Discover and read the best of Twitter Threads about #அம்பாள்வழிபாடு

Most recents (24)

#ஸ்ரீ_மீனாட்சி_அம்மன்

மதுரை மீனாட்சி அம்மன் தனி சிறப்புகள்!

1. மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.

2. அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக.
3. அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால் கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல் பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும்.
4. அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின் சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை.
Read 11 tweets
#ஸ்ரீ_ராஜ_மாதங்கி

சியாமளா நவராத்திரி சிறப்பு :*

அன்னை ராஜராஜேஸ்வரியின் கரும்பு வில்லிலிருந்து உதித்தவளும்,

லலிதாம்பிகையின் மந்திரிணியாக இருப்பவளும்,

அன்னை லலிதைக்கும் தனக்கும் எந்த ஒரு பேதமும் இல்லாதவளும்,

தேவி லலிதையை விட்டு ஒரு கணம் கூட பிரியாதவளும், Image
அன்னை லலிதா பராபட்டாரிக்கைக்கு பிரியமானவளுமான ராஜ சியாமளா தேவியை மாக நவராத்திரியில் (சியாமளா நவராத்திரி) பூஜிப்பது மிகவும் விசேஷம்.

மேலும் மாசி மகம் அன்று சியாமளா தேவியை பூஜிப்பது விசேஷம்.

அதிலும் 12 மாசி மகம் இடைவிடாது யார் ஒருவர் சியாமளா தேவியை பூஜிக்கிறார்களோ
அவர்கள் கீர்த்தி, பேர், புகழ், அரசு பதவி அடைவர்.

சியாமளா தேவிக்கு உகந்த மலர் வெண்தாமரை, செண்பகம்.

வஸ்திரம் - சிகப்பு மற்றும் பச்சை பட்டு.

நைவேத்தியம் - சர்க்கரை பொங்கல், பால் பாயசம் ஆகும்.
Read 7 tweets
*#சியாமளா_நவராத்திரி*

* 22.01.2023 தை வளர்பிறை பிரதமை திதி* முதல் சியாமளா நவராத்ரி ஆரம்பம்*🌹

நவராத்திரி கேள்வி பட்டிருப்போம் அதென்ன சியாமளா நவராத்திரி.

மொத்தம் 4 நவராத்திரிகள் உள்ளது என்பது பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும்.

அதைப் பற்றி காண்போம்:
சாக்த சமயம் என்பது அம்பிகையின் வடிவங்களை பிரதானமாகக்கொண்டு பூஜிப்பது.

இதில் அன்னைக்கு நவராத்திரி என்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

பொதுவாக நவராத்திரி என்றவுடன் சாரதா நவராத்திரி என்று சொல்லப்படுகின்ற புரட்டாசி மாதத்தில் வரும் ஆயுத பூஜை, விஜயதசமி உடன் கூடிய
நவராத்திரி மட்டுமே அனைவரின் நினைவுக்கும் வரும்.

அதுமட்டுமன்றி ஒரு ஆண்டுக்கு நான்கு நவராத்திரிகள் உள்ளன.

1) *ஆஷாட நவராத்திரி*

ஆனி மாதம்  அமாவாசை முடிந்த பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இது வராகி தேவிக்குரிய நவராத்திரி ஆகும்.
Read 20 tweets
#நெய்_குள_தரிசனம்

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் வருடத்தில் மூன்று முறை மட்டுமே கிடைக்கும்.

1. வைகாசி மாதம் பெளர்ணமி
2. விஜய தசமி
3. தை அமாவாசை

கருவறைக்கு முன்பாக 15 அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர். Image
அத்துடன் புளி சாதம், தயிர்சாதம்
போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும்.
சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர்.

அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட
அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும்.
Read 5 tweets
🌺 (21/01/23 ) *தை* *அமாவாசையில்* *முழுநிலவு உற்சவம்!*

திருக்கடவூர்
அன்னை அபிராமி உடனமர் அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோயிலில் தை அமாவாசை அன்று மாலை....

அன்னை அபிராமி தனது பக்தர் அபிராமிப் பட்டருக்காக அமாவாசை அன்று முழுநிலவு காட்டிய ஐதீகவிழா நடைபெறும். Image
திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில், தை அமாவாசை அன்று மாலை 7 மணிக்கு மேல் தருமபுரம் ஆதீனம் பங்கேற்க அபிராமி பட்டர் உற்சவம் நடைபெறும்.

