முதல்வரால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட அவர் பதவியேற்கச் செல்கிறார். அவருக்கும் முதல்வருக்கும் ஏற்பட்ட தகராறில்,
இந்தப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என கிசுகிசுக்கப்பட்டது. காற்றோட்டத்திற்காகத் திறந்திருந்த காரின் சன்னல் கண்ணாடி வழியே விளம்பர நோட்டீஸ் கொடுத்து கொண்டு இருந்தான் ஒரு இளைஞன்
திடீரென அதிகாரி அருகில் வந்த அந்த இளைஞன் எதையோ எடுத்து அதிகாரியின் முகத்தில் எறிந்தான்.
அவர் தனக்கு என்ன நேர்கிறது என உணர்வதற்குள் அது நடந்தேறிவிட்டது. அந்த உயிர் அடைந்த வேதனையை வெறும் எழுத்துகளால் சொல்ல முடியாது. கார் டிரைவர் அந்த இளைஞனை விரட்டி ஓட, தானே ஆட்டோ பிடித்து மருத்துவமனையில் சேர்ந்தார் அந்த அரசு அதிகாரி ‘சந்திரலேகா’. தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்