Discover and read the best of Twitter Threads about #அறிவோம்_மகான்கள்

Most recents (19)

#அறிவோம்_மகான்கள் #தாமாஜி_பண்டிதர்
வயல்கள் சூழ்ந்த பேதரி கிராமத்தில் அவதரித்த தவசீலர் தாமாஜி பண்டிதர். வேதம் கற்ற இவர் தர்மசிந்தனை மிக்கவராகவும் இருந்தார். ஊர் மக்கள் இவரை ஆசானாகவும் நண்பராகவும் காக்கும் கடவுளாகவும் மதித்து வாழ்ந்தனர். இவரது நற்குணங்களை அறிந்த அந்த நாட்டு மன்னன் Image
தாமாஜியை மங்கள்பட் என்னும் ஊருக்கு அதிகாரியாக நியமித்தான். பண்டிதர் மக்களிடம் பக்தி உணர்வை வளர்த்தார். ஒரு சமயம் மழை பெய்யாமல் வஞ்சித்தது. பஞ்சம் தலை விரித்தாடியது. விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் வருந்தினர். மக்கள் உணவின்றி வாடுவார்களே என்று வருந்திய தாமாஜி பண்டிதர் தன்னிடம்
இருந்த தானியங்களை வாரி வழங்கினார். இதனால் அவரது புகழ் ஊரெங்கும் பரவியது. பண்டரிபுரத்தைச் சேர்ந்த அந்தணர் ஒருவர் தாமாஜியின் வீட்டுக்கு வந்தார். அவரை வரவேற்ற தாமாஜி விருந்து படைத்தார். இலையில் உணவைப் பார்த்ததும் அந்தணரின் கண்கள் கலங்கி விட்டன. சுவாமி உங்கள் கண்கள் ஏன் கலங்குகின்றன?
Read 19 tweets
#அறிவோம்_மகான்கள்
#ஸ்ரீ_ஸ்ரீபாதராஜர்

ஸ்ரீ ஸ்ரீபாதராஜரின் மங்கலாசரண சுலோகம
நமோ ஸ்ரீபாதராஜயே நமஸ்தே வியாஸ யோகினே
நம புரந்தரயாய விஜயார்யதே நமஹ !!

ஸ்ரீபாதராய அல்லது லக்ஷ்மிநாராயண தீர்த்தர் அல்லது ஸ்ரீபதராஜா (1422-1480) ஒரு த்வைத ஆசார்யர், மத்வாச்சார்யா மடத்தின் மடாதிபதி ஆவார். Image
நரஹரி தீர்த்தருடன் இணைந்து ஹரிதாச இயக்கத்தை நிறுவியவர். கிருஷ்ணரைப் புகழ்ந்து எழுதப்பட்ட அவரது பாடல்கள் மற்றும் கீர்த்தனைகள் மற்றும் த்வைத கொள்கைகளின் கருத்துக்கள் உள்ளன. அவர் ஹரியைப் புகழ்ந்து பல கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். சாளுவ நரசிம்ம தேவராயரின் குருவாக இருந்த அவர், இளம் Image
வியாசதீர்த்தருக்கு வழிகாட்டினார். ஜெயதீர்த்தரின் நியாய சுதாவுக்கு வாக்வஜ்ரா என்ற வர்ணனையையும் எழுதியுள்ளார்.
#தாஸ_ஸாகியத்தின்_பிதாமகர் என்ற சொல்லுக்கு சொந்தக்காரரான இவர் கர்நாடக மாநிலத்தில் கன்வா நதிக்கரையில் அப்பூருக்கு
அருகில் உள்ள சென்னப்பட்னாவைச் சேர்ந்த சேஷகிரிக்கும்
Read 24 tweets
#வள்ளலார்
இராமலிங்க வள்ளலார் சிறப்பு மிக்க ஆன்மிகவாதி. இறைவன், ஜோதி வடிவில் இருப்பதாக தன் அருள் கொண்டு உணர்ந்தவர். அவர் வழி பின்பற்றும் பலரும் இன்றும், இறைவனை ஜோதி வடிவிலேயே வழிபாடு செய்து வருகிறார்கள். தான் வாழ்ந்த காலங்களில் அவர் பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியவர். Image
‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று, பயிர்களுக்கு தேவையான நீர் பசியையே பொறுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தவர் வள்ளலார். அவரால் மனிதர்களின் பசியை நிச்சயமாக பொறுத்துக் கொண்டிருக்கவே முடியாது. அதன் காரணமாகத்தான் வடலூர் தருமசாலை ஒன்றை நிறுவி, பசித்த நிலையில் வாடுபவர்களுக்கு
உணவு வழங்கும் வசதியை தொடங்கிவைத்தார். வள்ளலாரின் வழியில் நின்றவர்களும், அவர் மீது பெரும் மரியாதை வைத்திருந்த செல்வந்தவர்களும், தங்களால் இயன்ற உதவியை அரிசியாகவோ, மற்ற தானியங்களாகவோ தருமசாலைக்கு வழங்கி வந்தனர். அதனால் தான் அந்த தருமசாலையில் உள்ள உணவு சமைக்கும் அடுப்பானது, ‘அணையா
Read 17 tweets
மதுரகவி ஆழ்வார் பற்றி நமக்குத் தெரியும். #மதுரகவிஸ்வாமிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
1846-ஆம் வருடம் தைப்பூரத்தன்று திருவரங்கம் வீரேஸ்வரத்தில் வைணவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட குடும்பமான அரங்கப் பிள்ளை- ரங்கநாயகி அம்மாள் தம்பதிக்குப் புதல்வனாக பிறந்தார் மதுரகவி சுவாமிகள். அரங்கன் Image
மீது அளவில்லா பிரியம் கொண்டு இருந்தார். 1855 ஆம் வருடம் வைகுண்ட ஏகாதசி காலத்தில், நம்பெருமாள் உலா வரும்போது, மலரால் அலங்கரிக்கப்பட்ட இறையின் அழகில் மனதை பறிகொடுத்து, திருமாலுக்கு திருமாலை கைங்கர்யம் செய்ய வேண்டும் என உறுதிபூண்டார். அதற்காக காவிரி கரையை ஒட்டி, வேங்கடாசல ராமானுஜ
தாசர் என்பவரின் திருநந்தவனத்தில் வசித்து வரும் திருநந்தவனக் குடிகள் என்று அழைக்கப்படுகிற ஏகாங்கிகளிடம் (ஏகாங்கி - கட்டை பிரம்மச்சாரியாக, திருமண வாழ்வில் ஈடுபடாமல், சிந்தையை அரங்கனிடமே வைத்து, தினமும் நந்தவனத்தில் பூப்பறிப்பது, பின் அதை மாலையாகத் தொடுப்பது. அவற்றைச் சேகரித்துக்
Read 21 tweets
#திருமுருக_கிருபானந்த_வாரியார் பாமரனின் உள்ளத்தில் பரமனை விதைத்த இவருக்கு எத்தனை நமஸ்காரங்கள் செய்தாலும் போதாது. வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூரில் செங்குந்த வீர சைவ மரபில் வந்த மல்லையதாசர் - கனகவல்லி தம்பதியரின் 11 குழந்தைகளில் 4வது Image
குழந்தையாக 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிறந்தவர் ஸ்ரீ கிருபானந்த வாரியார். இசையாலும், புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த மல்லையதாசர் முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான "கிருபானந்த வாரி" எனும் பெயரை இவருக்குச் சூட்டினார். வாரியாருக்கு அறிவு ஞானம் அனைத்தையும்
