Discover and read the best of Twitter Threads about #அந்தோனி_டி_மெல்லோ

Most recents (24)

#அந்தோனி_டி_மெல்லோ 123
மாஸ்டர் சொன்னார்: மக்கள் சந்தோஷமா இல்லாம இருக்க முக்கிய காரணம் அவங்களோட கஷ்டத்துல அவங்களுக்கு ஒரு குரூரமான திருப்தி கிடைக்குது.
மாஸ்டர் ஒரு முறை தொடர்வண்டியில் மேல் பெர்த்தில் படுத்து இரவுப்பயணம் செய்தார். தூங்கவே முடியவில்லை. காரணம் கீழ் பெர்த்தில்
1/3
இருந்த கிழவி ஒருத்தி ஏதோ முனகிக்கொண்டே இருந்ததுதான். கூர்ந்து கேட்டார். “ கடவுளே எனக்கு எவ்வளோ தாகமா இருக்கு! கடவுளே, கடவுளே! எனக்கு எவ்வளோ தாகமா இருக்கு!”
பாவமே என்று கீழே இறங்கி இரண்டு பெரிய பேப்பர் கப் நிறை தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். ”இதோ உங்களுக்கு தேவையான தண்ணீர்.”
2/3
”கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்!” என்றவாறு வாங்கிக்குடித்தாள்.
அப்பாடா என்று மேல்பெர்த்தில் ஏறிப்படுத்து கொஞ்ச நேரத்தில் தூக்கம் வரப்போகும் நேரத்தில் கிழவி திருப்பி முனக ஆரம்பித்துவிட்டாள்.
“ கடவுளே எனக்கு எவ்வளோ தாகமா இருந்தது! கடவுளே, கடவுளே! எனக்கு எவ்வளோ தாகமா இருந்தது!”
3/3
Read 3 tweets
#அந்தோனி_டி_மெல்லோ 121

நிஷ்காம்ய கர்மம் பற்றி மாஸ்டரிடம் கேட்டார்கள்.
அது அதுவா? அது எந்த பிரதிபலனும் - காசோ, ஏதேனும் லாபமோ, பாராட்டோ- எதிர்பார்க்காம அந்த வேலையை நேசிப்பதாலேயே வேலை செய்வது.
ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு மர வெட்டியை தன் ஆராய்ச்சிக்காக அமர்த்திக்கொண்டார்.
1/3
தன் தோட்டத்துக்கு அழைத்துப்போய் ஒரு மரத்துண்டை காட்டினார். இதை இந்த கோடரியால வெட்டற மாதிரி பண்ணணும். ஆனா கூரான பகுதியை பயன்படுத்தக்கூடாது. வெட்டின விறகு கிடைக்காட்டா பிரச்சினை இல்லை. மணிக்கு நூறு டாலர்.
என்னாடா இது. இந்த வேலைக்கு இவ்வளோ கூலியா என்று தோன்றினாலும் மரவெட்டி
2/3
ஒத்துக்கொண்டார்.
இரண்டு மணி நேரத்துல அவர் வந்து சொன்னார் “ ஐயா! மிடில. நா போறேன்”
“ஏம்பா? நல்ல கூலியாச்சே?”
“ஆமா. இல்லைன்னு சொல்லலை. ஆனா நா மரம் வெட்டறப்ப அது துண்டு துண்டா சிதறணும்!”
3/3
Read 3 tweets
#அந்தோனி_டி_மெல்லோ 119
கடவுளைப்பத்தி யாரும் பேசினால் அவரிடம் கேட்க மாஸ்டரிடம் கேள்வி எப்பவும் இருக்கும்.
ஒரு பிரசங்கி சொன்னார் “ எனக்கு கடவுளைப்பத்தி தெரிஞ்சது இவ்ளோதான்; அவர் ரொம்ப புத்திசாலி, நல்லவர்!”
மாஸ்டர் கேட்டார், “ அப்படின்னா ஏன் கெட்டதுக்கு எதிரா அவர்
1/3
எதுவும் செய்யறதில்லை?”
“எனக்கு எப்படி தெரியும்? நான் ஞானியா என்ன?”
பின்னால் மாஸ்டர் சொன்ன கதை: இரண்டு யூதர்கள் ரெஸ்டாரண்டில் சூப் அருந்திக்கொண்டு இருந்தார்கள். ஒருவர் சொன்னார் “ வாழ்க்கை ஆறின கஞ்சி போல இருக்கு!”
ஏன் அப்படி சொல்லறே?
2/3
எனக்கு எப்படி தெரியும்? நான் என்ன தத்துவவாதியா என்ன?
3/3
Read 3 tweets
#அந்தோனி_டி_மெல்லோ 118

மாஸ்டரின் நண்பர் ஒருவர் சீனாவுக்கு போயிருந்தார், ஒரு படகில் இருந்த போது சற்று தூரத்தில் தொபால் என்று சத்தம் கேட்டது. பார்த்தால் ஒரு ஆசாமி தண்ணீரில் விழுந்துவிட்டிருந்தார். படகுக்காரன் அவருடைய முடியை பிடித்து மேலே தூக்கினான். இருவருக்கும் இடையில் ஏதோ
1/3
சூடான விவாதம் நடந்தது. பின் படகுக்காரர் ஆசாமியை தண்ணீரில் முக்கினார். மேலே வந்த பிறகு திருப்பியும் விவாதம் தொடர்ந்தது.
நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை. தன் படகுக்காரனை பார்த்து என்ன நடக்கிறது என்று கேட்டார்.
“ஒண்ணுமில்லை. படகுக்காரர் ஆசாமியை காப்பாத்த 60 யுவான் பணம் கேக்கறார்.
2/3
இவரோ 40 தான் தருவேன்னு சொல்லறார். பேரம் நடக்குது!”
இதை கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்.
பின்னர் மாஸ்டர் கேட்டார், “ இங்கே யாரும் இருக்கிற தன் ஒரே வாழ்கையைப்பற்றி பேரம் பேசாமல் இருக்கிறீர்களா?”
பலத்த மௌனம் நிலவியது.
3/3
Read 3 tweets
#அந்தோனி_டி_மெல்லோ 116
"ஒரு முட்டாள் மட்டுமே சத்தியத்துக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுக்க தயங்குவான்”என்றார் மாஸ்டர்.
வழக்கம்போல் ஒரு கதை சொன்னார்.
ஒரு சின்ன நாட்டில் நிலத்தடியில் எண்ணை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எண்ணை கம்பெனி ஏராளமான பணம் கொடுத்து அந்த இடத்தில்
1/3
இருந்தவர்களிடம் நிலத்தை வாங்கத்தொடங்கியது. எல்லாருக்கும் நல்ல விலை கிடைத்ததால் விற்றுவிட்டார்கள். ஒரு கிழவி மட்டும் தன் தோட்டத்தை விற்க மறுத்தாள். கம்பனி மெதுவாக தரத்தயாராக இருந்த விலையை ஏறிக்கொண்டே போயிற்று. கிழவி அசைந்து கொடுக்கவில்லை.
2/3
ஒரு நண்பர் அதிர்ச்சி அடைந்து அவளிடம் போய் ஏன் என்று கேட்டார்.
“இது கூடவா உனக்குத்தெரியலை? அந்த தோட்டத்திலேந்து வர வருமானத்துலதான் என் ஜீவனமே நடக்குது! அது வித்துட்டா நான் வருமானத்துக்கு என்ன பண்ணுவேன்?”
3/3
Read 3 tweets
#அந்தோனி_டி_மெல்லோ 115

