Discover and read the best of Twitter Threads about #இழை

Most recents (24)

🔴#BREAKING | கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் SWIFT சேவையின் பயன்பாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு தடை விதிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

விரைவில் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், ரஷ்யாவுக்கு வரும் பாதிப்பு என்ன? #இழை🧵 (1/6)
ஒரு நாட்டின் எல்லையை தாண்டி நடைபெறும் பண பரிவர்த்தனையை சுமூகமாக நடைமுறை படுத்த 1973 ஆம் ஆண்டு முதல், SWIFT என்ற அமைப்பு பெல்ஜீயத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

ரஷ்யா உட்பட சுமார் 200 நாடுகளில் 11,000 நிதி நிறுவனங்களால் இந்த SWIFT சேவை பயன்படுத்தப்படுகிறது. (2/6)
உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத் தொடர்புகளுக்கான சமூகம் என்ற இந்த SWIFT அமைப்பை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகள் ஒருங்கிணைந்து உருவாக்கியது.

ரஷ்யாவை அதிலிருந்து தடை செய்வதால், உதாரணமாக: எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு ரஷ்யா பணம் பெறுவதில் இழப்பு ஏற்படும். (3/6)
Read 6 tweets
🧵#இழை | #RussiaWarns

உலகளாவிய பாதுகாப்புக்கு, இன்று ரஷ்யா அமெரிக்காவிடம் 11 பக்க எச்சரிக்கை அடங்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. (1/7)

#UkraineCrisis | #RussiaUkraine | #Russia
ரஷ்யா:

📍 மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா, பால்டிக் நாடுகளில் இருந்து அனைத்து படைகளையும் ஆயுதங்களையும் அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும். (2/7)

#RussiaUkraineCrisis | #UkraineConflict
📍உக்ரைனுக்கான அனைத்து ஆயுத விநியோகங்களையும் அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்.

📍 உக்ரைனில் இருந்து அனைத்து மேற்கத்திய போர் பயிற்றுவிப்பாளர்களையும் திரும்ப வேண்டும். (3/7)
Read 7 tweets
#இழை🧵| #InequalityKills

2021ஆம் ஆண்டில் 84% இந்திய குடும்பங்களின் வருமானம் வெகுவாக குறைந்துள்ளது.

அதேநேரத்தில் நாட்டில் உள்ள செல்வந்தர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில், 102லிருந்து '142' ஆக அதிகரித்துள்ளது.

- ஆக்ஸ்பாம் ஆய்வு அறிக்கை (1/7)
📍"Inequality Kills" என்ற தலைப்பில் ஆக்ஸ்பாம் தனது 2021ஆம் ஆண்டின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

📍கொரோனா காலக்கட்டத்தில் மட்டும் (மார்ச் 2020 - நவ.2021 வரை) இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 23.14 லட்சம் கோடியில் இருந்து 53.16 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. (2/7)
📍இதற்கு நேர்மாறாக, 2020ல் மட்டும் 4.6 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் தீவிர வறுமையில் வீழ்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

📍"ஐநா சபையின் கூற்றுப்படி, இந்த எண்ணிக்கை உலகளாவிய புதிய ஏழைகளில் கிட்டத்தட்ட பாதியளவு," என்று ஆக்ஸ்பாம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. (3/7)
Read 7 tweets
★அருண்மொழிசோழன்★
முதலாம் இராசராசன்
(கி.பி 985-1014)

தாய்: வானவன் மாதேவி
தந்தை: சுந்தர சோழனாகிய இரண்டாம் பராந்தகன்

சேர நாட்டு திருநந்திக்கரை என்னும் ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கு தான் பிறந்த நாளாகிய ஐப்பசி மாதச் சதயநாளில் திருவிழா..
#தமிழர்களின்_பெருமைக்குரியவர்_இராசராசசோழன்
நடந்ததற்காக கொடையாக முட்டம் என்னும் ஊரை அளித்ததற்கான கல்வெட்டு சான்று அக்கோவிலில் உண்டு அதனைக் கொண்டு அவரின் பிறந்த நாள் ஐப்பசித்திங்கள் சதயநாள் என்பது தெளிவாகிறது...!