வழங்கியதும் இவரே. வீட்டிலேயே இலக்கியம், இலக்கணம், இசை எல்லாம் கற்றுக் கொடுத்தார். பிரம்மஸ்ரீ தென்மடம் வரதாச்சாரியாரிடம் 4 வருடங்கள் வீணை கற்றார் வாரியார். 8 வயதில் வெண்பா பாடும் ஆற்றல் வந்தது. 12 வயதில் 10,000 பாடல்களை மனப்பாடம் செய்தார். 5வது வயதில் திருவண்ணாமலையில், பாணிபாத்திர Image
Read 31 tweets
#அறிவோம்_மகான்கள் #அறிவோம்_ஆன்மீக_கலைஞர்கள் #ஊத்துக்காடு_வேங்கடகவி
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
அலைபாயுதே கண்ணா
பால்வடியும் முகம்
ஆடாது அசங்காது வா கண்ணா
ஸ்வாகதம் கிருஷ்ணா
மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட
பால் வடியும் முகம்
நினைந்து நினைந்தென் உள்ளம்
இந்தப் பாடல்கள் எல்லாம் நாம் கர்நாடக சங்கீதம் அறியாவிட்டாலும் ரசிக்கும் பிரபலமான கர்நாடக சங்கீத பாடல்கள் இல்லையா? இதையும் இன்னும் நூற்றுக்கணக்கான பக்திப் பரவசமூட்டும் பாடல்களை, நாம் புரிந்து கொள்ளும் அளவு எளிய தமிழில் இயற்றியவர் ஊத்துக்காடு வேங்கட
சுப்பய்யர் ஆவார். இவர் (1715 - 1775) 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர். தமிழிலும் வடமொழியிலும் பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும் ஜாவளி, தில்லானா, காவடிச்சிந்து போன்ற பல்வகை இசைவடிவங்களையும் இயற்றியவர். இவர் மன்னார்குடியில் ராமசந்திர ஐயர் - கமலநாராயணி
Read 14 tweets
பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்றும் கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், பொயு 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர்
கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின்
நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர்.
தம் தாயார் இறந்த
பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர்.
பட்டினத்தடிகளின் பாடல்
இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே;
பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும்
Read 9 tweets
#அறிவோம்_மகான்கள் #அம்மாளுஅம்மாள்
கும்பகோணத்தில் கன்னட மாத்வ வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தில் 1906ல் அம்மாளு அம்மாள் பிறந்தார். அக்கால வழக்கப்படி குழந்தையாக இருந்த போதே திருமணம் நடந்தது. ஆனால் ஒரு சில வருடங்களில் கணவனான சிறுவன் இறந்து விட்டான். அவர் குழந்தை விதவை ஆகிவிட்டார். Image
அந்தக்கால விதவைகளுக்கு நிகழ்ந்த கொடுமைகளை எழுத்தால் விவரிக்க முடியாது. சமூகத்தில் ஒதுக்கப்பட்டு, உருவத்தில் சிதைக்கப்பட்டு, உள்ளத்தில் நொறுக்கப்பட்டு, சமூகத்தால் அபசகுணமாக வெறுக்கப்பட்டு உலகத்தால் சபிக்கப்பட்ட ஜீவனாக பசியிலும் அவமானத்திலும் வளர்ந்து வாழ்ந்தார். நரசிம்மனிடம், Image
