முன்னாடியெல்லாம் ஒரே வீட்டில் அப்பா, மகன், மகள் எல்லாம் பல கட்சி சப்போர்ட்டர்களாக இருப்பார்கள். அரசியல் தனி மனித வாழ்வை பாதித்தது இல்லை. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இன்றைய தனிமனித அரசியல் வெறுப்பு அரசியலாக மாறியது. ஏன் நான் இதை எழுதுகிறேன் என்றால். சில தினங்களுக்கு (1)
முன்பு என் உறவினர் ஒருவர் திடீரென இறந்துவிட்டார். நான் அந்த சடங்குக்கு சென்றிருந்தேன். அங்கு என் உறவினர்கள் பல பேர் வந்திருந்தனர். அவர்களில் 90% பேர் பாஜக கட்சி சப்போர்ட்டர்கள். என்னை கண்டவுடன் அவர்களின் வெறுப்பு பல விதமாக வெளிப்பட்டது. சிலபேர் பேசவே இல்லை. சிலபேர் நீ (2)
இந்த ஜாதியில் இருப்பதால் நீ இப்படியெல்லாம் பேசாதே என அட்வைஸ் செய்தனர். சிலபேர் நேரடி கண்டிப்பும் செய்தனர். இறந்த வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல், வெறுப்புதான் மேலோங்கி இருந்தது. இதை எதற்கு எழுதுகிறேன் என்றால், தேவை என்று வரும்போது கட்சி வேறுபாடு (3)
தெரிவதில்லை. நாம் காந்திஜீ வழி வாழ்பவர்கள் அதனால் தேவை என்று யார் வந்தாலும் அவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையை கொண்டவர்கள். அரசியல் தனி மனித வாழ்வை பாதிக்காத வகையில் நான் உள்ளேன். அரசியலில் ஈடுபடுபவர்கள் மட்டுமே முன்பெல்லாம் அடித்துக்கொள்வார்கள். இப்போது தனி மனிதனை (4)
கூட இந்த வெறுப்பு அரசியல் விடவில்லை. இது எங்கே போய் முடியப்போகிறது என்று கவலையாக உள்ளது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh