#தமிழ்நாடு_நிலை
பயங்கரவாதத்தின் நோக்கமான பீதியை உண்டாக்க 10 ஆண்டாக தமிழ்நாட்டில் பல சதி வேலைகள்.கார் எரிந்தது என்று ஒருவன் கூறினால் அவன் அவர் சார்ந்த இயக்கம் ஆராயப்படும். பிஜேபி என்றால் அது தனக்குத்தானே செய்தது என ஒதுக்கி தள்ளி அடுத்த வேலையை பார்ப்போம். tamil.asianetnews.com/tamilnadu-chen…
#இந்து_தேசியவாதம்
சாவர்க்கர் தான் இந்துத்துவா சொல்லை உருவாக்கினார்.அதே கொள்கை கொண்ட பல அமைப்புகள் சங் பரிவார் எனப்படும். இவை காவியை கொடியாக வைத்திருப்பதால் இவற்றின் வன்முறைகளை பொதுமைப்படுத்தி பிரகாஷ் சுவாமி என்ற Front Line பத்திரிகையாளர் Saffron Terror "காவிபயங்கரவாதம்" என்றார்
2019 பொதுத் தேர்தலில் ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிட முடிவு செய்த போது. உபியில் மோடி முழங்கினார்
"வயநாட்டில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதால் ராகுல் காந்தி அங்கு போட்டியிடுகிறார்"
2024 ல் பிஜேபி வெற்றி பெற்றால் இந்தியாவின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதற்கு குஜராத் பரிசோதனைச் சாலையில் 2001-13 மோடி ஆட்சி லட்சணம் தெரிய வேண்டும்
மூன்று கட்டுரைகள் பெண்களை மையமாக கொண்டது, ஆனால் அதிக சர்ச்சை உண்டாகியது இஸ்லாமியர் மீதான போலி என்கவுண்டர்கள்
சட்டத்திற்குப் புறம்பான மரணதண்டனைகள், காவலில் இருப்பவர்கள், துப்பாக்கிச் சண்டைகளில் நிகழ்ந்தது போல் தற்கொலை செய்து கொண்டது போல் காட்சி படுத்தப்படும்
2002 - 2006 இடையில் குஜராத் காவல்துறையால் நீதிக்கு புறம்பான 31 கொலைகளை அம்னெஸ்டி ஆவணப்படுத்தியுள்ளது
பாதிக்கப்பட்டவர் உறவினர்கள் இடையராது நடத்திய சட்டப் போராட்டத்தால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு அமித்ஷா கைது செய்யப்பட்டு
2013 ம்,போலி என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட மூத்த குஜராத் காவல்துறை அதிகாரிகள் சிறையில் அல்லது வழக்கை எதிர்கொண்டனர்
#பூஜ்_பூகம்பம்
2001, ஜனவரி 26.
இந்தியா குடியரசு தின சடங்குகளை தொடங்க ஆரம்பித்தபோது, குஜராத், கட்ச் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பூஜ் நகரத்தையே நிர்மூலம் செய்திருந்தது. வைர வியாபாரிகளாக தூங்கியவர்கள் அன்னக்காவடிகளாக எழுந்தார்கள். அரசியல் பூகம்பம் ஒன்று வெடிக்க காத்திருந்து
#இளமை_புயல்
2003 ல் கட்ச் மாவட்ட கலெக்டராக இருந்த பிரதீப் சர்மா நகரின் மறு நிர்மாணத்தின் ஒரு பகுதியாக பூஜ் நகரத்தை அழகுபடுத்த ஒரு மலை தோட்டம் அமைக்க திட்டமிட்டு இருந்தார். அதற்காக, அந்தத் துறையில் சிறப்பிடம் பெற்ற மாதுரி என்ற 24 வயது இளமை புயலை பெங்களூரில் இருந்து தருவித்தார்
#சாஹேப்_அறிமுகம்
2005 ல் பூங்காவை திறந்து வைக்க காந்திநகரில் இருந்து சாஹேப் வந்திருந்தார்.
அலுவல் ரீதியாக மாதுரி அறிமுகப்படுத்தப்பட்டார்.
பெங்களூர் திரும்பிய மாதுரி 2006 ல் அகமதாபாத் வந்திருப்பதாக பிரதீப் சர்மாவுக்கு தகவல் கொடுக்கிறார். இரண்டு நாட்கள் கழித்தே சந்திக்க முடிந்தது
#குஜராத்தின்_அபலைகள்
குஜராத்தின் பாலைகளிலும், கட்ச் சதுப்பு நிலங்களிலும் காட்டன் டெக்ஸ்டைல்ஸ் சிட்டிகளிலும் வெகு காலமாக அந்தத் தகவல் மக்களிடையே பகிரப்பட்டு வந்தது. கிசுகிசுப்பாக அல்ல வெளிப்படையாகவே.
மன்னருக்கு மனைவி இருக்கிறார். மஹ்செனா மாவட்டத்தில் பள்ளி ஆசிரியராக
என்பதே அது
#தர்சன்_தேசாய்
1992 ம் ஆண்டு அபியான் என்ற பத்திரிக்கை அவரை பேட்டி எடுக்க சென்றது. மகுடம் சூட்டப்படாத ராணி மறுத்துவிட்டார்.
2002ல் தர்ஷன் தேசாய் என்ற அகமதாபாத் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் அவர் இருந்த கிராமத்தையும் பள்ளியையும் கண்டறிந்தே விட்டார். ராணியை தொடர்பு கொள்ள முயன்றார்
#மேலிட_உத்தரவு
தொடர்பு கொண்டு பேச முயன்ற போது உள்ளூர் குண்டர்கள் தொடங்கி வட்டம் மாவட்டம் என மிரட்டல்கள் நீண்டன.
இறுதியில் மேலிடத்தில் இருந்தே தொலைபேசி அழைப்பு வந்தது.
"உனக்கு என்னதான் பிரச்சனை தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதே". பிறகு ராணி எங்கே இருக்கிறார் என யாருக்கும் தெரியாது
#மனைவியை_மீட்டுத்_தாங்க
2017 ல் அந்த செய்தி அதிகம் பிரபலமாகாத அந்த பத்திரிக்கையில் வந்த போது, வழக்கம் போல் டெல்லி மோடி மீடியா, கவைக்கு உதவாத விசயங்களை சர்ச்சை செய்து கொண்டிருந்தது.
மஃபட்லால் படேல் என்பவர் L.K. அத்வானிக்கு தன் மனைவியை மீட்டு தர கோரி 1995ல் எழுதிய கடிதம் பற்றியது
#ஆனந்திபென்,
நரேந்திர தாஸ் 2014 ல் பிரதமர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்த போது, வெடித்த பல சர்ச்சைகள், விலைக்கு வாங்கப் பட்ட ஊடகங்களால் மூடி மறைக்கப்பட்டன. அத்தனை சர்ச்சைகளிலும் பெண்கள் சம்பந்த பட்டிருந்தார்கள். முந்தைய கடிதம் எழுதிய மஃபட்லாலின் மனைவி தான் ஆனந்தி பென்
#பேரழிவின்_தொடக்கம்
ஆனந்தி பென், நரேந்திர தாஸ் படித்த அதே பள்ளியில் படித்தவர். கணவன் கல்லூரியிலும், மனைவி பள்ளியிலும் ஆசிரியராக பணியாற்றிய சமயம், 1987 ல் நர்மதா நதியில் தவறி விழுந்த சிறுவனை மீட்டதால் மீடியா வெளிச்சம் பட, கட்சியில் சேருகிறாயா எனக் கேட்டார் நரேந்திர தாஸ்