நாராயணனிடம், கிருஷ்ணனிடம் அவர் கொண்ட பக்தி ஒன்றே அவரை உயிர்வாழ வைத்துக் கொண்டிருந்தது. ஆனால் ஒரு சமயம் தாங்க முடியாத துன்பத்தால் தற்கொலை செய்து கொள்ளச் சென்றார். பக்கத்தில் ஒரு ஆழமான குளம். கண்களை மூடி, பகவானே, என்னை ஏற்றுக் கொள் என்று குதிக்கும்போது, நில் என்று ஒரு குரல்
Read 27 tweets
#ஶ்ரீராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்து, முடிவில் அவருடைய உடல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ‘பள்ளிப்படுத்தல்’ செய்யப்பட்டது. அது, ‘தானான திருமேனி’ என அழைக்கப்படுகிறது. நிறைவாழ்வு வாழ்ந்த அரிவைஷ்ணவ ஆச்சார்யன் ஸ்ரீராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் தம் 120 ஆம் வயதில் பரமபதித்தார். வருடம் பொயு Image
1137. தாம் பிறந்த பிங்கள வருடம் மாசி மாத வளர்பிறை தசமியில், திருவாதிரை நக்ஷத்திரத்தில் சனிக்கிழமை நண்பகல் ஜீயர் மடத்தில் அவர் பரமபதித்தார். எம்பெருமானார் பரமபதித்த வேளையில், தர்மோ நஷ்ட: (தர்மத்திற்கு நஷ்டம் வந்தது) என்று அசரீரி ஒலித்ததாம். அரங்கன் தான் உடுத்திக் களைந்த பீதகவாடை,
சூடிக்களைந்த துழாய் மலர், எண்ணெய்க் கிண்ணம் என சீடராகிய உத்தம நம்பியின் மூலம் ஜீயர் மடத்துக்கு அனுப்பி வைத்தாராம். உத்தம நம்பி ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி நம்பெருமாள் அளித்த எண்ணெயை எம்பெருமானாரின் திருமுடியில் தேய்த்து, திருமேனியை நீராட்டி, பிரம்மமேத
Read 10 tweets
#அறிவோம்_மகான்கள் #சற்குரு_சுவாமிகள் திருச்சி மாவட்டத்தில் திருவானைக்கோவில் ஸ்ரீ சற்குரு இராஜயோகத் திருமடத்தில் அகத்தியர் மரபு வழித் தோன்றலான ஸ்ரீசற்குரு நாத மாமுனிவர் மக்களிடையே உள்ள சாதி சமயம், உயர்வு தாழ்வு, ஆணவம் அகந்தை, என்ற அறியாமையை நீக்கி, எளிய மக்களும் இறைஞானப் பேரருளைப்
பெற்று பிறவிப் பயனை எளிதில் அடைவதற்காக 19வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்தின் பொதிகை மலை, சுருளி மலை, நீலகிரி மலை, வெள்ளியங்கிரி, பழனி மலை, போன்ற பல்வேறு மலைகளிலும், திருச்சி, தேனீ, நீலகிரி, பழனி போன்ற பல்வேறு ஊர்களில் பூமிக்கடியில் மற்றும் தண்ணீருக்கடியில் பல நாட்கள் வெளியே
வராமல் இராஜயோக தவம் செய்து பொதுமக்கள் நன்மையடையும் விதமாக அருளாற்றல் நிரம்பிய பல தவ மையங்கள் அமைத்துள்ளார்.
110 ஆண்டுகளுக்கு முன் விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே நடுப்பட்டி கிராமத்திலிருந்து சற்குருநாதர் நடந்து வந்து எம்.சுப்புலாபுரம் கிராமத்தில் தங்கினார். இங்கு ஊர் பெரியோர்
Read 9 tweets
#அழகியசிங்கர் #அஹோபிலமடம்
திரு @sujathadesikan அவர்கள் பதிவு இது. Just copy pasting here.

1901 ஆம் ஆண்டு தேவனார்விளாகத்தில் ஸ்ரீ உ.வே வித்துவான் பருத்திப்பட்டு வங்கீபுரம் திருவேங்கடாசர்யார் அவர்களுக்கு ப்லவ வருஷம் கார்த்திகை மாதம் பூராட நட்சத்திரத்தில் அவதரித்தார்

ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மாசாரியார் ஸ்வாமி.  
