ஷாந்தி ஹோமம், திசை ஹோமம், மூர்த்தி ஹோமம், வாஸ்து ஷாந்தி, ஷப்த ஷாந்தி, சகஸ்ர கலச ஸ்தாபனம் எல்லாம் பண்ணி மஹா ஸம்ப்ரோக்ஷணம் பண்ணனும். அப்போதான் இது கழியும்.
அப்டித்தான் நம்ம ஸாஸ்த்ரங்கள் சொல்றது.
ஜாதின்றது சமூகம் சம்பந்தப்பட்டது இல்லை.
அது மதக் கோட்பாடு
பகவான் மனுசாளை சரிசமமா பார்க்கவும் இல்லை;
அப்படி படைக்கவும் இல்லை. மிருகங்களில் பலவகைன்ற மாதிரி மனுசாளையும் நாலு வர்ணமா, அதுல நாலாயிரம் ஜாதியா பிரிச்சு உருவாக்கியிருக்கார் அவர்.
நாம அத மீறது மஹா பாவம்
இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டே போன அந்த மிக பிரபலமான 50வது சாட்சி,
நம் அனைவரின் பெருமைமிக்க கலாசார பண்பாட்டுப் புனிதமான, சனாதன தர்ம ஹிந்து மத நூல்களில் இருந்து மேற்கோள்களைக் காட்டி பேசப் பேச, அது வரையில் தயக்கத்தில் இருந்த மதுரை நீதிமன்ற நீதிபதி வரத ராவிற்கு தெளிவும், துணிவும் பிறந்தது.
அவர்கள் நுழைந்ததற்குத் தீட்டு கழிப்பதற்கு ஆகும் செலவு என
சிவாச்சாரியார்கள் சொன்ன ஐந்து கோடிக்குப் பதிலாக இரக்கத்தின் பேரில் ஒரே ஒரு கோடியை மட்டும் அபராதமாக விதிக்கிறேன் என்றும்
இனிமேலும் கோயிலின் எந்த பகுதிக்குள்ளும் அவர்கள் நுழைய உரிமை கிடையாது என்றும் நம் அனைவரின் பெருமைமிக்க கலாசார பண்பாட்டுப் புனிதமான, சனாதன தர்ம,
ஹிந்து மத தர்மத்தை நிலை நாட்டித் தீர்ப்பளித்து முடித்து வைத்தார் அவர்.
அந்த தீர்ப்பை அடுத்து, சென்னையில் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் போது, அவுட் ஆஃப் கோர்ட்டு செட்டில்மென்டாக அவர்கள் கோயிலுக்குள் நுழைந்து கொடிமரம் வரையாவது செல்ல அனுமதிப்பதற்குக் கோயிலுக்கு
60 கோடி ரூபாய் தர ஒப்பந்தம் ஆகி, அதில் 10 கோடி ரூபாய் ரூபாய் முன் பணமாக கோயில் அறங்காவலர் பாஸ்கர சேதுபதியிடம் கொடுக்கப்பட்டது.
இதைக் கேள்விப்பட்ட மேலே சொன்ன 50வது சாட்சியைச் சார்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இதனால் சமூக அமைதி கெடும், கலவரம் நடக்கும் என்று பயம் கிளப்பி விட,
அவர் பாஸ்கர சேதுபதியிடம் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறும் தேவைப் பட்டால் அவர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிக் கொள்ளட்டும் என்றும் சொன்னார்.
ஒப்பந்தம் ரத்தாகி, மேல் முறையீடும் தோற்றுப் போக, மேற்கொண்டு என்பது கோடி ரூபாய் வரை செலவு செய்து இலண்டன் பிரிவி கவுன்சில் வரை வழக்கை
எடுத்துச் சென்றும், இறுதியில் தோல்வியே மிஞ்சியது!
இது தான் இன்றைக்கு கிட்டத்தட்ட 125 ஆண்டுகளுக்கு முன், தமிழ் நாட்டில் முதல் முறையாக நாடார்கள், கமுதியில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குள் நுழைந்த போது, அவர்கள் தடுத்துக் கைது செய்யப்பட்டு, பலர் தங்கள் வாழ்நாள் உழைப்பின்
மொத்த சேமிப்பை, நம் அனைவரின் பெருமைமிக்க கலாசார பண்பாட்டுப் புனிதமான, சனாதன தர்ம, ஹிந்து மதத்திற்குப் பரிதாபமாக பலி கொடுத்து இழந்த வரலாறு!
சரி, வழக்கின் போக்கை மாற்றிய, அந்த பிரபலமான 50வது சாட்சி யார்?
அவர் தான்.. தமிழ்த் தாத்தா என்றழைத்துக் கொள்ளப்படும் உ.வே. சாமிநாதர்!
அந்த தமிழ் த்தா தான் தமிழ் மக்களின் மத வழிபாட்டு உரிமைகள் மறுக்கப் பட்டது குறைந்தது அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படவும், உழைக்கும் மக்களின் நூறு கோடி ரூபாய் அநியாயமாகச் சுரண்டப்படவும் காரணமானவர்!
சரி, 125 ஆண்டு பழைய வரலாறு இப்போது எதற்கு என்ற கேள்வியைத் தூக்கிக் கொண்டு
இங்கே வரப்போகிற ந.ந.நி.ந மொன்னைகளுக்கு,
சீமான் என்கிற ஊர் உழைப்பில் உண்டு உயிர்வாழும் ஊதாரி அஃறினை கோடரிக் காம்பு, நாக்பூர் பிஸ்கட்டுகளுக்காகத், தமிழர்கள் அறிவில், மானத்தில், பொருளாதாரத்தில் முன்னேற உண்மையாக பாடுபட்ட தலைவர்களைத் தாக்கி, இந்த கேடுகெட்ட தமிழ் த்தாவை,
அதுவும் புதிதாக ஐயர் விகுதி போட்டுக், கொண்டாடும் போது (பார்க்க படம்), அறிவும் மானமுள்ள தமிழ் மக்கள் இந்த வரலாறுகளைத் தெரிந்து கொண்டு முறையாக யோசித்து முடிவெடுக்கட்டும் என்கிற நோக்கத்தில் நாம் கொஞ்சம் வரலாற்றைப் பேசுவதில் என்ன தவறு?
இது சிலருக்கு நெருடும். தைக்கும். சுடும்.
நெருடட்டும்!
தைக்கட்டும்!
சுடட்டும்!
எம்மக்களை ஆயிரமாண்டுகளாக அடிமை படுத்திய மனித குல விரோதத்தையே, இன்று, எம்மக்களின் பெருமைமிக்க கலாசார பண்பாட்டுப் புனிதமாகப் பொய்யாகக் கட்டமைத்து, அடுத்தகட்ட அடிமைப் படுத்துதலுக்கு ஆயத்தம் தொடர்நது கொண்டு இருக்கும் வரையில்,
நாங்கள் எங்கள் வரலாற்றை நினைவு படுத்திக் கொண்டே இருப்போம்!!
பி.கு: 1) ஆதாரம்: நாடார் வரலாறு கறுப்பா.. காவியா? - வழக்கறிஞர் திரு. தி. லஜபதிராய் (periyarbooks, amazon போன்ற தளங்களில் கிடைக்கிறது. விலை ரூ.100)
2) நூலில் லஜபதிராய் அவர்கள் காட்டியுள்ள பல நீதிமன்ற ஆவணங்கள் மற்றும்
ஆதார நூல்களில் ஒன்று: ப்ரவாஹன் "கோயிலுக்குள் நுழையாதே" கமுதி கோயில் நுழைவு வழக்குத் தீர்ப்பு 1899, முதல் பதிப்பு 2013, தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், பக்கம் 269
3) மேலே கொடுக்கப்பட்டுள்ள ரூபாய் மதிப்புகள் அனைத்தும் 125 ஆண்டு பணவீக்கத்தைக் கணக்கிட்டுக் காட்டப்பட்டுள்ளன
4) 'இந்து' கோயிலுக்கள் நுழைந்த, நுழைய முயன்ற 'இந்துக்களிடம்' அநியாயமாக காசு பிடுங்கிய அதே பாஸ்கர சேதுபதி தான், அதே கால கட்டத்தில், அமெரிக்காவில் சிகாகோ மாநகரில் நடந்த உலக மதங்களின் மாநாட்டில், அதே 'இந்து' மதத்தைப் பற்றிப் பேச, சுவாமி விவேகானந்தருக்கு, அதே காசைக் கொடுத்து,
ஸ்பான்சர் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தான் யுவர்ஸ் ஒன்லி இந்து மதம், யுவர் ஆனர்!
5) நாங்கள் பட்டியலின மக்களைத் தவிர வேறு எந்த சாதியையும் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுத்ததே கிடையாது என்று சமீபத்தில் எழுதி, பட்டியலின மக்களைத் தடுத்தால் அது தவறில்லை என்பது போலவும்,
வழக்கமான சாதியால் பிரித்தாளும் சூழ்ச்சியுடனும் விஷம் கக்கிய, வெறுக்கத்தக்க சாதி வெறியன் பத்ரி ஷேஷாத்ரி சொன்னது பொய் என்று, ஈழத்துத் தமிழ் த்தா ஆறுமுக நாவலர் எந்த சாதிகள் எல்லாம் கோயிலுக்குள் போகக் கூடாது என எழுதியது கொண்டும்,
இன்னும் பல ஆதாரங்களுடனும் எளிதாக அம்பலப் படுத்தலாம்.
6) ஏற்கனவே அயோத்தி தாச பண்டிதர் முதல் பலரும் பல பழந்தமிழ் இலக்கிய நூல்களை ஓலைச் சுவடிகளாகச் சேகரித்துக் காப்பாற்ற, கடைசியில் தன் பங்குக்குச் சிலவற்றைச் சேகரித்த தமிழ் த்தா ஒருவரே எல்லா பெயரையும் தட்டிச் சென்றது எப்படி என்று யோசித்தால் தமிழ் 'நூல்'களின் வலிமையை தெரிந்து கொள்ளலாம்
கட்டுரையாளர் :
அருண் பாலா
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மற்போர் பெண்களை சீண்டியவனை நெருங்க முடியாத சட்டங்கள், மனதில் பட்டதை தெரிவிப்பவர்களை, மத வேறுபாடு இன்றி மிரட்டும்.