அப்போது அபிராமி அந்தாதி பாடப்படும். அந்த சமயத்தில் அபிராமி அம்மன் நவரத்தின அங்கி அணிந்து வீற்றிருப்பார்
ஒவ்வொரு
பாட்டின் நிறைவிலும் அபிராமி அம்மனுக்கு தங்கக் காசு சமர்ப்பித்து, தீபாராதனை செய்யப்படும்.

79 – வது பாடலின்போது ஆலய கொடி மரத்தின் அருகில் பவுர்ணமி தோன்றும் ஐதீக நிகழ்வு நடத்திக் காட்டப்படும்.
Read 8 tweets
#சாகம்பரி

அம்பாளின் சாகம்பரி அலங்காரம் !

ஒரு போகி பண்டிகையன்று காமாட்சியம்மன் கோவிலுக்கு காஞ்சிப் பெரியவர் வந்தார்.

அங்கிருந்த சாஸ்திரியிடம், “பொங்கலன்று அம்பாளை சாகம்பரியாக அலங்காரம் (காய்கறிகளால் அலங்கரித்தல்) செய்யுங்கள்.

இந்த வடிவில் அம்பாளை தரிசித்தால் பாவம் தீரும்.
புத்திர பாக்கியம், ஆரோக்கியம் உண்டாகும்.

அம்பாளை மட்டுமின்றி கோவிலின் எல்லா இடங்களிலும் காய்கறி, பழங்களால் தோரணம் கட்டுங்கள்” என்றார்.

“இதற்கு இரண்டு மூன்று லோடு காய்கறியை தருவிக்க வேண்டுமே! ஒரே நாளில் அது சாத்தியமில்லையே!” என்று நினைத்த சாஸ்திரி,
அதை அடுத்த ஆண்டு நடத்தலாமே!” என்றார் பணிவுடன்.

பெரியவர் அவரிடம்,

“அம்பாளிடம் விருப்பத்தைச் சொல்லிட்டேன்.
அவள் பாத்துக்குவா,”

என்று சொல்லி விட்டார்.

அன்று மாலை சென்னை கொத்தவால் சாவடியில் (கோயம்பேடு) இருந்து மூன்று லாரிகள் கோவில் முன் வந்து நின்றது.
Read 7 tweets
#கொல்லூர்_மூகாம்பிகை

மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள்.

கவிஞர்கள்,

எழுத்தாளர்கள்,

இசைக்கலைஞர்கள்,

பாடகர்கள்,

திரைத்துறையினர்,

நாட்டியமணிகள்,

சிற்பிகள்,

ஓவியர்கள்

போன்ற பல்வேறு துறையைச் சார்ந்த கலைஞர்கள்
தங்கள் கலைத்திறன் சிறப்படைய வேண்டும் என்று கொல்லூர் மூகாம்பிகையை தொழுது செல்கின்றனர்.

அம்மனை சீவேலி என்று ஆலயத்தைத் திருவலம் செய்விக்கும் போது

காலையில் உலா வருகின்ற தேவி காளியின் அம்சமாகவும்,

உச்சியில் உலா வருகின்ற தேவி திருமகளின் அம்சமாகவும்
இரவில் உலா வருகின்ற தேவி கலைமகள் அம்சமாகவும் பாவிக்கப்படுகிறாள்.

அம்பாள் பத்மாசனத்தில் அமர்ந்த கோலம் ஆதி சங்கரர் தன் மனக்கண்ணில் இருந்த அம்மன் திருவுருவத்தை விஷ்வகர்மாக்களிடம் விளக்கி அவ்வாறே பஞ்சலோகத்தில் செய்யச் சொன்னார்.
Read 5 tweets
#நவ_சக்திகள்

நவ சக்திகள் என்பவர்கள் யார் யார்?

சக்தி என்ற சொல் பராசக்தியையே குறிக்கும்.

சிவன் அனைத்து உயிரினங்களின் உடலில் கலந்து நிற்க அந்த உயிரினங்களுக்கு உயிரினை தருபவள் சக்தியே.

பராசக்தியின் வடிவங்கள் பலப்பல. Image
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சக்தி வடிவமாகப் பராசக்தி விளங்குகிறாள்.

அன்னை பராசக்தியே இந்த உலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து நின்று உலக இயக்கத்தினை உருவாக்குகிறாள்.

சக்தியை வழிபடும் சாக்த மதத்தில் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் முதன்மையானது
ஒன்பது இரவுகள் உபவாசம் இருந்து அழிபடும் நவராத்திரி விரதமாகும்.

நவசக்திகளின் பெயர்கள்:

மனோன்மணி:

பாவ புண்ணிய கணக்கிலிருந்து விடுபட்டுப் பக்குவமடைந்த உயிர்களை உலக இன்பங்களிலிருந்து விலக்கி சிவனுடன் சேர்க்கும் வல்லமை கொண்டவள்.
Read 7 tweets
#வராஹி_தேவி

இன்றைய பஞ்சமி வராஹி வழிபாடு

வராஹி தேவி வழிபாட்டை பொறுத்தவரை சுத்தம் என்பது மிக மிக அவசியம்.

மனதும் சுத்தமாக இருக்க வேண்டும்.

நாமும் சுத்தமாக இருக்க வேண்டும்.

நம்மை சுற்றி இருக்கக் கூடிய இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். Image
பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு வராஹி அம்பாளின் திருவுருவ படத்திற்கு சிவப்பு நிற அரளி பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

வராஹி தேவியின் படம் இல்லை என்றால் ஒரு மஞ்சளைப் பிடித்து வைத்து அதை வாராகி அம்மனாக பாவித்து கொண்டு இந்த பூஜையை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
பூஜை அறையில் நீங்கள் ஏற்றி வைத்திருக்கு தீபத்திற்கு முன்பு வாராஹி அம்மனை மனதார நினைத்து அமர்ந்து கொள்ள வேண்டும்.

பின் கீழ கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 27 முறை உச்சரிக்கவும்.

#மந்திரம்

ஓம் நமோ பகவதி ரீம் ஹ்ரீம் ஜம் க்லௌம் மஹா
வராஹ முகி தாயே நமோ நமஹ.
Read 6 tweets
#வன_துர்க்கை

தினமும் காசிக்குப் போகும் கதிராமங்கலம் வன துர்க்கை!

மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவு.

இங்கு தான் தனக்கென தனிக்கோயில் கொண்டு அருளாட்சி புரிகிறாள்,

ஸ்ரீ வன துர்கா பரமேஸ்வரி.
இந்த அம்பிகை அனுதினமும் காசிக்குச் சென்று வருவதாக ஐதீகம்.

அதற்குக் காரணம் ஒரு முனிவர்!

வேதங்களே விருட்சங்களாக வளர்ந்து நின்று இறைவழிபாடு செய்த புண்ணியம்பதியாம் வேதாரண்யம் திருத்தலத்தைத் தரிசிக்கச் சென்று கொண்டிருந்தார் அந்த முனிவர்.
அவர் செல்லும் வழியில், அசுரன் ஒருவன் மலை உருவில் நெடிதுயர்ந்து வளர்ந்து நின்று அவரை வழிமறித்தான்.

அவனை அழிக்கும் சக்தி வேண்டும் என்று துர்கா தேவியைப் பிரார்த்தித்து தவம் செய்தார் முனிவர்.

அவருடைய தவத்தால் மகிழ்ந்த துர்கை, முனிவருக்குக் காட்சி தந்தாள்.
Read 28 tweets
#கோலவிழி_அம்மன்

சென்னை கோலவிழி
அம்மன் ஆலயம்

பச்சைப் பட்டுக் கோல விழி அம்மன் என்கின்ற ஆலயம் மயிலை லஸ் பகுதியில் சம்ஸ்கிருத காலேஜ் அருகில் உள்ளது.

அந்த ஆலயம் எப்போது வந்தது என்பதற்கான குறிப்புகள் இல்லை .
ஆனால் அது கபாலீஸ்வரர் ஆலயத்துக்கு முற்பட்ட ஆலயம் என்பது மட்டும் தெரிகின்றது.

ஆகவே ஆலயம் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க வேண்டும்.

ஆலயத்தின் அமைப்பை பார்ப்பதில் இருந்து அது முன் ஒரு காலத்தில் கிராம தேவதை அல்லது காவல் தெய்வமாகவே இருந்து இருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது.
அவளது கண்கள் மிகப் பெரியதாக உள்ளதால் பயம் ஏற்படும்.

அதனால் ஊருக்குள் நுழைய நினைக்கும் தீய சக்திகள் அதைக் கண்டு பயந்து ஓடுமாம்.

