#குஜராத்தின்_அபலைகள்
குஜராத்தின் பாலைகளிலும், கட்ச் சதுப்பு நிலங்களிலும் காட்டன் டெக்ஸ்டைல்ஸ் சிட்டிகளிலும் வெகு காலமாக அந்தத் தகவல் மக்களிடையே பகிரப்பட்டு வந்தது. கிசுகிசுப்பாக அல்ல வெளிப்படையாகவே.
மன்னருக்கு மனைவி இருக்கிறார். மஹ்செனா மாவட்டத்தில் பள்ளி ஆசிரியராக
என்பதே அது
#தர்சன்_தேசாய்
1992 ம் ஆண்டு அபியான் என்ற பத்திரிக்கை அவரை பேட்டி எடுக்க சென்றது. மகுடம் சூட்டப்படாத ராணி மறுத்துவிட்டார்.
2002ல் தர்ஷன் தேசாய் என்ற அகமதாபாத் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் அவர் இருந்த கிராமத்தையும் பள்ளியையும் கண்டறிந்தே விட்டார். ராணியை தொடர்பு கொள்ள முயன்றார்
#மேலிட_உத்தரவு
தொடர்பு கொண்டு பேச முயன்ற போது உள்ளூர் குண்டர்கள் தொடங்கி வட்டம் மாவட்டம் என மிரட்டல்கள் நீண்டன.
இறுதியில் மேலிடத்தில் இருந்தே தொலைபேசி அழைப்பு வந்தது.
"உனக்கு என்னதான் பிரச்சனை தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதே". பிறகு ராணி எங்கே இருக்கிறார் என யாருக்கும் தெரியாது
#ஹைமாதேஷ்பாண்டே, பம்பாய் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர்
2009 குஜராத் சட்டமன்றத் தேர்தல் முன் சந்தித்தே விட்டார்- யசோதா பாய் சிமன்லால் மோடியை.
ஜசோதாபாய் நரேந்திர பாய் மோடி என தூர்தர்சனில் செய்தி வாசித்தது 2500 கிமீ அப்பால் அந்தமானுக்கு மாற்றப்பட்டதால் நாமும் பூர்வ பெயரில் அழைப்போம்
#அதிதீவிர_கண்காணிப்பு
ரசசோனா தொடக்கப்பள்ளியில் நிருபர் சந்திக்க சென்றார். தலைமை ஆசிரியர் மறுத்துவிட்டார்."நான் என் கணவருக்கு எதிராக எதுவும் சொல்ல மாட்டேன். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இந்த வேலைதான் பிழைக்க வழி. விளைவுகளைப் பற்றி பயப்படுகிறேன். என வகுப்பறைக்கு திரும்பினாள்.
#கிராமத்தில்_நிருபர்
அந்தத் திருமணம் பற்றி ஊரில் உள்ள பெருசுகள் நன்கு அறிந்திருந்தனர். இடையில், எங்கிருந்தோ பள்ளிக்குப் போன் வந்தது. திடீரென பல வண்டிகள் பள்ளிக்கு வந்தன. பள்ளி விட்டு வெளியே வந்த யசோதாவிடம் பழைய உற்சாகம் இல்லை. பதட்டமாக பயத்துடன் தனியாக விடுங்கள் என்று கதறினார்.
#ஒண்டுகுடித்தனம்
பள்ளியில் இருந்து சிறிது தொலைவில் ₹150 வாடகையில் யசோதா வசித்த ஒரே அறை கொண்டு வீடு வரை ஹைமா சென்றார்.
100 சதுர அடி அறைக்கு தகர கூரை, கழிப்பறை இல்லை, குளியலறை கூட இல்லை. குழாய் வீட்டின் வெளியே அமைந்துள்ளதாக் ஜசோதாபென் மிக அதிகாலையில் எழுந்து குளிக்கிறார்.
#வாழ்க்கை_போராட்டம்
ஜசோதாபென் எந்த சலுகையையும் அனுபவிக்கவில்லை. அவள் தன் வீட்டை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும், தண்ணீர் நிரப்ப வேண்டும், பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும், உணவு சமைக்க வேண்டும், தன் துணிகளைத் தானே துவைக்க வேண்டும். அவளுக்கு வீட்டு உதவியாளர் யாரும் இல்லை.
#ஏழ்மையில்_இனிமை
ஞாயிற்றுக்கிழமை தோறும் 20 கிலோமீட்டர் தள்ளி இருந்த பிரமன வாடாவில் அண்ணன் வீட்டில் இருந்து
"என்னுடன் வந்து இரு" என காந்தி நகரிலிருந்து வர போகும் அலைபேசி அழைப்புக்காக வழக்கம் போல் காத்திருப்பார்.
அழைப்பு வராது. பிறகு ஜோசியரிடம் அது குறித்து ஜாதகம் பார்ப்பார்
#நிருபர்_விரட்டப்படுதல்
அதற்குள், வீட்டிற்கும் குண்டர் படை வந்தது. அங்கு இருந்து சென்று விடும் படி ஹைமா விரட்டப்படுகிறார்
அப்பொழுது மாஹ்செனா மாவட்டத்தில் காங்கிரஸ் பலமாக இருந்ததால் நிருபர் உயிருடன் தப்பித்தார்.
அவரது பேட்டி குறித்த லிங்க் : openthemagazine.com/features/india…
#லோக்சபாதேர்தல்_2014
தேர்தல்களில் வேட்புமனு படிவத்தில் மனைவி என்ற இடத்தை காலியாக விட்டுவிடுவார் தாஸ்
2014 பிரதமர் வேட்பாளர் என்பதால் வேறு வழியின்றி மனைவி இப்பதை அறிவித்தார். உள்ளூர் பத்திரிக்கை முதல் உலகப் பத்திரிக்கை வரை தீயாய் பரவியது செய்தி. காங்கிரஸ் வழக்கு கூட போட்டது
#தகவல்அறியும்உரிமைச்சட்டம்
தில்லியிலும் காந்தி நகரிலும் நடந்த எதையும் அறியாது, தன் ராமனின் வரவை நோக்கி காத்திருந்த சீதைக்கு அந்த நாள் வந்தே விட்டது. ராமன் வரவில்லை. சிறப்பு பாதுகாப்பு படை தான் வந்தது. எந்த அடிப்படையில் தனக்கு பாதுகாப்பு என RTI மூலம் கேட்டும் பதில் இல்லை
#பொம்மை_கல்யாணம்
"திருமணம் நடக்கவே இல்லை நிச்சயம் மட்டும் செய்தோம். விவேகானந்தர் போதனையால் கவரப்பட்ட என் தம்பி நாட்டுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டான்" என சோம்பாய் மோடி மூலம் அறிவிக்கப்பட்டது. பக்தர்கள் புல்லரித்தனர். யசோதா ராம்தேவ் ஆசிரமத்தில் தங்க வைக்கப் பட்டார்
#மக்கள்பிரதிநிதித்துவசட்டம்
அஹமதாபாத்தைச் சேர்ந்த நிஷாந்த் வர்மா "சட்டபூர்வ மனைவியை" ஒப்புக்க மறுத்ததற்கும்,முந்தைய தேர்தலில் போலி ஆவணங்களை உருவாக்கியதற்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி கிரிமினல் குற்றமாக தகுதி நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். தள்ளுபடி ஆனது
#ஊடக_பிரவேசம்
கிட்டத்தட்ட அவதார புருஷனாக பில்டப் செய்யப்பட்ட போஸ் பாண்டி &கோ, திருமணத் தகவலால் மாறி இருந்த சூழ்நிலையை அவதானித்தது. யசோதா பென் குஜராத்தி TV 9 ல் பேட்டி கொடுக்க வைக்கப்பட்டார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்ல யசோதா பேட்டி எல்லாம் வந்தது
#தேவைமுடிந்தது
விவரம் கெட்ட மோடி பக்தர்கள் RSS திட்டம் புரியாது குசியாகி தங்கள் கூட்டங்களுக்கு யசோதாவை அழைத்து பேச சொன்னார்கள்.
