Discover and read the best of Twitter Threads about #அறிவோம்_மரபியல்

Most recents (8)

Genetics in #Crime_investigation

தன் 4 குழந்தைகளையும் கொலை செய்த குற்றத்தில் 40 ஆண்டு கால சிறை தண்டனை அனுபவிக்கும் “ஆஸ்திரேலியாவின் மிகக்கொடூரமான serial killer” என்று அழைக்கப்பட்ட காத்லீனுக்கு மரபியல் திருப்புமுனையாக அமையுமா?

வாங்க #அறிவியல்_பேசுவோம்
#அறிவோம்_மரபியல்

1/16
1999இல் தனது 18 மாத குழந்தை லாரா படுக்கையில் அசைவற்று இருப்பதைப் பார்த்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார் காத்லீன். குழந்தை காரணம் கண்டறியமுடியாத Sudden Infant Death Syndrome(SIDS) ஆல் மரணமடைந்திருக்கலாம் என்று யூகிக்கும் போதே தனது முந்தைய மூன்று குழந்தைகளும் SIDSஆல்

2/16
ஏற்கனவே மரணமடைந்தனர் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் தனது 4 குழந்தைகளை இழந்ததாகவும் கூறிய காத்லீனின் வாக்குமூலம் அவரின் மீதான முதல் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

3/16
Read 16 tweets
ஒரு கரு உருவாகணும்ன்னா தாய் தந்தை இரண்டு பேரோட மரபணுக்கள் தான தேவை. ஆனா இந்த ஆராய்ச்சியில மூணு பேரோட மரபணுக்களை உபயோகித்து ஒரு கருவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்காங்க!

இந்த மாதிரி Three parent babyய ஏன் எதுக்காக உருவாக்குறாங்க?

வாங்க பாக்கலாம்

#அறிவோம்_மரபியல்

(1/13)
ஆண் பெண்ன்னு தனி தனியா இருக்குற sexually dimorphic உயிரினங்கள்ல ஒரு கருவிற்கு ஆணிடம் இருந்து nuclear மரபணுக்களும், பெண்ணிடம் இருந்து nuclear மரபணுக்கள் மற்றும் mitochondria மரபணுக்கள்ன்னு இரண்டு மரபணுக்கள் setஉம் கடத்தப்படுகின்றன.

(2/13)
So இம்மூன்றின் மூலமும் மரபியல் சம்பந்தப்பட்ட நோய்களும் ஒரு கருவிற்கு கடத்தப்படலாம். In case, இதுல தந்தையின் மூலம் அல்லது தாயின் மூலம் மரபியல் நோய்கள் கடத்தப்படலாம்னு கண்டுபிடிக்கப்பட்டால் donor மூலம் பெறப்பட்ட ஆரோக்கியமான sperm அல்லது eggஐ use பண்ணி IVF முறையில்

(3/13)
Read 14 tweets
ஒரே ஒரு மரபணு மாற்றம் - மனித இனத்திற்கு அடிச்சது ஜாக்பாட்!

#அறிவோம்_மரபியல்

> நம் பரிணாம வளர்ச்சிப்பாதையில் நமது அறிதிறனை (cognitive function) அதிகரிக்கச் செய்ததும் அது தான்

> நம்மை நமது கிளைச்சகோதரர்களான நியாண்டர்தால்களிடம் இருந்து பிரித்து காட்டியதும் அது தான்

(1/11)
> அவர்களை வென்று நாம் (Homo sapiens) ஆதிக்க இனமாக உருவாக துணை செய்ததும் அது தான்.

நியாண்டர்தால்களுக்கும் நமக்கும் மூளையின் அளவில் பெரிய மாற்றம் இல்லையென்றாலும்

சேர்ந்து வாழ்ந்த காலத்தில் நம் இரண்டு இனங்களுக்கு இடையில் புணர்வுகள் இருந்தாலும்

(2/11)
இன்றும் நம்மிடையே 2% நியாண்டர்தால்களின் DNA காப்பாற்றப்பட்டு வந்தாலும்
நம்மைப் போல் சிந்திக்கும் திறனும், மொழிவளமையும், கவிதை பாடும் ஞானமும், தொழில் உருவாக்கும் திறனும் இல்லாமல் போனது எதனால்?

(3/11)
Read 12 tweets
ஆணின் விந்தணு குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயம் தேவையா?
Technically NO!
#அறிவோம்_மரபியல்
நன்றி @noorulhaneef
Somatic cell nuclear transfer (SCNT) எனும் முறையில் ஆணின் விந்தணு துணையின்றி ஒரு கருவை உருவாக்க முடியும்!
எப்படி? வாங்க பாக்கலாம்!
(1/13)
பெண்ணின் கருமுட்டையும் ஆணின்விந்தணுவும் தனித்தனியே 23 கிரோமோசோம்களை (n) கொண்டிருக்கும். இவையிரண்டும் இணையும் போதுஉருவாகும் கருவானது 23 'ஜோடி'(2n) (46) கிரோமோசோம்களை (chr) பெற்றுவிடும் (தந்தையிடமிருந்து 23; தாயிடமிருந்து 23).
(2/13)
எனவே நமது இனப்பெருக்க செல்கள் (கருமுட்டை, விந்தணு) 23 chrகளும் மற்ற உடல் செல்கள் (somatic cells என்றழைக்கப்படும் எலும்பு, கண், ரத்தம் போன்ற ஏனைய செல்கள்) 23 ஜோடி (46) chrகளும் கொண்டிருக்கும். (3/13)
Read 13 tweets
It's #WorldElephantDay

யானைக்கு cancer வருமா?

மனிதர்களுக்கு புற்றுநோய்கள் வருவது நாம் அனைவரும் அறிந்ததே. பலசெல்உயிரிகள் அனைத்திற்குமே புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமெனில் யானை போன்ற மிகப்பெரிய, எண்ணிக்கையில் அதிக செல்களை கொண்டவிலங்கிற்கு அதிகமாக cancer வருமா?
(1/12)
Surprisingly, வருவதற்கான வாய்ப்பு மிக மிகக்குறைவு.
அது எப்படி சாத்தியம்? வாங்க பாக்கலாம்.

Thread கொஞ்சம் technicalஆ போகும்போது adjust பண்ணிக்கோங்க. (2/12)
பலசெல்உயிரிகளின் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லுக்குமே குறிப்பிட்ட ஆயுட்காலம் உண்டு. தன் ஆயுட்காலம் முடிந்த செல் நிர்ணயிக்கப்பட்ட மரணப்பாதையை (apoptosis) தேர்ந்தெடுத்து தன்னை மாய்த்துக்கொள்ளும். மேலும் ஒரு செல் இரண்டு செல்லாக பிரிந்து செல்களின் பெருக்கம் நிகழும் போதும் கூட (3/12)
Read 12 tweets
A must watch video!
கீழே உள்ள வீடியோவில் பேராசிரியர் எரிக் க்ரீன் NHGRI ஆய்வகத்தில் நமது மரபணுத்தொகுப்பின் (genome) 1000இல் ஒரு பகுதியை சுவர்களில் அச்சிட்டுள்ளதை விளக்குகின்றார். நமது மரபணுவின் 1000இல் ஒரு பகுதி ஆக்கிரமித்துள்ள இடம் ~80 அடி.
எனில், மனிதனின் மொத்த மரபணுத்தொகுப்பு (~320 கோடி A, T, C மற்றும் G nucleotide மூலக்கூறுகள்) ஆக்கிரமிக்கத் தேவைப்படும் இடம் கிட்டத்தட்ட 15.5 மைல்கள்.
ஆச்சர்யம் என்னவெனில் இந்த மொத்த மரபணுத்தொகுப்பும் நமது செல்களுக்குள் கிட்டத்தட்ட ஒரு மில்லிமீட்டரை 100ஆல் வகுத்தால் எவ்ளவு சிறிய இடம் இருக்குமோ (10micrometer) அவ்வளவு சிறிய கருவிற்குள் (nucleus) அமையப்பெற்றுள்ளது. Image
Read 4 tweets
என்னது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் மட்டும் ஜுராசிக்பார்க்ல DNA டைனோசர்ன்னு Genetics பேசல நம்ம சிம்பு தேவனும் புலிகேசில முக்கியமான மரபணு கோட்பாடு பத்தி பேசிருக்காரா?

எப்படி மரபணுக்களைத் தாண்டி புறச்சூழல் ஒருத்தர செதுக்கும்ன்னு புலிகேசியும் உக்கிரபுத்தனும் தான் நமக்கு சொல்றங்களா? (1/8) ImageImage
புலிகேசியும் உக்கிரபுத்தனும் identical twins. அப்படினா அவங்க ரெண்டு பேரும் ஒரே கருவிலிருந்து splitஆகி இரண்டு உயிர்களா உருவானவங்க. அவங்களோட மரபணுக்கள் கிட்டத்தட்ட 99.99% ஒரே மாதிரி இருக்கும். அப்புறம் எப்படி புலிகேசி டம்மியாகவும் உக்கிரபுத்தன் திறமைமிக்கவனாகவும் இருந்தாங்க? (2/8) Image
திறமைக்கும் மரபணுக்கும் சம்பந்தம் இல்லையா?

இங்க தான் புறச்சூழல் sceneகுள்ள வருது. பொதுவா நம்மளுடைய எந்தெந்த பண்புகளெல்லாம் ஒற்றை மரபணுக்களால தீர்மானிக்கப்படுகின்றதோ அவையெல்லாம் மிகக் கண்டிப்பான மரபணு கட்டுப்பாட்டில் இருக்கும்.(3/8)
Read 10 tweets
நாம் ஏன் நெருங்கிய சொந்தத்தில் மணமுடிக்க கூடாது?
Fruit salad bowl நமக்குச் சொல்லும் மரபியல் தத்துவம் என்ன?
#அறிவோம்_மரபியல்
நீங்கள் ஒரு விருந்திற்கு செல்கிறீர்கள்! (1/8)
அங்கே ஒரு கிண்ணத்தில் fruit salad வைக்கப்பட்டுள்ளது! அதில் ஒரு கைப்பிடி எடுத்து உங்கள் கிண்ணத்தில் போட்டுக்கொள்கிறீர்கள். அதில் பல கலவையான பழங்கள் இருக்குவே பலதரப்பட்ட இனிய ருசியையும், உங்களுக்கு தேவையான பல்வேறு சத்துக்களையும் ஒருங்கே பெறுவீர்கள்!

(2/8)
அதே சமயத்தில் இன்னொரு நபர் அங்கே வருகிறார். அவர் வாழைப்பழம் மட்டுமே உயரிய பழம் என்றும் இதுவே அனைத்து சத்துக்களையும் தனக்கு அளிக்கும் என்றும் நம்புகிறார்! அந்த கிண்ணத்தில் உள்ள வாழைப்பழத் துண்டுகளை மட்டும் உண்டுவிட்டு போகிறார்!
(3/8)
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!