சமீபத்திய நிகழ்வு, புனேயில்
காலம் கடந்தது என கூறி பாடிக் கொண்டிருந்த ஏ ஆர் ரகுமானை
நிறுத்த சொன்ன காவல் துறை.
சமீப காலங்களில், ஏ ஆர் ரகுமான் சர்ச்சைக்குரியவராக பொதுவெளியில் சித்தரிப்பது தொடர்கிறது.
அவர் அடையாளத்திற்காக என்பதை விட, ஒரு இந்திய குடி மகனாக தனது மனதின் குரலை வெளியிடுவதற்காக கூட இருக்கலாம்.
இதன் தொடர்ச்சியே கச்சேரி மேடையில் காவல் துறை தரிசனம்
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் காவல்துறை, தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை, பொதுப்பணித்துறை ஆகியவற்றிடம் இருந்து முறையான அனுமதி பெற்றனர்
ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 10 மணிவரை நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
கடைசி பாடலாக 'வந்தே மாதரம்' இடம்பெறும் என திட்டமிட்டனர்
"இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் Article 25 படி ஒருவர் தான் விரும்பிய மதத்தை பின்பற்றவும் பிரச்சாரம் செய்யவும் உரிமை உள்ளது.
தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை"
சிறுமி லாவண்யா வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் பதில் இது
சந்தேகத்திற்கு இடமான லாவண்யா தற்கொலையை மதமாற்றும் முயற்சி என,
இந்தியா முழுவதும் பரப்பின சங்கீ வார் ரூம் அடியாட்கள் பரப்பிய போது திணறித்தான் போனது தமிழ்நாடு.
ஆனால் விரைவில் உண்மைகளை வெளியில் கொண்டு வந்தது.
தொடர்ந்து பல "மதமாற்ற" கதைகள் பரப்பப்பட்டன
தமிழ்நாடை விட அதிகம் குறி வைக்கப் படுவது கேரளா.
நாட்டின் பிரதமரே, இந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதால் வயநாடு சென்று இருக்கிறார் ராகுல் என்று பரப்பப்பட்டது.
இரண்டு மாநிலங்களிலும் எவ்வளவோ முயற்சி செய்தும் கலவரத்தை உண்டாக்க முடியவில்லை.
மக்களின் தெளிவு அப்படி
ராகுலை தகுதிநீக்க சீராய்வு மனு இன்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ராகுல் சார்பாக அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி,
"பின்விளைவுகள் மாற்ற முடியாதவை, தண்டனை நிறுத்தப் படாவிட்டால் ராகுலின் 8 வருட அரசியல் வாழ்க்கையை இழக்க நேரிடும்' என வாதிட்டார்
"சாட்டப்பட்ட குற்றத்தில் தார்மீக கொந்தளிப்பு இல்லை,
அடையாளம் காணக்கூடிய ஜாமீன் பெறக்கூடிய குற்றம் தான். மிகக் கடுமையான குற்றங்களின் கூட நீதிமன்றங்கள் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது " என நீதிபதி ஹேமந்த் அடங்கிய பெஞ்ச் முன் வாதிட்டார்
காந்தியின் தகுதி நீக்கம் மற்றும் அவதூறு வழக்கில் தடை விதிக்கப்படாமல் இருப்பது அவரது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வாய்ப்புகளை மட்டுமல்ல அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதி மக்களின் நலன்களையும் மோசமாக பாதிக்கும் என வாதிட்டார்
2014 க்குப் பிறகு மற்றொரு மதம், மொழியினர் மீதான வெறுப்பு பேச்சுகளின் எண்ணிக்கை 500% அதிகரித்ததாக புள்ளி விவரம் கூறுகிறது.
இதற்கு முடிவு கட்ட,
உச்ச நீதிமன்றம் அதி முக்கிய உத்தரவு பிறப்பித்திருக்கிறது
உண்மையில் மாஸ்டர் ஸ்ட்ரோக் தான்
ஏற்கனவே டெல்லி, உத்திர பிரதேஷ், உத்தரகாண்ட் மாநிலங்களில் அமுலில் உள்ள வெறுப்பு பேச்சுக்கு எதிராக காவல்துறை தாமாகவே வழக்குப் பதிய வேண்டும் என்ற 2022 உத்தரவை அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் நீட்டித்திருக்கிறது
ஐபிசியின் பிரிவு 153A, 153B, 295A மற்றும் 506 போன்ற குற்றங்களை ஈர்க்கும் எந்தவொரு பேச்சு அல்லது எந்த நடவடிக்கையும் உடனடியாக, எந்த புகாரும் பதிவு செய்யப்படாமல், தானாக முன்வந்து வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதை தொடர்புடைய மாநிலங்கள் உறுதிசெய்ய வேண்டும்