நேற்று உத்திரபிரதேசத்திலே நடந்த துப்பாக்கீச்சூடு பற்றி இங்கே இருக்கும் நம்மால் புரிந்துகொள்வது கடினம் தான்.
வடக்கே உத்திரபிரதேசம், பீகார், மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் இதெல்லாம் ஒரு காலத்திலே தெலுகு படங்களிலே காட்டுவது போல இருந்தன.
நேற்று கொல்லப்பட்ட ஆடிக் எனும் ஆள் தன்னை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த ராஜூ பால் என்பவரை ஆள் வைத்து சுட்டுக்கொன்றதோடு இல்லாமல் அந்த உடலையே துப்பாக்கி குண்டுகளால் சல்லடையாக துளைத்தான். 25 குறிபார்த்து சுடுபவர்களை கொண்டு.
போன மாதம் ராஜூ பால் இன் மச்சானும் கொலையிலே முக்கிய சாட்சியுமான உமேஷ் பால் என்பவரையும் சுட்டுக்கொன்றான்
அந்த ஆடிக் எனும் ஆளின் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கொலை, கொள்ளை கற்பழிப்பு என.
அவன் மட்டுமல்ல அவனின் கூடபிறந்தவர்கள் மனைவி குடும்பத்தினர் என
அனைவரின் மீதும் 300க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
ஒரு வழக்கு கூட விசாரிக்கப்பட்டு தண்டனை தரப்படவில்லை
தன்மகனின் காரை ஓவர்டேக் செய்தான் என ஒருவரை கொன்றான்
முகலாயம்சிங் எனும் ஆள் உத்திரபிரதேச முதல்வராக இருந்தபோது வீட்டிற்கு கூட்டி வந்து தன்னுடைய நாயுடன் கை குலுக்க வைத்தவன்
முன்னாள் எம்பி முன்னாள் எம் எல் ஏ எனும் பதவிகளை வகித்தன்
கணக்கிலே காட்டிய சொத்தே சில ஆயிரம் கோடிகளை தாண்டும்.
இதே போல அங்கே முக்தார் அன்சாரி, விகாஸ் டுபே, ஆசம்கான், ஷகாபூதீன் என பல பேர் உண்டு. இந்த முக்தார் அன்சாரியின் மாமா தான் முன்னாள் துணை ஜனாதிபதி முக்தார் அன்சாரி
தனக்கு எதிராக போட்டியிட்ட பாஜக எம்எல்ஏ கிருஷ்ணராய் உடலை சல்லடையாக துளைத்தான்.
கிருஷ்ணராயின் உடலிலே இருந்து 96 குண்டுகளை எடுத்தார்கள். பயணம் செய்த வண்டியிலே இருந்து 500 குண்டுகள்.
பீகாரிலே இருந்த ஷாகாபுதின் எனும் ஆள் தனக்கு எதிராக இருந்ததாக சொல்லி ஒரே குடும்பத்திலே நாலு சகோதரர்களை கொன்றவன. ஜாமீனிலே வெளியே வந்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கோவிட்டால் செத்தான்
2014 தேர்தலிலே முக்தார் அன்சாரியும் ஆட்டிக்கும் 500 கார்களிலே தேர்தல் பரப்புரைக்கு வந்த ஆட்கள்.
அந்த ஆடிக்கு 5 பசங்க. சின்னது ரெண்டும் இன்னும் மைனர்
தமிழகத்திலே நாம் எப்படி லஞ்சம் ஊழலை சகித்துக்கொண்டு வாழ கற்றோமோ
அப்படி அங்கே இந்த தினப்படி வன்முறையை சகித்துக்கொண்டு வாழப்பழகினார்கள்.
இந்த சுட்டுக்கொல்லப்பட்ட ஆடிக்கு 2012 இல் ஜாமினுக்கு மனு போட்டான்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்திலே
பத்து உயர்நீதிமன்ற நீதிபதி அந்த வழக்கை விசாரிப்பதிலே இருந்து விலகினார்கள்.
11 ஆவது நீதிபதி அந்த வழக்கை விசாரித்து ஜாமீன் கொடுத்தார்.
ஆமாம் 10 நீதிபதிகள் அந்த வழக்கை விசாரிக்கமாட்டேன் என விலகினார்கள்.
அப்படீன்னா... அதான் அங்கே சட்டம் சமூகநீதி சமத்துவம் எல்லாம்.