ஞானம் அடைந்தாயிற்று என்பது பற்றி இன்னொரு காலத்தில் சொன்னார்…
பாபத்தை பாபமாக பார்ப்பதால் ஞானி அதை செய்ய மாட்டான். கொஞ்சம் யோசித்துவிட்டு சொன்னார் “ அதை செய்ய அவனை சபலப்படுத்தவும் முடியாது!
வழக்கம்போல் கதை சொன்னார்:
ஒரு கடத்தல்காரன் பொருட்களை கடத்தி
1/3
வரும்போது போலீஸ் துரத்தியது. வேறு வழி இல்லாமல் கண்ணில் பட்ட மடாலயத்துக்குள் புகுந்து கொண்டான். அங்கிருந்த துறவியைப்பார்த்து கேட்டான் “ சாமி, இதை எல்லாம் இங்கே கொஞ்சம் பதுக்கி வெச்சுக்கறேன். போலீஸ் உங்களை சந்தேகப்பட மாட்டாங்க!”
துறவிக்கு பெரும் கோபம் வந்துவிட்டது!
2/3
“ என்னை என்னன்னு நினைச்சே?”
“சாமி, இதை செஞ்சா உங்க மடாலயத்துக்கு லட்ச ரூபா கொடுக்கறேன்!”
கொஞ்சம் தயங்கிவிட்டு “உஹும்!”
“ரெண்டு லட்சம்?”
அப்பவும் சம்மதிக்கலை.
“அஞ்சு லட்சம் தரேன் சாமி. மாட்டேன்னு சொல்லாதீங்க!”
“வெளியே போடா ராஸ்கல்! என் விலைக்கு ரொம்ப கிட்டே வந்துட்டே!”
3/3
Read 3 tweets
#அந்தோனி_டி_மெல்லோ 113
ஒரு யாத்ரிகர் குழுவினர் தம் பயணத்திட்டத்தில் மாஸ்டரை சந்திப்பதை சேர்த்துக்கொண்டனர்.
மாஸ்டர் முன் வந்து சேர்ந்த பிறகு தங்களுக்கு ஏதேனும் சொல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
மாஸ்டருக்கு அவர்களை பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்கு ஆன்மீக நாட்டம் ஒன்றுமில்லை;
1/4
மாஸ்டரை தரிசிப்பது ஃபேஷன் ஆகிவிட்டதால் அங்கு வந்திருக்கிறார்கள் என்று புரிந்துவிட்டது. சிரித்துக்கொண்டே அவர்களை பார்த்துச்சொன்னார்: நீங்கள் ஆன்மீகவாதிகள் இல்லை என்பதை முதலில் உணருங்கள்.
மூக்கில் குத்தப்பட்டதைபோல உணர்ந்த அவர்கள் விளக்குமாறு கேட்டார்கள்.
2/4
மாஸ்டர் வழக்கம்போல் கதை சொன்னார்: ஒரு முயலும் சிங்கமும் ஒரு வெஜிடேரியன் ஓட்டலுக்குள் நுழைந்தன. எல்லாரும் திகைத்துபோய் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். சர்வரிடம் முயல் சொன்னது, “ ஒரு ப்ளேட் காரட். கூட ஒண்ணும் வேணாம்.”
ஒரு வழியாக சுதாரித்துக்கொண்ட
3/4
Read 4 tweets
#அந்தோனி_டி_மெல்லோ 111
மாஸ்டருக்கு ஒருவர் பணிவு என்கிற பெயரில் தன்னைத்தானே தாழ்த்திச் சொல்லிக் கொள்ளுவதில் உடன்பாடில்லை. அது போலி என்பார். இந்த கதையையும் சொல்லுவார்.
சர்சில் ஒரு நாள் பாதிரியார் உணர்ச்சி வசப்பட்டு மார்பில் அடித்துக்கொண்டு உரக்கக்கூவி அழுதார். “ஆண்டவரே, நான்
1/3
கீழிலும் கீழானவன். கடையினும் கடையேன். எனக்கு உங்கள் கருணையை கேட்கக்கூட தகுதி இல்லை. நான் ஒன்றுமே இல்லை. பூஜ்யம். என் மீது இரக்கம் காட்டுங்கள்”
இதை பார்த்துக்கொண்டு இருந்த சர்ச் மணி அடிப்பவனும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டான். அவனும் முட்டி போட்டுக்கொண்டு மார்பில் அடித்துக்கொண்டு
2/3
உரக்க கூவ ஆரம்பித்தான். “ ஆண்டவரே! நான் பாவி. சூன்யம். என் மீது இரக்கம் காட்டுங்கள்”

இது காதில் விழுந்ததும் பாதிரியார் திரும்பி முறைத்தார். “ ஹா! தோ பாருய்யா, யார் தாந்தான் சூன்யம்ன்னு கூவறது!”
3/3
Read 3 tweets
#அந்தோனி_டி_மெல்லோ - 109
மடாலயத்துக்கு பார்வையாளராக வந்த ஒருவர் மாஸ்டரரைப்பார்த்த போது அவர் ஒளிர்வதாக உணர்ந்தார். அதைப்பார்த்து அவருக்கு வெகு ஆச்சரியம். மாஸ்டரின் பழைய நண்பர் ஒருவரை அவர் சந்தித்தபோது இது பற்றி கேட்டார்.

”ம்ம்ம் இப்படிச்சொல்லாம்.
1/3
வாழ்க்கை ஒரு புதிர். இறப்புதான் அதை விடுவிக்கும் சாவி. அந்த சாவியை நீ திருப்பும்போது புதிரில் நீ காணாமல் போய் விடுகிறாய்.”

பார்வையாளர் கேட்டார். ”நாம் அந்த சாவியை திருப்ப இறப்பு வரை காத்திருக்க வேண்டுமா?”
2/3
”தேவையில்லை. மௌனத்தால் அதை இப்போதே திருப்பலாம். திருப்பி புதிருக்குள் கரைந்துவிடலாம். அப்போது மாஸ்டர் மாதிரி நாமும் ஒளிரலாம்!”
3/3
Read 3 tweets
#அந்தோனி_டி_மெல்லோ - 107
மாஸ்டர் ஒரு நாள் சொன்னார்: அருமையான செயல்கள் எல்லாம் நினைவு பூர்வமாக செய்யப்படுவதில்லை. அவை நினைவற்ற நிலையில் செய்யப்படுகின்றன.
இதற்கு பதிலாக நிறைய ஆட்சேபனைகள் எழுந்தன. சரியான நேரம் வரவில்லை என்று தோன்றினால் மாஸ்டர் பதில் சொல்வதில்லை. வழக்கம் போல
1/3
எல்லாவற்றையும் பதில் சொல்லாமல் தவிர்த்துவிட்டார்.
ஒரு நாள் அவரும் சிலரும் ஒரு மேதையின் பியானோ கச்சேரிக்கு போனார்கள். எல்லோரும் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருக்கும் வேளையில் மாஸ்டர் அருகில் இருந்தவரிடம் கிசுகிசுத்தார்...
2/3
“கைவிரல்கள் பியானோ மீது நர்தனமாடுவதை பார்த்தாயா? அதை நினைவால் செய்ய முடியாது. உயர்தரம் வேண்டுமென்றால் அதை நினைவற்ற நிலைக்கு விட்டுவிட வேண்டும்.”
3/3
Read 3 tweets
#அந்தோனி_டி_மெல்லோ - 106

"ஏன் நிறைய பேர் ஞானம் அடையறதில்லை?”

” ஏன்னா அவங்க உண்மையை தேடலை. எது வசதியா இருக்குமோ அதைத்தான் தேடறாங்க.”

இதுக்கு ஒரு சுஃபி கதை சொன்னார்.

ஒத்தருக்கு பணம் தேவையா இருந்தது. தன்கிட்ட இருந்த ஒரு தரைவிரிப்பை விற்க சந்தைக்குப்போனார்.
1/3
வியாபாரி ஒருத்தர் அதை பாத்துட்டு “இது ரொம்ப பழசா இருக்கு. ரொம்பவே சொர சொரப்பாவும் இருக்கு” ந்னு சொல்லி சல்லிசான விலைக்கு வாங்கினார். பணத்தை வாங்கிகிட்டு பத்தடி போறதுக்குள்ள இன்னொருத்தர் அதை பாத்துட்டு விசாரிச்சார். வியாபாரி “ இதப்போல தரைவிரிப்பு கிடைக்காது சார். சில்க் போல
2/3
எவ்வளோ வழவழப்பா இருக்கு பாருங்க” என்றார்.

இதை எல்லாம் பாத்துக்கொண்டு இருந்த சுஃபி சொன்னார் “ ஓ, வியாபாரி, சொர சொரப்பான தரைவிரிப்பை சில்க் மாதிரி ஆக்கின மந்திரப்பெட்டியில என்னையும் வெச்சு எடேன்!”
மாஸ்டர் சொன்னார் மந்திரப்பெட்டி வேற எதுவும் இல்லை. நம்மோட சுயநலம்தான்!
3/3
Read 3 tweets
#அந்தோனி_டி_மெல்லோ - 98
மாஸ்டருக்கு முல்லா நசருதீன் கதைகள் மிகவும் பிடிக்கும். அவருக்கு மிகவும் பிடித்த கதை இது:

ஓரிரவு முல்லா தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டு இருந்தார். அவரது மனைவி,” தூங்குங்களேன், என்ன பிரச்சினை?” என்றார்.
1/3
”எதிர்வீட்டு அப்துல்லாவுக்கு நாளை ஆறு வெள்ளி காசு திருப்பிக்கொடுக்கணும்; எங்கிட்ட காசு இல்லே. அதான்!”

மனைவி எழுந்தார். வாசலுக்குப்போய் ”அப்துல்லா அப்துல்லா!” என்று கத்தினார்.

அப்துல்லா வெளியே வந்து, ”என்ன விஷயம்?” என்று கேட்டார்.

” தோ பாருங்க; முல்லாகிட்ட

2/3
இப்ப காசு இல்லே. அதனால நாளைக்கு உங்களுக்கு கடனை திருப்பித்தர முடியாது.”