செல்வச்சிறப்படைய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், “இந்த வீடு, தோட்டம், செல்வம் எல்லாம் தம்முடையது கிடையாது, எல்லாம் கண்ணனுடையது, இவற்றுக்கு டிரஸ்டியாக அடியேனை நியமித்துள்ளான், இதை கவனத்தில் கொண்டே காரியங்களைச் செய்து வருகிறேன்” என்று
தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல், மிக்க எளிமையுடனும், வைராக்கியத்துடனும் வாழ்ந்து வந்தார். சிறுவயதில் மற்ற சிறுவர்களுடன் பெருமாள் விக்ரகங்களுடன் விளையாடிக் கொண்டு பொழுதைக் கழித்து சாஸ்திரங்களையும் ஆழ்வார் அருளிச் செயல்களையும் கற்று, சிறுவயது முதலே பலருக்குக் காலட்சேபம்
Read 12 tweets
#அறிவோம்_மகான்கள் #ஶ்ரீநாராயண_தீர்த்தர் ஆந்திராவில் விஜயவாடா-குண்டூர் செல்லும் வழியில் உள்ளது மங்களகிரி. இது பானக நரசிம்ம ஷேத்திரம். அதன் அருகிலுள்ள காஜா கிராமத்தில் சுமார் 1665 - 1675ல் தல்லவல்லஜ என்ற அந்தண குலத்தில் நாராயண தீர்த்தர் பிறந்தார். அவரது இயற்பெயர் கோவிந்த சாஸ்திரி Image
என்றும், மாதவன் என்றும் அவரது தந்தை நீலகண்ட சாஸ்திரி என்றும் கர்ணபரம்பரை செய்திகள் குறிப்பிடும், அனால், ஆதார பூர்வமாக எதுவும் கிடைக்கவில்லை. அவர் 12 ஆண்டுகள் சாஸ்திரங்களை கற்றுத் தேர்ந்தவர். திருமணம் ஆன பின்னர் ஒரு முறை ஆற்றைக் கடக்க முற்பட்டார். வழக்கத்திற்கு மாறாக, ஆற்றின்
நடுவில் ஆழம் சற்று அதிகமாக தெரிந்தது. நடுவழியில் திரும்பவும் முடியாமல், அதே சமயம் எதிர் கரைக்கு செல்லவும் முடியாமல் தவித்தார். என்ன செய்வது? வேதங்கள் கற்றவர் அல்லவா! பளிச்சென ஒரு எண்ணம் தோன்றியது. துறவு மேற்கொண்டால், அது மறுபிறவிக்குச் சமம். அந்நிலையில் துன்பம் ஒருவரை தொடர்வது
Read 22 tweets
#அறிவோம்_மகான்கள் #அறிவோம்_திருத்தலங்கள் #திருவூறல் என அழைக்கப்படுகின்ற தக்கோலத்தில் சிவாச்சாரர் என்ற சிவனடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். திருமேனியெங்கும் வெள்ளிய விபூதி தரித்தும் கழுத்தில் உருத்திராட்ச மாலை அணிந்த தோற்றத்துடனே எப்போதும் காணப்படுவார். இவர் பார்க்கும்
சிவனடியார்கள் அனைரையும் ஈசனாகவே பாவித்து பணிந்து தொழுவார். எந்நேரமும் சிவபுராண தோத்திரங்களை உருகி உருகி பாடிக் கொண்டேயிருப்பார். நியமம் தவறாமல் சிவ பூஜை செய்து வருபவர். ஒரு சமயம் சிவபூஜையை மேற்கொண்டிருந்த நேரத்தில் சிவனடியாரின் ஆயுளை முடிக்க எமதூதர்கள் இருவர் சிவாச்சாரர் பூஜை அறை
வரைக்கும் வந்து விட்டிருந்தனர். அந்த நேரத்தில் சிவனடியார் செய்த பூஜை புணர்மான முடிவில் புனித நீரை தன் தலையில் தெளித்துக் கொண்டார். இது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த யமதூதர்கள் இருவர் மீதும் இந்த புனித நீரின் சில துளிகள் பட்டுவிட்டன. உடனே யமதூதர் இருவரும் சிவஞானம் பெற்றனர்.
Read 18 tweets
#அறிவும்_மகான்கள் #கணக்கம்பட்டி_சித்தர் #கணக்கம்பட்டி_மூட்டைசாமி பழனி முருகன் திருக்கோவிலில் இருந்து 8கிமீ தொலைவில் இருக்கும் கிராமம் கணக்கன்பட்டி. இங்கும் வாழ்ந்த மிக சக்தி வாய்ந்த மகான் கணக்கன்பட்டி மூட்டை சாமி என்கிற சத்குரு காளிமுத்து பழனிசாமி சித்தர். ஷீரடி பாபாவின் மறு Image
அவதாரம் என்கின்றனர். இவர் பல அதிசயங்களை நிகழ்த்தியவர். ஒருநாள் வெளிநாட்டில் இருந்து ஒரு குடும்பம் பேச முடியத அவர்கள் குழந்தைக்கு பேச்சு வர பழனி முருகனை தரிசிக்க காரில் போய் கொண்டிருந்தனர். அந்த கார் கணக்கன்பட்டி வழியே போகும் போது, பச்சை வேஷ்டி சட்டை, தலைப்பாகை அணிந்த ஒரு பெரியவர் Image
வழிமறித்தார். அவர்கள் பயத்துடன் இறங்கினர். குழநதையின் தாயைப் பார்த்து, "எதிரில் இருக்கும் கடையில் இருந்து பிரியாணி வாங்கி வா" என்று கட்டளை இட்டார். அவர்கள் சுத்த சைவம், முழித்தனர். அருகில் இருந்தவர்கள், சாமி சொல்வதை செய்து விடுங்கள் சாமி சக்தி வாய்ந்தவர் என்றனர். அந்தப் பெண்ணும் Image
Read 21 tweets
#அறிவோம்_மகான்கள் #இராமலிங்க_அடிகளார் #சத்திய_தருமசாலை #வடலூர் #வள்ளலார் #அணையா_அடுப்பு
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் 156 வருடங்களுக்கு முன் தொடங்கி வைத்த அன்னதானம் இன்றுவரை தொடர்ந்து நடைபெறுகிறது. அதில் ஒரு சிறப்பு, அவ்வடுப்பு இன்றுவரை அணையாமல் (அணையா அடுப்பு) இருக்கிறது.
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’
இந்த வரியைப் படித்ததும் நம் மனதில் வள்ளலார் உருவம் தோன்றும்.
வள்ளலார் பிறந்த ஊர் மருதூர். 1823ல் ராமையா பிள்ளைக்கும், சின்னம்மையாருக்கும் ஐந்தாவது மகனாகப் பிறந்தவர், வள்ளலார் என்கிற ராமலிங்கம். தந்தை இவரின் 6வது வயதில் இறந்து விட்டதால்
இவர் தமையனார் சிதம்பரம் சபாபதி பிள்ளை, தன் தம்பி இராமலிங்க சுவாமிகள் பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்கவேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவருக்கோ கல்வியில் நாட்டமில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். அவரை நல்வழிப்படுத்துவதற்காக, தன் குருநாதரான காஞ்சிபுரம் மகா
Read 15 tweets
#அறிவோம்_மகான்கள் #ஸ்ரீமன்னார்குடி_பெரியவா 28.5.1815- 4.3.1903
#மகாபெரியவா என்றால் எல்லாருக்கும் தெரியும். மன்னார்குடி பெரியவா என்று ஒருவர் இருந்தார். மகா பெரியவா அவர்களே, ஒருவரை #பெரியவா என்று அழைத்தார் என்றால் அவர் எப்படிப் பட்டவராக இருக்கவேண்டும் என்று கற்பனை செய்து கொள்ளலாம்.
மன்னார்குடி மஹா மஹோபாத்யாய தியாகராஜ மஹி ராஜு சாஸ்திரிகள் தான் அந்த மன்னார்குடி பெரியவா. பாரத்வாஜ வம்ச வேத வியாசர் அவர். அடையபலம் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் குடும்பம். திருவாரூர் கூத்தம்பாடி கிராமத்தில் பிறந்தவர். அம்மா மரகதவல்லி ஜானகி அம்மாள். அப்பா மார்க்க ஸஹாய அப்பய்ய தீக்ஷிதர்
மன்னார்குடியில் முதல் அக்ரஹாரத்தில் குருகுலம் அமைத்து ஆயிரக்கணக்கான மாணாக்கர்களுக்கு வேத சாஸ்திரம், அனுஷ்டானம் கிரந்தம் எல்லாம் கற்பித்தார். வெளி மாநிலங்களில் இருந்து வந்து கற்றார்கள். மாணவர்களுக்கு அன்னதானம், வஸ்திரதானம் அநேகர் அளித்தனர். பிள்ளைகள் கற்பதில் ரொம்ப கண்டிப்பாக
Read 17 tweets
#அறிவோம்_மகான்கள் #ஸ்ரீவிட்டோபா உடல் முழுதும் புழுதி, சேறு; இடுப்பில் ஒரு கோவணம் மற்றும் அரைகுறையான மேலாடை என்னும் கோலத்தோடு, ஊர் முழுதும் சுற்றிக் கொண்டிருந்தார் துறவி ஒருவர். (திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்புறம்) சாப்பாடு கிடையாது. ஒருவேளை பசித்தால், ஏதாவது ஒரு வீட்டின்
முன் நின்று, இருமுறை கைகளைத் தட்டுவார். ஓசை கேட்டு, யாராவது வந்து உணவு இட்டால் சரி, இல்லையேல் பட்டினி தான். நல்லவர்கள் என்றும் எங்கும் இருப்பர் அல்லவா! அதன்படி அந்த ஊரில் இருந்த பெண்மணி ஒருவர், இந்த உத்தம துறவியின் நிலை உணர்ந்து இரங்கி, தினந்தோறும் அத்துறவி வரும் போது, அவரை வணங்க
உபசரித்து, உணவு அளிப்பார். துறவியும் அன்போடு இடப்படும் அந்த அன்னத்தை ஒரு கவளம் வாங்கி கொள்வார். இந்த உத்தமருக்கு உணவளிக்காமல், நான் உண்பதில்லை என்ற நியதியைக் கடைப்பிடித்து வந்தார் அந்தப் பெண்மணி. ஒருநாள் அந்த வீட்டுக்கு, உணவிற்காக துறவி சென்றபோது, பெண்மணி வீட்டில் இல்லை. ஏதோ
Read 12 tweets
From Dinamalar dated 26.09.2020
உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி ராம ஜன்ம பூமி தொடர்பான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது 'அயோத்தி தான் ராம ஜன்ம பூமி' என தெரிவித்து தன் வாதங்களை மூத்த வழக்கறிஞர் பராசரன் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு, 'ராமர்
இருந்தார் என்பதற்கு வேதங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும் பல்வேறு ஆதாரங்களை கூறுகிறீர்கள். ராமபிரானின் ஜன்ம பூமி பற்றி எந்த வேதத்திலாவது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதா?' என பராசரனிடம் கேட்டார். இதற்கு பராசரனால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. அப்போது, சாட்சிகள் பகுதியில்
இருந்து முதியவர் ஒருவர் எழுந்தார். அவரை ராம ஜன்ம பூமிக்கு ஆதரவான முக்கியமான சாட்சியாக பராசரன் தெரிவித்திருந்தார். அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் கிரிதர். அவர் நீதிபதியைப் பார்த்து கூறியதாவது: மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே... ரிக் வேதத்தில், ‘ஜைமினியா சம்ஹிதா' பகுதியில் ராம ஜன்ம
Read 26 tweets
#அறிவோம்_மகான்கள்
#ஸ்ருங்கேரி #ஆசார்யாள் #ஸ்ரீசந்திரசேகரபாரதி துங்கபத்ரா நதியின் கரையில் பசுமை போர்த்திய குன்றுகளின் மேல் ஆதிசங்கரர் நடந்து போய் பீடத்தையும் சாரதாம்பாள் ஆலயத்தையும் அமைத்ததாக வரலாறு கூறுகிறது. சிருங்கேரியில் உள்ள சாரதா தேவியானவள் ‘பிரம்ம வித்யா’ சொரூபமாக அதாவது
பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீ சக்கரத்தின் மேல் சிம்மாசனத்தில் அமர்ந்து வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருகிறாள். ஆதிசங்கரர் தொகுத்த அத்வைத வேதாந்தம் இன்றும் உயிர்ப்புடன் திகழும் உருவமாக சாரதா
பீடம் இருக்கிறது. அந்த பீடத்தை அலங்கரிக்கும் ஆசார்யர்கள் வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் கரை கண்டவர்கள். கீதையை வாழ்ந்து காட்டுபவர்கள். 34வது பீடாதிபதியாக சிருங்கேரி பீடத்தை அலங்கரித்த அவதார புருஷர் ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஆவார். (1892’1954). இவரது சரித்திரம் அற்புதமானது. அதிசயிக்க
Read 19 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!