திருவாலங்காட்டு செப்பேடுகளும் இதனை பறைசாற்றுகிறது..

#இழை
#தமிழர்களின்_பெருமைக்குரியவர்_இராசராசசோழன்
இராசராசன் கிபி 985 சூன் திங்கள் 25ம் நாள் முடிசூட்டிக் கொண்டார் என்பது கல்வெட்டு ஆய்வாளர்களின் ஆய்வு முடிவு..!

இவனது ஆட்சியில் ஓவியம், சிற்பம், நாடகம், நடனம், இசை, இலக்கியம் இன்ன பிறவும் நன்கு செழித்தோங்கின...!

இவரது காலத்தில் தான் தேவார திருமுறைகள் நாடெங்கும் பரவின..!
#இழை
Read 40 tweets
#சமூகநீதிநாள்
#HBDPeriyar143
#HBDThanthaiPeriyar

#இழை

வள்ளுவருக்கு வைதிகச் சாயம் பூசும் வக்கிரம்!

எதையும் நன்கு ஆராய்ந்து கொண்டு அதைப் புரிந்து கொண்டால் ஏன் புதிய சொந்தக்காரர்கள் வருகிறார்கள் என்ற அந்த ரகசியம் புரிந்து விடும். Image
குறளை இது வரையில் சமஸ்கிருத உலகம் ஏற்றுக் கொண்டது கிடையாது. அப்படி ஏற்றுக் கொண்டால் குறளை
குறளை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்க முன் வந்திருப்பார்கள்.குறள் சமஸ்கிருதமயமாக்கப்படவில்லை. அதற்கு அவர்கள் விரும்பவும் இல்லை 20 ஆம் நூற்றாண்டு வரையில்.
இன்னும் சொல்லப் போனால் நீதிசாரம் என்பதின் மொழியாக்கம் தான் குறள் என்று சொல்கின்ற சமஸ்கிருத ஆர்வலர்களும் உண்டு.இந்து தர்மத்தைத் தான் குறள் கூறுகிறது என்று சொல்லும் புதிய குறளாலர்களும் உண்டு. இந்த சூழலில் இந்த புதிய ஆர்வம் குறித்த விவாதம் அவசியம்.
Read 35 tweets
#நியுக்ளியர்_டைமண்ட்_பேட்டரி
#Nuclear_Diamond_Battery

பாட்டரிகள் - இதற்கும் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையே ஒரு நெடிய தொடர்பு உள்ளது. நாம் காலையில் எழுந்தவுடன் பார்க்கும் கைபேசி முதல் அலுவலகம் செல்லும் வாகனங்கள்,

#அறிவோம்_டெக்னாலஜி
வாட்ச்,
ப்ளுடூத் ஹெட் செட்,
ரிமோட்கள்,
சேவிங் ரேசர்,
இன்வெர்ட்டர்,
கேமிரா,
டார்ச் லைட் 😊
என பெரும்பாலான மின்/மின்னணு மற்றும் பல இயந்திரவியல் சாதனங்களில் நீக்கமற நிறைந்திருப்பவை இந்த பாட்டரிகள்.

(Photo credit : Electrical 4 U)
சரி, நம்ம கதைக்கு வருவோம்:

உலகை பயமுறுத்தும் அணுகழிவுகளை என்ன செய்யலாம் என ஆளாளுக்கு தலையினை பிய்த்து கொண்டிருந்த நிலையில் விஞ்ஞானம் அதற்கான தீர்வை அநேகமாக எட்டிவிட்டது எனலாம்.!
Read 16 tweets
#ஹோன்ஜாக் 🙋
#Honjok 😊

இது என்ன கொரியன் பட டைட்டில் மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறீங்களா..! 🤔

சரி அதுக்கும் இங்க கீழே இருக்கிற புகைப்படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீங்களா..! 🤔

அப்படின்னா சரி வாங்க ஜாலியாக பயணிக்கலாம்..! 🧞

#Niva #Thread
மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக தான் வாழ்ந்தார்கள்.

பிறகு அந்த கூட்டம்
பெரிய, பெரிய குழுக்களாகவும், பிற்காலத்தில் சிறிய சிறிய குழுக்களாகவும் பிரிந்து வாழ ஆரம்பித்தது.

