How to get URL link on X (Twitter) App
தமிழ்நாட்டில் செயல்படும் குவாரிகளில் இருந்து பெருமளவிலான கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. ஒரு சில குவாரி முதலாளிகளின் நலனுக்காக இயற்கை பாதுகாப்பில் சமரசம் செய்வது கண்டனத்திற்குரியது.

அதை எதிர்த்து இன்று கிராம மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை நோக்கி அமைதி பேரணியை அறிவித்துள்ளார்கள். அதை ஒடுக்க அந்த கிராமத்துனரை அச்சுறுத்தும் வகையில் அதிகளவு காவல் துறையினரை குவித்துள்ளது தமிழக அரசு. இது ஜனநாயகத்திற்கு எதிரானது.
அம்மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தமிழக அரசு, விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இதே நடவடிக்கையை அனைத்து விஷயங்களிலும் கடைபிடிக்க வேண்டும் என கோருகிறோம்.
இந்த விண்ணப்பத்தை 2020 மார்ச்சில் பரிசீலித்த SEIAA, சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு செய்ய ஆய்வு எல்லைகளை (ToR) மட்டுமே வழங்கியது. அதன் பின்னர் நடந்த கூட்டங்களில் ஈஷாவிற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதாக எந்த குறிப்பும் இல்லை.
தமிழகத்தில் உள்ள மூன்று பெரிய துறைமுகங்களின் சரக்குகளை கையாள்வதற்கான கூட்டுதிறன் வருடத்திற்கு 274.9 மில்லியன் டன்கள். ஆனால் 2019-20ல் இந்த மூன்று துறைமுகங்களும் சேர்ந்து கையாண்டது 122.3மி.டன்கள். அதாவது 44% மட்டுமே.