போஸ் பாண்டி பிரதமர் ஆகியிருந்தார்.
ஜண்டாவிடம் இருந்து ஒரே ஒரு போன் கால் "நிகழ்ச்சியை ரத்து செய், இனி பொதுவெளியில் அந்த அம்மாவை அழைக்கக்கூடாது"
#கடைசிவரை_வராதராமன்
பதவியேற்பு முடிந்தது, அழைப்பு இல்லை. கோபிநாத் முண்டே இறப்பில் கலந்து கொண்டார். யாரும் கண்டு கொள்ளவில்லை.
பம்பாயில் கோயில் கோயிலாக 50 வருடம் முன் தன்னை விட்டுப் போன கணவனின் நலம் வேண்டி பூஜை செய்தார். கடவுளும் கண்டு கொள்ளாததால் சமூக சேவையில் நாளை கழித்தார்
#பாவப்பட்ட_பெண்ணினம்
மனம் வெதும்பி வெளிநாடு செல்ல பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தார்.
கணவரிடமிருந்து திருமணச் சான்றிதழையோ, பிராமண பத்திரத்தையோ, விவகாரத்து சான்றிதழையோ காட்ட முடியாததால் நிராகரிக்கப்பட்டு, முகமற்ற இந்திய பெண்ணின் பிரதிநிதியாக குஜராத் கிராமத்தில் நாளைக் கடத்தினார்
#இழவுவீட்டில்..
சமூக ஊடகங்களில் மட்டுமே இந்த எட்டு ஆண்டுகளில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த அபலை, இப்பொழுதாவது தன் ராமன் தன்னை அங்கீகரிப்பான் என எண்ணிய போது, இந்தப் பாழாகப் போன இமேஜ் அந்த புண்ணியவதி முகத்தை கூட காண விடாது தடுத்துவிட்டது..
#மனைவியை_மீட்டுத்_தாங்க
2017 ல் அந்த செய்தி அதிகம் பிரபலமாகாத அந்த பத்திரிக்கையில் வந்த போது, வழக்கம் போல் டெல்லி மோடி மீடியா, கவைக்கு உதவாத விசயங்களை சர்ச்சை செய்து கொண்டிருந்தது.
மஃபட்லால் படேல் என்பவர் L.K. அத்வானிக்கு தன் மனைவியை மீட்டு தர கோரி 1995ல் எழுதிய கடிதம் பற்றியது
#ஆனந்திபென்,
நரேந்திர தாஸ் 2014 ல் பிரதமர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்த போது, வெடித்த பல சர்ச்சைகள், விலைக்கு வாங்கப் பட்ட ஊடகங்களால் மூடி மறைக்கப்பட்டன. அத்தனை சர்ச்சைகளிலும் பெண்கள் சம்பந்த பட்டிருந்தார்கள். முந்தைய கடிதம் எழுதிய மஃபட்லாலின் மனைவி தான் ஆனந்தி பென்
#பேரழிவின்_தொடக்கம்
ஆனந்தி பென், நரேந்திர தாஸ் படித்த அதே பள்ளியில் படித்தவர். கணவன் கல்லூரியிலும், மனைவி பள்ளியிலும் ஆசிரியராக பணியாற்றிய சமயம், 1987 ல் நர்மதா நதியில் தவறி விழுந்த சிறுவனை மீட்டதால் மீடியா வெளிச்சம் பட, கட்சியில் சேருகிறாயா எனக் கேட்டார் நரேந்திர தாஸ்
ராகுல் பேட்டியின் உக்கிரம் தாங்காமல் பிஜேபி வழக்கமான பொய் பிரச்சாரத்தை முடுக்கி விடுகிறது.