இதெல்லாம் பல நூற்றாண்டுகளாக மனித சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்..!
மனிதன் இப்படி கூட்டமாகவும், குழுக்களாகவும் வாழ்ந்ததற்கு முக்கிய காரணம் அவனுக்குள் இருந்த ஒருவித அச்ச உணர்வு தான்..!

மேலும் இவ்வாறு வாழும் போது வேலைகளும் பொறுப்புகளும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.!

இதையெல்லாம் வழிநடத்த, கண்காணிக்க அந்த குழுவிற்கு ஒரு தலைவன்/தலைவி இருந்தார்கள்.!
Read 17 tweets
#உஷார்_அய்யா_உஷாரு 😊
#Online_Offers_உஷாரு 😊

ஆன்லைன் ஷாப்பிங் வலை தளங்களான #Amazon #Flipkart இவற்றில் Offer களை அள்ளி கொடுக்கிறார்களே உண்மையான மார்க்கெட் கள நிலவரம் தான் என்ன.!

அது பற்றிய #இழை #Thread
வாங்க ஜாலியா Shopping பண்ணலாம்..!🧞

#MarketSurvey #OnlineShopping #Offers
எனக்கும் நண்பருக்கும் சில எலக்ட்ரானிக்ஸ் & வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால், தற்சமயம்
#Amazon & #Flipkart இவற்றில் Offer களை அள்ளி கொடுக்கிறார்களே..
எனவே, Online ல் Order செய்யலாமா அல்லது கடைகளிலேயே சென்று வாங்கலாமா என்பதை அறிய ஒரு Mini Market Survey செய்தோம்.!😊
திருச்சியில்,
🔥Home Appliances கடைகள் உள்ள சாலை ரோடு,
🔥பர்னிச்சர் & எலக்ட்ரிக்கல் கடைகள் உள்ள மதுரை ரோடு,
🔥திருச்சியின் Commercial Hubஆன NSB Road & Super Bazarல் உள்ள கடைகள்
🔥 மொபைல் ஷோரூம்கள்,

என, இவற்றில் அவர்கள் தரும் ஆஃபர்கள் மற்றும் விலை நிலவரங்களை கேட்டறிந்தோம்..!😊
Read 26 tweets
#Sales
இதுல முக்கியமான இன்னொரு விஷயம்..! 😊
பொதுவா எல்லா பொண்ணுங்களுக்குமே அண்ணன் அல்லது அண்ணன் முறையில ஒருத்தரு இருப்பாரு. அவரு அந்த பொண்ணு மேல ஏகத்துக்கும் பாசம் வச்சிருப்பாரு..!
அவரை இந்த சமூகம்,
பாடி கார்ட்,
நலம் விரும்பி,
பாசமலர் ன்னு
எப்படி வேணும்னாலும் சொல்லலாம்..!😊

ஆனா, அந்தப் பொண்ணு மட்டும் அவரு சொல்றத தான் தட்டாம கேட்பாங்க.! அவ்ளோ பாசம் & நம்பிக்கை..! Image
பெரும்பாலும் அவருதான் வில்லன் ரோல் ப்ளே பண்ணுவாரு.
அவருக்கே நம்மள புடிச்சு போச்சுன்னா அப்புறம் பெருசா குறுக்கீடுகள் ஏதும் இருக்காது..!
நம்மளா.. சொந்த செலவுல ஏதாச்சும் சூனியம் வச்சிகிட்டா தான் உண்டு, மத்தபடி 99% சக்சஸ் & சுபம் தான்..!😊 Image
Read 9 tweets
#Android_Security 😊
#ஆண்ட்ராய்டு_பாதுக்கப்பு

நமது ஆண்ட்ராய்டு சாதனங்களில கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள்..!🤔

