Discover and read the best of Twitter Threads about #அருணகிரிநாதர்

Most recents (5)

#ஸ்ரீமுருகப்பெருமானின்_ஆறுபடைவீட்டுச்_சிறப்புகள்
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய 6 தீப்பொறிகள் ஒன்றிணைந்து ஆறுமுகனாய் உருவானதை புராணம் சொல்கிறது. உலகம் உய்வதற்காக பரம்பொருளான சிவபெருமானால் தோற்றுவிக்கப் பட்ட அவதாரமே ஆறுமுகப் பெருமான். கருணையே வடிவான 6 திருமுகங்களை, Image
12 கரங்களை தாங்கி அருள் பாலித்து அடியவர்களை காக்கும் கலியுகக் கடவுள் அவர். #முருகு எனும் சொல் அழகு, இளமை, தெய்வ நலம், மணம் ஆகிய பொருள்களைக் குறிக்கும். முருகு என்னும் திருப்பெயரோடு அன் விகுதி சேர்த்து #முருகன் என்னும் திருப்பெயர் சூட்டிப் போற்றி வழிபடுகிறோம். சூரபத்மன் என்னும்
அசுரன் பலகாலம் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவமிருந்தான். தவத்தின் வலிமையால் சிவபெருமானிடம் 108 யுகங்கள் வாழும் ஆயுளும், 1008 அண்டங்களை ஆளும் அதிகாரத்தையும், சிங்க வாகனமும், இந்திர ஞானத்தேரும், அழியாத வஜ்ஜிர தேகமும், சிவனது சக்தியினாலன்றி வேறு எந்தச் சக்தியினாலும் அழிக்க முடியாத
Read 16 tweets
#பழனி_தண்டாயுதபாணி_திருக்கோயில்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் சிறு குன்றின் மேல் தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இக்கோவில் முருகனின் ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். புராண காலங்களில் திருஆவினன்குடி என்றும் தென்பொதிகை என்றும் அழைக்கப்பட்டது
முருகனின் விக்ரகம் நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப் பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப் பொருட்கள் சேர்ந்தது. இவை ஒன்று சேர்ந்து மருந்தாக அமைகிறது. இந்த நவபாஷாண விக்ரகம் மீன்களை போன்று செதில்களை கொண்டு உயிர்ப்புடன் இருந்து வியர்ப்பது ஓர்
அதிசயம். வெப்பத்தை தணிக்க கொடுமுடி தீர்த்தம் கொண்டு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவில் விக்ரகத்தின் மீது முழுவதுமாக சந்தனக்காப்பு சத்தப்பட்டு காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப் படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
Read 19 tweets
#சிவராத்திரிஸ்பெஷல் #சிவானந்தலஹரி ஸ்லோகம்26ல்
கதா³ வா த்வாம் த்³ருʼஷ்ட்வா கி³ரிஶ தவ ப⁴வ்யாங்க்⁴ரியுக³ளம்
க்³ருʼஹீத்வா ஹஸ்தாப்⁴யாம் ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந் ।
ஸமாஶ்லிஷ்யாக்⁴ராய ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலா-
நலப்⁴யாம் ப்³ரஹ்மாத்³யைர்முத³மநுப⁴விஷ்யாமி ஹ்ருʼத³யே ॥ 26
பரமேஸ்வரனின்
திருவடியை சேவிப்பதின் பேரின்பத்தை வர்ணிக்கிறார்.
“ஹே கி³ரிஶ”– மலையில் வசிப்பவரே!
‘த்வாம் த்³ருʼஷ்ட்வா’ – உங்களை தரிசனம் செய்து
‘தவ ப⁴வ்ய அங்க்⁴ரியுக³ளம்’ – உங்களுடைய மங்களகரமான, சுபமான அந்த திருவடித் தாமரைகள் இரண்டையும்
‘ஹஸ்தாப்⁴யாம் க்³ருʼஹீத்வா’ – கைகளால் பற்றிக்கொண்டு
‘ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந்’ – தலையிலும், கண்களிலும், மார்பிலும் வைத்துக்கொண்டு
‘ஸமாஶ்லிஷ்ய’ – இறுகக் கட்டிக் கொண்டு,
‘ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலான் ஆக்⁴ராய’ – நல்ல மலர்ந்த தாமரைப் போன்ற அந்த பாதங்களின் நறுமணத்தை முகர்ந்து,
‘ப்³ரஹ்மாத்³யைஹி அலப்⁴யாம்’ – பிரம்மாதி தேவர்களுக்கும்
Read 13 tweets
#ஆடிகிருத்திகை இன்று திருமுருகப் பெருமானை வணங்குதல் சிறப்பு. #அருணகிரிநாதர் அருளிச் செய்துள்ள திருவகுப்புகளுள் ‘மணி, மந்திரம், ஔஷதம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முதன்மையானவை. அவை:
1. சீர்பாத வகுப்பு  தமிழில் உள்ள முருகன் துதிகளிலேயே மிக மிக அழகானது. அருள்
நெறியிற் சேர்த்து ஞானம் அளிக்கும்.
2. தேவேந்திர சங்க வகுப்பு, அம்பாளை போற்றும் அழகான தமிழ் துதி. வள்ளிமலை சுவாமிகள் இதை ஷோடஷாக்ஷரி மந்திரத்துக்கு நிகரானது என்று கூறியுள்ளார். இதை பாராயணம் செய்தால், இந்த உலகத்தில் நல்ல வாழ்க்கையும், தவநெறியில் செல்லும் நல்லூழும், முடிவில் சிவலோகம்
சித்திக்கும்.
3. வேல் வகுப்பு, எவ்வித ஆபத்தையும் நீக்கி உயிர்த்துணையாய் நிற்பது. பூதம், பிசாசு ஆதிய துஷ்டப் பகைகளையும், யமனையும் வெருட்ட வல்லது. அருணகிரிநாத சுவாமிகள்
ஆசைகூர் பத்தனேன்மனோ பத்மமான பூ வைத்து …… நடுவேயன்
பானநூ லிட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி …… யொருஞான
வாசம்வீ
Read 7 tweets
இன்று ஆனி மூலம். #அருணகிரிநாதர் குரு பூஜை.(ஜெயந்தி)
அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும். இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும்,
நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூல்களாகவும் உள்ளன. அவர் இளம் வயதில் பல தீய பழக்கங்களுடன் இருந்தார். அவர் மாறுவர் என்று நம்பிய சகோதரி மற்றும் மனைவியை ஒரு சமயத்தில் மிகவும் மன வருத்துத்ததிற்கு உட்படுத்தி வீட்டை விட்டே வெளியேறினார். குழப்பமான மன நிலையில்
கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைப் பார்த்து (அவர் தான் அருணாசலேஸ்வரர் என்று ஒரு சாராரும் குமரக் கடவுள் என்று ஒரு சாராரும் சொல்கின்றனர்) அவருக்கு, குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும்
Read 16 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!