திமுக அரசால் முத்திரைத்தாள் பதிவு கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது நமக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று மக்கள் கடந்து செல்வார்கள்.
உண்மையில் இது சாதாரண மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு நாளும் ஏழை எளிய மக்கள் எத்தனையோ காரணங்களுக்காக அரசு 1/5
சலுகைகளை பெறவும் வாரிசு சான்றிதழ் வாங்கவும் ஒவ்வொன்றிற்கும் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்கிறார்கள்.
உறுதிமொழி பத்திரம் (அஃபிடவிட்) தாக்கல் செய்யும் போது குறைந்த பட்சம் கட்டணம் முத்திரைத்தாள் 20 ரூபாயாக மட்டுமே இருந்தது. அது இனி 200 ஆக மாறும். இது சாதாரண மக்களுக்கு மிகப்
பெரிய பேரிடியாக வரும்.
உதாரணமாக உங்களிடம் தகுந்த ஆவணச் சான்று அல்லது இருப்பிட சான்று இல்லை என்றால் நீங்கள் ஒரு வழக்கறிஞரிடம் அல்லது நோட்டரி பப்ளிக் இடம் சென்று அதற்கான உறுதிமொழி ஆவணத்தை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு 20 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் இதுவரை போதுமானது. ஆனால்
இனிமேல் குறைந்த பட்சமாக 200 ரூபாய் முத்திரைத் தாள் வாங்க வேண்டும். மேலும் டைப்பிங் நோட்டரி பப்ளிக் கையெழுத்து என கூடுதல் செலவும் ஆகும்.
இது மட்டும் அல்லாது வங்கி தஸ்தாவேஜீகள், எல் ஐ சி பாலிசி ஒரிஜினல் தொலைந்து விட்டால்
அதற்கு Indemnity Bond அளிக்க வேண்டும். அதற்கு இதுவரை
முத்திரைத்தாள் கட்டணம் எண்பது ரூபாய் மட்டுமே. எண்பது ரூபாய் கிடைக்காது என்பதால் 100 ரூபாய் கட்டணத்தை அனைவரும் பயன்படுத்துவர். இனிமேல் அதற்கு ஆயிரம் ரூபாய் முத்திரை தாள் வாங்க வேண்டும்.
வீட்டு வாடகை ஒப்பந்தம், லீஸ் அக்ரிமெண்ட், சிறு குறு தொழில்களில் உள்ள ஒப்பந்தங்கள், வங்கி
ஒப்பந்தங்கள் என்று ஒவ்வொன்றிற்கும் அந்தத்த மாநில அரசின் Stamp act படி தான் நிறைவேற்ற வேண்டும்.
இதனால் நீங்கள் வங்கி கடன், மற்றும் சட்டப்படியான லேவாதேவிக்கள், ஒப்பந்தங்கள் (agreement) என்று அனைத்திற்கும் மாநில அரசின் சட்ட திட்டங்கள் படியே நிறைவேற்ற வேண்டும். #திராவிட_மாடல்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh