ஒருவருக்கு #தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள் அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன் அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை
வீசுவார் அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.
அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்
தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு #சிலைகள் செய்தார் எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து
படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார் எமன் வந்தார் பார்த்தார், திகைத்துப் போனார் மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டுதான் என்பதை யூகித்துவிட்டார்.
ஆனால் எவை சிலைகள், எது #சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை அவ்வளவு நேர்த்தி தவறாக
சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே! நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
யோசித்தார் ஒரு யோசனை வந்தது.
சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது என்னாலேயே எது சிலை எது #ஆள் என்று கண்டுபிடிக்க
முடியவில்லையே!’ இப்படி சொல்லிவிட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன!. சடாரென வீசினார் கயிற்றை.
பிரச்சனைகளுக்கு, மனவருத்தங்கள்,மற்றும் சோர்வுகளுக்கு காரணம், நான் தான் எல்லாம் நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணங்களை ஒழித்தோம் என்றால் நாம் மிகப்பெரிய வெற்றியாளர்கள்
மீண்டும் ஒரு நல்ல கருத்துடன் சந்திப்போம்.
🙏
விபூதி என்றால் ஞானம் ஐஸ்வர்யம் என்றெல்லாம் பொருள் தரும். பிறப்பு இறப்பு என்னும் கொடுமையான பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து ஈசனின் திருவடிகளில் நம்மைக் கொண்டு சேர்க்கும் மாமருந்து திருநீறு என்றும் மந்திரச் சொற்களுக்கு நிகரானது
திருநீறு என்றும் போற்றுகிறார் திருஞானசம்பந்தர் தனது திருநீற்றுப் பதிகத்தில்
சைவ சித்தாந்தம் கூறியபடி திருநீறு நான்கு வகைப்படும். அவை கல்பம், அணுகல்பம், உபகல்பம், அகல்பம் என்பன. கன்றுடன் கூடிய ஆரோக்கியமான பசுவின் சாணத்தை பிரம்ம மந்திரம் சொல்லி சிவாக்னியில் எரித்து உருவாக்குவது
கல்பத் திருநீறு. காடுகளில் மேயும் பசுக்களின் சாணங்களைக் கொண்டு எரித்து செய்வது அணுகல்பத் திருநீறு. தொழுவங்களிலிருந்து எடுத்த சாணத்தைத் தீயில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு. இதுவே நாம் பயன்படுத்தும் திருநீறு. தரையில் விழுந்து கிடக்கும் சாணங்களை எடுத்துத் தயாரிக்கும்
பவுர்ணமி தோறும் ஆஞ்சநேயர் இந்த கஜகிரி மலையை கிரிவலம் செய்வதாக ஐதீகம். அப்போது பக்தர்களும் கிரிவலம் வந்தால் நாம் எண்ணங்கள் நிறைவேறும்.
சென்னை அருகே உள்ள புதுப்பாக்கத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. இந்த தலத்தில் உள்ள மலையை
சுற்றி ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக ஐதீகம் கூறப்படுகிறது.
வீரஆஞ்சநேயர் திருத்தலத்தில் பக்தர்களுக்கு வலம்புரிச் சங்கில் தீர்த்தம் கொடுப்பது தனிச்சிறப்பாகும். பவுர்ணமி தோறும் இரவு நேரத்தில், ஆஞ்சநேயர் இந்த கஜகிரி மலையை கிரிவலம் செய்வதாக ஐதீகம். அப்போது பக்தர்களும் கிரிவலம்
வந்தால் நாம் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
அமாவாசை நாளில் புதுச் செங்கலில் ராம நாமம் எழுதி, அதனை தலையில் வைத்து படியேறி வந்து ஆஞ்சநேயரை வழிபட்டால் வெகுவிரைவில் வீடு வாங்கும் யோகம் கூடிவரும் என்று கூறப்படுகிறது. மூல நட்சத்திர நாட்களில் ஆஞ்சநேயருக்கு