அது பற்றிய #Thread #இழை
வாங்க ஜாலியா Secure பண்ணலாம்..!🧞

உதாரணத்துக்கு "நாம ஒரு வெளியூர் Trip போறோம். ஒரு 10 நாள் ஊருல இருக்க மாட்டோம்..!"
வீட்ல என்னெல்லாம் பண்ணுவோம்..!🙋
🔥வெறுமனே Main Doorஐயும், Gate ஐயும் பூட்டிட்டு பொய்டுவோமா, இல்ல,
🔥தண்ணி எல்லாம் Pipe எல்லாம் Closeல இருக்கா,
🔥Gas Regulatorஅ Off பண்ணிட்டோமா,
🔥எல்லா Electrical சாதனங்களையும் Switch off பண்ணியாச்சா,
🔥ஜன்னல் எல்லாம் சாத்தியாச்சா,
🔥Back Door அ சரியா Lock பண்ணிட்டோமா,
🔥பீரோ key எல்லாம் பத்திரப்படுத்திட்டமா

இப்படி எல்லாம் முடிச்சு கடைசியாக தானே Main Doorஐயும் Gateஐயும் பூட்டுவோம்.!🔐

ஒரு 10 நாள் ஊருக்கு போறதுக்கே இந்த அக்கப்போர்ன்னா,😂
Minimum ரெண்டு மூனு வருஷமாச்சும் Use பண்ற Mobileக்கு என்ன பண்ணனும்.!
Read 26 tweets
#CreditCards 😊
#கடன்_அட்டை
(EMI -5 - Final Episode) 😂

#இழை #Thread

கடன் அட்டையை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்களை பற்றி பார்க்கலாம் 🧞

#EMI #Loan #Finance #Banking #IPL2020
🔥 கடன் அட்டை யை Receive செய்த உடனேயே அவர்கள் சொல்லும் Procedures படி PIN நம்பர் Generate பண்ணிவிடுங்கள்..! அல்லது அவங்களே Default ஆ ஒரு PIN நம்பர் கொடுத்திருந்தால், உடனே அந்த PIN நம்பர் ஐ மாற்றிவிடுங்கள்.
இது முக்கியமான Security Issue, எனவே தாமதம் வேண்டாம்.
🔥Card Packing உடன் வரும் Welcome Letter மற்றும் T&C Booklet ஐ பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் Scan செய்து Soft Copy ஆக கூட சேமித்து வைப்பது நலம்.
CreditCard-(Bank Name) என Folder ல் இட்டு வைத்திருந்தால் Easy யாக Retrieve செய்து கொள்ளலாம்.!😊
Read 27 tweets
#CreditCards 😊
#கடன்_அட்டை
(EMI -4)

#இழை #Thread

கடன் அட்டைகள் நம்மை ஈர்ப்பதற்காக முக்கியமான காரணிகள்..,
அவை வழங்கும்

🔥Reward Points (வெகுமதி-புள்ளிகள்)
🔥Cash Back
🔥Discounts (தள்ளுபடி)
🔥Offers (சலுகைகள்)
🔥No cost EMI (வட்டியில்லா தவணை)

இதெல்லாம் என்னானு பார்ப்போம்🧞
இதெல்லாம் பார்க்குறதுக்கு, Cake மேல இருக்குற Cream & Topings மாதிரி நல்லா Attractive ஆ இருக்கும்.😋
அனா இதுங்க எல்லாமே நம்ம செலவு செய்யனும்ங்கற ஆசையை தூண்டக்கூடியது.அதுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது..!
#Reward_Points
பதிவா Recharge பண்ணிவிடுற காதலனுக்கு சாக்லேட் தந்து Encourage பண்ற காதலி மாதிரி, இது நீங்க செய்யும் செலவுகளுக்கேற்ப Rewards Points தந்து "Very Good இன்னும் நிறையசெலவு பண்ணுங்க"ன்னு Encourage பண்றதுக்கு தான்.😊

இந்த RewardPointல குறிப்பா சிலவற்றை தெரிஞ்சிருக்கனும்
Read 32 tweets
#டிவிட்டர்_போட் 😊
#Twitter_Bot
என்பது என்ன..! என்ன செய்கிறது..!
இது பற்றிய #இழை #Thread 🧞

#Internet_Bot
'போட்' என்பது இணையதளங்கள் அல்லது சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட வேலைகளையை செய்ய பயன்படும் ஒரு மென்பொருள்.

#Technology #Trending #Software #bot
இது இணையதளங்களில் பெரும்பாலும் தானியங்கு (Automatic) முறையில் வேலைகளை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. (Programmed).இதனால் இது இணையதள ரொபோட் (Internet Robot) என அழைக்கப்படுகிறது.
இதை சுருக்கமாக Internet Bot எனவும் அழைக்கிறார்கள்.
உதாரணமாக நாம் ஒரு இணையதள பக்கத்துக்குள் செல்லும்போது அங்கே,
🔥"May I Help you" அல்லது
🔥 "I am your Assistant"

இதுபோன்று PopUp தோன்றும். இதில் நாம் அந்த இணையதளம் வழங்கும் சேவைகள் சம்பந்தமான கேள்விகளை உள்ளீடு செய்தால் அதற்கான விடைகள் கிடைக்கும். இது நமக்கு சில அடிப்படை விபரங்களை
Read 21 tweets
#CreditCards 😊
#கடன்_அட்டை
(EMI -3)

#இழை #Thread

கடன் அட்டை எப்படி வேலை செய்கிறது.!🤔
அதை புரிந்து கொள்ள முதலில் இந்த,

🔥Credit Limit
🔥Billing Cycle
🔥Monthly Statement
🔥Payment Dues ( Actual & Min)
🔥Grace Period
🔥Late Payment Charges

இது பற்றி தெரிந்திருக்க
வேண்டும்🧞
Credit Card வாங்க நமக்கு இருக்கும் ஆர்வத்தில் சிறிதளவாவது இதையெல்லாம் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வதில் இருந்தால் கடன் அட்டை வாங்கிய பின் வரும் 85 சதவீத சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து விடலாம்..! 😊
🔥Credit Limit
இதுதான் கடன் அட்டையின் அடிப்படையான விஷயம்.
உங்களின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் வங்கி தரவுகளை பொறுத்து உங்களுக்கு எவ்வளவு கடன் வழங்கலாம் என கடன் அட்டையை வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனம் முடிவு செய்து ஒரு தொகையை நிர்ணயம் செய்து இருப்பார்கள்.இதுதான் Credit Limit.
Read 28 tweets
#CreditCards 😊
#கடன்_அட்டை
(EMI -2)

#இழை #Thread

முந்தைய பதிவில் சில அடிப்படைகளை பார்த்தோம்..!😊
(படிக்காதவர்களுக்கு Link கீழே.!)
சரி வாங்க, "யாரெல்லாம் கடன் அட்டையை தவிர்ப்பது நலம்" - என இந்த பதிவில் அலசுவோம்..!🧞

#EMI #Loan #Finance #Banking

முன்னாடி கேபிள் டிவில எல்லாம் ஒரு சில படங்கள் போடுறதுக்கு முன்னாடி..
"வயதானவர்கள்,
இதயம் பலவீனமானவர்கள், குழந்தைகள்,
கர்ப்பிணி பெண்கள்
இத்திரைப்படத்தை பார்ப்பதை தவிர்க்கவும்"
ன்னு Slide போடுவாங்க..!
(இதன் நோக்கம் படம் பார்க்க கூடாது என்பது அல்ல, Risk எடுக்காதீர்கள் என்பதே )😊
அது போல, கடன் அட்டையை வாங்க யார் யார் எல்லாம் Risk எடுக்க வேண்டாம் அல்லது தவிர்க்கலாம், அப்படின்னு ஒரு Slide போடலாம்.
(இதுக்குன்னு வரையறை எல்லாம் கிடையாது, எல்லாம் ஒரு புரிதலுக்காகவே😊)

🔥#அந்தஸ்தின்_அடையாளமா🤔
"என்னோட பெருளாதார சூழ்நிலை (Financial Situation)நல்லாதான் இருக்கு,
Read 32 tweets
#CreditCards 😊
#கடன்_அட்டை
(EMI -1)

#இழை #Thread

இதை ஒரே பதிவாக பதிவிட்டால் Detailing இருக்காது. அதனால இத ஒரு மூணு EMI ல கட்டி முடிக்க பார்ப்போம்.😂
(அதாங்க மூணு பாகங்களாக)😂
சரி வாங்க,
Credit Card வாங்கலாமா இல்ல வேணாமான்னு முடிவு பண்ணலாம்..!🧞

#EMI #Loan #Finance #Banking
Credit Card (CC) வாங்குறதுக்கு முன்னாடி நமக்கு அடிப்படை விஷயங்களான

🔥கடன் ( Loan)
🔥வட்டி (Intrest)
🔥வட்டி விகிதம் (Intrest Rate)
🔥திரும்ப செலுத்தும் காலம்
(Pay back period)
🔥 Penalty (அபராதம்)

இது பற்றி நமக்கு ஓரளவுக்காவது தெரிந்து இருக்க வேண்டும்.
இதெல்லாம் ஏற்கனவே நமக்கு தெரிஞ்ச விஷயம் தானேன்னு நினைப்போம்..!
"அப்புறம் ஏன் நிறைய பேர் கிரெடிட் கார்டு வாங்கி அவஸ்தைப்பட்டேன், அத தூக்கி போட்ட ன்னு சொல்றாங்க..!" ன்னு யோசிச்சிருக்கீங்களா..!
ஏன்னா இதையெல்லாம் நம்முடைய பொருளாதார சூழ்நிலையோடு பொருத்திப் பார்க்கத் தவறுகின்றோம்..!😊
Read 31 tweets
#Online_Transactions 😊
#இணையதள_பரிவர்த்தனைகள்

நாம் நம் மொபைல் மூலமாக பண பரிவர்த்தனைகள் நிகழ்த்தும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை பற்றிய #இழை #Thread 😊

#Banking #MobileBanking #Safe_Transaction

வாங்க பாதுகாப்பான பரிவர்த்தனைகளை தொடருவோம்..!🧞
நமது Online Transactionsகளை

🔥Personal Fund Transfer
(குடும்பத்துக்கு , நண்பர்களுக்கு பணம் அனுப்புவது, வாடகை அனுப்புவது.. etc)

🔥Bill Payments
(Credit card Bill, EB bill...etc)

🔥Ticket Bookings
(Train, Bus, Movies..etc)

🔥Recharges
(Mobile, DTH..etc)

என வகைப்படுத்தலாம்..😊
இது ஒரு புரிதலுக்காக மட்டுமே..!
இணையதள வங்கி பரிமாற்றங்களின் மூலம் ஏகப்பட்ட ஏமாற்று வேலைகளும் மோசடிகளும் நடைபெறுகிறது.

அவற்றிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் ஆன்லைன் மூலமாக வங்கி பரிவர்த்தனைகள் செய்யும் போது சில பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிப்பது நலம்..!
Read 30 tweets
#Kodak vs #Fuji_Film 😊
#கோடாக் vs #பியூஜி_ஃபிலிம் 😊

இரண்டு பாரம்பரியமான புகைப்பட நிறுவனங்களுக்கு இடையே நடந்த #சுவாரஸ்யமான சம்பவங்கள் 😂 #இழை #Thread

#PhotographyDay #camera #photograghy

வாங்க ஜாலியாக பயணிப்போம் 🧞
"அனேகமாக 1990 க்கு முற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பல புகைப்படங்கள் யாவும்,
இவ்விரு நிறுவனங்கள் தயாரித்த கேமிராக்கள் மற்றும் ஃபிலிம்கள் கொண்டே எடுக்கப்பட்டன.!"
இதில்
#கோடாக் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம்.
#பியூஜி_ஃபிலிம் ஜப்பானை சேர்ந்த நிறுவனம்.
#கோடாக்_நிறுவனம்
The East Man Kodak Company என்பதையயே Kodak என சுருக்கி செல்லமாக அழைத்தார்கள்.
(நம்மூரு கிருஷ்ணமூர்த்திய 'கிச்சா' ன்னு கூப்பிடற மாதிரி..!)😂
இது 1888 ல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது.🙄 புகைப்பட துறையில் #Kodak பாரம்பரியமான ஒரு மிகப்பெரிய நிறுவனம்..!😊
Read 32 tweets
#தேசிய_அரசுப்பணியாளர்_தேர்வுமுகமை
#National_Recruting_Agency
அது பற்றிய சில தகவல்கள்.! 😊
#இழை #Thread

நம் தமிழக இளைஞர்கள் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டிய தேர்வு முறை..!🙋
பொதுவாகவே அரசுப் பணி நாடும் தமிழக இளைஞர்களில் அரசு தேர்வுக்கு தயாராகும் பெரும்பாலானோர் TNPSC நடத்தும் அல்லது தமிழக அரசு நடத்தும் போட்டி தேர்வுகளை தாண்டி வேறு எந்த தேர்வுகளையும் எழுத முற்படுவதில்லை.
இதனால் மத்திய அரசு பணியிடங்களில் நம் தமிழக இளைஞர்களின் பிரதிநிதித்துவம் சரியான அளவில் இருப்பதில்லை..!
Read 20 tweets
#Razor_Blade_Business_Model 😊
#ரேசர்_பிளேடு_வணிக_மாதரி
இது என்ன என்பதை எளிமையாக புரிந்து கொள்ள இந்த #இழை #Thread😂

"வணிகம் என்பதே இலாபம் என்ற ஒற்றை மைய இலக்கை நோக்கி கட்டமைக்கப்பட்ட மிகப்பெரிய சிலந்தி வலை போன்ற ஓர் அமைப்பு..!"
..... யாரோ ஒருவர் சொன்னது 🙄 Image
வணிகத்தில் மேற்கோள்ளப்படும் அனைத்து செயல்களும், இறுதியில் இலாபம் ஈட்டுதல் என்னும் ஒற்றை புள்ளியில் வந்து நிறைவு பெறுகிறது..!😂

இந்த இலாபம் ஈட்டுதல் என்னும் ஒரே இலக்கை அடைய வேண்டி பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றன நிறுவனங்கள்.! (சிறு வியாபரம் முதல் பெரும் வணிகம் வரை)🙄
அப்படிப்பட்ட வியாபார யுக்திகளில் ஒன்று தான் இந்த
"Razor Blade Business Model" - நம் வசதிக்காக இனி இதை #RBBModel என அழைப்போம்.!😊

#ஒரு_உதாரணம்
கொசு விரட்டிகளை தயாரிக்கும் பிரபல நிறுவனத்தின் Liquid Refill Cartridge
(Mosquito Repellent Liquid) தனியாக வாங்கினால் ஒன்று 70 ரூபாய்.
Read 21 tweets
#மிட்டாய்_தேசம் 😋
இன்னைக்கு ஆபீஸ்ல கொடி 🇮🇳ஏத்தி முடிச்சதும்,எல்லாருக்கும் 2-ரூபா சாக்லேட் குடுத்தாங்க.!🍬
அதபார்க்கும் போது நா அப்படியே என்னுடைய சின்னவயசு நியாபகத்துக்கு போய்ட்டேன்.!

#ஒருசின்ன_FlashBack 😂
என்னோட சின்னவயசுல எங்க தெருவுல ஒரு தாத்தாவ கூப்பிட்டு கொடி ஏத்துவாங்க😊 Image
கொடி ஏத்தும் போது பக்கத்துல உள்ள சித்தி விநாயகர் கோவில் Speaker Set ல,
"தாய் மண்ணே வணக்கம்" ன்னு ரகுமான் ஒலிப்பாரு. அவர்
"மா துஜே சலாம்" ன்னு பாடி முடிச்சதும் தான் நிறுத்துவாங்க..! 😂
இந்த Gap ல Sweet Distribution நடக்கும். ஆமாங்க #ஆரஞ்சு_வில்லை தான் அந்த Sweets..!😋 Image
அந்த வண்ணமையமான மிட்டாய்களை பாக்கெட்டோட அவரு டிஸ்ட்ரிப்யூட் பண்றதே நல்லா இருக்கும். எல்லாருக்கும் ரெண்டு தான்..!😊
இப்படியாக சுதந்திர தினம் இனிமையாக நிறைவடையும்..!😂

அப்பெல்லாம் நாலணா, எட்டணா கிடைச்சா போதும் பக்கத்துல உள்ள கடையில போயீ, மிட்டாய் வாங்கி அதை..
Read 24 tweets
#ராம்நாமி_பழங்குடியினர்

"ஆச்சரியங்கள் நிறைந்த இந்தியாவின் தனித்துவமான பழங்குடியினர் " 😊

மறுக்கப்பட்ட ஆலய பிரவேச உரிமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் அறப்போராட்டத்தின் கதை ..!🙏

#Thread #இழை Image
🔥"Kill them with your Success
& Burry them with your Smile..!"🔥

என 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிக்க சாதியினரை அகிம்சையால் அலற விட்ட ராமபிரானின்
"உண்மையான" ( மீண்டும் ஒரு முறை அழுத்தி சொல்கிறேன் உண்மையான) பக்தர்கள்..!😂
#வரலாறு

சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் ராம்நாமி என்று அழைக்கப்படும் இந்த பழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள். இவர்களின் மக்கள் தொகை ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை என மதிப்பிடப்படுகிறது..!😊
Read 16 tweets
#ஸ்ட்ரெய்சண்ட்_விளைவு 🧞
#Streisand_Effect
"என்னடா இது பெயரே வாய்க்குள்ள நுழைய மாட்டேங்குது" ன்னு நீங்க நினைக்கிறக்கிற Mind Voice இங்க வரைக்கும் கேட்குது..!😂

முதல்ல ஒரு எஸ்டிடி ய பார்த்ததிட்டு வந்துடுவோம்..!

#பார்ப்ரா_ஸ்ட்ரெய்சண்ட்
இவங்க ஒரு அமெரிக்க பெண்மணி..!👩‍🦰 Image
வெறுமனே பெண்மணி னு சொன்னா சாமி கண்ணை குத்திடும். ஏன்னா இவங்க ஒரு
🎤பிரபல பாடகி,
💃பிரபல ஹாலிவுட் நடிகை,
🎻பிரபல இசை ஆல்பங்களை வெளியிட்டார்,
🎶பிரபல இசை ஆர்வலர்,
🎬பிரபல ஃபிலிம் மேக்கர்,
💰பிரபல கொடை வள்ளல்

அப்படின்னு ஏகப்பட்ட '#பிரபல' க்களை போட்டுகிட்டே போலாம்..!😂 Image
இவங்க 1942 ல அமெரிக்கா ல நியூயார்க் நகரத்துல பிறந்திருக்காங்க..!
இவங்க அம்மா டயானா,
அப்பா இம்மானுவேல்_ஸ்ட்ரெய்சண்ட்.
அப்பா ஒரு பள்ளிக்கூட வாத்தியார்.
அப்பா பொண்ணுங்கறது னால அப்பாவோட பெயர இன்னமும் தன் பெயர் கூட சேர்த்து வச்சிருக்காங்க..!😊
Read 20 tweets
இந்த #Google_Advertising_ID 😊
அப்படின்னா என்ன..!
இது எதுக்காக.! என்ன Use.!🤔
அது பற்றிய #Thread #இழை
வாங்க ஜாலியா பயணிப்போம்..!🧞

Voter ID, Adhar ID மாதிரி இதுவும் உங்களுக்கான ஒரு IDதான்.😊
இத நம்ம Google அண்ணன் நாம்ம Apply பண்ணாமலே நம்ம Android Mobileக்கு கொடுத்திருக்காரு.!😂
உங்களிடம் ஒரு Android Mobile இருக்குன்னா உங்களுக்கும் ஒரு
Google Advertising ID நிச்சயமாக இருக்கும்😊
முதலில் இதை உங்க(Android) Mobile ல Check பண்ணி பாருங்க.
Settings >
Google >
(Services & Preference) >
Ads>
Your Advertising ID>
நீளமா ஒரு AlphaNumeric Combination இருக்குதா😂
இந்த நீளமான AlphaNumeric Combination தாங்க உங்க
#Google_Advertising_ID.!🙄

"தீரன்-அதிகாரம் ஒன்று"
இந்தபடம் வந்த Time ல ஒரு WhatsApp Message பரவலா வலம் வந்துச்சு. வடமாநில கொள்ளை கும்பல் ஒன்னு தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதாகவும்,பகலில் அவங்க நம்ம ஏரியாக்கு வந்து நோட்டமிடுவதாகவும்😕
Read 26 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!