ராகுல் குற்றம் சாட்டிய ஒரு மோடி ஜெயின், மற்றொருவர் மார்வாரி.
ஆனால் மோடி என்ற பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு எதிரா ராகுல் பேசிவிட்டார் என்று வட இந்தியாவில் ஜாதி பிரிவினையை தூண்டி விடுகிறது
போலி செய்திகளின் உற்பத்தி ஸ்தலமான பிஜேபி ஐடி விங்கின் தேசிய செயலாளர் கோயபள்ஸ் அமித் மால்வியா வழக்கம் போல் ராகுலின் பேட்டியை திரித்து obc எதிரா பேசி விட்டார் என வெளியிட பிஜேபி டூல் கிட்டுக்கள் அதனை காப்பி பேஸ்ட் செய்து பரப்பிக் கொண்டிருக்கின்றன
அகிலேஷ் யாதவ் போன்ற வட இந்திய ஓ பி சி தலைவர்கள் பிஜேபியின் இந்த சூழ்ச்சியை புரிந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். போலிக் பிரச்சாரம் அனைத்து விதமான எல்லையையும் தாண்டிக் கொண்டிருக்கிறது
#ஆடு_புலி_ஆட்டம்
ஜெயலலிதா செய்த அட்டூழியங்களை அயன் லேடித்தனம் என நம்ப 2k கிட்ஸ் வைக்கப்பட்டிருக்கின்றனர்
கேட்டா கலைஞரே கை வைக்க முடியாத சங்கராச்சாரிய உள்ள தூக்கி வச்சு சுளுக்கு எடுத்துவிட்டார் என ரைட் அப் எழுதுவார்கள். தன்மீது கூட நம்பிக்கை இல்லாத தற்குறிக்கு தைரிய லட்சுமி பட்டம்
சங்கராச்சாரிக்கு தண்ணி காட்டிய அயன் லேடி அந்த ஆளு சிஷ்யன் சுப்பிரமணியசாமி கிட்ட சரண்டர் ஆன கதை தான் இந்த ஆடு புலி ஆட்டம். நம்மாத்து பொண்ணு என மகிழ்ந்திருந்த ஜெ சசி கண்ட்ரோலில் சென்றுவிட, திகைத்துப் போன அவா ஜெயாவுக்கு கவுண்டர் கொடுக்க
90களில் சுப்பிரமணிய சாமியை ஊழல் எதிர்ப்பாளர்
என 3% மீடியா மூலம் ஆட்டுக்குட்டித்தனமாக பில்டப் கொடுத்து விட்டிருந்தது.
சுனா சாமி - மன்னார்குடி - ஜெயா கூட்டணி 1990 இல் திமுக ஆட்சியை கலைத்திருந்தது.
சிஎம் ஆனவுடன் ஜெயா, சசி கும்பலுடன் ஐக்கியமாக, ஜெயாவ மீண்டும் கண்ட்ரோலில் கொண்டுவர சூனா சாமி டான்சி வழக்கில் மூக்கை நுழைத்தார்.
27 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது:
சர்க்காரியா கமிஷனிடம் இப்படி சொன்னாரா கலைஞர்?
2016, ஏப்ரல் 6, Mohan Raj என்பவர் முகநூலில் வெளியிட்டார். இதனை ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்து இருந்தனர், பின்னர் ட்விட்டரில் @ArasiAkila
2022 ல் பகிர்ந்தார்
கலைஞர் பற்றி விசாரணை செய்து, வெளியிட்ட அறிக்கையில் எந்த இடத்திலுமே விஞ்ஞான ஊழல் என்ற வார்த்தையை குறிப்பிடவே இல்லை. தப்பு நடந்திருக்கிறது, ஆனால், அதற்குரிய ஆதாரங்கள் எதுவும் நம்பகமான வகையில் இல்லை என்றுதான், கூறியுள்ளது.
இதுதவிர, சர்க்காரியா கமிஷன் முதலில், இந்திய அரசுக்கும்,
மாநில அரசுகளுக்கும் இடையே உள்ள உறவை மேம்படுத்தும் வகையில், பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஏற்படுத்தப்பட்டதாகும். எமர்ஜென்சி காலத்தில், வேறு வழியின்றி ,அரசியல் ஆதாயங்களுக்காக, எம்ஜிஆர் அளித்த புகாரின்பேரில், இந்திரா காந்தி, கலைஞர் அரசின் ஊழல் பற்றி விசாரணை நடத்தும்படி சர்க்காரியா
#எரிந்தபேருந்து_கருகியமாணவிகள்_எரித்தவர்கள்விடுதலை
அதுவும் ஒரு பிப்ரவரி மாதம் தான்.
கல்வி சுற்றுலா சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தது கோவை வேளாண்மை கல்லூரியைச் சேர்ந்த பேருந்து. 47 மாணவிகள் சில ப்ரொபசர்கள் உள்ளே இருந்தனர். மாணவர்களுக்கான பேருந்து பின்னால் வந்து கொண்டிருந்தது
1991- 96 ல் ராஜீவ் படுகொலை அனுதாபத்தால் முதல்வரான ஜெயலலிதா கொடைக்கானலில் விதிகளை மீறி ஏழு மாடி கட்டிடம் கட்ட பிளஸெண்ட் ஸ்டே ஓட்டலுக்கு அனுமதி வழங்கி, ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ராதாகிருஷ்ணன் பிப்ரவரி2, 2000 அன்று ஜெயலலிதா குற்றவாளி என்பதால் சிறை செல்ல உத்தரவிட்டார்
தீர்ப்புக்கு துளியும் சம்பந்தமில்லாத, வேளாண் கல்லூரி மாணவர்கள் பையூரில் இருந்து கிளம்பி தர்மபுரி நால் ரோட்டில் இறங்கி உணவு உண்டனர். ஸ்மார்ட் போன் 1.5 ஜிபி டேட்டா இல்லாத காலம். மஃப்டியில் வந்த போலீஸ்காரர்:
ஜெயலலிதாவை அரஸ்ட் பண்ணிட்டாங்க. பார்த்து கவனமா போங்க’என்றார்
#ஆசிட்வீச்சு_அறிமுகம்
19 மே 1992, சூரியன் தரையில் இறங்கி நடப்பதைப் போன்றதொரு நாள். சென்னை எக்மோர் சிக்னலில் காரின் பின்சீட்டில் அமர்ந்திருந்தார், அந்த அரசு அதிகாரி. முதல்வரால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட அவர் பதவியேற்கச் செல்கிறார். அவருக்கும் முதல்வருக்கும் ஏற்பட்ட தகராறில்,
இந்தப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என கிசுகிசுக்கப்பட்டது. காற்றோட்டத்திற்காகத் திறந்திருந்த காரின் சன்னல் கண்ணாடி வழியே விளம்பர நோட்டீஸ் கொடுத்து கொண்டு இருந்தான் ஒரு இளைஞன்
திடீரென அதிகாரி அருகில் வந்த அந்த இளைஞன் எதையோ எடுத்து அதிகாரியின் முகத்தில் எறிந்தான்.
அவர் தனக்கு என்ன நேர்கிறது என உணர்வதற்குள் அது நடந்தேறிவிட்டது. அந்த உயிர் அடைந்த வேதனையை வெறும் எழுத்துகளால் சொல்ல முடியாது. கார் டிரைவர் அந்த இளைஞனை விரட்டி ஓட, தானே ஆட்டோ பிடித்து மருத்துவமனையில் சேர்ந்தார் அந்த அரசு அதிகாரி ‘சந்திரலேகா’. தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்