தல விருட்சம் : மகிழம்
தீர்த்தம் : பொன்முகலியாற்று தீர்த்தம், ஸ்வர்ணமுகி ஆறு
பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : சீகாளத்தி, திருக்காளத்தி
ஊர் : காளஹஸ்தி
கோயில் திறக்கும் நேரம்:
காலை 5 முதல் 12 மணி, மாலை 5 முதல் 9 வரை,
செவ்வாய், புதன் மற்றும் வியாழன் நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
தலபெருமை:-
கண்ணப்பர் வாய்கலசமாக முகலிநீர் கொண்டுவந்து காளத்தியப்பருக்கு அபிஷேகம் செய்ததால் இங்கு பக்தர்களுக்கு திருநீறு(விபூதி) வழங்கும் வழக்கம் இல்லை.
பச்சைக் கற்பூரத்தை பன்னீர் விட்டு அரைத்து தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக்கொண்டு அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர். பக்தர்கள் கொண்டுவரும் திருநீறு பொட்டலத்தை இறைவன் திருவடியில் வைத்து தீபம் காட்டி எடுத்து தருகிறார்கள்.
மூலவருக்கு பச்சைக்கற்பூர நீரே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற பொருட்கள் கொண்டு செய்யப்படும் அபிஷேகங்கள் எல்லாம் மூலவர் உள்ள லிங்க பீடமான ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன. இது ராகு, கேது தலம் என்பதால் கோயிலை வலம் வருவதும் எதிர்வலமாகவே - அப்பிரதட்சிணமாகவே சுற்றி வர வேண்டும்.
பரத்வாஜர் இங்கு தவம் செய்து பேறு பெற்றுள்ளதால் பரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்தவர்களே இங்கு பூஜை செய்யும் உரிமை பெற்றுள்ளனர். இறைவனுக்கு அணிவிக்கப்படும் கவசத்தில் நவக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தலம் கிரக தோஷ தலம் என்பதால் நவக்கிரகங்கள் இல்லை.
விதிவிலக்காக சனீஸ்வரர் மட்டும் இடம்பெற்றுள்ளார். இறைவன் மேனியில் மாலை சாத்தப்படுவதில்லை. அங்கி அணிவிக்கப்பெற்ற பின்பு உள்ள திருமேனியிலேயே தும்பை மாலை சாத்துகிறார்கள். அம்மனின் இடுப்பில் அணிவிக்கப்படும் ஒட்டியானத்தில் கேது உருவம் காணப்படுகிறது.
கண்ணப்பர் மலைக்கு ஏறும் வழியில் உள்ள மலைச்சரிவு ஒன்றில் மணிகண்டேசுவரருக்கு ஒரு கோயில் உள்ளது. அதையடுத்து மலையை வெட்டி செதுக்கிய மண்டபம் ஒன்று உள்ளது. அதற்கு "மணி கர்ணிகா கட்டம்' என்று பெயர். இங்குதான் காசியில் உள்ள மணிகர்ணிகா கட்டத்தில் விசுவநாதர் அருளியதுபோல,
பெண் ஒருத்திக்கு இறைவன் தாரக மந்திரத்தை வலக்காதில் ஓதி அருளினார் என்று ஒரு கதை வழங்கி வருகிறது. அதனால் இன்றும் அந்திம திசையை நெருங்கிக்கொண்டிருப்பவர்களை இம்மண்டபத்திற்கு கொண்டுவந்து வலப்பக்கமாக ஒருக்களித்துச் சாய்த்துக் கிடத்தினால் சாகிறபொழுது உடல் திரும்பி வலக்காது
வழியாகவே உயிர் பிரியும் என்று கூறுகிறார்கள். சுவாமி புறப்பாடு வடக்கு கோபுரவாயில் வழியாகவே நடைபெறும்.
முன்காலத்தில் ரிஷிகள் பொன்முகலி ஆற்றில் நீராடிவிட்டு கிழக்கு நோக்கி தரிசித்ததால் அவர்களுக்கு காட்சி தருவதற்காக இறைவன் மேற்கு நோக்கி உள்ளார்.
தல வரலாறு:-
முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற போட்டி. ஆதிசேஷன் வாயுதேவனிடம் சொன்னான்: ""வாயுதேவனே... நான் கயிலாய மலையை என்னுடைய உடம்பால் சுற்றி, இறுக்கி மூடிக்கொள்வேன்.
நீ உன்னுடைய பலத்தால் மலைச் சிகரங்களைப் பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை ஒப்புக்கொள்வேன்,''. போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளாலும் உடம்பாலும் வாலாலும் கயிலை மலையை இறுக்கி மூடி, மலையே தெரியாதபடி மறைத்துவிட்டார்.
வாயுதேவன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசிப்பார்த்தும்கூட அசைக்க முடியவில்லை. பல நூறு ஆண்டுகளான பின் ஆதிசேஷன் லேசாக அசையவே அந்த நேரம் பார்த்து வாயுதேவன் தன் பலத்தைக்காட்ட, கயிலையில் இருந்து மூன்று சிகரங்கள் பெயர்ந்து கொண்டு புறப்பட்டன.
தெற்கே வந்து விழுந்தன. அந்த மூன்றில் ஒன்றுதான் திருக்காளத்தி மலை என்கிறது புராணங்கள்.
கோயில் சிறப்பு:-
கருவறையை அடுத்த மண்டபத்தில் கண்ணப்பர் சிலை உள்ளது. மூலவரின் எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளை நந்தியுமாக இரு நந்திகள் உள்ளன. கருவறை அகழி போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.
கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன. கோயிலின் நுழைவுவாயிலின் எதிரில் கவசமிட்ட கொடிமரம் ஒன்றும், 60 அடி உயரமுடைய, ஒரே கல்லால் ஆன கொடிமரம் ஒன்றும் உள்ளது. இதன் அருகே பலிபீடமும், நந்தியும் உள்ளன.
இங்கு காளத்திநாதர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இது வாயு (காற்று)தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும். இறைவனுக்கு அணிவித்துள்ள தங்கக்கவசத்தை எடுத்துவிட்டு ஆரத்தி எடுக்கும்போது, லிங்கத்தின் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவத்தையும்,
நடுவில் நீண்டு கூடியனபோன்று உள்ள யானையின் இரு கொம்புகளையும், மேற்புறத்தில் - உச்சியில் ஐந்து தலைப் பாம்பு படம் எடுத்துள்ள வடிவத்தையும் வலப்புறத்தில் கண்ணப்பர் பெயர்த்து அப்பிய ஒரு கண்ணின் வடுவையும் காணலாம். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 252 வது தேவாரத்தலம் ஆகும்......
*ஓம் நமசிவாய*🙏🙏🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஜென்மம் ஜென்மாய் செய்த பாவங்கள் அனைத்தையும் தீர்க்கும் ஒரே தலம் கோடீஸ்வரர் திருக்கோயில்...
1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலம். சனி பகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர். அதே போல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ளனர்.
இங்குள்ள சனிபகவான் “பாலசனி’ என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது.
மங்கு, பொங்கு, ஸ்மரணச் சனி மூன்றிற்கும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர். இவ்வூரை ஒட்டி காவேரி நதி, “உத்திரவாஹினி’ யாக அதாவது தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது
இங்குள்ள உத்திரவாஹினியில் கார்த்திகை ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும் என்பது பூர்வ நம்பிக்கை. இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது.
இத்தலத்தில் நவக்கிரகம் கிடையாது. விதியின் பயனை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் மதியால் குறைக்க முடியும்.
ஆயிரமாண்டு அதிசயம் ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருக்கும் ஏழு சிவன் கோவில்கள்
இன்று புகழ்மிகு சிவாலயங்களாக இருக்கும் அனைத்தும் பிரமாண்ட கோவில்களும் ஆயிரமாண்டுக்கு முன்பே கட்டப்பட்டது குறிப்பாக இந்த கோவில் சாட்டிலைட் மற்றும் தொழில்நுட்பம் போன்றவை கண்டறியப்படாத காலத்தில் கட்டப்பட்டவை.
அளவீடுகளை அளவிடும் கருவி கூட இல்லாத காலத்தில் குறிப்பிட்ட ஏழு கோவில்கள் ஒரே தீர்க்க ரேகையில் அமைந்திருப்பது இன்றளவும் அமைந்திருக்கும் அதிசயம்.
வடக்கே அமைந்திருக்கும் கேதர்நாத் துவங்கி தெற்கே அமைந்திருக்கும் ராமேஸ்வரம் இடையில் இருக்கும் மற்ற ஐந்து கோவில்களும்
ஒரே தீர்க்க ரேகையில் அமைந்திருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.