மூலஸ்தானத்தில் கோலவிழி அம்மனும் பத்ர காளியும் உள்ளனர்.
Read 6 tweets
#ரம்பா_திரிதியை

இன்று ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் ரம்பா திரிதியை !

ரம்பா, கௌரிதேவியை வழிபட்டு வரம் பெற்ற  நன்னாளே ரம்பாதிரிதியை.

இந்த நாளில் விரதமிருந்து வழிபடும் பெண்கள் அனைவருக்கும் பேரழகும் செல்வமும் பெருகும் என்று வரம் அருளினாள் அம்பிகை.
சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் திரிதியை ‘அட்சய திரிதியை’. ஆனால், பெண்களுக்கு அதே ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் விரதமே ‘ரம்பாதிரிதியை.’

இந்தத் திரிதியையன்று தான் கௌரி தேவியாகிய காத்யாயனியை வழிபட்டு, ரம்பா, தான் இழந்த பேரழகையும் செல்வத்தையும் திரும்பப் பெற்றாள்.
கார்த்திகை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் நாள் ரம்பா திருதியை கொண்டாடப்படுகிறது.

தேவலோகப் பேரழகியான ரம்பை, தன் அழகும் ஐஸ்வரியமும் கூடுவதற்காக இந்திரன் அறிவுரையின் பேரில் கௌரிதேவியாகிய காத்யாயனியை வழிபட்ட நன்னாள் இது என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
Read 37 tweets
#ராகு_கால_துர்கா_பூஜை

*அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் ராகு காலம் துர்கா பூஜை*!

ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பது பலரது பொதுவான கருத்தாக உள்ளது.
ஆனால் இது விசேஷ பூஜைகள் செய்து, வேண்டிய வரத்தினை பெறுவதற்கான நல்ல நேரம்.

பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால் தான், ராகு காலத்தில் சுப காரியங்களைத் தவிர்க்கச் சொன்னார்கள்.
அதே சமயம் ராகு காலத்தில் துர்க்கை தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரும் என்கிறது தேவி பாகவதம்

ராகுவின் சிறப்பு:

ராகுவைப் போல நல்லவைகளை அள்ளிக்கொடுப்பவர் யாருமில்லை.

ராகுவின் நிலையைப் பொருத்து நமக்கு நன்மைகள் தேடி வரும்.
Read 21 tweets
#ஸ்ரீ_சக்கரம்

ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் சில

🌹 *காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்ரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன.* Image
🙏🏻 லலிதா ஸஹஸ்ர நாமத்தை இயற்றிய வசின்யாதி வாக்தேவதைகள் எண்மரும் இதில் எழுந்தருளியுள்ளனர்.

🌹பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புனுகு, சந்தனம் சாத்தப்படுகிறது.

🌹கும்பகோணம்-மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன்
ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

🌹 *புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி முன் உள்ள மகாமேரு, சாந்தானந்த சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.*

🌹 *ஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவியின் முன் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்துள்ளார்.*
Read 12 tweets
#கடன்_நிவர்த்தி

*தீராத கடன் பிரச்சனை தீர எருமைக்கன்று நேர்த்திக்கடன்!!!

தஞ்சாவூருக்கு அருகில் வல்லம் எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது கெளரியம்மன் திருக்கோயில்.

சோழர்கள் காலத்துக் கோயில். கரிகாற் சோழன் காலத்துக் கோயில்.

சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த ஆலயம்
என்கிறார்கள் பக்தர்கள்.

சோழரின் கட்டிடக் கலைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் கோயிலின் கருவறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. 

தஞ்சாசுரன் எனும் கொடிய அரக்கன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்து, தவத்தின் பலனாக வரம் கிடைக்க வேண்டும் என விரும்பினான்.
சிவபெருமானும் வரம் தர முன்வந்தார். அவனும் வரம் கேட்டான்.

‘சிவபெருமானாகிய நீங்கள், மகாவிஷ்ணு, பிரம்மா என மூவராலும் எனக்கு மரணம் வரக்கூடாது.

மேலும் எந்த ஆணாலும் எனக்கு உயிர் போகக்கூடாது.

பெண்ணைத் தவிர யாராலும் எதுவாலும் நான் மாண்டு போகக்கூடாது.
Read 16 tweets
#அன்னை_நவசக்தி_வடிவங்கள்

*அன்னையின் நவசக்தி வடிவங்கள்*

*மனிதனின் வாழ்க்கைத் தேவை, அருளோடு வரும் பொருள்வளம் கொடுப்பவளான திருமகள் அஷ்டலக்ஷ்மிகளாக வணங்கப்படுகிறாள்* .
சைவசமயமும், சாக்தசமயமும்
அம்பிகைக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பிக்கிறதோ அதே அளவு *ஸ்ரீவைஷ்ணவமும் தாயாருக்கு சிறப்பிடம் கொடுக்கிறது* சைவத்தில் நவசக்தியாக வழிபடப்படும் தேவி, *ஸ்ரீ வைஷ்ணவத்தில்*
*ஆதிலக்ஷ்மி*
*தனலக்ஷ்மி*
*தான்யலக்ஷ்மி*
*சந்தானலக்ஷ்மி*
*மஹாலக்ஷ்மி*
*கஜலக்ஷ்மி*
*விஜயலக்ஷ்மி*
*வீரலக்ஷ்மி*

என்ற *அஷ்டலக்ஷ்மிகளாக* போற்றி வணங்கப்படுகிறாள் ..
Read 10 tweets
#துர்க்காஷ்டமி சிறப்பு பதிவு :

மஹிஷாசுரனை பராசக்தி வதம் செய்த வரலாறு அனைவருக்கும் தெரியும்.

அந்த அசுரன் வீழ்த்தப்பட்ட இடத்திற்கு 'மஹாபல கிரி' என்று பெயர்.

விக்ரமாதித்த மஹாராஜா ஒரு சிறந்த காளி உபாசகர்.

இவர் மஹிஷன் சம்ஹரிக்கப்பட்ட அதே இடத்தில், Image
பராசக்திக்கு ஒரு கோயில் கட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டு அவ்வண்ணமே செய்தார். அதுதான் இன்று நாம் தரிசிக்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில்.

துர்க்கம் என்றால் கோட்டை என்று அர்த்தம்.

தன் பக்தர்களை துன்பங்கள் அணுகாமல் காவல் கோட்டையாக இருந்து காப்பாற்றும் கடவுளை துர்க்கை என்கிறார்கள்.
துர்க்கமன் என்ற அசுரனை அழித்தாள் மகாசக்தி.

எனவே அவளை துர்க்கை என்கிறார்கள்.

துர்க்கை மகிஷாசுரனை அழிக்கும் முன் ஒன்பது நாட்கள் தவமிருந்தாளாம்.

விஜய தசமி
அன்று மகிஷனை அழித்து வெற்றி பெற்றாளாம். நவராத்திரி என்ற சொல்லில் உள்ள 'ராத்திரி' என்ற சொல்லுக்கு துர்க்கை என்ற பொருள்.
Read 16 tweets
#சக்தி_பீடங்கள்

மிக நீண்ட மற்றும் முக்கியமான பதிவு :

51 சக்தி பீடங்களை பற்றி பலவிதமான மாறுபட்ட கருத்துக்கள் உண்டு

இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை *திருவாவடுதுறை ஆய்வுமையத்தில் கூறப்பட்டவாறு காட்டப்பட்டுள்ளது.
01) முதல் சக்திபீடம் ~ *அட்டஹாஸம்., மேற்கு வங்காளம்*

விழுந்த அங்கம் ~ *கீழ்உதடு*

விழுந்தஇடம் ~ *அட்டஹாஸம் அஹ்மத்பூர் - காட்வா பாதையருகில் - லாப்பூர்*

தேவியின் பெயர் ~ *புல்லரா*

பைரவர் பெயர் ~ *விஸ்வேஸ பைரவர்*
02) இரண்டாம் சக்திபீடம் ~ *உத்கலம் பீஹார்*

விழுந்த அங்கம் ~ *தொப்புள்*

விழுந்த இடம் ~ *உத்கலபீடம் ஹவுரா - வால்டேர் வழியில் குர்தா ரோடு வழியே பூரி*

தேவியின் பெயர் ~ *விமலா*

பைரவர் பெயர் ~ *ஜகந்நாத பைரவர்*
Read 57 tweets
குலதெய்வம் தெரியாதவர்கள் வணங்க வேண்டிய துர்க்கை :

நம்முடைய குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குகிறோம்.
குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம் கூடவே இருந்து வழிகாட்டும் அருள்சக்தியாகக் கருதப்படுகிறது. 

பெரும்பாலான சிலருக்கு தங்கள் குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் இருக்கும்.

