Discover and read the best of Twitter Threads about #அர்த்தமுள்ள_இந்துமதம்

Most recents (5)

#மகாபெரியவா
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.-
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
கவியரசர் கண்ணதாசன், தான் எழுதிய #அர்த்தமுள்ள_இந்துமதம் என்ற புத்தகத்தை ஒரு தட்டில் வைத்து, பெரியவாளிடம் சமர்ப்பித்தார். பெரியவாள், புத்தகத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தார்கள்.
"பெரிய விஷயங்களையெல்லாம், எளிமையா எழுதியிருக்கே போலிருக்கு" -பெரியவா
கவிஞரின் இதயம் ஆனந்தத்தில், திளைத்துக் கொண்டிருந்தது. பெரியவாள் தொடர்ந்தார்கள். "பாரத தேசத்திலே, எத்தனையோ மஹான்கள் இருந்திருக்கா. ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஒரு விசேஷம் இருக்கும். சில சந்யாஸிகள், பால் மட்டுமே
உட்கொண்டு வாழ்ந்திருக்கா. ஒருத்தர் கங்காஜலம் மட்டும்தான் சாப்பிடுவாராம்! ஸித்தர்கள் எல்லாம் ரொம்ப ஆஸ்சர்யமான பழக்க வழக்கங்கள் கடைப்பிடிச்சிருக்கா. சில ஸித்தர்கள், பச்சையாகக் கருணைக் கிழங்கை மட்டும் சாப்பிடுவா. ஓருத்தர் மரத்திலேயே தங்கியிருந்தார். இன்னொருத்தர் யமுனை நதி நடுவில்
Read 6 tweets
ஒருமுறை #ஸ்ரீஆதிசங்கரர் ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்த போது, அவரை பார்த்து ஒரு விவசாயி, "சிலர், பக்தி கோயில் பூஜை என்று இருந்தால் வாழ்க்கை சிறக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் வேறு சிலர் சாமியாவது, பூதமாவது, நடக்குறது தான் நடக்கும் என்கிறார்களே, எது சரி" என்று கேட்டார்.
ஆதிசங்கரர் அவரிடம், "மகனே, இதோ இங்கிருக்கும் ஓடையைக் கடந்துப் போக உதவி செய். நான் உனக்கு பதில் அளிக்கிறேன்!" என்றார். அவர் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனைமரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தார். சங்கரரும் அந்தக் குச்சிய
பிடித்தபடி பாலத்தைக் கடந்தார். அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தார். அதற்கு அவர், "எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லனும்?" என்றார். "ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்துவிட்டது இந்தப் பாலம் தானா? அப்படி என்றால்
Read 6 tweets
#ஒளவையார் #வள்ளலார் இவர்களுக்குள் அதிசயமாக பல ஒற்றுமைகளும் ஒரே ஒரு வேற்றுமையும் உள்ளது. அது என்ன?
ஔவையார் இயற்றிய #உலகநீதிசெய்யுள்.

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடிணங்க வேண்டாம்
நெஞ்சாரப்பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
சினந் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந் திருந்தார் வாசல்
வழிச் சேரல் வேண்டாம்
வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர் சொல் வார்த்தை தனை மறக்க வேண்டாம்
முற்கோபக்காரரோடிணங்க வேண்டாம்.

பத்து வயது கூட நிரம்பாமல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஒரு சிறிய மாணவனாக இருந்த வள்ளலார்
Read 10 tweets
#மாசிமகம் மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய மகம் நட்சத்திரம் மிகவும் விசேஷமானது. அன்று கோவில்களில் இருந்து சுவாமி புறப்பட்டு கடலில் அல்லது நதியில் நீராடி திரும்புவர். இதை தீர்த்தவாரி அல்லது கடலாடி என்பார்கள். பக்தர்களும் சுவாமியுடன் ஸ்நானம் செய்து புண்ணிய பலனை அடைவர். கங்கை,
காவிரி ஆகிய புண்ணிய நதிகளிலும் நீர் நிலைகளிலும் இந்நாளில் நீராடி இறைவனை மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால் முன் ஜென்ம வினைகள் தீரும். இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்கிறது சாஸ்திரம். தேவர்களே இந்நாளில் தீர்த்தமாடுவது இதன் சிறப்பை நமக்கு எடுத்துரைக்கும். மாசி மாதம் மகம்
நட்சத்திரத்தில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபட்டால் சிவ தீட்சை பெற்ற பலனைத் தரக்கூடியது. மாசி மக நன்னாளில் தான் பார்வதி தேவி தாட்சாயிணியாக அவதரித்தார். ஸ்ரீ மகாவிஷ்ணு பாதாளலோகத்தில் இருந்து பூலோகத்தை மீட்க வராக அவதாரம் எடுத்த திருநாளும் மாசி மகத்தன்று தான். முருகப்பெருமான் தன்
Read 14 tweets
பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டு உத்தராயண புண்ணிய காலத்தில் உயிர் பிரிய வேண்டும் என்று காத்திருந்தார். ஆனால் அப்புண்ணிய காலம் வந்தும் அவர் உயிர் பிரியவில்லை. தான் விரும்பியது போல் ஏன் இன்னும் மரணம் ஏற்படவில்லை, நான் என்ன பாவம் செய்தேன் என்று வேத வியாசரிடம் கேட்டார்.
அதற்கு வியாசர் மனம், மொழி, மெய்யால் இன்னொருவருக்கு அநீதி செய்வது மட்டும் பாவமில்லை அதர்மம் செய்பவர்களை கண்டும் கண்டிக்காமல் இருப்பதும் பாவம். துரியோதனன் சபையில் பாஞ்சாலி துகில் உரியப்பட்டபோது, அவள் காப்பாற்றுங்கள் என்று கதறியபோதும் உன் அங்கங்கள் சும்மா இருந்தன என்றார். செயல்படாத
தர்மம் அதர்மத்தை விட மோசமானது. அந்த பாவத்தினால்தான் நீ விரும்பியபடி மரணம் ஏற்படவில்லை என்று கூறினார். நான் செய்திருக்கும் மாபெரும் பாவத்துக்கு என்ன பிராயச்சித்தம் என்று பீஷ்மர் கேட்டார். அதற்கு வியாசர் யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ அப்போதே
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!