வடக்கே அமைந்திருக்கும் கேதார்நாத் கோவிலின் காலேஸ்வரம் ஆலயம் இங்கே சிவபெருமானும் இருக்கிறார், யம தர்மராஜவும் இருக்கிறார்.
இந்த கோவிலுக்கும் தெற்கே இறுதியில் அமைந்திருக்கும்
ஒரு பெண் தனது ஒரே ஒரு மகனுடன்
வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண்
இல்லை. அவள் கணவன் திடிரென ஒரு நாள் இறந்து விட்டார். கணவரின் இறப்பிற்குப் பின்பு அவளது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் தன் மகனின் எதிர்கால வாழ்வைக் குறித்தச் சிந்தனையாகவே இருந்தது.
தன்னிடம் இருந்தச் சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்தாள்.
மீதி சொத்தை தனது மகனின் கல்வித் தொடர்பான செலவுகளுக்கு தயார் செய்திருந்தாள்.
நல்ல ஒழுக்கமிக்க மகன் இரக்கமானவன்
புத்திசாலி ஊரில் எல்லோரும் புகழும்
வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன
பரிட்சையில் முதல் தரத்தில் தேறினான்
இந்தச் செய்தியை அறிந்த உடனேயே அந்த
தாய் ஆவலுடன் பாடசாலை நோக்கி ஓடினாள் மகனின் வகுப்பறை எது என அறிந்து அங்குச் சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள்
இறைவனைப் புகழ்ந்தாள் சந்தோஷத்துடன் வீடு வந்து அவனுக்கு பிடித்தமான உணவைத் தயாரிக்க ஆரம்பித்தாள்.
நட்ச்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது
சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.
இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.
எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.
உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்
சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..?முடியாது !
பிஜேபி/ஆர்எஸ்எஸ் மற்றும் மோடி சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்:- எடுத்துக்காட்டுகள்:- கவனமாகப் படியுங்கள்...
⁇
*முதல் வெற்றி*
இருநூறு ஆண்டுகால இந்திய அடிமைத்தனத்தை ஒழித்து இந்தியாவை உலகத் தலைவனாக மாற்றிய மோடிஜி பிரிட்டனில் நடந்த 53 நாடுகளின் மாநாட்டின் பொதுத் தலைவரானார்.
இதன் காரணமாக ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சும் பெருமிதத்தால் விரிவடைய வேண்டும்.
*இரண்டாவது வெற்றி*
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில், இந்தியா மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதிக வாக்குகளைப் பெற்ற உறுப்பினருக்கு 97 வாக்குகள் தேவைப்பட்டு 188 வாக்குகளைப் பெற்றனர்.
இந்திய மக்கள் இன்னும் கேட்கிறார்கள்.. மோடி ஏன் வெளிநாடு செல்கிறார்?
*மூன்றாவது வெற்றி*
உலகின் சக்திவாய்ந்த 25 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நான்காவது இடத்தில் இந்தியாவும், அதைத் தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் உள்ளன. இது மோடியின் காலம்.
🙏திருவண்ணாமலை..9 கோபுரங்களின் விபரம் பற்றி தெரிந்து கொள்வோம்...
பஞ்சபூதத் தலங்களில் திருவண்ணாமலை அக்னித் தலமாக விளங்குகிறது. அக்னிக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை, அந்த நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
அண்ணுதல் என்பதற்கு 'நெருங்குதல்' என்று பொருள்.
'அண்ணா' என்பது, 'நெருங்க முடியாத' என்ற பொருளைத் தரும். பிரம்மனாலும், விஷ்ணுவாலும் நெருங்க முடியாத நெருப்பு மலையாக நின்றதால், இத்தலம் 'அண்ணாமலை' என்று பெயர் பெற்றது.
இத்தல கிளி கோபுரத்தின் கீழ் இட பக்கம் ஒரு விநாயகர் சன்னிதி உள்ளது.
இவருக்கு 'அல்லல் தீர்க்கும் விநாயகர்' என்று பெயர். முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் உள்ள ஆறு படைவீடுகளில், இது முதல் படைவீடாகும்.
கிரிவலப்பாதையின் எட்டு திசைகளுக்கும் எட்டு லிங்கங்கள் இருக்கின்றன. இதனை அஷ்டலிங்கங்கள் என்கிறோம். அவை, இந்திர லிங்கம், அக்னி லிங்கம்,