அத்துடன் திரும்பி வந்தார். ”நசருதீன் இப்ப நீ நிம்மதியா தூங்கு, அப்துல்லா தூக்கம் வராம அவஸ்தை படட்டும்!”

அத்துடன் மாஸ்டர் சொல்லுவார்: ”யாராவது பணம் இல்லாம இருக்கணும். அதுக்கு யாரும் அவஸ்தை படணுமா என்ன?”
Read 3 tweets
#அந்தோனி_டி_மெல்லோ - 97

இன்னொரு சீடன் நேரடியாக கேட்டான்.

இறப்புக்கு பிறகு வாழ்க்கை இருக்குன்னு நீங்க நம்பறீங்களா, இல்லையா?

நீ ஏன் அதையே போட்டு உழப்பிட்டு இருக்கேன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.

அதில என்ன ஆச்சரியம்?
1/3
ஜன்னலுக்கு வெளியே கை காட்டி சொன்னார்: இதோ பார்! இது அருமையான வசந்த கால மாலை! இதை அனுபவியேன்! அதை விட்டுட்டு இதை வெச்சுண்டு கொழப்பிக்கறயே! இது எப்படி இருக்குன்னா, சாப்பிடுன்னு அருமையான திண்பண்டங்கள் தன் எதிரே வெச்சு இருக்கறப்ப இதெல்லாம் நாளைக்கு கிடைக்குமா இல்லையான்னு
2/3
ஒரு குழந்தை கேட்டுண்டு சாப்பிடாம இருந்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு! நீ பட்டினியா இருக்கே; முதல்ல சாப்பிடு.
3/3
Read 3 tweets
#அந்தோனி_டி_மெல்லோ - 95

சமயம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வந்த ஒருவர் மாஸ்டரை சந்தித்து ஏதேனும் சிந்தனை ரத்தினத்தை சொல்லுமாறு வேண்டினார்.
மாஸ்டர் சொன்னார்: சிலர் ஒரு வாழ்கைக்கு சம்பாதிக்க எழுதுகிறார்கள். சிலர் தங்களது சிந்தனைகளை வெளிப்படுத்தவோ படிப்பவரது மனதை யோசனையில் ஆழ்த்தவோ
1/3
எழுதுகிறார்கள். இன்னும் சிலர் தன் ஆன்மாவை புரிந்து கொள்ள எழுதுகிறார்கள். இது எதுவும் நீண்ட காலம் தாக்குப்பிடிக்காது…… எழுதாவிட்டால் தலை வெடித்துவிடும் போல யார் உணர்கிறார்களோ அவர்களது எழுத்தே காலத்தை தாண்டி நிற்கும்...
2/3
அவர்கள் எதைப்பற்றி எழுதுகிறார்கள் என்பது முக்கியமில்லை. எதை எழுதினாலும் அதில் தெய்வீகம் வெளிப்படும்!
3/3
Read 3 tweets
#அந்தோனி_டி_மெல்லோ - 94

சட்ட திட்டங்கள் கடவுளின் புனித எண்ணம். அதனால் அவற்றை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்றார் அந்த பிரசங்கி.
மாஸ்டர் காதில் இது விழுந்தபோது அவர் சொன்னார்: என்ன முட்டாள்தனம்! சட்ட திட்டம் நாம் பொறுத்துக்கொள்ள வேண்டிய கொடுமை! எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதை
1/5
வெட்டிப்போட வேண்டும். சட்ட திட்டத்தை பிடிக்கும் என்று சொல்லும் ஆசாமியை காட்டு; ஒரு முட்டாள் கொடுங்கோலனை நான் காட்டுகிறேன்.

பின் ஒரு கதையை சொன்னார். அவருடைய சகோதரி தன் குழந்தைக்கான தள்ளுவண்டியை தள்ளி தள்ளி களைத்து அலுத்துவிட்டார். அதனால் அதில் ஒரு சின்ன மோட்டாரை
2/5
பொருத்திக்கொண்டார்.
அதன் பின் போலீஸ் வந்தது. இந்த மோட்டார் தள்ளு வண்டி மணிக்கு மூன்று மைல் வேகத்தில் செல்லக்கூடியது. அதனால் அது மோட்டார் வாகன சட்டங்களுக்கு கட்டுப்பட்டது.
சரி, அதனால்?
3/5
Read 5 tweets
#அந்தோனி_டி_மெல்லோ - 85

சொற்களின் மகிமை பற்றி மாஸ்டர் சொல்லிக்க்கொண்டு இருந்த போது பின்னாலிருந்து ஒருவர் கூவினார்.

“நீங்க சொல்லறது முட்டாள்தனமா இருக்கு. நான் கடவுள் கடவுள் ன்னு சொல்லிண்டே இருந்தா புனிதமா ஆகிடுவேனா? இல்லை நான் பாபம் பாபம் பாபம் ன்னு சொல்லிகிட்டே இருந்தா
1/3
கெட்டவனா ஆகிடுவேனா?”

மாஸ்டர் சொன்னார் "நாயின் மகனே! உக்காரு!”

கூவினவருக்கு பெரும் அதிர்ச்சி! சற்று நேரம் அவரால் பேசவே முடியவில்லை. பின் மாஸ்டர் மீது சர மாரியாக வசை பொழிந்தார்.
மாஸ்டர் இடை மறித்து "மன்னிக்கணும். நீங்க பெரியவர். நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்.
2/3
நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்டுக்கறேன்!” என்றார்.
உடனே அந்த ஆசாமி தணிந்துவிட்டார்.

மாஸ்டர் சிரித்துக்கொண்டே சொன்னார். "இதோ உங்க சந்தேகத்துக்கான விடை. ஒரு சின்ன வாக்கியம் உங்களை பெரும் கோபத்தில் தள்ள முடிந்தது. ஓரிரு சின்ன வாக்கியங்கள் உங்களை சமாதானப்படுத்த முடிந்தது!"
3/3
Read 3 tweets
#அந்தோனி_டி_மெல்லோ - 84
எதைப்பற்றியாவது மாஸ்டர் அதிகம் பேசி இருப்பார் என்றால் அது வார்த்தைகளைப்பற்றி மட்டுமே!

“வார்த்தைகளைப்பற்றி ஜாக்கிரதையாக இருங்கள்! கொஞ்சம் அசந்து போனால் அவை தம்முடைய வாழ்க்கையை வாழும்: மினுமினுப்பு காட்டும்; மனோ வசியம் செய்யும்; பயமுறுத்தும். அவை
1/4
உண்மையில் எதை பிரதிபலிக்கிறதோ அந்த பொருளிலிருந்து உங்களை வேற்றுப்பாதையில் அழைத்துப்போய் விடும்; அவை தாமே உண்மை என்று நம்ப வைத்துவிடும்”

"நீங்கள் பார்க்கும் உலகம் குழந்தைகள் பார்க்கும் ராஜ்யமான உலகம் அல்ல. வார்த்தைகளால் சுக்கு நூறாக்கப்பட்ட உடைசல்கள்.
2/4
ஒவ்வொரு அலையும் கடலில் இருந்து வேறாக காட்டப்பட்டதைப்போல.

வார்த்தைகளையும் எண்ணங்களையும் அமைதியாக்கி விட்டால் அப்போது ப்ரபஞ்சம் உயிர்த்தெழும். சத்தியமாக; பூரணமான ஒன்றாக.
3/4
Read 4 tweets
#அந்தோனி_டி_மெல்லோ - 83

மாஸ்டரின் பள்ளிகூடத்தில் அவர் கூட படித்த ஒருவர் எப்போதும் மாஸ்டரை துன்புறுத்திக்கொண்டே இருந்தார். இப்போது வெகு காலத்துக்குப்பின் வயதான பிறகு மாஸ்டரின் துறவிக்கூடத்தில் சேர வந்தார். தான் முன்னே பள்ளிப்பருவத்தில் அவரை துன்புறுத்தியதை நினைவில் கொண்டு
1/3
எப்படி நடத்தப்படுவோமோ என்று தயக்கம் இருந்தது. மாஸ்டரோ அவரை அன்புடன் வரவேற்றார்.

சில நாட்கள் சென்றன. மாஸ்டரோ தான் துன்புறுத்தப்பட்டதைப்பற்றி ஒரு முறை கூட பேச்சை எடுக்கவில்லை. மிக்க தயக்கத்துடன் ‘நண்பர்’ அது குறித்து பேச்சை துவக்கினார்.
2/3
பள்ளிப்பருவத்தில் நான் உங்களை துன்புறுத்தியது எல்லாம் நினைவில் இல்லையா?”

“ஓ! அதை எல்லாம் மறந்துவிட்டது மிக நன்றாக நினைவு இருக்கிறது!”

இருவரும் சிரிப்பில் ஆழ்ந்தனர்!
3/3
Read 3 tweets
#அந்தோனி_டி_மெல்லோ - 83
பாசம் பார்வையை மாற்றுகிறது என்பார் மாஸ்டர்.
அவரது சீடர்களுக்கு இது குறித்து அருமையான உதாரணம் மாஸ்டர் ஒரு பெண்மணியுடன் உரையாடிய போது கிடைத்தது.
“உங்கள் பெண் எப்படி இருக்கிறார்?”
ஆஹா! என் செல்லக்குழந்தை … அவளுடைய கணவன் அவளை அப்படி பார்த்துக்கொள்கிறான்.
1/3
கார் வாங்கி கொடுத்திருக்கிறான். நிறைய நகைகள், உடைகள்… வீடு நிறைய எல்லாவற்றுக்கும் வேலையாட்கள். அவளுக்கு படுக்கையிலேயே காலை உணவை கொண்டு வந்து கொடுக்கிறான். மதியம் வரை அவள் எழுந்திருப்பதில்லை. என்ன ஒரு ஆதர்ச கணவன்!”
”ஓஹோ! அப்படியா? ஆமாம் உங்கள் மகன் எப்படி இருக்கிறார்?”
“ஹும்!
2/3
அவனுக்கு என்று வாய்த்து இருக்கிறதே ஒரு மனைவி! என் மகன் அவளுக்கு கார் வாங்கி கொடுத்திருக்கிறான். நிறைய நகைகள், உடைகள்… வீடு நிறைய எல்லாவற்றுக்கும் வேலையாட்கள். ஆனால் மதியம்வரை அவள் எழுந்திருப்பதில்லை. அவனுக்கு காலை உணவைக்கூட கொண்டு வந்து கொடுப்பதில்லை. என்ன ஒரு மோசமான மனைவி!”
3/3
Read 3 tweets
#அந்தோனி_டி_மெல்லோ - 81

மாஸ்டர் ஆசிரியர்களுடன் பேசும் போது நீண்ட நேரம் உற்சாகமாக பேசுவார். ஏனெனில் அவரே ஒரு ஆசிரியராக பணியாற்றியவர்தான். அவர் அந்த சமயங்களில் சொல்லுவார்: "கல்வி என்பது படிப்பு இல்லை; வாழ்கையை புரிந்து கொள்வது என்பதை ஆசிரியர்கள் அடிக்கடி மறந்து விடுகிறார்கள்!"
1/3
வழக்கம்போல் ஒரு கதை சொன்னார். ஒரு நாள் வேலையாக போய்க்கொண்டு இருந்தபோது ஒரு சிறுவன் மீன் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்தார்.
“ஹாய்! மீன் பிடிக்க இது ரொம்ப நல்ல நாள்!”
“ஆமாம்!”
கொஞ்ச நேரம் கழித்து கேட்டார்: “ ஏன் நீ பள்ளிக்கு போகலை?”
2/3
“ஏன்னா, நீங்க சொன்ன மாதிரி மீன் பிடிக்க இது ரொம்ப நல்ல நாள்!
---
அப்புறம் அவரோட பெண்ணுக்கு வந்த ரிபோர்ட் கார்ட்: மீனா நல்லாத்தான் படிக்கறா. ஆனா வாழ்கையை சந்தோஷமா வாழ்வதில நேரத்தை வீணாக்காட்டா இன்னும் நிறைய மார்க் வாங்குவா!
3/3
Read 3 tweets
#அந்தோனி_டி_மெல்லோ - 80
இங்கிதமாக நடந்து கொள்வதைப்பற்றியோ நல்ல பழக்க வழக்கங்களை கொண்டு இருப்பது குறித்தோ மாஸ்டர் மிகவும் குறிப்பாக இருப்பதில்லை. ஆனால் அவர் மற்றவர்களுடன் நடந்து கொள்வதைப்பார்த்தால் அதில் ஒரு மரியாதையும் அழகும் இருக்கும்.
1/3
ஒரு இளம் சீடன் மாஸ்டரை இரவு அவரது வீட்டுக்கு காரில் அழைத்துச்சென்றார். வழியில் ஏற்பட்ட பிரச்சினைக்காக போக்குவரத்து காவலரை மோசமாக திட்டினார். பின் மாஸ்டரிடம் சொன்னார், “நான் எப்படி உணர்கிறேன் என்பதை ஒளித்து வைப்பதில்லை; வெளிப்படையாக சொல்லிவிடுவேன்.
2/3
போலியாக பணிவுடன் நடப்பது வெறும் சூடான காத்துதான்!”
மாஸ்டர் சொன்னார்: ”உண்மைதான். அந்த சூடான காத்துதான் இந்த வண்டியின் டயரில் இருக்கிறது; அது கரடு முரடான சாலையில் பயணத்தை எவ்வளவு சுலபமாக்குகிறது பார்!”
3/3
Read 3 tweets
#அந்தோனி_டி_மெல்லோ - 76
மாஸ்டர் தெருவில் நடந்து போய்க்கொண்டு இருந்தார். ஒரு வீட்டிலிருந்து ஒரு மனிதன் வெகு வேகமாக வெளியே ஓடி வந்தான். இருவரும் மோதிக்கொண்டனர். கீழே விழுந்து சுதாரித்து மெதுவாக எழுந்தனர். அந்த மனிதன் காச் மூச் என்று கத்தி மாஸ்டரை கன்னா பின்னா என்று
1/3
திட்ட ஆரம்பித்தான்.

மாஸ்டர் அமைதியாக தலை சாய்த்து வணங்கினார். பின் சொன்னார்: ”நண்பா நாம் மோதிக்கொண்டதில் இருவரில் யார் தவறு செய்தோம் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அதை நிர்ணயிக்க உங்களுடன் வாக்குவாதம் செய்யப்போவதில்லை.
2/3
ஒரு வேளை நான் தவறு செய்திருந்தால் மன்னித்து விடு. ஒரு வேளை தவறு உனதானால் பரவாயில்லை; மன்னித்துவிட்டேன்!”

புன்னகையுடன் நடக்கலானார்!
3/3
Read 3 tweets
#அந்தோனி_டி_மெல்லோ - 70

ஆன்மீகத்தில் ’ஈடு பட்டு இருந்த’ ஒரு பெண்மணி தான் அன்று காலை பாவமன்னிப்பு கேட்க போயிருந்ததாக மாஸ்டரிடம் சொன்னார்.

“அட! நீங்க அப்படி எந்த பாவமும் பண்ண முடியும்ன்னு தோணலையே? என்ன சொல்லி பாவமன்னிப்பு கேட்டீங்க?”
1/3
”ம்ம்ம்! சோம்பேறித்தனத்தால ஒரு ஞாயித்துக்கிழமை சர்ச்சுக்கு போகலை. ஒரு முறை தோட்டக்காரனை திட்டினேன்.”

”அவ்ளோதானே?”

”ம்ம்ம் .... அஞ்சு வருஷம் முன்னே என் மாமியாரை ஒரு வாரத்துக்கு வீட்டை விட்டு துரத்திட்டேன்!”
2/3
”அது ஆகி அஞ்சு வருஷமாச்சே?”
”ஆமாம். ஆனா அதை ஒவ்வொரு வாரமும் சொல்லி பாவமன்னிப்பு கேட்பேன். அத திருப்பித்திருப்பி நினைவு படுத்திக்கறது பிடிக்குது!”
3/3
Read 3 tweets
#அந்தோனி_டி_மெல்லோ - 67

அந்த மாஸ்டருக்கு தன்னை வழிபடுவது என்பது பிடிக்காது. இது புதிதாக அவரை சந்திப்பவர்களுக்கு அதிர்ச்சியைத்தரும்.
”உன்னை வழிபட ஆரம்பித்துவிட்டார்கள் என்றால் முக்கியமானதை இழந்து விடுகிறார்கள்; அன்புக்கு கொண்டு செல்லும் விழிப்புணர்வை” என்பார்,
1/3
ஏசு அவரை ”கோமானே கோமானே” என்று அழைத்துக்கொண்டு தான் செய்யும் கெட்ட செயல்களை அறியாதவர்களை வெறுத்தார் என்று சுட்டிக்காட்டுவார்.

ஒரு முறை தன்னை பார்க்க வந்தவருக்கு ஒரு வாழைப்பழத்தை கொடுத்தார். அதை பெற்றுக்கொண்டவருக்கு இன்ப அதிர்ச்சி தாங்கவில்லை!
2/3
இவ்வளவு பெரியவர்; நமக்கு வாழைப்பழம் தந்து இருக்கிறாரே? அதை என்ன செய்வது என்று புரியாமல் நின்றார். மாஸ்டர் சொன்னார்: ”அந்த முட்டாளை அந்த பழத்தை சாப்பிடச்சொல்லு!”
3/3
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!