Discover and read the best of Twitter Threads about #இந்த_நாள்_இனிய_நாள்

Most recents (24)

கராத்தே, குங்·பூ கலைகளில் எல்லாம் மிகவும் தேர்ச்சி படைத்த ஒரு வீரர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அவர் தியான வகுப்புகளுக்கும் தொடர்ந்து செல்பவர்.

ரயிலில் நன்றாகக் குடித்து விட்டு ஒருவன் ரயில் பயணிகள் ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு வம்பு செய்து சண்டையிட்டுக் கொண்டு இருந்தான்.
நேரம் ஆக, நேரம் ஆக அவன் வார்த்தைப் பிரயோகங்கள் மிக மோசமாகப் போய்க் கொண்டு இருந்தன.

ஒருசிலர் திரும்பப் பேசினர். ஒருசிலர் முகம் சுளித்துக் கொண்டு வேறிடத்திற்குப் போய் அமர்ந்து கொண்டார்கள்.

நீண்ட பயணமானதால் இதை நிறைய நேரம் பார்க்க நேர்ந்த கராத்தே வீரருக்கு கோபம் பொங்கி வந்தது.
போய் இரண்டு தட்டு தட்ட வேண்டும் என்று நினைக்கையில், அத்தனை நேரம் அமைதி காத்த இன்னொரு பயணி அந்தக் குடிகாரனை நோக்கி சென்றதைக் கண்டு நிதானித்தார்.

அந்தப் பயணியும் தன்னைப் போலவே அவனை அடிக்கத் தான் செல்கிறார் என்று நினைத்தார் கராத்தே வீரர். நன்றாக அடி வாங்கட்டும் என்று நினைத்தார்.
Read 12 tweets
விவசாயி ஒருவருக்கு மலை அருகே ஒரு தோட்டமிருந்தது. அதில் பலவகையான காய்கறிகளை அவர் பயிர் செய்து இருந்தார்.

வாரத்துக்கு ஒரு முறை காய்கறிச் செடிகளுக்கு இடையே முளைக்கும் களைகள், முட்செடிகள் போன்றவற்றைப் பிடுங்கி எடுத்து, தோட்டத்தை கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வளர்த்து வந்தார்.
அன்று அவருடன் அவரது மகனும் தோட்டத்திற்குச் சென்றிருந்தான், தன் தந்தைக்கு உதவியாக.

அவர். ஒரு செடிக்கு இடையே வளர்ந்து இருந்த முட்செடி ஒன்றைப் பிடுங்கிய போது, முள் அவரது கையை குத்தியது அவரது கையில் இருந்து இரத்தம் வந்தது லேசாக.

அதைப் பார்த்த மகன் அவரின் அருகே வந்தான்.
பிறகு அவரிடம் கேட்டான்,இந்த முட்செடியினால் நமக்கு என்ன பயன்?

இது மற்றவர்களை காயப்படுத்துகிறதே தவிர, இதணால் எந்தப் பயனும் இல்லைதானே அப்பா?

பூமியில் படைக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் ஏதாவது பயன் உண்டு என்பீர்களே?

பயனில்லாத இதை இறைவன் ஏன் படைத்தான் என்று சொல்லுங்களேன் என்று கேட்டான்.
Read 8 tweets
உலகம் தழுவிய "Medical Association" நடத்திய பெரும் விழாவில் தன் ஆராய்ச்சி கட்டுரையை பெருமையுடன் சமர்ப்பித்து விட்டு, காரில் தன் சொந்த ஊரை நோக்கி புறப்பட்டார் அந்த டாக்டர்.

ஏனோ சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்கிற ஆவல் அதிகரித்தப்படியே இருந்தது அவருக்குப் பல தினங்களாக.
வழியில் பெரும் மழை. வேகமான காற்று. அவரால் காரை ஓட்டவே முடியவில்லை.

ஒரு கிராமத்தை தாண்டிய பொழுது, சாலை
பல பிரிவுகளாக பிரிந்தது.

வழிகாட்டி பலகையும் அந்த பனிப்புயலால்
தூர வீசப்பட்டிருந்தது.

டாக்டருக்கு எந்த வழியில் செல்வது என்று புரியவில்லை.
ஒரே குழப்பமாக இருந்தது.
இதுவாகத்தான் இருக்கும் என்று அவராகவே முடிவு செய்து கொண்டு, ஒரு வழியில் காரை பயணித்தார்.

ஆனால் அந்த வழி ஆள் அரவமற்ற காட்டின் வழியே சென்றது.

புயலும் அதிகமாக வீசியது. டாக்டருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை ஒதுங்க எந்த இடமும் இல்லை.

தூரத்தில் ஒரு சிறு வீடு தெரிந்தது.
Read 10 tweets
ஒரு மனிதர் தன் வாழ்வில் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார்.

வெற்றிக்கு யார் வழிகாட்டி என்று நிருபர்கள் கேட்டார்கள். “இது” என்று ஒன்றைச் சுட்டிக் காட்டினார்.

அவர் காட்டிய திசையில், தங்க பிரேம் போட்டு ஒரு பென்சில் புகைப்படம்!

நிருபர்கள் திகைத்தார்கள்.

அவர் கூறியது:
இந்தப் பென்சில் எனக்கு 5 விஷயங்களைக் கற்றுத் தந்தது:

√இது பல விஷயங்களை எழுதுவதற்கும், வரைவதற்கும் தன்னை முழுமையாக நம் கைகளில் ஒப்படைக்கிறது.

√அவ்வப்போது நாம் அதை சீவுகிறோம். சீவும் போதெல்லாம் அது கூர்மையடைகிறது.

√தவறுகள் செய்தாலும், அவற்றை அழிப்பதற்கு இது இடம் கொடுக்கிறது.
√வெளியே எப்படியிருந்தாலும் உள்ளே உடையாமல் ஒரு சீராய் இருக்கிறது.

√சின்னஞ் சிறிய அளவு இது சீவப்பட்டாலும் எழுதிக் கொண்டிருக்கிறது.
கடைசி வரை தன் தடத்தை நாம் எழுதும் காகிதத்தில் பதிக்கிறது.

ஆரம்பத்தில் தடுமாறிய நான் இதைப் பார்த்துதான் என் வாழ்க்கையை நான் சீரமைத்துக் கொண்டேன்.
Read 6 tweets
ஆளவந்தார் மனைவி, தன் வீட்டில் வேலை பார்க்கும் பெண் மீது நல்ல அன்பு வைத்திருந்தார். அவளை தன் மகள் போலவே பாவித்து வந்தார்.

அவள் வீடு வெள்ளத்தில் மிதந்தபோது, தேவையான பாத்திரங்கள், துணிமணி போன்றவற்றைக் கொடுத்து உதவியவர் அவர். அவளையும் தன் குடும்பத்தில் ஒருத்தி போல நினைத்தாள்.
அவள் ஒரு நாள் தன் வேலைக்காரப் பெண்ணிடம், இன்று வீட்டிற்கு விருந்தினர்கள் வருகிறார்கள்.

என் பையன் பிறந்த நாள் இன்று. அவன் நண்பர்களும் கூட வருகிறார்கள்.

கூடமாட ஒத்தாசையாக இன்றைக்கு மட்டும் இரவு கொஞ்சம் நேரம் கூடுதலாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

சாதாரணமாகத்தான்
சொன்னாள் இதை.
உடனே அந்தப் பெண் சட்டென்று, இப்படியெல்லாம் திடீர் திடீர் என்று சொன்னீர்கள் என்றால், என்னால் இந்த வீட்டில் இனி வேலை செய்யமுடியாது என்றாள் முகத்திலடித்த மாதிரி.

இதைக்கேட்டதும், ஆளவந்தார் மனைவிக்கு தூக்கிவாரிப் போட்டது. என்ன மாதிரி பெண் இவள்?

நம் தேவைக்குத்தானே இவள் இருக்கிறாள்?
Read 11 tweets
எதுக்குடி அறுந்த செருப்போடவே இருக்கே? அந்த மரத்தடியில செருப்புத் தைக்கிற பெரியவர்கிட்ட போய் தச்சுக்க வேண்டியதுதானே!

அந்தப் பெரியவர் பொதுவா நம்மை மாதிரி "இளம் கேர்ள்ஸ்னா" காசு கேக்க மாட்டார். நம்ம காலேஜ்லேயே பலர் தைச்சிருக்காங்க அவர்கிட்ட

சரியான ஜொள்ளு பார்ட்டின்னு நினைக்கிறேன்.
சுமாரா இருக்குற எனக்கே நேத்து ஓசியில தச்சுக் குடுத்தார்னா பார்த்துக்கம்மா. சொல்ல வேண்டியது என் கடமை.

நீ பார்ப்பதற்கு அப்படியே தமன்னாவாட்டம் பளிச்சுன்னு இருக்கே.

உன் காலைப் பார்த்துக்கிட்டே மடமடனு செருப்பைத் தைச்சுக் குடுத்துடுவார் பார்!’’ என்றாள் மாலா தன் தோழியிடம்.
வேறு வழியின்றி, அந்த "தமன்னா" போல இருந்தப் பெண் அந்தப் பெரியவரிடம் போக, செருப்பை வாங்கிய பெரியவர் மளமளவென வேலையை ஆரம்பித்தார்.

தைத்த செருப்பைக் காலில் அணிந்ததும், ‘‘கூலி எவ்வளவு?’’ என்றாள்.‘

‘என்னம்மா இது? உன்கிட்ட காசு வாங்குவனா கண்ணு! கிளம்பு’’ என்றார் பெரியவர் சிரித்தபடியே.
Read 7 tweets
ஸ்காட்லாந்தின் அரசனாக பதவி ஏற்றார் ராபர்ட் புரூஸ். மன்னனாக இருந்தும் கொஞ்சமும் மன நிம்மதி இல்லை.

இங்கிலாந்து நாட்டிற்கும், ஸ்காட்லாந்திற்குமிடையே எப்போதும் ஆகாது.
இப்போதும் மன வேறுபாடு அதிகரித்தபடி இருந்தது.

இங்கிலாந்தின் மேல் படையெடுத்தும், தோல்வியே கிடைத்தது.
புரூஸ், ஸ்காட்லாந்தில் நிச்சயமற்ற ஆட்சிப் பதவியை வகித்து வந்தார்.

அவருக்குப் போட்டியாக, ஜான் பாலியால் என்பவன், தானும் மன்னன் ஆகவேண்டும் என்பதில் மும்முரமாக இருந்தான்.

இந்த சிக்கலை இங்கிலாந்தின் மன்னன், எட்வர்டு தீர்த்து வைக்க எண்ணினார்.அதன் மூலம் இரு நாட்டுப் பகையும் முடியும்?
என்று நினைத்து இவர்கள் இருவரும் அங்கு சென்றனர்.

இவர்களுக்கு சரியானபடி முடிவு கூறாமல், எட்வர்டு கேவலப்படுத்தினான்.

பேதைகளே, இந்த நாடு எங்களுக்குச் சொந்தம். நீங்கள் என் அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும். மன்னனாக ஆகக் கூடாது, விடவும் மாட்டேன், என்று தன் மார்பைத் தட்டினான்.
Read 10 tweets
"போன வேகத்திலேயே திரும்பி வர்றியே. என்னடா ஆச்சு?" அம்மா ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"வாசல்ல பக்கத்து வீட்டுப் பாட்டி நின்னுகிட்டு இருக்கு" என்றான் அவன் எரிச்சலுடன்.

"சனி கூட ஏழரை வருஷத்துல விட்டுவிடும். ஆனா இந்தக் கிழவி நம்மள விடற மாதிரி தெரியலை" அம்மா அலுத்துக் கொண்டாள்.
பக்கத்து வீட்டுப் பாட்டியைப் பார்த்தால் அவர்கள் எல்லோருக்கும் பயம்.

பார்க்க, குள்ளமாக, ஒடிசலாக இருக்கும் அந்த விதவைப் பாட்டியின் கண்களில் முக்கியமான சில தருணங்களில் படுவது பிரச்சினையை விலை கொடுத்து வாங்குவது போல.

அவன் படித்துக் கொண்டிருக்கையில் ஒரு முறை பாட்டி அங்கலாய்த்தாள்.
"இவ்வளவு சிரத்தையாய் நீ படிக்கிறாய். எங்க வீட்டுலயும் ஒரு அசடு இருக்கு. புஸ்தகம் எடுத்தவுடனே கொட்டாவியாய் விடுது" என்றாள்.

அன்று மாலை டைபாய்டு வந்து படுத்தவன் அந்த பரிட்சைக்குப் போகவே இல்லை.

அம்மா முதல் முதலில் அரக்கு கலரில் அழகான பட்டுப் புடவை கட்டிக் கொண்டு போனாள் கோவிலுக்கு.
Read 17 tweets
ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தன.

அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி முதல் மரத்திடம் மழை காலம் தொடங்க இருப்பதால் நானும் என் குஞ்சுகளும் இங்கே வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்று கெஞ்சலாகக் கேட்டது.

முதலில் இருந்த மரம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
தன் கிளையில் கூடு கட்ட அனுமதிக்க முடியாது என்று கடுகடுத்தது.

ஏமாற்றமடைந்த குருவி, அடுத்த மரத்திடம் சென்று கேட்ட போது அது அனுமதித்தது.

குருவி 2வது மரத்தில் கூடு கட்டி தன் குஞ்சுகளோடு சந்தோசமாக வாழ ஆரம்பித்தது.

அன்று ஒரு நாள் பலத்த மழை, ஆற்றில் லேசாக வெள்ளம் வர ஆரம்பித்தது.
முதல் மரம் அந்த லேசான வெள்ளத்திற்கே தாக்குப் பிடிக்கவில்லை.
தடுமாற ஆரம்பித்தது.

வெள்ளத்தின் அளவு சிறிது கூடியவுடன், மரம் வலுவிழுந்து சாய்ந்தது ஆற்றில்.

தண்ணீரில் இழுத்து செல்லும் மரத்தைப்பார்த்து குருவி சிரித்து கொண்டே சொன்னது , எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்றாயே நீ?
Read 6 tweets
தன் தோற்றம் குறித்தும் திறமைகள் குறித்தும். தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி, அவளுக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்து.

“நீ அழகாய் இருக்கிறாய். வீட்டில் இருக்கும் நாங்கள் அனைவரும் உன்னை நேசிக்கிறோம்” செல்லமே என்று அவளிடம் அவள் தந்தை அடிக்கடி சொல்லி வளர்த்தார்.
அவளது மனம் மெல்ல மெல்ல மாறியது காலப்போக்கில்.

ஊக்கம் உயர்ந்து கொண்டே இருந்தது அவள் குடும்பத்திலிருந்து.

அவள் வளர வளர அவள் உருவத்திலும் மாற்றங்கள் தென்பட்டன.

அழகிலும் அறிவிலும் தனித்தன்மை மலரும் விதமாய் வளர்ந்தாள் அந்தப் பெண்.

அவள் பதினெட்டாவது பிறந்த நாள் வந்தது.
அவள் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அவள் குடும்பம் முடிவெடுத்தது.

அந்த நாளில் அவளுக்கு சிறப்பு பரிசு ஒன்றை வழங்கிய தந்தை அவளிடம் சொன்னார்,

“நீ மிகவும் அழகான குழந்தை. நாங்கள் அனைவரும் உன்னை மிகவும் நேசிக்கிறோம்.!"

அவள் புன்முறுவல் பூத்தாள். அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
Read 5 tweets
புத்தர் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார்.

அப்போது அவரைப் பார்ப்பதற்கு ஒரு இளைஞன் வந்தான்.

வெகு தொலைவு நடந்து வந்த அவன், புத்தரைப் பார்த்த அக்கணமே கதறி அழுதான். அவன் அழுது முடிக்கும் வரை பொறுத்திருந்த புத்தர் கனிவாகக் கேட்டார்:

சகோதரா, ஏன் இப்படிக் கண்ணீர் சிந்துகிறாய்?
உனக்கு ஏற்பட்ட பிரச்னையை என்னிடம் சொல்.

"பகவானே, என் வாழ்க்கையில் நான் எல்லையற்ற துன்பங்களை அனுபவித்து வருகிறேன்.

எடுத்த எதிலும் தோல்வி. தாங்க முடியாத துயரம்.

ஆதரவுக்கென்று எனக்கு யாருமில்லை. என் மனது மிகவும் பலவீனமாகப் போய் விட்டது.

எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் பகவானே!
புத்தர் அன்புடன் அவன் கையில் ஒரு தண்ணீர்க் குவளையைக் கொடுத்தார்.

பிறகு கொஞ்சம் உப்பையும் கொடுத்து விட்டுச் சொன்னார்:

"சகோதரா, இந்தச் குவளையில் உப்பிட்டுக் கலக்கி அருந்து.”

அவன் உப்பைக் குவளையில் இட்டுக் கலக்கி அருந்திப் பார்த்தான். இரு மிடறு குடிப்பதற்குள் அவன் முகம் கோணியது.
Read 10 tweets
உலகில் உள்ள பெரிய பெரிய நாடுகள் எல்லாம் தங்கள் நாட்டுக்கு அருகில் உள்ள குட்டி குட்டி தீவுகள் மீது போர் தொடுத்து அவற்றை ஆக்கிரமிக்கத் தொடங்கிய காலகட்டம் அது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.

500 பேர் மக்கள் தொகை கொண்ட ஆதிவாசிகள் வாழும் தீவு ஒன்றை அபகரிக்கத் திட்டம் தீட்டப்பட்டது.
அதற்கு அவர்கள் வாழ்கின்ற தீவை கைப்பற்ற 500 பேரை அனுப்பினார்கள் ஒரு கப்பலில். சகல வசதிகளுடன் அந்தக்
கப்பல் தீவை சென்றடைந்தது,

சில நாட்களில் திரும்பி வந்தது, 500 வீரர்களும் கை கால் உடைந்த நிலையில் தோற்று போய் திரும்பி வந்தார்கள், ஆதிவாசிகள் பின்னி எடுத்து விட்டார்கள் அவர்களை.
அடுத்த முறை பக்காவாகத் திட்டமிடப்பட்டு 1000 வீரர்களை வேறு கப்பலில் அனுப்பினார்கள் சகல வசதிகளோடு.

1000 வீரர்களும் கை கால் இழந்த நிலையில் பயந்து ஓடி வந்தார்கள்.

மீண்டும் மனம் தளராமல் சுமார் 1500 பேரை அனுப்பினார்கள் அதே தீவிற்கு சகல வசதிகளுடனும்.

அவர்களுக்கும் அதே கதிதான்.
Read 7 tweets
பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள "பெண்ட்லே" சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளாம்பரப் படுத்தினார்.

அதற்கு அவர் சொன்னது, அவருடைய இறப்புக்கு பின்னர் இந்த கார் அவர் போய்,வருவதற்குப் பயன்படும் என்று ஒரு அறிய காரணமும் இணைப்பாக
இதைக் கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன.
பைத்தியக்காரன் பத்து லட்சம் டாலரை வீணடிக்கிறாரே? முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள்.
பொது மக்களும் அவரைத் திட்டி தீர்த்தார்கள்.

புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது. எல்லோரும் ஆவலாக என்ன தான் நடக்குது என்று பார்க்க கூடினர்.
பெண்ட்லே காரை புதைக்கும் அளவுக்கு பெரிய பள்ளம் வெட்டப்பட்டு புத்தம் புதிய அந்த காரும் நிறுத்தப்பட்டிருந்தது.

எல்லோரும் பொறாமையாக பார்த்து கொண்டிருந்தனர்.

பணக்காரர் சொன்னபடியே வந்தார். காரை புதைக்கும் ஏற்பாடுகள் துவங்கியது.

பலர் அவர் காதுபட அவரின் செயலைத் திட்டித் தீர்த்தனர்.
Read 8 tweets
''சாமி, நான் இந்த ஊருக்கு வந்து பத்து வருஷம் ஆச்சு. ஒரு ஹோட்டல்ல சப்ளையர் வேலை பாக்குறேன்.

ஏனோ தெரியலை, உங்களைப் பார்த்ததுமே என் கதையைச் சொல்லி அழணும் போல இருக்கு!'' என்றான் அவன்.

சாமி இளமை தொலையாத முகத்துடன், கருமை மறையாத தாடியுடன், சாந்தம் தவழும் கண்களுடன் இருந்தார்.
அவனை, 'சொல் குழந்தாய்!' என்பது போல் பார்த்தார்.

'என் பேரு கோபால். ஊர் மதுரைப் பக்கம் ஒரு கிராமம். ஊர்ல எங்க குடும்பமும் எங்க மாமன் குடும்பமும்தான் பெரிய குடும்பங்கள். எல்லாரும் ஒண்ணுமண்ணா இருப்போம்!

என் மாமனுக்கு வித்யா பொறந்தப்ப முதல்ல அந்தப் பேச்சு விளையாட்டாதான் ஆரம்பிச்சது.
ஆனா, கொஞ்ச நாள்ல அதையே ரெண்டு குடும்பங்களும் தீர்மானமா எடுத்துக்கிட்டாங்க.

கல்யாண வயசு வந்ததும் வித்யாவுக்கு என்னைக் கல்யாணம் கட்டி வெச்சுப்புடணும்னு முடிவு எடுத்தாங்க.

அவங்க ஊட்டுன ஆசையில நான் சின்ன வயசுல இருந்தே 'வித்யா எனக்குத்தான்'கிற நினைப்போடவே வளர்ந்தேன் சாமி.
Read 11 tweets
ஒரு மந்திரவாதி
காட்டில் வசித்து வந்தான்.
அவனிடம் பல நூற்றுக்கணக்கான ஆடுகள் இருந்தன.

ரெகுலராக ஆடுகளை வெட்டித் தின்று வந்தான்.
ஒரு நாள் அவனுக்கு ஒரு பிரச்சனை வந்தது.

தொடர்ந்து அவனுடைய உணவுக்காக சில ஆடுகள் வெட்டப்படுவதை அங்கிருந்த பிற ஆடுகள் கண்டன. பயம் தோன்றியது அவைகளுக்கு.
அந்த ஆடுகள் அந்த மந்திரவாதியைக் கண்டும் பயப்பட ஆரம்பித்தன.
சில அவனிடமிருந்து தப்பி வெகு தூரம் ஓடின.

அவ்வளவு பெரிய காட்டில்
அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து இழுத்து வருவது கடினமாகிப் போனது அவனுக்கு.

அவன் மந்திரவாதி என்பதால் ஒரு தந்திரம் செய்தான். ஒவ்வொரு ஆட்டையும் அழைத்தான்.
ஒவ்வொன்றாக அழைத்து அவற்றினுடைய மனதை மாற்ற ஆரம்பித்தான்.

ஒரு ஆட்டினை அழைத்து,
'நீ ஆடல்ல. நீ ஒரு மனிதன்.
நீ பயப்படத் தேவையில்லை. மந்திரவாதி கொன்று சாப்பிடப் போவது ஆட்டைத் தான்.

உன்னையல்ல. ஏன் எனில் நீ என்னை போல மனிதன் தான்' என்று கூறி அந்த ஆட்டை வார்த்தைகளால் மயக்கினான்.
Read 9 tweets
ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர். ஒருவன் மிகுந்த வருத்தத்தோடு சொன்னான்,

''நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன் சுவாமி. என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது. நான் செய்த பாவத்துக்கு எதேனும் பரிகாரம் உண்டா சுவாமி?''

அடுத்தவன் ஞானியிடம் சொன்னான்,
'நான் இவர் அளவுக்கு இல்லை.
பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை சுவாமி. நான் செய்தது எல்லாமே சின்னச் சின்னப் பொய்கள், சிறு சிறு ஏமாற்றுக்கள் இப்படி நிறைய செய்துள்ளேன்.

தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா என்ன சுவாமி.?'' நீங்களே சொல்லுங்கள் என்றான்.

ஞானி இருவரையும் பார்த்துச் சிரித்தார்.
பெரிய பாவம் செய்ததாக சொன்னவனிடம், ''நீ போய் பெரிய பாறை ஒன்றைத் தூக்கிவா" என்றார்.

சின்ன சின்ன பாவங்கள் செய்ததாக சொன்ன இரண்டாவது ஆளிடம்,
'நீ போய் இந்த கோணி நிறைய சிறு சிறு கற்களை இந்தப் பகுதி முழுவதும் பொறுக்கி வா.'' என்று அனுப்பி வைத்தார்.

இருவரும் அவ்வாறே செய்தனர்.
Read 9 tweets
சென்னை ஏர்போட்டை விட்டு லக்கேஜுடன் வெளியே வந்து பெருங்களத்தூருக்கு ஆட்டோ பேசினேன்.

காரணம் கோயம்பேட்டில் இருந்து வரும் வெளியூர் பஸ் எல்லாம் பைபாஸ் வழியே கிண்டி வராமல் நேராக பெருங்களத்தூர் செல்கிறது. நான் சீர்காழி போக வேண்டும்.

"ஆட்டோ சார், பெருங்களத்தூர் போகலாமா? எவ்ளோப்பா?"
"500 ரூபாய் சார்"

"400 ரூபாய்க்கு வருவியா?"

"சார் 450 ரூபாய். ஏறுங்க சார்!"

சென்னைக்கே உரிய ஸ்டைலில் ஆட்டோ பறந்தது.
பல்லாவரத்தை தாண்டியது.

"ஏம்பா, ஆட்டோ சார், நீங்க இந்த வழியா தினமும் சவாரி போனால் எங்க காலை டிபன் சாப்பிடுவீங்க.?!"

"ரோட்டுக்கடைத்தான் சார்!"
"நீங்க சாப்பிடும் கடை எதுவோ அங்க நிறுத்துங்க. டிபன் சாப்பிட்டு போவோம்!" என்றேன்.

குரோம்பேட்டைக்கும் தாம்பரத்திற்கும் இடையே ஒரு இடத்தில் ஓரமாக இருந்த தள்ளு வண்டியிடம் ஆட்டோவை நிறுத்தினார்.

ஒரு நடுத்தர வயது அம்மா நெற்றி நிறைய திருநீறு.
தட்டுகளை வாழை இலை போட்டு வைத்திருந்தார்கள்.
Read 12 tweets
தினமும் வீட்டுல கொண்டாந்து கீரை விற்கும் அந்த அம்மா போன வாரம் சாயங்காலமா வீட்டுக்கு வந்து அவங்க மகனுக்கு கல்யாணம்னு பத்திரிக்கை குடுத்துட்டு போச்சு.

தினம் காலையில கூடையில கீரக்கட்டு, முருங்கக்கா, வாழக்கா மாத்திரம் கொண்டாரும்.
கீரக்கட்டு ரூ 15. முருங்கக்கா கட்டு ரூ 20.
வாழக்கா 3 பீஸ்கள் ரூ 15 என்று குடுக்கும்.
பழைய சேலை கட்டிருக்கும். அள்ளி முடிஞ்ச தலை. எண்ணெய் பாக்காத முடின்னு பாக்கவே கஷ்டமாக இருக்கும்.

கீரக்கட்டோட பத்திரிக்கை குடுக்கக் கூடாதுன்னு தனியா வந்து குடுத்துட்டு போச்சு.
இது மாதிரி பத்திரிக்கைகளைக் கண்டுக்கிறது இல்ல.
அதுனால வாங்கி வைச்சதோட சரி மறந்தாச்சு.

ஆனா கல்யாணத்திற்கு மூணு நாளைக்கி முன்னாடி வந்து அம்மா அஞ்சு நாளைக்கி நான் வரமாட்டேன்
கல்யாண வேலை இருக்குன்னு சொல்லிட்டு போச்சு.

நான் சொன்னேன் ஏதாவது பணத்த கவர்ல போட்டுக் குடுத்து அனுப்பு. இதுக்கெல்லாம் போக முடியாது.
Read 23 tweets
பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார்.

அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார்.
"ஆனந்த், நம்பர். 8, யோகானந்தம் நகர்?''

""ஆமாம்... இது தான். நான் தான் ஆனந்த்... நீங்க... என்ன வேணும்?''

அவர் வறண்ட உதடுகளை, நாவால் ஈரப்படுத்திக் கொண்டார்.

"நான், உங்கப்பாவோட நண்பன்; காரைக்காலேருந்து வர்றேன். உங்கப்பா லெட்டர் கொடுத்து அனுப்பியிருக்கார்''
என்றார் பெரியவர்.
பெரியவர் ரெக்சின் பை ஜிப்பை திறந்து, ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார்.
வாங்கிப் பார்த்த ஆனந்த், "அப்பாவா?'' என்று வினவியபடி, கடிதத்தை படித்தான்.

அதில், "அன்புள்ள ஆனந்துக்கு, அப்பா எழுதுவது. ஆசிர்வாதம். கடிதம் கொண்டு வரும் ராமசாமி, என் நண்பன். ரொம்ப நல்லவர். ரொம்ப கஷ்ட ஜீவனம்.
Read 27 tweets
ஆளவந்தார் முதியவர் பணி ஓய்வு பெற்றவர்.

வீட்டில் தனிமையில் இருந்தார். படித்தவர், ஆனால், "கொஞ்சம் துடுக்குத்தனம்" நிறைந்தவர். மற்றவர்களை எளிதாகக் குறை கூறுபவர். அவர் மனைவி மறைந்து விட்டார். பிள்ளைகள் இல்லை.

அவருடைய பக்கத்து வீட்டுக்கு புதிதாக ஒருவர் குடிவந்தார்.
அவருக்கு "ஆக்டிங் டிரைவர்" வேலை.

யாராவது தங்கள் காரை ஓட்ட டிரைவர் வேண்டும் என்று அழைக்கும்போது போவார்.

மற்ற நேரங்களில் வீட்டிலிருப்பார்.

ஆளவந்தாருக்கு அவர் மேல் சந்தேகம்.

"திடீரென்று நள்ளிரவில் கிளம்பிப் போகிறான்.காலை 8 மணிக்கு மேல் வீடு திரும்புகிறான் இவன்.
சில நாள்களில் மாலையில் போகிறான். இரவில் வீடு திரும்புகிறான்"

"ஒருவேளை இவன் திருடனாக இருப்பானோ?!" என்பதே அந்தச் சந்தேகம்.

"இந்த எண்ணம் நாளாக நாளாக வலுப்பெற்றது"

தன் நண்பர்களிடம் அவனைப் பற்றிச் அவதூறாகச் சொன்னார். காய்கறி, பழம் விற்க வருபவர்களிடம் தன் சந்தேகத்தைச் சொன்னார்.
Read 13 tweets
புதுமணத் தம்பதிகள் அவர்கள். இருவருமே சம்பாதிப்பவர்கள்.
எதோ கடுமையான கருத்து வேறுபாடு அவர்களுக்கு தம்மில்.

இறுதியில் என்ன.?! அதேதான்.
விவாகரத்தில் போய் நிற்கும் நிலை.

யார் யாரோ அவர்கள் இருவருக்கும் சமாதானம் செய்தும் அவர்கள் இருவரும் சமரசம் ஆகவில்லை. முடிவு ஒன்றே.?!
ஒரு நாள் பெண் வீட்டின் பக்கமிருந்து ஓர் உறவுக்கார பெரியவர் அவர்கள் வீட்டுக்கு வந்தார், பெண்ணின் தந்தை வேண்டுகோளை ஏற்று.

புதுமணத் தம்பதிகள் அவரை அலட்சியமாக வரவேற்றனர்.

பெரியவர் கிளிப்பிள்ளைக்கு சொல்லுகிற மாதிரி அவர்களிடம் எவ்வளவோ சொல்லியும் பிரச்னை தீர்ந்தபாடில்லை.
இறுதியில் பெரியவர் ஒரு முடிவுக்கு வந்தார்.

நான் சொல்வதை நீங்கள் செய்து விட்டால், நீங்கள் உங்கள் விருப்பப்படி பிரியலாம் என்றார் அந்த "ஆதர்ஷ்" தம்பதிகளிடம்.

அவர்கள் அதற்கு ஒப்புக் கொள்கின்றனர்.

இப்போது பெரியவர், ஒரு மெல்லிய நூலை காண்பித்து இதனை நீங்கள் அறுக்க வேண்டும் என்றார்.
Read 10 tweets
தனது இறுதிக் காலத்தில் "வாட்டர் லூ" போரில் தோற்று விட்டார் மாவீரர் #நெப்போலியன்.

ஆள் ரொம்பக் குள்ளம், தன்னை மற்றவர் முன்பு கம்பீரமாகக் காட்டிக் கொள்ள எப்போதும் குதிரை மேலேயே அமர்ந்து இருந்ததால் மூல வியாதி வேறு வந்து இருந்தது.
நெப்போலியனை பழி வாங்க தனித் தீவிற்கு அனுப்பினார்கள்.
அங்கு இருக்கும் ஆங்கிலேயத் தளபதிகளுக்கு #நெப்போலியன் எப்படி இருப்பார்.?! என்று பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தது .

ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றத்தைக் கற்பனை பண்ணி வைத்து இருந்தார்கள் அவர்கள் எல்லாம்.
ஆனால் நடந்தது அதற்கு நேர்மாறு.
வந்த நெப்போலியன் இருந்தது பின்வருமாறு:
குள்ளமான உருவம், கை கால்களில், நாள்பட்ட தோல் வியாதிகள். மூல வியாதி உடன் மெதுவாக காலை அகற்றி வைத்து வருபவரைக் கண்டதும் அவர்களுக்கு சப்பென்று போய் விட்டது.

இவரா மாவீரன்.?!
இவரா நெப்போலியன்.?! என்று அவர்களுக்கு எல்லாம் ஒரே ஆச்சரியம்.

அவருக்கு விளையாட்டு காட்ட முடிவு செய்தார்கள்.
Read 8 tweets
ஒரு ஊரில் பெரிய பலசாலி ஒருவன் இருந்தான். ஊருக்குள் அவனுக்கு நல்ல செல்வாக்கும் இருந்தது.

அந்த செல்வாக்கை இன்னும் அதிகரித்துக் கொள்ள அவன் விரும்பினான். அது மனித இயல்புதானே.?!

எனவே ஏதேனும் ஒரு பயங்கரமான மிருகத்தைப் பிடித்து வளர்த்தால் என்ன என்று விபரீதமாகச் சிந்தித்தான் அவன்.
அதை எப்போதும் தன்னுடன் வைத்துக் கொண்டால் தனது மதிப்பு இன்னும் மக்களிடம் உயரும் என்று தீவிரமாக நம்பினான்.

ஒரு நாள் அவன் ஆற்றில் குளிக்கும் போது கரையில் ஒரு குட்டி முதலை ஒதுங்கியது.

ஆவலுடன் அதைக் கையில் பிடித்து பெருமையாக தன் வீட்டுக்கு எடுத்து வந்தான் அந்தப் பிரகஸ்பதி.
முதலைக் குட்டியைக் கண்டு திடுக்கிட்ட அவனது மனைவியும், குழந்தைகளும், சக நண்பர்களும் திடுக்கிட்டுப் போனார்கள்.

அது விபரீத விளையாட்டு என்று சொல்லி எச்சரிக்கை செய்தார்கள்.

அவனோ அவர்கள் சொல்வதை எல்லாம் அலட்சியப் படுத்திவிட்டு அந்த முதலைக் குட்டியை தன் செல்லமாக வளர்க்கத் தொடங்கினான்.
Read 11 tweets
ஒரு சீரான கதியில் அந்த இரயில் சென்று கொண்டிருந்தது.

குளிர் வசதிப் பெட்டியின் தாராளமும் சொகுசும் இதமாக இருந்தது.

நன்கு காலை நீட்டி ஜன்னல் பக்கம் தலை திருப்பி வேடிக்கைப் பார்க்கத் துவங்கினேன் நான்.

சென்னையின் நெரிசல்களை வேகமாகப் பின் தள்ளி வண்டி வேகம் எடுத்தது.
எல்லாக் கதவுகளும் அடைக்கப் பட்டிருந்ததால் சென்னையின் அந்த "பேவரேட் வாசம்" என் நாசிக்கு நாசிக்கு எட்ட வில்லை.

பை த வே, நான் சென்னையில் வேலை பார்ப்பவன். அலுவலக வேலையாக மதுரைக்கு சென்று கொண்டிருக்கிறேன்.

நாளை இரவே சென்னை திரும்ப வேண்டும். திருமணம் இன்னும் ஆகவில்லை.
வாழ்க்கையை ரசித்துக் கொண்டிருக்கிறேன், இதுவரை "யாரிடமும்" சிக்கிக்கொள்ளாமல்.

என் பார்வையை உள்ளே திருப்பினேன்.
என் எதிரே அமர்ந்திருந்தவர் நடுத்தர வயதில் இருந்தார்.

அவர் சாப்பிடுவதற்கும், வேலை செய்வதற்கும் நிச்சயம் சம்பந்தம் இல்லை. நல்ல தொந்தியும், தொப்பியுமாக இருந்தார்.
Read 15 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!