இதனால் அவர்களுக்கு பல சோதனைகள் ஏற்படுவதாகச் சொல்வதுண்டு.
இப்படி குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்கள் வழிபாடு செய்வதற்கென்றே அகத்தியர் பூஜித்த துர்க்கை கோவில்  கும்பகோணம் அருகிலுள்ள குத்தாலத்தில் இருந்து 3 கி.மீ., தூரத்திலுள்ள கதிராமங்கலத்தில் உள்ளது. 

கதிர் வேய்ந்த மங்கலம் என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் இவ்வூரைக் குறிப்பிடுகிறார்.
Read 9 tweets
*நவராத்திரியில், கொலுவுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம் பெறுவது, பெண்களுக்கு வழங்கும் தாம்பூலம் தான்*

தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்குக்கு வழங்கப்படும் பொதுப்பெயர்.
வீட்டிற்கு பெண்கள், பெண் குழந்தைகள் வந்தால், கட்டாயம் தாம்பூலம் தர வேண்டும். குறைந்த பட்சம் மஞ்சள் , குங்குமமாவது தர வேண்டும்.

வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வசிப்பதால் , வெற்றிலை சத்தியத்தின் சொரூபமாக பார்க்க படுகிறது,
எல்லா தெய்வ பூஜைகளிலும், தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு. நிவேதனத்திற்கு வெற்றிலை, பாக்கு மிகவும் அவசியம். அம்பாளை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று தாம்பூலம் தருதல்.
Read 10 tweets
#நவகன்னிகா_வழிபாடு

நவகன்னிகா வழிபாடு என்பது நவராத்திரி ஒன்பது நாட்களிலும் இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலுள்ள சிறுமிகளை அம்பாளாக பாவித்து, வயது வரிசைப்படி, ஒரு நாளைக்கு ஒரு குழந்தை வீதம், குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து, பூஜித்து வழிபடுவது முறையாகும்.
அதன்படி,

முதல் நாளில் 2 வயதுக் குழந்தை - குமாரி

இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை - திரிமூர்த்தி

மூன்றாம் நாள் - 4 வயதுக் குழந்தை - கல்யாணி

நான்காம் நாள் - 5வயதுக் குழந்தை - ரோஹிணி

ஐந்தாம் நாள் - 6 வயதுக் குழந்தை - காளிகா
ஆறாம் நாள் - 7 வயதுக் குழந்தை - சண்டிகா

ஏழாம் நாள் - 8 வயதுக் குழந்தை - சாம்பவி

எட்டாம் நாள் - 9 வயதுக் குழந்தை - துர்கா

ஒன்பதாம் நாள் - 10 வயதுக் குழந்தை - ஸுபத்ரா

என்று வணங்கப்படுவார்கள்.
Read 4 tweets
#நவராத்திரி_நிவேதனங்கள்

நவராத்திரியின் ஒன்பது நாளும் வெண் பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், கதம்ப சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை அம்பிகைக்கு நிவேதனம் செய்யலாம்.

நவதானியச் சுண்டல் நிவேதனம், நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும்.
கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.

இருப்பினும் வாசகர்கள் வசதிக்காக ஒரு சிறு பட்டியலைத் தருகிறோம்.
1 ம் நாள். நைவேத்தியம். வெண் பொங்கல். சுண்டல் வெள்ளை கொண்டக்கடலை.

2 ம் நாள் நைவேத்தியம். புளியோதரை. பயத்தம் பருப்பு சுண்டல்.

3 ம் நாள் நைவேத்தியம். சக்கரைப் பொங்கல். மொச்சை கடலை சுண்டல்.
Read 6 tweets
இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்

கால தேவிக்க இந்த கோயில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி கிராமத்தில் உள்ளது.
கோயிலில் கோபுரத்திலே
” நேரமே உலகம்’ என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

காலதேவியின் இயக்கத்தில் தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது.

காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு.
நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம்.

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட் டு, சூரிய உதயத்திற்குமுன் நடை சாத்தப்படுகிறது.
Read 9 tweets
#குங்கும_மகிமை

குங்குமம் பெண்களின் அழகுக்கானது மட்டுமல்ல, மங்களச் சின்னமும் ஆகும்.

இதை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் விசேஷமானது.
பெண்கள் குங்குமம் இடுவதால் மகா லட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.
மாங்கல்யம், நெற்றி, தலைவகிடு ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது. கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது.
Read 20 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!